Friday, July 1, 2016

யோவான் - 8

யோவான் - 8
1. இயேசு எங்கு போனார்? ஒலிவமலைக்குப் போனார்.
2. மறுநாள் காலையிலே அவர் திரும்பி எங்கு வந்தபோது, ஜனங்களெல்லா ரும் அவரிடத்தில் வந்தார்கள்? தேவாலயத்திற்கு. அவர் உட்கார்ந்து அவர்க ளுக்கு என்ன பண்ணினார்? உபதேசம்பண்ணினார்.
3. அப்பொழுது யாரை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தினார்கள்? விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை. 
4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் எப்படிப் பிடிக்கப்பட்டாள்? கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களை என்ன செய்யவேண்டுமென்று மோசே நியாயப்பிரமா ணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார் கள்? கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று.
6. அவர்மேல் எதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும் படி இப்படிச் சொன்னார்கள்? குற்றஞ்சுமத்துவதற்கான காரணம். இயேசுவோ என்ன செய்தார்? குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: என்ன சொன்னார்? உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலா வது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்.
8. அவர் மறுபடியும் என்ன செய்தார்? குனிந்து, தரையிலே எழுதினார்.
9. அவர்கள் அதைக் கேட்டு, என்ன செய்தார்கள்? தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவ ராய்ப் போய்விட்டார்கள். இயேசு எங்கேயிருந்தார்? தனித்திருந்தார். அந்த ஸ்திரீ எங்கே நின்றாள்? நடுவே நின்றாள்.
10. இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல் என்ன கேட்டார்? ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவ னாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
11. அதற்கு அவள் சொன்னது என்ன? இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை என்ன செய்வதில்லை? ஆக்கினைக்குள்ளா கத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனி என்ன செய்யாதே என்றார்? பாவஞ்செய் யாதே என்றார்.
12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு என்னவாயிருக் கிறேன்? ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் எப்படியிருப்பான் என்றார்? இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். 
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே என்ன கொடுக்கிறாய்? சாட்சி கொடுக்கிறாய். எது உண்மையானதல்ல என்றார்கள்? உன்னுடைய சாட்சி.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி எப்படியிருக்கிறது? உண்மையாயிருக்கிறது. ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் என்ன செய்திருக்கிறேன்? அறிந்திருக்கிறேன். நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் என்ன செய்கிறீர்கள்? அறியீர்கள்.
15. நீங்கள் எதற்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள்? மாம்சத்துக்கேற்றபடி. நான் ஒருவனையும் என்ன செய்கிறதில்லை? நியாயந்தீர்க்கிறதில்லை.
16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு எப்படியிருக்கும்? சத்தியத்தின்படியிருக் கும். ஏன்? ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
17. இரண்டுபேருடைய சாட்சி என்னவென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே? உண்மையென்று.
18. நான் யாரைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன்? என்னைக் குறித்து. என்னை அனுப்பின பிதாவும் யாரைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்? என்னைக்குறித்து.
19. அப்பொழுது அவர்கள்: யார் எங்கே என்றார்கள்? உம்முடைய பிதா. இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் என்ன செய்வீர்கள்? அறியீர்கள். என் பிதாவை யும் என்ன செய்வீர்கள்? அறியீர்கள். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் யாரையும் அறிவீர்கள் என்றார்? என் பிதாவையும் அறிவீர்கள்.
20. தேவாலயத்திலே இயேசு உபதேசம் பண்ணுகிறபோது, எந்த இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார்? தருமப்பெட்டியிருக்கும் இடத்தில். ஏன் ஒருவ னும் அவரைப் பிடிக்கவில்லை? அவருடைய வேளை இன்னும் வராதபடியி னால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி எதிலே சாவீர்கள் என்றார்? உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். எங்கு உங்களால் வரக்கூடாது என்றார்? நான் போகிற இடத்துக்கு வர உங்க ளால் கூடாது என்றார்.
22. அப்பொழுது யூதர்கள் என்ன என்று பேசிக்கொண்டார்கள்? நான் போகிற  இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலை செய்துகொள்வானோ என்று பேசிக்கொண்டார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் எங்கிருந்து உண்டானவர்கள் என்றார்? தாழ்விலிருந்துண்டானவர்கள் என்றார். நான் எங்கிருந்து உண்டானவன் என்றார்? உயர்விலிருந்துண்டானவன் என்றார். நீங்கள் எதிலிருந்து உண்டான வர்கள் என்றார்? இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள் என்றார். நான் எதிலி ருந்து உண்டானவனல்ல என்றார்? இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல என்றார்.
24. ஆகையால் நீங்கள் எவைகளில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன் என்றார்? உங்கள் பாவங்களில் சாவீர்கள். நானே அவர் என்று நீங்கள் விசுவாசி யாவிட்டால் எதிலே சாவீர்கள் என்றார்? உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
25. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? நீர் யார் என்றார்கள். இயேசு அவர் களை நோக்கி சொன்னது என்ன? நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியி ருக்கிறவர்தான்.
26. எதற்கு எனக்கு அநேக காரியங்களுண்டு என்றார்? உங்களைக்குறித்துப்  பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப் பினவர் யார்? சத்தியமுள்ளவர். நான் எவைகளையே உலகத்துக்குச் சொல்லு கிறேன் என்றார்? அவரிடத்தில் கேட்டவைகளையே.
27. யாரைக் குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்? பிதா வைக்குறித்து. 
28. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் யாரை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச்  சொன்னேன் என்றும் அறிவீர்கள்? மனுஷகுமாரனை.
29. என்னை அனுப்பினவர் யாருடனே கூட இருக்கிறார்? என்னுடனே கூட இருக்கிறார். எதை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்? பிதாவுக்குப் பிரியமானவைகளை.
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் என்ன வைத் தார்கள்? விசுவாசம் வைத்தார்கள்.
