Thursday, April 9, 2015

மத்தேயு – 19

மத்தேயு – 19
1. இயேசு இந்த வசனங்களை எங்கே சொன்னார்? கலிலேயாவில் சொன் னார். இயேசு கலிலேயாவை விட்டு எங்கே வந்தார்? இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.
2. இயேசுவுக்குப் பின்சென்றவர்கள் யார்? திரளான ஜனங்கள். இயேசு அவ்வி டத்தில் என்ன செய்தார்? இயேசு அவ்விடத்தில் திரளான ஜனங்களைச் சொஸ் தமாக்கினார்.
3. பரிசேயர் இயேசுவை என்ன செய்யவேண்டுமென்று அவரிடத்தில் வந்தார்கள்? பரிசேயர் இயேசுவை சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்தார்கள். பரிசேயர் இயேசுவிடத்தில் என்ன கேட்டார்கள்? புருஷனானவன் தன்  மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். 
4. ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை எப்படி உண்டாக்கி னார்? ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணு மாக உண்டாக்கினார். 
5. எதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்? ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப் பான். எவர் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்? புருஷனும் மனைவியு மாகிய இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
6. யார் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்? தேவன். ஏன்? அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறபடியினால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.
7. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, மனைவியைத் தள்ளிவிடலாமென்று கட்டளையிட்டது யார்? மோசே. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, மனைவியைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்று இயேசுவிடம் கேட்டது யார்? பரிசேயர்.
8. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து உங்கள் மனைவியைத் தள்ளிவிடலா மென்று மோசே ஏன் உங்களுக்கு இடங்கொடுத்தார் என்று இயேசு சொல்லுகி றார்? உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத் தார் என்று இயேசு சொல்லுகிறார். எதுமுதலாய் அப்படியிருக்கவில்லை? ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9. ஒருவன் எப்பொழுது விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்? எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயி ருப்பான். தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் யாராயிருப் பான்? விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.
10. அதற்கு சீஷர்கள் இயேசுவிடம் சொன்னதென்ன? மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
11. அதற்கு இயேசு, யாரைத் தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள் ளமாட்டார்கள் என்றார்? வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வச னத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.
12. எதிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு? தாயின் வயிற்றி லிருந்து. யாரால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு? மனுஷர்களால். எதினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு? பரலோக ராஜ்யத்தினிமித்தம். எதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக் கொள் ளக்கடவன் என்று இயேசு சொன்னார்? தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்க ளாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர் களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன் என்றார்.
13. அப்பொழுது யார்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்? சிறு பிள்ளைகளின்மேல். சிறு பிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் என்ன செய்தார்கள்? அதட்டினார்கள்.
14. இயேசு யார் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் என்றார்? சிறு பிள்ளைகள். யாரைத் தடைபண்ணாதிருங்கள் என்றார்? சிறு பிள்ளைகளைத் தடைபண்ணாதிருங்கள் என்றார். பரலோகராஜ்யம் எப்படிப்பட்டவர்களுடை யது என்று சொன்னார்? சிறு பிள்ளைகள்.
15. இயேசு யார் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப் போனார்? சிறு பிள்ளைகள் மேல்.
16. ஒருவன் வந்து நல்ல போதகரே என்று யாரை நோக்கிச் சொன்னார்? இயே சுவை நோக்கிச் சொன்னான். எதை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான்? நித்திய ஜீவனை அடைவதற்கு.
17. நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? என்றது யார்? இயேசு. யார் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே என்று இயேசு சொன்னார்? தேவன். 
18. நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் எவைகளைக் கைக்கொள் என்று இயேசு சொன்னார்?  கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் இயேசுவை நோக்கி என்ன கேட்டான்? எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு எவை களையெல்லாம் செய்யாதிருப்பாயாக என்றார்? கொலை செய்யாதிருப்பா யாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக என்றார். இயேசு என்ன சொல்லாதிருப்பாயாக என்றார்? பொய்ச்சாட்சி சொல்லாதிருப் பாயாக என்றார்.
19. யாரை கனம்பண்ணுவாயாக என்றார்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றார். யாரிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனி டத்திலும் அன்புகூருவாயாக என்றார்? உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்றார்.
20. அந்த வாலிபன் இயேசுவை நோக்கி சொன்னதென்ன? இவைகளையெல் லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
21. அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய் என்ன செய்ய வேண்டும் என்றார்? நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடுக்க வேண்டும். எப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்? உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்.
22. அந்த வாலிபன் ஏன் இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்த வனாய்ப் போய்விட்டான்? அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்த படியினால் இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
23. ஐசுவரியவான் எதில் பிரவேசிப்பது அரிது? பரலோகராஜ்யத்தில் பிரவேசிப் பது அரிது.
24. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், எது எளிதாய் இருக்கும்? ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாய் இருக்கும்.
25. சீஷர்கள் அதைக்கேட்டு என்ன ஆனார்கள்? மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு இயேசுவிடம் என்ன கேட்டார் கள்? அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும்.
26. இயேசு அவர்களைப் பார்த்து இது யாரால் கூடாததுதான் என்றார்? மனுஷ ரால். இயேசு யாராலே எல்லாம கூடும் என்றார்? தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
27. பேதுரு இயேசுவிடம் என்ன கேட்டான்? இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
28. எந்தக் காலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காச னத்தின்மேல் வீற்றிருப்பார்? மனுஜென்ம காலத்திலே. இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பவர்கள் யார்? மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற் றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க் கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பார்கள்.
29. நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளு கிறவன் யார்? என் நாமத்தினிமித்தம் வீ;டடையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையா வது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.
30. முந்தினோர் அநேகர் யாராயிருப்பார்கள்? பிந்தினோராயிருப்பார்கள். பிந்தி னோர் அநேகர் யராயிருப்பார்கள்? முந்தினோராயிருப்பார்கள்.

Wednesday, April 8, 2015

மத்தேயு – 18

மத்தேயு – 18
1. அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து என்ன கேட்டார் கள்? பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
2. இயேசு யாரைத் தம்மிடத்தில் அழைத்தார்? இயேசு ஒரு பிள்ளையைத் தம் மிடத்தில் அழைத்தார். இயேசு யாரை அவர்கள் நடுவே நிறுத்தினார்? இயேசு ஒரு பிள்ளையை அவர்கள் நடுவே நிறுத்தினார்.
3. நீங்கள் யாரைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ் யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றார்.
4. பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பவன் யார்? இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
5. என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் யார்? இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகி றான்.
6. யாருடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்? என்னிடத்தில் விசுவாச மாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
7. இடறல்களினிமித்தம் யாருக்கு ஐயோ? இடறல்களினிமித்தம் உலகத் துக்கு ஐயோ. எது வருவது அவசியம்? இடறல்கள் வருவது அவசியம். இடறல் வருகிறதால் யாருக்கு ஐயோ? எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ.
8. உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை என்ன செய்ய வேண்டும்? அதைத் தறித்து எறிந்துபோட வேண்டும். நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினி யிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், எப்படி நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப் பது உனக்கு நலமாயிருக்கும்? சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
9. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை என்ன செய்ய வேண் டும்? அதைப் பிடுங்கி எறிந்துபோட வேண்டும். இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், எப்படி  ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்? ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
10. யாரை அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்? இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயி ருக்க வேண்டும். யார் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போ தும் தரிசிக்கிறார்கள்? இந்தச் சிறியர்களுக்குரிய தேவதூதர்கள்.
11. கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தது யார்? மனுஷகுமாரன்.
12. ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போ னால், சிதறிப் போனதைத் தேடாமலிருப்பானா? தேடாமலிருக்க மாட்டான். மற்றத் தொண்ணுணுணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படு வதைப் பார்க்கிலும் என்ன செய்வான்? காணாமல் போன ஒரு ஆட்டின் நிமித் தம் கவலைப்படுவான்.
13. சிதறிப்போன ஆட்டைக் கண்டுபிடித்தால் என்ன செய்வான்? சிதறிப்போ காத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுவதைப்பார்க் கிலும், கண்டுபிடித்த அந்த ஆட்டைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படு வான்.
14. இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது யாரு டைய சித்தமல்ல? பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
15. உன் சகோதரன் உனக்கு. விரோதமாகக் குற்றஞ்செய்தால் அவனை என்ன செய்ய வேண்டும்? உன் சகோதரன் உனக்கு. விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்த வேண்டும். உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்த உன் சகோதரனை நீ எப்பொழுது ஆதாயப்படுத்திக் கொள்வாய்? உனக்கு விரோதமா கக் குற்றஞ்செய்த உன் சகோதரன் உனக்குச் செவிகொடுத்தால் உன் சகோத ரனை ஆதாயப்படுத்திக் கொள்வாய்.
16. உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்த உன் சகோதரன் உனக்குச் செவிகொ டாமல் போனால் என்ன செய்ய வேண்டும்? உனக்கு விரோதமாகக் குற்றஞ் செய்த உன் சகோதரன் உனக்குச் செவிகொடாமல் போனால் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
17. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால் என்ன செய்ய வேண் டும்? அதைச் சபைக்குத் தெரியப்படுத்து. சபைக்கும் செவிகொடாதிருப்பானா னால் அவன் யாரைப்போல் இருப்பான்? அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பான்.
18. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் எங்கேயும்  கட்டப்பட்டிருக்கும்? பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் எங்கேயும் கட்டவிழ்க் கப்பட்டிருக்கும்? பரலோகத்திலும்  கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.
19. உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரி யத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், யாரால் அது அவர்களுக்கு உண்டாகும்? பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்.
20. இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக் கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிது யார் என்கிறார்? அங்கே அவர்கள் நடுவிலே நான் இருக்கிறேன் என்கிறார்.
21. அப்பொழுது பேதுரு இயேசுவினிடத்தில் வந்து என்ன கேட்டான்? ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
22. அதற்கு இயேசு எத்தனை தரம் மன்னிக்க வேண்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
23. பரலோகராஜ்யம் யாருக்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
24. ராஜா கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, எத்தனை தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்? பதினாயிரம் தாலந்து.
25. கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் எப்படி கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்? அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
26. அப்பொழுது அந்த ஊழியக்காரன் என்ன செய்தான்? அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து வணங்கினான். அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி ராஜாவிடம் என்ன சொன்னான்? ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையா யிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் என்ன செய்தான்? அந்த ஊழியக் காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
28. அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத் தில் நூறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்கா ரரில் ஒருவனைக் கண்டு என்ன செய்தான்? அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
29. அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து என்ன செய்தான்? என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல் அவனுடைய உடன் வேலைக்காரனை என்ன செய்தான்? அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.
30. நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு என்ன ஆனார்கள்? மிகவும் துக்கப்பட்டார்கள்.
31. நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, என்ன செய்தார்கள்? ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித் தார்கள்.
32. அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து எதனால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன் என்றான்? நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன் என்றான்.
33. யாரைப்போல நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொன்னான்? நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொன்னான்.
34. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி அவனுடைய ஆண்டவன் என்ன செய் தான்? அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
35. நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை என்ன செய்ய வேண்டும்? மன்னிக்கவேண்டும். எப்பொழுது என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்? நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்ப+ர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