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் எப்பொழுது  மெய் யாகவே என் சீஷராயிருப்பீர்கள் என்றார்? என் உபதேசத்தில் நிலைத்திருந் தால்.
32. எதையும் அறிவீர்கள்? சத்தியத்தையும். எது உங்களை விடுதலையாக்கும் என்றார்? சத்தியம்.
33. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் யாருடைய சந்ததியாயி ருக்கிறோம் என்றார்கள்? ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருக் காலும் ஒருவனுக்கும் என்னவாக இருக்கவில்லை? அடிமைகளாயிருக்க வில்லை. என்னவென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்? விடுதலையா வீர்களென்று.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறன் எவனும் எதுக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? பாவத்துக்கு.
35. யார் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்? அடிமையானவன். யார் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்? குமாரன்.
36. ஆகையால் யார் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுத லையாவீர்கள்? குமாரன்.
37. நீங்கள் யாரென்று அறிவேன்? ஆபிரகாமின் சந்ததியாரென்று. ஆனாலும் உங்களுக்குள்ளே எது இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்? என் உபதேசம்.
38. நான் எதைச் சொல்லுகிறேன்? என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லு கிறேன். நீங்களும் எதைச் செய்கிறீர்கள் என்றார்? உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.
39. அதற்கு அவர்கள்: யார் எங்கள் பிதா என்றார்கள்? ஆபிரகாம். இயேசு அவர் களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் எதைச் செய்வீர் களே என்றார்? ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே என்றார். 
40. நீங்கள் யாரைக் கொல்லத் தேடுகிறீர்கள்? தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள். யார் இப்படிச் செய்யவில்லையே? ஆபிரகாம்.
41. நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்றார்? உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் எதினால் பிறந்தவர்களல்ல? வேசித்தனத்தினால். ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் யார் என்றார்கள்? தேவன் என்றார்கள்.
42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத் தில் எப்படியிருப்பீர்கள்? அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் யாரிடத்திலி ருந்து வந்திருக்கிறேன்? தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன். நான் சுயமாய் வரவில்லை, யார் என்னை அனுப்பினார்? தேவனே.
43. எதை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் வசனத்தை. எதைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? என் உபதேசத்தை.
44. நீங்கள் யாரால் உண்டானவர்கள்? உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். எதின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்? உங்கள் பிதாவினு டைய இச்சைகளின்படி. அவன் ஆதிமுதற் கொண்டு யாராயிருக்கிறான்? மனுஷகொலைபாதகனாயிருக்கிறான். எது அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை? சத்தியம். அவன் யாராய் இருக்கிற படியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்? பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால்.
45. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை என்ன செய்கிறதில்லை? விசுவாசிக்கிறதில்லை. 
46. என்னிடத்தில் எது உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? பாவம். நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை என்ன செய்கிறதில்லை? விசுவாசிக்கிறதில்லை. 
47. தேவனால் உண்டானவன் எவைகளுக்குச் செவிகொடுக்கிறான்? தேவனு டைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான். நீங்களும் எதினால் செவிகொடா மலிருக்கிறீர்கள் என்றார்? தேவனால் உண்டாயிராதபடியினால்.
48. அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எது சரிதானே என்றார் கள்? உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல் லுகிறது.
49. அதற்கு இயேசு: நான் யாரல்ல? பிசாசுபிடித்தவனல்ல. நான் யாரைக் கனம் பண்ணுகிறேன்? என் பிதாவை. நீங்கள் என்னை என்ன செய்கிறீர்கள்? கனவீ னம்பண்ணுகிறீர்கள். 
50. நான் எனக்கு எதைத் தேடுகிறதில்லை? மகிமையை. அதைத் தேடி யார் இருக்கிறார்? நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
51. ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் எதைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? மரணத்தை.
52. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ யாரென்று இப்பொழுது  அறிந்தி ருக்கிறோம்? பிசாசுபிடித்தவனென்று. யார் மரித்தார்கள்? ஆபிரகாமும் தீர்க்க தரிசிகளும். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென் றைக்கும் எதை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்? மரணத்தை.
53. யாரிலும் நீ பெரியவனோ? எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும். அவர் மரித் தார், தீர்க்கதரிசிகளும் என்ன ஆனார்கள்? மரித்தார்கள். யாரை நீ எப்படிப்பட்ட வனாக்குகிறாய் என்றார்கள்? உன்னை (இயேசுவை).
54. இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை எப்படியிருக்கும்? வீணாயிருக்கும். யார் என்னை மகிமைப்படுத்துகிற வர்? என் பிதா. அவரை யாரென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்? உங்கள் தேவ னென்று.
55. ஆயினும் நீங்கள் யாரை அறியவில்லை? என் பிதா (உங்கள் தேவன்). நான் அவரை என்ன செய்திருக்கிறேன்? அறிந்திருக்கிறேன். அவரை அறியேன் என்று சொல்வேனாகில் யாரைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்? உங்க ளைப்போல. அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையை என்ன செய்து கொண்டிருக்கிறேன்? கைக்கொண்டிருக்கிறேன்.
56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் யாருடைய நாளைக் காண ஆசையாயிருந் தான்? என்னுடைய நாளைக் காண. கண்டு என்ன செய்தான் என்றார்? களிகூர்ந் தான் என்றார்.
57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் எத்தனை  வயதாக வில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்? ஜம்பது வயது.
58. அதற்கு இயேசு: யார் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? ஆபிர காம்.
59. அப்பொழுது அவர்மேல் எறியும்படி எவைகளை எடுத்துக்கொண்டார்கள்? கல்லுகளை. இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, எதை விட்டுப் போனார்? தேவாலயத்தை விட்டுப்போனார்.