Monday, April 6, 2015

மத்தேயு – 17

மத்தேயு – 17
1. எத்தனை நாளைக்குப் பின்பு, இயேசு யாரைக் கூட்டிக்கொண்டு தனித்திருக் கும்படி போனார்? ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபை யும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்தி ருக்கும்படி போனார். எங்கே போனார்? உயர்ந்த மலையின்மேல் போனார்.
2. இயேசு அவர்களுக்கு முன்பாக என்னவானார்? மறுரூபமானார். அவரு டைய முகம் எதைப்போலப் பிரகாசித்தது? சூரியனைப்போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் எதைப்போல வெண்மையாயிற்று? வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
3. அப்பொழுது யாரெல்லாம் இயேசுவோடே பேசுகிறவர்களாக அவர்களுக் குக் காணப்பட்டார்கள்? மோசேயும் எலியாவும் இயேசுவோடே பேசுகிறவர்க ளாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
4. அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும்,மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
5. பேதுரு பேசுகையில் அவர்கள்மேல் நிழலிட்டது எது? ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. மேகத்திலிருந்து என்ன சத்தம் உண்டா யிற்று? இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
6. சீஷர்கள் அதைக் கேட்டு, என்ன ஆனார்கள்? முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
7. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அப்பொழுது, இயேசு வந்து, அவர்க ளைத் தொட்டார். இயேசு அவர்களைத் தொட்டு என்ன சொன்னார்? எழுந்திருங் கள், பயப்படாதேயுங்கள் என்றார்.
8. அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் என்ன கண்டார்கள்? அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி கட்டளையிட்டது என்ன? மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி என்ன கேட்டார்கள்? அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகி றார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
11. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக எது மெய்தான் என்றார்? எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான் என்றார்.
12. ஆனாலும், யார் வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என் றார்? எலியா. யாரை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள் என்றார்? எலியாவை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள் என்றார். இவ்விதமாய் யாரும் அவர்களால் பாடுபடுவார் என்றார்? இவ்வித மாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
13. இயேசு யாரைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொ ழுது அறிந்துகொண்டார்கள்? இயேசு யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்க ளுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
14. அவர்கள் யாரிடத்தில் வந்தார்கள்? அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தார்கள். அப்பொழுது ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து என்ன செய்தாய்? ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டான்.
15. அவன் யாருக்கு இரங்கும் என்றான்? ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும் என்றான். தன் மகனைப்பற்றி அவன் இயேசுவிடம் சொன்னது என்ன? அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான் என்றான்.
16. தன் மகனை யாரிடத்தில் கொண்டுவந்தேன் என்றான்? தன் மகனை உம்மு டைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன் என்றான். அவனைச் சொஸ்தமாக்க யாரால் கூடாமற் போயிற்று என்றான்? அவனைச் சொஸ்தமாக்க உம்முடைய சீஷர்களால் கூடாமற் போயிற்று என்றான்.
17. இயேசு சீஷருக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவ ரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள். என்றார்.
18. இயேசு எதை அதட்டினார்? இயேசு பிசாசை அதட்டினார். உடனே என்ன ஆனது? உடனே பிசாசு அவனை விட்டுப் புறப்பட்டது. அந்த இளைஞன் என்ன ஆனான்? அந்நேரமே அந்த இணைஞன் சொஸ்தமானான்.
19. அப்பொழுது, சீஷர்கள் யாரிடத்தில் தனித்துவந்தார்கள்? இயேசுவினிடத் தில். எதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று சீஷர்கள் கேட்டார்கள்? பிசாசைத் துரத்திவிட.
20. பிசாசைத் துரத்திவிட ஏன் கூடாமற்போயிற்று என்று இயேசு சொன்னார்? உங்கள்  அவிசுவாசத்தினால்தான் என்றார். எந்த அளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்? கடுகு விதையளவு விசுவா சம். கடுகுவிதை அளவு விசுவாசம் இருந்தால் உங்களால் கூடாத காரியம் என்ன? கடுகுவிதை அளவு விசுவாசம் இருந்தால் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.
21. இந்த ஜாதிப் பிசாசு எதினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட் டுப்போகாது? இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது.
22. அவர்கள் எங்கே சஞ்சரித்தார்கள்? கலிலேயாவில் சஞ்சரித்தார்கள். மனுஷ குமாரன் யார் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார்? மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார்.
23. அவர்கள் யாரைக் கொலைசெய்வார்கள்? மனுஷகுமாரனைக் கொலை செய்வார்கள். ஆகிலும் எந்த நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார்? ஆகிலும் மூன் றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார். இதை இயேசு சீஷர்களிடம் சொன்ன போது அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
24. அவர்கள் கப்பர்நகூமில் வந்த போது, பேதுருவினிடத்தில் வந்தது யார்? வரிப்பணம் வாங்குகிறவர்கள். யார் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்? உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள். பேதுரு என்ன சொன்னான்? பேதுரு செலுத்துகிறார் என்றான்.
25. பேதுரு வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி கேட்டது என்ன? சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத் திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
26. அதற்கு பேதுரு சொன்னது என்ன? அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். யார் தீர்வையையும் வரியையும் செலுத்த வேண்டியதில்லை? பிள்ளைகள்.
27. ஆகிலும் நாம் எதற்காக வரி செலுத்தவேண்டும் என்கிறார்? நாம் அவர்க ளுக்கு இடறலாயிராதபடிக்கு வரி செலுத்தவேண்டும் என்கிறார். நீ கடலுக்குப் போய் என்ன செய் என்றார்? தூண்டில் போடு என்றார். எதைத் திறந்துபார் என் றார்? முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார் என்றார். மீனின் வாயில் எதைக் காண்பாய் என்றார்? ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய் என்றார். வெள்ளிப்பணத்தை என்ன செய் என்றார்? அந்த வெள்ளிப் பணத்தை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் வரி வசூலிப்பவர்களிடத்தில் கொடு என்றார்.