Monday, June 27, 2016

யோவான் - 7

யோவான் - 7
1. இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவை என்ன செய்ய வகைதேடினார் கள்? கொலைசெய்ய வகைதேடினார்கள். ஏன் இயேசு யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார்? யூதர்கள் இயேசுவை கொலை செய்ய வகைதேடினபடியால்.
2. எது சமீபமாயிருந்தது? யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 
3. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: எதற்காக நீர் இவ்விடம் விட்டு யூதேயாவுக்குப் போம் என்றார்கள்? நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
4. யார் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்? பிரபலமாயிருக்க விரும்புகிறவன். நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் யாருக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்? உலகத்துக்கு.
5. அவருடைய சகோதரரும் ஏன் இப்படிச் சொன்னார்கள்? அவரை விசுவாசி யாதபடியால்.
6. இயேசு அவர்களை நோக்கி: யார் வேளை இன்னும் வரவில்லை? என்வேளை. யார் வேளை எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது? உங்கள் வேளை.
7. எது உங்களைப் பகைக்கமாட்டாது? உலகம். உலகம் ஏன் என்னைப் பகைக் கிறது? அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சி கொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
8. நீங்கள் இந்தப் பண்டிகைக்கு என்ன செய்யுங்கள்? போங்கள். நான் ஏன் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்? என் வேளை இன்னும் வராதபடியால்.
9. இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னும் எங்கே தங்கினார்? கலிலே யாவிலே தங்கினார்.
10. அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் எப்படிப் போகாமல் எப்படி பண்டிகைக்குப் போனார்? வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
11. பண்டிகையிலே யூதர்கள் என்ன செய்தார்கள்? அவரைத் தேடி: அவர்  எங்கே யிருக்கிறார் என்றார்கள்.
12. ஜனங்களுக்குள்ளே அவரைக் குறித்து என்ன உண்டாயிற்று? முறுமுறுப் புண்டாயிற்று. சிலர் என்ன சொன்னார்கள்? அவர் நல்லவர் என்றார்கள். வேறு சிலர் என்ன சொன்னார்கள்? அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
13. ஆனாலும் ஏன் ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை? யூதருக்குப் பயந்திருந்ததினாலே.
14. எப்போது இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம் பண்ணினார்? பாதிப் பண்டிகையானபோது.
15. அப்பொழுது யூதர்கள்: என்னவென்று ஆச்சரியப்பட்டார்கள்? இவர்  கல்லாத வராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப் பட்டார்கள்.
16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயி ராமல், யாருடையதாயிருக்கிறது? என்னை அனுப்பினவருடையதாயிருக்கி றது.
17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் என்னவென்று அறிந்து கொள்ளுவான்? அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
18. சுயமாய்ப் பேசுகிறவன் எதைத் தேடுகிறான்? தன் சுயமகிமையைத் தேடுகி றான். யார் உண்மையுள்ளவனாயிருக்கிறான்? தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான். யாரிடத்தில் அநீதியில்லை? தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிற உண்மை யுள்ளவனிடத்தில்.
19. மோசே எதை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? நியாயப்பிரமாணத்தை. அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் எதின்படி நடக்கிறதில்லை? அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை. நீங்கள் ஏன் என்னை என்ன செய்யத் தேடுகிறீர்கள் என்றார்? கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
20. ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீ பிசாசுபிடித்த வன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
21. இயேசு அவர்களை நோக்கி: எதைச் செய்தேன் என்றார்? ஒரே கிரியையைச் செய்தேன். அதைக்குறித்து எல்லாரும் என்ன செய்கிறீர்கள்? ஆச்சரியப்படு கிறீர்கள்.
22. விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், யாரால் உண்டாயிற்று? பிதாக்களால் உண்டாயிற்று. பின்பு மோசே அதை உங்களுக்கு என்ன செய் தான்?  நியமித்தான். நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை என்ன செய்கிறீர்கள்? விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
23. மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் என்ன செய்வதி னாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே.
24. எதின்படி தீர்ப்புசெய்யாமல், எதின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்? தோற் றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.
25. அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர் என்ன சொன்னார்கள்? இவனை யல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
26. இதோ, இவன் எப்படிப் பேசுகிறானே? தாராளமாய்ப் பேசுகிறானே. ஒருவ ரும் இவனுக்கு என்ன சொல்லுகிறதில்லையே? ஒன்றும் சொல்லுகிறதில் லையே. மெய்யாய் இவன் யார்தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்தி ருக்கிறார்களோ? கிறிஸ்துதான்.
27. இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, என்னவென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார் கள்? அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று.
28. அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் யாரை அறிவீர்கள்? என்னை அறிவீர்கள். யார் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்? நான் எப்படி வரவில்லை? என்சுயமாய் வரவில்லை. யார் சத்திய முள்ளவர்? என்னை அனுப்பினவர். யாரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்? என்னை அனுப்பியவரை.
29. நான் எதனால் அவரை அறிந்திருக்கிறேன் என்றார்? நான் அவரால் வந்தி ருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
30. அப்பொழுது என்ன செய்தார்கள்? அவரைப் பிடிக்கவகைதேடினார்கள். ஆனாலும் எதனால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை? அவருடைய வேளை இன்னும் வராதபடியினால்.
31. ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: யார் வரும்போது, இவர் செய் கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள்? கிறிஸ்து வரும்போது.
32. எப்பொழுது இயேசுவைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்? ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது.
33. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு யாரிடத்திற்குப் போகிறேன் என்றார்?  என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்.
34. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்ன செய்யமாட்டீர்கள்? என்னைக் காணமாட்டீர்கள். எங்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார்? நான் இருக்கும் இடத்திற்கு.
35. அப்பொழுது யூதர்கள் என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண் டார்கள்? இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம் பண்ணு வாரோ?
36. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
37. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்த மிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்ன செய்யவேண்டும் என்றார்? என்னி டத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து என்ன ஓடும் என்றார்? ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
39. எதைக்குறித்து இப்படிச் சொன்னார்? தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடை யப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப் படாதிருந்தபடியினால் எது இன்னும் அருளப்படவில்லை? பரிசுத்தஆவி. 
40. ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது என்ன சொன்னார் கள்? மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
41. வேறுசிலர்: இவர் யார் என்றார்கள்? கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து எங்கிருந்தா வருவார் என்றார்கள்? கலிலேயாவிலிருந்தா வருவார்?
42. எங்கிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமி ருந்து கிறிஸ்து வருவார்.
43. இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே என்ன உண்டாயிற்று? பிரிவினையுண்டாயிற்று.
44. அவர்களில் சிலர் என்ன செய்ய மனதாயிருந்தார்கள்? அவரைப் பிடிக்க. ஆகிலும் ஒருவனும் என்ன செய்யவில்லை? அவர்மேல் கைபோடவில்லை.
45. பின்பு அந்தச் சேவகர் யாரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்? பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள். இவர்கள் அவர் களை நோக்கி என்னவென்று கேட்டார்கள்? நீங்கள் அவனை ஏன் கொண்டுவர வில்லை என்று கேட்டார்கள்.
46. சேவகர் பிரதியுத்தரமாக: யார் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்? அந்த மனுஷன் (இயேசு).
47. அப்பொழுது பரிசேயர்: நீங்களும் என்ன செய்யப்பட்டீர்களா? வஞ்சிக்கப்பட் டீர்களா?
48. அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் யாரை விசுவாசித் ததுண்டா? அவனை (இயேசுவை) விசுவாசித்ததுண்டா? 
49. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் என்ன செய்யப்பட்டவர்கள் என்றார்கள்? சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
50. இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய வன் யார்? நிக்கொதேமு. நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
51. ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று எது சொல்லுகிறதா என்றான்? நம்முடைய நியாயப்பிரமாணம்.
52. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து யார் எழும்பு கிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்? ஒரு தீர்க்கதரிசியும்.
53. பின்பு அவரவர் எங்கே போனார்கள்? தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார் கள்.

Monday, May 30, 2016

யோவான் - 6

யோவான் - 6
1. இவைகளுக்குப்பின்பு இயேசு எங்கே போனார்? திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
2. திரளான ஜனங்கள் எதைக் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்? அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களை.
3. இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே யாருடனேகூட உட்கார்ந்தார்? தம்மு டைய சீஷருடனேகூட உட்கார்ந்தார். 
4. அப்பொழுது எது சமீபமாயிருந்தது? யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா  சமீபமாயிருந்தது. 
5. இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, யார் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டார்? திரளான ஜனங்கள். இயேசு பிலிப்பை நோக்கி என்ன கேட்டார்? இவர் கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்றுகேட்டார். 
6. தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், ஏன் அப்படிக் கேட்டார்? அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 
7. பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ் சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், எத்தனை பணத்து அப்பங்களும் இவர் களுக்குப் போதாதே என்றான்? இருநூறு பணத்து.
8. அப்பொழுது யார் அவரை நோக்கினான்? அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கினான். அவரை நோக்கி சொன்னது என்ன?
9. இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்ளும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.
10. இயேசு என்ன சொன்னார்? ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் எப்படிப்பட்டதாயிருந்தது? மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய எத்தனை பேராயிருந்தார்கள்? ஐயாயிரம் பேராயிருந் தார்கள்.
11. இயேசு அந்த அப்பங்களை எடுத்து, என்ன செய்தார்? ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார். சீஷர்கள் என்ன செய்தார்கள்? பந்தியிருந்தவர்க ளுக்குக் கொடுத்தார்கள். அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார்.
12. அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிச் சொன்னது என்ன? ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கை களைச் சேர்த்துவையுங்கள் என்றார். 
13. அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஜந்தில் அவர் கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே எத்தனை கூடைகளை நிரப்பி னார்கள்? பன்னிரண்டு.
14. இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு என்ன சொன்னார்கள்? மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
15. ஆதலால் இயேசு எதை அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின் மேல் ஏறினார்? அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று அறிந்து.
16. சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் எங்கே போனார்கள்? கடற் கரைக்கு.
17. படவில் ஏறி, எங்கே போனார்கள்? கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூ முக்கு நேராய்ப்போனார்கள். அப்பொழுது இருட்டாயிருந்தது, யார் அவர்களி டத்தில் வராதிருந்தார்? இயேசு.
18. எதனாலே கடல் கொந்தளித்தது? பெருங்காற்று அடித்தபடியினாலே.
19. அவர்கள் எப்போது இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்? ஏறக்குறைய மூன்று நாலுமைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது.
20. அவர்களை இயேசு அவர்களை நோக்கி சொன்னது என்ன? நான் தான், பயப் படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவர்கள் என்ன செய்ய மனதாயிருந்தார்கள்? அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள். உடனே படவு எதைப் பிடித்தது? அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
22. மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் என்னவென்று அறிந் தார்கள்? அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் பட வில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள்.
23. கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் எங்கிருந்து வேறே படவுகள் வந்தது? திபேரியாவிலிருந்து.
24. அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங் கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, எங்கே வந்தார்கள்? கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
25. கடலின் அக்கரையிலே அவர்கள் யாரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள்? இயேசுவைக் கண்டபோது.
26. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதி னால் அல்ல, எதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று  மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தி யானதினாலேயே.
27. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, எதற்காகவே கிரியை நடப்பியுங் கள்? நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே. அதை யார் உங்களுக்குக் கொடுப்பார்? மனுஷகுமாரன். அவரைப் பிதாவாகிய தேவன் என்ன செய்திருக்கிறார் என்றார்? முத்திரித்திருக்கிறார் என்றார்.
28. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: யாருக்கேற்ற கிரியைகளை நடப்பிக் கும்படி நாங்கள் என்னசெய்ய வேண்டும் என்றார்கள்? தேவனுக்கேற்ற கிரியை களை.
29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக எது தேவனுக்கேற்ற கிரியை என் றார்? அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை யாயிருக்கிறது என்றார்.
30. அதற்கு அவர்கள் கேட்ட கேள்வி என்ன? அப்படியானால் உம்மை விசுவா சிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக் கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? 
31. வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் எதைப் புசித்தார் களே என்றார்கள்? மன்னாவை.
32. இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை யார் உங்க ளுக்குக் கொடுக்கவில்லை? மோசே. யார் வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? என் பிதா.
33. வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பம் எது என்றார்? தேவன் அருளிய அப்பம் என்றார்.
34. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்.