Sunday, April 5, 2015

மத்தேயு – 16

மத்தேயு – 16

1. பரிசேயரும் சதுசேயரும் இயேசுவினிடத்தில் ஏன் வந்தார்கள்? இயேசு வைச் சோதிக்கும்படி வந்தார்கள். எங்கிருந்து ஓர் அடையாளத்தைத் தங்க ளுக்குக் காண்பிக்க வேண்டும் என்றார்கள்? வானத்திலிருந்து.
2. எதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்? அஸ்தனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
3. எதினால் இன்றைக்கு காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர் கள்? உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்கு காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். எதை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே என்கிறார்? வானத்தின் தோற்றத்தை. எதை நிதானிக்க உங்களால் கூடாதா என்கிறார்? காலங்களின் அடையாளங் களை.
4. இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் எதைத் தேடுகிறார்கள்? அடையா ளத்தை தேடுகிறார்கள். யாருடைய அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றார்? யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவ தில்லை என்றார்.
5. அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, எவைகளைக் கொண்டுவர மறந்துபோனார்கள்? அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
6. இயேசு எதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
7. சீஷர்கள் தங்களுக்குள்ளே என்ன யோசனைபண்ணிக்கொண்டார்கள்? தாங்கள் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
8. இயேசு யாருடைய சிந்தனையை அறிந்தார்? சீஷர்களுடைய சிந்தனையை அறிந்தார். எதைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனை பண்ணுகிறதென்ன என்றார்? அற்பவிசுவாசிளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிற தென்ன என்றார்.
9. ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் என்ன செய்யவில் லையா என்கிறார்? இதை இன்னும் உணரவில்லையா என்கிறார். 
10. ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் என்னசெய்யவில்லையா என்கிறார்? நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா என்றார்.
11. பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நான் சொன்னது எதைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்? அப்பத்தைக்குறித்து.
12. அவர் எதற்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று சொல்லவில்லை? அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டு மென்று சொல்லவில்லை. யாருடைய உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்து கொண்டார்கள்? பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
13. பின்பு இயேசு எந்தத் திசைகளில் வந்தார்? பிலிப்புச் செசரியாவின் திசைக ளில் வந்தார். சீஷரை நோக்கி இயேசு என்ன கேட்டார்? மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? சிலர் உம்மை யோவான்ஸ்நா னன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரி சிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15. அதற்கு இயேசு என்ன சொன்னார்? நீங்கள் என்னை யார் என்று சொல்லுகி றீர்கள் என்று கேட்டார்.
16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீர் ஜீவனுள்ள தேவனு டைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17. எது இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை? மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. யார் இதை உனக்கு வெளிப்படுத்தினார்? பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இயேசு சீமோனை நோக்கிச் சொன்னது என்ன? யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்த வில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்றார்.
18. நீ யாராய் இருக்கிறார்? நீ பேதுருவாய் இருக்கிறாய். எதின்மேல் என் சபை யைக் கட்டுவேன்? இந்தக்கல்லின்மேல் (பேதுருவின்மேல்). எது சபையை மேற்கொள்வதில்லை? பாதாளத்தின் வாசல்கள்.
19. எதை நான் உனக்குத் தருவேன்? பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன். எது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்? பூலோ கத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். எது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்? பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும். 
20. அப்பொழுது, தாம் யார் என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்மு டைய  சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்? அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய  சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
21. அதுமுதல் இயேசு, எதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங் கினார்? அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன் றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
22. அப்பொழுது பேதுரு யாரைத் தனியே அழைத்துக்கொண்டு போனான்? இயேசுவை தனியே அழைத்துக்கொண்டு போனான். பேதுரு இயேசுவை என்ன சொல்லி கடிந்துகொள்ளத் தொடங்கினான்? ஆண்டவரே, இது உமக்கு நேரிடக் கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
23. இயேசு திரும்பிப் பேதுருவைப் பார்த்து என்ன சொன்னார்? எனக்குப் பின் னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவை களைச் சிந்தியாமல் மனுஷருக்கு  ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
24. ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் என்ன செய்யக்கடவன் என்றார்? அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார்.
25. யார் தன் ஜீவனை இழந்துபோவான்? தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிற வன் அதை இழந்துபோவான். யார் ஜீவனைக் கண்டடைவான்? என்னிமித்த மாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
26. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், எதை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? தன் ஜீவனை நஷ்டப்படுத்தி னால் அவனுக்கு லாபம் என்ன. மனுஷன் எதற்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
27. மனுஷகுமாரன் எப்படி வருவார்? மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய் வருவார். மனுஷகுமாரன் யாரோடுகூட வருவார்? மனுஷகுமாரன் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். மனுஷகுமாரன் அப்போழுது, ஒருவனுக்கு எப்படி பலனளிப்பார்? அவனவன்  கிரியைக்குத்தக் கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
28. இங்கே நிற்கிறவர்களில் சிலர் யார் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன் என்றார்? இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்ப தில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 

Thursday, March 26, 2015

மத்தேயு – 15

மத்தேயு – 15
1. அப்பொழுது, வேதபாரகரும் பரிசேயரும் எங்கிருந்து இயேசுவினிடத்தில் வந்தார்கள்? எருசலேமிலிருந்து வந்தார்கள்.
2. சீஷர்கள் எதை மீறி நடக்கிறார்கள்? சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரி யத்தை மீறி நடக்கிறார்கள். சீஷர்கள் எதைக்கழுவாமல் போஜனம் பண்ணுகி றார்கள்? சீஷர்கள் கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்கள். வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் என்ன கேட்டார்கள்? உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே என்றார்கள்.
3. வேதபாரகரும் பரிசேயரும் தங்கள் பாரம்பரியத்தினாலே எதைமீறி நடக்கிறார்கள்? தேவனுடைய கற்பனையை மீறி நடக்கிறார்கள். இயேசு அவர் களுக்கு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீங்கள் உங்கள் பாரம்பரியத்தி னாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? என்றார்.
4. தகப்பனையும் தாயையும் என்ன செய்யவேண்டும்? கனம்பண்ண வேண் டும். யார் கொல்லப்படவேண்டும்? தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிற வன் கொல்லப்படவேண்டும். தேவன் கற்பித்தது என்ன? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையா வது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக் கிறார்.
5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி என்ன சொன்னது உண்டோ என்றார்? உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொன்னது உண்டோ என்றார். இயேசு எப்பொழுது ஒருவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்தார்? எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கி றேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண் ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்தார்.
6. நீங்கள் எதனாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள் என்றார்? நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள் என்றார்.
7. இயேசு யாரை மாயக்காரரே என்கிறார்? இயேசு வேதபாரகரையும் பரிசேய ரையும் மாயக்காரரே என்கிறார்.
8. இந்த ஜனங்கள் எதினால் என்னிடத்தில் சேர்ந்தார்கள் என்கிறார்? தங்கள் வாயினால். இந்த ஜனங்கள் எதினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்? தங்கள் உதடுகளினால். எது எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றார்? அவர்கள் இருதயம்.
9. மனுஷருடைய கற்பனைகளை எப்படி போதித்தார்கள்? மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்தார்கள். எனக்கு எப்படி ஆராதனை செய்கிறார்கள்? வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள். ஏசாயா தீர்க்கதரிசி எதை நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்று இயேசு சொன்னார்? மனுஷரு டைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆரா தனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக் கிறான் என்றார்.
10. பின்பு இயேசு யாரை வரவழைத்தார்? பின்பு இயேசு ஜனங்களை வரவ ழைத்தார். நீங்கள் கேட்டு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கேட்டு உணர வேண்டும்.
11. எது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது? வாய்க்குள்ளே போகிறது மனுஷ னைத் தீட்டுப்படுத்தாது. எது மனுஷனைத் தீட்டுப்படுத்தும்? வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். இயேசு ஜனங்களை வரவ ழைத்து அவர்களை நோக்கி சொன்னதென்ன? வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
12. அப்பொழுது சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து சொன்னது என்ன? பரிசே யர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார் கள்.
13. இயேசு எது வேரோடே பிடுங்கப்படும் என்றார்? என் பரமபிதா நடாத நாற் றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும் என்றார்.
14. இயேசு யாரை விட்டுவிடுங்கள் என்றார்? பரிசேயரை விட்டுவிடுங்கள் என்றார். யார் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்? பரிசேயர். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் என்ன ஆகும் என்றார்? குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15. பேதுரு இயேசுவை நோக்கி கேட்டது என்ன? இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றார்.
16. இயேசு பேதுருவிடம் என்ன கேட்டார்? நீங்களும் இன்னும் உணர்வில்லாத வர்களாயிருக்கிறீர்களா? என்றார்.
17. வாய்க்குள்ளே போகிறதெல்லாம் எங்கே செல்லும்? வாய்க்குள்ளே போகிற தெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம். இயேசு எதை நீங்கள் இன்னும் அறியவில்லையா என்றார்? வாய்க்குள்ளே போகிறதெல் லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? என்றார்.
18. வாயிலிருந்து புறப்படுகிறவைகள் எங்கிருந்து புறப்பட்டுவரும்? வாயிலி ருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும். எது மனுஷ னைத் தீட்டுப்படுத்தும்? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
19. இருதயத்திலிருந்து எவைகள் புறப்பட்டுவரும்? இருதயத்திலிருந்து பொல் லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங் களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