35. இயேசு அவர்களை நோக்கி யார் அந்த ஜீவஅப்பம் என்றார்? ஜீவஅப்பம் நானே என்றார். யார் ஒருக்காலும் பசியடையான்? என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான். யார் ஒருக்காலும் தாகமடையான்? என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
36. நீங்கள் என்னைக் கண்டிருந்தும் என்ன என்றும் உங்களுக்குச் சொன்னேன்? விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
37. எது என்னிடத்தில் வரும்? பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னி டத்தில் வரும். யாரை நான் புறம்பே தள்ளுவதில்லை? என்னிடத்தில் வருகிற வனை.
38. என் சித்தத்தின்படியல்ல, எதைச் செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்? என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே.
39. என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது எது? அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவை களை எழுப்புவது. 
40. யார் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்பு வதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்? குமார னைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன். 
41. எதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்தார்கள்? நான்  வானத் திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம்.
42. யூதர்கள் இயேசுவைக்குறித்து முறுமுறுத்து சொன்னது என்ன? இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
43. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே என்ன செய்ய வேண்டாம்? முறுமுறுக்கவேண்டாம்.
44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் யாரிடத்தில் வரமாட்டான்? என்னிடத்தில் வரமாட்டான். கடைசிநாளில் நான் அவனை என்ன செய்வேன்? எழுப்புவேன்.
45. எல்லாரும் தேவனாலே என்ன செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தீர்க்கதரி சிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே? போதிக்கப்பட்டிருப்பார்கள். ஆகை யால் யாரிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்? பிதாவினிடத்தில்.
46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் யாரைக் கண்ட தில்லை? பிதாவைக் கண்டதில்லை. இவரே யாரைக் கண்டவர்? பிதாவைக் கண்டவர்.
47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு எது உண்டென்று மெய்யா கவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? நித்தியஜீவன்.
48. எது நானே என்றார்? ஜீவ அப்பம் நானே.
49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே எதைப் புசித்திருந்தும் மரித்தார்கள்? மன்னாவை.
50. யார் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே? இதிலே புசிக்கிறவன். 
51. வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்? இயேசு. யார் என்றென்றைக்கும் பிழைப்பான்? இந்த அப்பத்தைப் புசிக்கிறவன். நான் கொடுக்கும் அப்பம் எது என்றார்? உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
52. அப்பொழுது யூதர்கள் என்ன என்று தங்களுக்குள்ளே  வாக்குவாதம் பண்ணி னார்கள்? இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று.
53. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத் தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந் தால் உங்களுக்குள்ளே எது இல்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன்? ஜீவனில்லை.
54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு எது உண்டு? நித்தியஜீவன் உண்டு. நான் அவனை எப்போது எழுப்புவேன்? கடைசி நாளில் எழுப்புவேன்.
55. எது மெய்யான போஜனமாயிருக்கிறது? என் மாம்சம். எது மெய்யான பானமாயிருக்கிறது? என் இரத்தம். 
56. யார் என்னிலே நிலைத்திருக்கிறான்? என் மாம்சத்தைப் புசித்து, என் இரத் தத்தைப் பானம்பண்ணுகிறவன். நானும் அவனிலே என்ன செய்திருக்கிறேன்? நிலைத்திருக்கிறேன்.
57. யாரைப்போலவும், எதைப்போலவும் என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்? ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவி னால் பிழைத்திருக்கிறதுபோலவும்.
58. எது இதுவே? வானத்திலிருந்திறங்கின அப்பம். இது எதைப்போலல்ல? உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல. அவர்கள் என்ன ஆனார்கள்? மரித்தார்கள். இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் எப்படியி ருப்பான் என்றார்? பிழைப்பான் என்றார்.
59. எங்கே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்? கப்பர்நகூமி லுள்ள ஜெபஆலயத்திலே.
60. அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, என்னவென்று சொன்னார்கள்? இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார் கள்.
61. என்னவென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்க ளுக்கு இடறலாயிருக்கிறதோ என்றார்? சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக் கிறார்களென்று.
62. எதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை.
63. உயிர்ப்பிக்கிறது எது? ஆவி. எது ஒன்றுக்கும் உதவாது? மாம்சம். நான் உங்க ளுக்குச் சொல்லுகிற வசனங்கள் எப்படி இருக்கிறது? ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
64. ஆகிலும் உங்களில் யார் சிலர் உண்டு என்றார்? விசுவாசியாதவர்கள். யார் இன்னாரென்றும், யார் இன்னாரென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தார்? விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும். அவர் பின்னும்:
65. ஒருவன் யார் அருளைப்பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்? என் பிதாவின் அருளைப்பெறாவிட்டால்.
66. அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் என்ன செய்தார்கள்? அவருடனே கூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.
67. அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி கேட்டது என்ன? நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
68. சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், எவைகள் உம்மிடத்தில் உண்டே? நித்தியஜீவ வசனங்கள்.
69. நீர் யார் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்? நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. 
70. இயேசு அவர்களை நோக்கி: யாரை நான் தெரிந்துகொள்ளவில்லையா? பன்னிருவராகிய உங்களை. உங்களுக்குள்ளும் ஒருவன் யாராயிருக்கிறான் என்றார்? பிசாசாயிருக்கிறான் என்றார்.
71. யார் பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்? சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து.

Friday, May 20, 2016

யோவான் - 5

யோவான் - 5
1. இவைகளுக்குப்பின்பு யாருடைய பண்டிகை ஒன்று வந்தது? யூதருடைய பண்டிகை. அப்பொழுது இயேசு எங்கே போனார்? எருசலேமுக்குப் போனார்.
2. எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் எங்கே இருக்கிறது? ஆட்டுவாசலினருகே இருக்கிறது. அதற்கு எத்தனை மண்டபங்களுண்டு? ஜந்து மண்டபங்களுண்டு. 
3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, என்ன என்று காத்துக்கொண்டிருப்பார் கள்? தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 
4. ஏன்? ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
5. எத்தனை வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந் தான்? முப்பத்தெட்டு வருஷம். 
6. படுத்திருந்த அவனை கண்டது யார்? இயேசு. இயேசு அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி என்ன கேட்டார்? சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?
7. அதற்கு வியாதிஸ்தன் சொன்னது என்ன? ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்ப டும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவரு மில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடு கிறான் என்றான். 
8. இயேசு அவனை நோக்கிச் சொன்னது என்ன? எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் என்ன செய்தான்? அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் என்ன நாளாயி ருந்தது? ஓய்வு நாளாயிருந்தது. 
10. ஆதலால் யார் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கி றதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார் கள்? யூதர்கள்.
11. அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர் என்ன சொன்னார் என்றான்? உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
12. அதற்கு அவர்கள்: என்னவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்? உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று.
13. சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னார்ரென்று அறிந்திருந்தானா? அறிய வில்லை. அவ்விடத்தில் எதனால் இயேசு விலகியிருந்தார்? ஜனங்கள் கூட்ட மாயிருந்தபடியினால்.
14. அதற்குப்பின்பு இயேசு அவனை எங்கே கண்டார்? தேவாலயத்திலே கண்டார். இயேசு அவனைத் தேவாலயத்தில் கண்டு என்ன சொன்னார்? இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.
15. அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் யார் என்று யூதர்க ளுக்கு அறிவித்தான்? இயேசு.
16. யூதர்கள் இயேசுவை ஏன் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்? இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால்.
17. இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் என்ன செய்து வருகி றார்? கிரியைசெய்து வருகிறார். நானும் என்ன செய்துவருகிறேன் என்றார்? கிரியைசெய்து வருகிறேன் என்றார்.
18. யூதர்கள் இயேசுவை ஏன் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார் கள்? அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்மு டைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கின படியினாலே.
19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: எப்படி நான் உங்களுக்குச் சொல்லு கிறேன் என்றார்? மெய்யாகவே மெய்யாகவே. எதையேயன்றி, வேறொன்றை யும் பிதா தாமாகச் செய்யமாட்டார்? பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். பிதா எவைகளைச் செய்கிறாரோ, அவைகளை யார் அந்தப்படியே செய்கிறார்? குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
20. பிதாவானவர் யாரிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல் லாம் அவருக்குக் காண்பிக்கிறார்? குமாரனிடத்தில். நீங்கள் ஆச்சரியப்படத்தக் கதாக இவைகளைப் பார்க்கிலும் எதையும் அவருக்குக் காண்பிப்பார்? பெரி தான கிரியைகளையும்.
21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் யாரை உயிர்ப்பிக்கிறார்? தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் யாருக்கு கொடுத்திருக்கிறார்? குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் யாரை கனம் பண்ணாதவனாயிருக்கி றான்? குமாரனை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
24. யாருக்கு நித்திய ஜீவன் உண்டு? என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பி னவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. யார் ஆக்கினைத் தீர்ப் புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்.
25. யார் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்? மரித்தோர். அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் என்ன ஆவார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? பிழைப்பார் கள்.
26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, யார் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக் கிறார்? குமாரனும்.
27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், என்ன செய்யும்படிக்கு அதிகாரத் தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்? நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு.
28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழி களிலுள்ள அனைவரும் எதைக் கேட்குங்காலம் வரும்? அவருடைய சத்தத் தைக் கேட்குங்காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் எதை அடையும்படி எழுந்திருக்கிறவர்க ளாக புறப்படுவார்கள்? ஜீவனை அடையும்படி. தீமைசெய்தவர்கள் எதை அடை யும்படி எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்? ஆக்கினையை அடையும் படி.
30. நான் என் சுயமாய் என்ன செய்கிறதில்லை? ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் எப்படி நியாயந்தீர்க்கிறேன்? கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக் குச் சித்தமானதை நான் தேடாமல், யாருக்குச் சித்தமானதையே நான் தேடுகிற படியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது? என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்த மானதையே.
31. என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி எப்படியிராது? மெய்யாயிராது. 
32. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி என்ன சாட்சியென்று அறிந்திருக்கி றேன்? மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
33. நீங்கள் யாரிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள்? யோவானிடத்தில். அவன் எதற்குச் சாட்சி கொடுத்தான்? சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான்.
34. நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி யாருடைய சாட்சியல்ல? மனுஷருடைய சாட்சியல்ல. நான் எதற்காக இவைகளைச் சொல்லுகிறேன்? நீங்கள் இரட்சிக் கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
35. அவன் எப்படிப்பட்ட விளக்காயிருந்தான்? எரிந்து பிரகாசிக்கிற. நீங்களும் சிலகாலம் எதிலே களிகூர மனதாயிருந்தீர்கள்? அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
36. யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் எப்படிப்பட்ட சாட்சி எனக்கு உண்டு? மேன்மையான சாட்சி. அது ஏன்? அதென்னவெனில், நான் நிறைவேற் றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும்  நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று எனனைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.
37. யார் என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்? என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருக்கா லும் எதைக் கேட்டதுமில்லை? அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை. எதைக் கண்டதுமில்லை? அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
38. எதனால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை? அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால்.
39. எவைகளை ஆராய்ந்து பாருங்கள்? வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங் கள். அவைகளால் உங்களுக்கு என்ன உண்டென்று எண்ணுகிறீர்கள்? நித்திய ஜீவன். என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் எவைகளே? வேதவாக் கியங்கள்.
40. அப்படியிருந்தும் உங்களுக்கு என்ன உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை? ஜீவன். 
41. நான் யாரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை? மனுஷரால். 
42. உங்களில் என்ன அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்? தேவ அன்பு.
43. நான் யார் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வில்லை? என் பிதாவின் நாமத்தினாலே. வேறொருவன் யாருடைய நாமத்தி னாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்? தன் சுயநாமத்தினாலே.
44. யாரால் மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? தேவனாலே மாத்திரம்.
45. யாரிடத்தல் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங் கள்? பிதாவினிடத்தில். யாரே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்? நீங்கள் நம்பு கிற மோசேயே.
46. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், யாரையும் விசுவாசிப்பீர்கள்? என்னையும்  விசுவாசிப்பீர்கள். யார் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே? மோசே.
47. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் யார் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்? நான் (இயேசு).