20. இருதயத்திலிருந்து புறப்பட்டுவருகிறவைகள் மனுஷனைத் தீட்டுப்படுத்து வது ஏன்?  இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங் களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வருகிறதினால் அவைகள் மனுஷனைத் தீட்டுப்ப டுத்தும். எது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது? கைகழுவாமல் சாப்பிடுவது மனு ஷனைத் தீட்டுப்படுத்தாது.
21. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு எங்கே போனார்? தீரு சீதோன் பட்ட ணங்களின் திசைகளுக்குப் போனார்.
22. அங்கு இயேசுவிடம் வந்தது யார்? அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானா னிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்தாள். கானானிய ஸ்திரீ இயேசுவிடம் என்ன சொல்லி கூப்பிட்டாள்? ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங் கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23. அவளுக்குப் பிரதியுத்தரமாக இயேசு சொன்னது என்ன? அவளுக்குப் பிரதி யுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவரு டைய சீஷர்கள் வந்து இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன? இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24. காணாமற்போன ஆடுகள் யார்? இஸ்ரவேல் வீட்டார். இயேசு சீஷர்களிடம் சொன்னது என்ன? காணாமற்;போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத் திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
25. அப்பொழுது கானானிய ஸ்திரீ என்ன செய்தாள்? அவள் வந்து: ஆண்ட வரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.
26. இயேசு கானானிய ஸ்திரீயை நோக்கி சொன்னது என்ன? பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27. அதற்கு கானானிய ஸ்திரீ சொன்னது என்ன? மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நே ரமே அவள் மகள் என்ன ஆனாள்? ஆரோக்கியமானாள்.
29. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு என்ன செய்தார்? இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
30. அப்பொழுது யாரை திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத் தில் வந்தார்? சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்தார்கள். இயேசு யாரை சொஸ்தப்படுத்தினார்? சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை இயேசு சொஸ்தப்படுத்தினார்.
31. ஜனங்கள் எதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள் ஊமையர் பேசுகி றதையும், ஊனர்சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஜனங்கள் ஊமையர் பேசுகிறதையும், ஊனர்சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதை யும், குருடர் பார்க்கிறதையும் கண்டு ஆச்சரியப்பட்டு யாரை மகிமைப்படுத் தினார்கள்? இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
32. இயேசு யாரை அழைத்தார்? இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்தார். இயேசு யாருக்காக பரிதபிக்கிறேன் என்றார்? இயேசு ஜனங்களுக்காக பரிதபிக் கிறேன் என்றார். இயேசு யார் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாது இருக்கிறார்கள் என்றார்? இந்த ஜனங்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாது இருக்கிறார்கள் என்றார். இவர்களை எப்படி அனுப்பிவிட எனக்கு மனதில்லை என்றார்? இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை என்றார். ஏன் இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை என்றார்? வழியில் சோர்ந்து போவார்களே, அதனால் இவர்களை பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை என்றார்.
33. அதற்கு அவருடைய சீஷர்கள் சொன்னது என்ன? இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்த ரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
34. அதற்கு இயேசு உங்களிடத்தில் எது எத்தனை உண்டு என்று கேட்டார்? அப்பங்கள். இயேசு, உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்ட தற்கு சீஷர்கள் சொன்னது என்ன? ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
35. அப்பொழுது இயேசு ஜனங்களுக்கு கட்டளையிட்டது என்ன? இயேசு ஜனங் களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டார்.
36. இயேசு அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து என்ன செய்தார்? இயேசு அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். சீஷர்கள் என்ன செய்தார்கள்? சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
37. சாப்பிட்டுத் திருப்தியடைந்தவர்கள் யார்? எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தி யடைந்தார்கள். மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத் தார்கள்? மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
38. ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் எத்தனை பேராயிருந் தார்கள்? ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேராயிருந்தார்கள்.
39. இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு என்ன செய்தார்? அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.

Tuesday, March 17, 2015

மத்தேயு – 14

மத்தேயு – 14
1. அக்காலத்தில் காற்பங்கு தேசாதிபதி யார்? ஏதோது. ஏரோது யாருடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டான்? இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டான்.
2. ஏரோது இயேசுவை யார் என்றான்? இவன் யோவான்ஸ்நானன் என்றான். இவன் எங்கிருந்து எழுந்தான் என்றான்? இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான். எதனால் இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்? இவன் யோவான்ஸ்நானன், இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
3. ஏரோது யார் நிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்தி ருந்தான்? ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினி மித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
4. ஏரோது ஏன் தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினி மித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்? ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
5. ஏரோது யோவானைக் என்னசெய்ய மனதாயிருந்தான்? கொலைசெய்ய மனதாயிருந்தான். ஏரோது ஜனங்களுக்கு பயந்திருக்கக் காரணம் என்ன? ஜனங்கள் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
6. ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, யார் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்? ஏரோதியாளின் குமாரத்தி.
7. ஏரோது யாரிடம் நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்? ஏரோதியாளின் குமாரத்தியிடம். நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று ஆணையிட்டு வாக்குக் கொடுக்க காரணம் என்ன? ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினதால் நீ எதைக் கேட்டா லும் தருவேன் என்று ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்.
8. ஏரோதியாளின் குமாரத்தி யாரால் ஏவப்பட்டாள்? தன் தாயினால் ஏவப்பட் டாள். அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே என்ன கேட்டாள்? யோவான்ஸ் நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். 
9. ராஜா எதனால் துக்கமடைந்தான்? ஏரோதியாளின் குமாரத்தி யோவான்ஸ் நானனுடைய தலையை இங்கே ஒரு தாலந்தில் எனக்குத் தாரும் என்று கேட்டதினால் ராஜா துக்கமடைந்தான். ஆகிலும் ஏன் யோவான்ஸ்நானனு டைய தலையைக் கொடுக்கக் கட்டளையிட்டான்? ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளை யிட்டான்.
10. ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யாரைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்? யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.
11. யாருடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்? யோவானுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள். அவள் யோவானுடைய சிரசை என்ன செய்தாள்? யோவானுடைய சிரசை தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
12. யார் வந்து யோவானுடைய உடலை எடுத்து அடக்கம்பண்ணினார்கள்? யோவானுடைய சீஷர்கள். பின்பு போய் அந்தச் சங்கதியை யாருக்கு அறிவித் தார்கள்? இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
13. இயேசு அதைக் கேட்டு என்ன செய்தார்? இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். அதைக் கேள்விப்பட்டது யார்? ஜனங்கள். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு என்ன செய்தார்கள்? ஜனங்கள் பட்டணங்களிலிருந்து கால்நடையாய் இயேசு வினிடத்திற்குப் போனார்கள்.
14. இயேசு திரளான ஜனங்களைக் கண்டு என்ன செய்தார்? மனதுருகினார். இயேசு யாரைச் சொஸ்தமாக்கினார்? திரளான ஜனங்களில் வியாதியஸ்தர் களாய் இருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
15. சாயங்காலமானபோது, இயேசுவிடத்தில் வந்தது யார்? அவருடைய சீஷர் கள். சீஷர்கள் இயேசுவிடத்தில் வந்து சொன்னது என்ன? இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று, ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
16. இயேசு சீஷர்களை நோக்கி சொன்னது என்ன? அவர்கள் போகவேண்டியது இல்லை, நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.
17. அதற்கு சீஷர்கள் இங்கே எங்களிடத்தில் எத்தனை அப்பமும் எத்தனை மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்? ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும்.
18. இயேசு அவைகளை என்ன செய்யச் சொன்னார்? அவைகளை என்னிடத் தில் கொண்டு வாருங்கள் என்றார்.