Saturday, February 20, 2016

யோவான் - 4

யோவான் - 4
1. யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்       நானங் கொடுக்கிறாரென்று யார் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தார்?பரிசேயர். 
2. யூதேயாவைவிட்டு மறுபடியும் எங்கு போனார்? கலிலேயாவுக்குப் போனார்.
3. இயேசு தாமே என்ன கொடுக்கவில்லை? ஞானஸ்நானங்கொடுக்கவில்லை. யார் ஞானஸ்நானங்கொடுத்தார்கள்? அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். 
4. அவர் எந்த நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தது? சமாரியா. 
5. இயேசு எந்த ஊருக்கு வந்தார்? யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 
6. அங்கே என்ன இருந்தது? யாக்கோபுடைய கிணறு இருந்தது. இயேசு பிரயா ணத்தினால் இளைப்படைந்தவராய் என்ன செய்தார்? அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் என்ன? ஏறக்குறைய ஆறாம்மணி வேளை யாயிருந்தது.
7. அவருடைய சீஷர்கள் ஏன் ஊருக்குள்ளே போயிருந்தார்கள்? போஜனபதார்த் தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 
8. அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ என்ன செய்தாள்? தண்ணீர் மொள்ளவந்தாள். இயேசு அவளை நோக்கி என்ன கேட்டார்? தாகத்துக்குத்தா என்றார்.
9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா  ஸ்திரீ அவரை நோக்கி கேட்டது என்ன? நீர் யூதனாயிருக்க, சமாரியா  ஸ்திரீ யாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக் குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தா யானால், நீ என்ன செய்திருப்பாய் என்றார்? நீயே  அவரிடத்தில் கேட்டிருப்பாய் என்றார். அவர் உனக்கு எதைக் கொடுத்திருப்பார் என்றார்? ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்  என்றார்.
11. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் என்ன இல்லையே என்றாள்? பாத்திரமில்லையே என்றாள். எதுவும் ஆழமாயிருக்கி றதே என்றாள்? கிணறும் ஆழமாயிருக்கிறதே என்றாள். பின்னை எங்கேயிரு ந்து உமக்கு என்ன உண்டாகும் என்றாள்? ஜீவத்தண்ணீர் உண்டாகும் என்றாள்.
12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த யாரைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே என்ன செய்ததுண்டே என்றாள்? குடித்ததுண்டே என்றாள்.
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் என்ன உண்டாகும் என்றார்? தாகமுண்டாகும் என்றார்.
14. யாருக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது? நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக்கொடுக் கும் தண்ணீர் அவனுக்குள்ளே எப்படிப்பட்ட நீரூற்றாயிருக்கும் என்றார்?நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
15. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எதற்காக எனக்கு அந்தத் தண் ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்? எனக்குத் தாகமுண்டாகாமலும், நான்  இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி.
16. இயேசு அவளை நோக்கி: நீ போய், யாரை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்? உன் புருஷனை.
17. அதற்கு அந்த ஸ்திரீ: எனக்கு யார் இல்லை என்றாள்? புருஷன் இல்லை என் றாள். இயேசு அவளை நோக்கி: என்னவென்று நீ சொன்னது சரிதான்? எனக்குப் புருஷன் இல்லையென்று சொன்னது.
18. எப்படியெனில், எத்தனை புருஷர் உனக்கிருந்தார்கள்? ஜந்து புருஷர். இப் பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு யாரல்ல? புருஷனல்ல. இதை எப்படி சொன்னாய் என்றார்? இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
19. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் யார் என்று காண்கிறேன்? தீர்க்கதரிசி.
20. எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே என்ன செய்துகொண்டு வந்தார்கள்? தொழுதுகொண்டு வந்தார்கள். நீங்கள் எங்கே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்? எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே.
21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எதை நம்பு? நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் எங்கு மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகி றது? இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல.
22. நீங்கள் எதைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்? அறியாததை. நாங்கள் எதைத் தொழுதுகொள்ளுகிறோம்? அறிந்திருக்கிறதை. ஏனென்றால் எது  யூதர்கள்  வழியாய் வருகிறது? இரட்சிப்பு.
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை எப்படி தொழுது கொள்ளும் காலம் வரும்? ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள் ளுங்காலம் வரும். அது எப்பொழுது வந்திருக்கிறது? இப்பொழுதே வந்திருக்கி றது. யாரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்? தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்.
24. யார் ஆவியாயிருக்கிறார்? தேவன். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்? ஆவியோடும் உண்மை யோடும்.
25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: யார் வருகிறார் என்று அறிவேன்? கிறிஸ்து என்னப்படுகிற மேசியா. அவர் வரும்போது எல்லாவற்றையும் என்ன செய் வார் என்றாள்? நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26. அதற்கு இயேசு: அவர் யார் என்றார்? உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
27. அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, எதைப்பற்றி ஆச்சரியப்பட் டார்கள்? அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி. ஆகிலும் என்னவென்று ஒருவனும் கேட்கவில்லை? என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
28. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, என்ன செய்தாள்? ஊருக்குள்ளே போனாள். ஜனங்களை நோக்கி சொன்னது என்ன? 
29. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
30. அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு யாரிடத்தில் வந்தார்கள்? இயேசுவிடத்தில் வந்தார்கள்.
31. இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி என்ன என்று வேண்டிக் கொண்டார்கள்? ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
32. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு என்ன எனக்கு உண்டு என்றார்? நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
33. அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து என்னவென்று சொன் னார்கள்? யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார் கள்.
34. இயேசு அவர்களை நோக்கி எது என்னுடைய போஜனமாயிருக்கிறது என் றார்? நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 
35. எது வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகி றதில்லையா? அறுப்புக்காலம். இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப் புக்கு விளைந்திருக்கிறதென்று எதை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்க ளுக்குச் சொல்லுகிறேன்? உங்கள் கண்களை.
36. விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப் படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, எதுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்? நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்.
37. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற எது இதினாலே விளங்குகிறது? மெய்யான வழக்கச்சொல்.
38. நீங்கள் எதை அறுக்க நான் உங்களை அனுப்பினேன்? பிரயாசப்பட்டுப் பயிரி டாததை. யார் பிரயாசப்பட்டார்கள்? மற்றவர்கள். அவர்களுடைய பிரயாசத் தின் பலனை நீங்கள் என்ன செய்தீர்கள் என்றார்? பெற்றீர்கள் என்றார். 
39. எதினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாச முள்ளவர்களானார்கள்? நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம்.
40. சமாரியர் அவரிடத்தில் வந்து, என்னவென்று அவரை வேண்டிக்கொண்டார் கள்? தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று. அவர் எத்தனை நாள் அங்கே தங்கி னார்? இரண்டு நாள்.
41. அப்பொழுது எதினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்தார்கள்? அவ ருடைய உபதேசத்தினிமித்தம்.
42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உப தேசத்தை நாங்களே, கேட்டு, யார் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார் கள்? அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர்.
43. இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, எங்கே போனார்? கலிலேயாவுக்குப் போனார்.
44. ஒரு தீர்க்கதரிசிக்கு எந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல் லியிருந்தார்? தன் சொந்த ஊரிலே.
45. அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த யார் அவரை ஏற்றுக்கொண்டார்கள்? கலிலேயர். அவர்களும் எங்கு போயிருந்தார்கள்? பண்டிகைக்குப் போயிருந் தார்கள்.
46. பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின எந்த ஊருக்கு  மறுபடி யும் வந்தார்? கலிலேயாவிலுள்ள கானா. அப்பொழுது கப்பர்நகூமிலே யார் வியாதியாயிருந்தான்? ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியா தியாயிருந்தான்.
47. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், என்னவென்று அவரை வேண் டிக்கொண்டான்? தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண் டான்.
48. அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் எவைகளைக் காணாவிட் டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்? அடையாளங்களையும் அற்புதங்களை யும் காணாவிட்டால்.
49. அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, எதற்குமுன்னே வரவேண்டும் என்றான்? என் பிள்ளை சாகிறதற்குமுன்னே.
50. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் என்ன ஆனான் என் றார்? பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், எதை நம்பிப்போனான்? இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
51. அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, என்னவென்று அறிவித்தான்? உம்முடைய குமாரன் பிழைத்திருக்கி றான் என்று அறிவித்தார்கள். 
52. அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தபோது அவர்கள் சொன்னது என்ன? நேற்று ஏழா மணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள்.
53. எதை அறிந்து அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்? உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து.
54. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத்  திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த எத்தனையாவது அற்புதம்? இரண்டாம் அற்புதம்.

Tuesday, February 16, 2016

யோவான் - 3

யோவான் - 3
1. யாருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்? யூதருக்குள்ளே.
2. அவன் இராக்காலத்திலே யாரிடத்தில் வந்தான்? இயேசுவினிடத்தில். நிக்கொதேமு இயேசுவிடம், ரபீ, நீர் யார் என்று அறிந்திருக்கிறோம் என்றான்? தேவனிடத்திலிருந்து வந்த போதகர். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே யார் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்? தேவன்.
3. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் என்ன செய்யாவிட்டால் தேவ னுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? மறுபடியும் பிறவாவிட்டால். 
4. அதற்கு நிக்கொதேமு கேட்ட கேள்வி என்ன? ஒரு மனுஷன் முதிர்வயதாயி ருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்த ரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ?
5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவா விட்டால் எதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்? தேவனுடைய ராஜ்யத்தில்.
6. மாமிசத்தினால் பிறப்பது எதுவாயிருக்கும்? மாம்சமாயிருக்கும்.  ஆவியி னால் பிறப்பது எதுவாயிருக்கும்? ஆவியாயிருக்கும்.
7. நீங்கள் எதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்? மறுபடியும் பிறக்கவேண் டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து.
8. காற்றானது எங்கே வீசுகிறது? தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. எதைக் கேட்கிறாய்? அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக் குத் தெரியாது; அப்படியே இருக்கிறவன் யார்? ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
9. அதற்கு நிக்கொதேமு கேட்டது என்ன? இவைகள் எப்படி ஆகும் என்றான்.
10. இயேசு அவனை நோக்கி: நீ யாராயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கி றாயா? இஸ்ரவேலில் போதகனாயிருந்தும்.
11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந் திருக்கிறதைச் சொல்லி, எதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்? நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம். நீங்களோ எதை ஏற்றுக்கொள்ளு கிறதில்லை? எங்கள் சாட்சியை.
12. எந்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்க வில்லையே? பூமிக்கடுத்த காரியங்களை. எந்த காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரமகாரியங்களை.
13. யாரையல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை? பரலோ கத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனே யல்லாமல் . 
14. எது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது? சர்ப்பம். அதைப் போல யார் உயர்த்தப்பட வேண்டும்? மனுஷகுமாரன்.
15. மனுஷகுமாரன் ஏன் உயர்த்தப்பட வேண்டும்? தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த் தப்பட வேண்டும்.
16. தேவன், யார் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவ ரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்.
17. எதற்காக தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பவில்லை? உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி. எதற்காக தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பினார்? அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற் காகவே அவரை அனுப்பினார்.
18. யாரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்? இயேசு கிறிஸ்துவை. விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனு டைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் எதற்கு உட் பட்டாயிற்று? ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19. அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது எது? ஒளியானது உல கத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக் கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 
20. யார் ஒளியைப் பகைக்கிறான்? பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். அவன் ஏன் ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்? தன் கிரியை கள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. யார் ஒளியினிடத்தில் வருகிறான்? சத்தியத்தின்படி செய்கிறவன். அவன் ஏன் ஒளியினிடத்தில் வருகிறான்? தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய் யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.
22. இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் எங்கு வந்தார்கள்?  யூதேயா தேசத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் அவாகளோடே சஞ்சரித்து, எந்ந செய்தார்? ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
23. எந்த இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தது? சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே. அந்த இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்த படியினால், யார் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்? யோவான். ஜனங்கள் யாரிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்? யோவானிடத்தில்.
24. அக்காலத்தில் யோவான் எதில் வைக்கப்பட்டிருக்கவில்லை? காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 
25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் என்ன  உண் டாயிற்று? வாக்குவாதம். எதைக்குறித்து? சுத்திகரிப்பைக்குறித்து. 
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து சொன்னது என்ன? ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
27. யோவான் பிரதியுத்தரமாக: எங்கிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டா லொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்? பரலோகத்திலி ருந்து. 
28. நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே யார்? சாட்சிகள். 
29. மணவாளன் யார்? மணவாட்டியை உடையவனே மணவாளன். மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, என்ன செய்கிறவனாய் இருக்கிறான்? அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான். எது இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று? இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமா யிற்று.
30. அவர் என்ன செய்யப்பட வேண்டும்? பெருக வேண்டும். நான் என்ன செய்யப் பட வேண்டும்? சிறுக வேண்டும்.
31. எங்கிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்? உன்னதத்திலிருந்து வருகிறவர். எதிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்? பூமியிலிருந்துண்டானவன். பரலோ கத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் எப்படிப்பட்டவர்? மேலானவர்.
32. தாம் எதைச் சாட்சியாகச் சொல்லுகிறார்? கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார். அவருடைய சாட்சியை யார் ஏற்றுக்கொள்ளுகிற தில்லை? ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னவென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்? தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்.
34. யார் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்? தேவனால் அனுப்பப்பட்ட வர். தேவன் அவருக்கு எதை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்? தமது ஆவியை. 
35. யார் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார்? பிதா.
36. யார் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்? குமாரனிடத்தில் விசுவா சமாயிருக்கிறவன். யார் ஜீவனைக் காண்பதில்லை? குமாரனை விசுவாசியாத வன்.  தேவனுடைய கோபம் யார்மேல் நிலைநிற்கும்? குமாரனை விசுவாசியா தவன் மேல்.

Saturday, February 13, 2016

யோவான் - 2

யோவான் - 2
1. மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே என்ன நடந்தது? ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாய் எங்கேயிருந்தாள்? கலியாணவீட்டிலே.
2. இயேசுவும் அவருடைய சீஷரும் எதுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்? அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3. திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் யாரை நோக்கி, அவர்க ளுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்? இயேசுவை நோக்கி.
4. இயேசு யாரிடம் ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என்வேளை இன்னும் வரவில்லை என்றார்? தன் தாயிடம்.
5. அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கிச் சொன்னது என்ன? அவர் உங்க ளுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.
6. அங்கே எப்படிப்பட்ட கற்சாடிகள் வைத்திருந்தது? யூதர்கள் தங்களைச் சுத்திக ரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
7. இயேசு வேலைக்காரரை நோக்கி எதிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்? ஜாடி களிலே. அவர்கள் அவைகளை என்ன செய்தார்கள்? தண்ணீரால் நிறைய நிரப் பினார்கள்.
8. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, யாரிடத்தில் கொண்டு போங்கள் என்றார்? பந்திவிசாரிப்புக்காரனிடத்தில். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோனார்கள்.
9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று யாருக்குத் தெரியும்? தண் ணீரை மொண்ட வேலைக்காரருக்கு. யாருக்குத் தெரியாது? பந்திவிசாரிப்புக் காரனுக்கு. அந்தத் திராட்சரசம் தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட் சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, யாரை அழைத்தான்? மணவா ளனை அழைத்தான். 
10. மணவாளனை அழைத்துச் என்ன சொன்னான்? எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை  இதுவரைக்கும் வைத்திருந் தீரே என்றான்.
11. இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, எதை வெளிப்படுத்தினார்? தம்முடைய மகிமையை. யார் அவர்டத்தில் விசுவாசம் வைத்தார்கள்? அவருடைய சீஷர்கள்.
12. அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவ ருடைய சீஷரும் எங்கேபோய், அங்கே சில நாள் தங்கினார்கள்? கப்பர்நகூமுக் குப்போய்.
13. பின்பு எது சமீபமாயிருந்தது? யூதருடைய பஸ்காபண்டிகை. அப்பொழுது இயேசு எங்கே போனார்? எருசலேமுக்குப் போனார்.
14. தேவாலயத்திலே யாரைக் கண்டார்? ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டார்.
15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, என்ன செய்தார்? அவர்கள் யாவ ரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக் காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார்.
16. புறாவிற்கிறவர்களை நோக்கி என்ன சொன்னார்? இவைகளை இவ்விடத்தி லிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக் காதிருங்கள் என்றார்.
17. அப்பொழுது என்ன என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினை வுகூர்ந்தார்கள்? உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான  பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது.
18. அப்பொழுது யூதர்கள் யாரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு  என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்? இயேசுவை நோக்கி.
19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், எத்தனை நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்? மூன்று நாளைக்குள்ளே.
20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட எத்தனை வருஷம் சென் றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்? நாற்பத்தாறு வருஷம்.
21. அவரோ எதைக்குறித்துப் பேசினார்? தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்துப் பேசினார்.
22. அவர் இப்படிச் சொன்னதை எப்போது அவருடைய சீஷர்கள் நினைவு கூர்ந்து,  வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித் தார்கள்? அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு.
23. பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, எதில் விசுவாசம் வைத்தார்கள்? அவருடைய நாமத்தில்.
24. அப்படியிருந்தும், இயேசு எதனால் அவர்களை நம்பி இணங்கவில்லை? எல்லாரையும் அறிந்திருந்தபடியால்.
25. எதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக் குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை? மனுஷருள்ளத்திலிருப் பதை அவர் அறிந்தபடியால்.