19. இயேசு ஜனங்களுக்கு என்ன கட்டளையிட்டார்? இயேசு ஜனங்களை புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டார். இயேசு அந்த ஐந்து அப்பங்க ளையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து என்ன செய்தார்? இயேசு அந்த ஜந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார். சீஷர்கள் என்ன செய்தார்கள்? சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
20. ஜனங்கள் என்னவானார்கள்? ஜனங்கள் எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தி யடைந்தார்கள். மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தார் கள்? மீதியான துணிக்கைகளை பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
21. ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேராயி ருந்தார்கள்? ஐயாயிரம்.
22. இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்களை எங்கே போகும்படி துரிதப்படுத்தினார்? தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
23. இயேசு ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு என்ன செய்தார்? இயேசு தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். அதற்குள்ளாகப் படவு எங்கே சேர்ந்தது? அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்தது.
24. படவு நடுக்கடலிலே என்ன ஆனது? படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க் காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
25. இயேசு இரவின் நாலாம் ஜாமத்திலே என்ன செய்தார்? இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
26. சீஷர்கள் கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறி யது ஏன்? இயேசு கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கம டைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
27. சீஷர்கள் பயத்தினால் அலறியதைக்கண்ட இயேசு அவர்களிடம் பேசியது என்ன? திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
28. பேதுரு இயேசுவை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
29. அதற்கு இயேசு என்ன சொன்னார்? அதற்கு இயேசு வா என்றார். அப்பொ ழுது பேதுரு என்ன செய்தான்? பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத் தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.
30. பேதுரு ஏன் பயந்தான்? காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு பேதுரு பயந் தான். பேதுரு அமிழ்ந்துபோகையில் என்னவென்று கூப்பிட்டான்? ஆண்டவரே என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.
31. உடனே இயேசு என்ன செய்தார்? உடனே இயேசு கையை நீட்டி பேதுருவை பிடித்தார். கையை நீட்டி பேதுருவைப் பிடித்த இயேசு சொன்னது என்ன? அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
32. காற்று எப்பொழுது அமர்ந்தது? இயேசுவும் பேதுருவும் படவில் ஏறினவு டனே காற்று அமர்ந்தது.
33. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து என்ன சொன்னார்கள்? மெய்யா கவே நீர் தேவனுடைய குமாரன் என்றார்கள். மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி என்ன செய்தார்கள்? இயேசுவைப் பணிந்துகொண் டார்கள்.
34. பின்பு அவர்கள் கடலைக் கடந்து எங்கே போனார்கள்? கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
35. அவ்விடத்து மனுஷர் என்ன செய்தார்கள்? அவ்விடத்து மனுஷர் இயேசுவை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகள் எல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
36. அவ்விடத்து மனுஷர் இயேசுவை வேண்டிக்கொண்டது என்ன? இயேசுவு டைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாக வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். இயேசுவைத் தொட்ட யாவரும் என்ன ஆனார்கள்? சொஸ்தமானார்கள்.

Wednesday, March 11, 2015

மத்தேயு – 13

மத்தேயு – 13
1. இயேசு அன்றையதினமே எங்கிருந்து புறப்பட்டுப்போனார்? வீட்டிலிருந்து புறப்பட்டுப்போனார். இயேசு வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய் எங்கே உட்கார்ந் தார்? கடலோரத்திலே உட்கார்ந்தார்.
2. அவரிடத்தில் கூடிவந்தவர்கள் யார்? திரளான ஜனங்கள். திரளான ஜனங் கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் எங்கே உட்கார்ந்தார்? படவில் ஏறி உட்கார்ந்தார். ஜனங்களெல்லாரும் எங்கே நின்றார்கள்? கரையிலே நின்றார் கள்.
3. அவர் அநேக விசேஷங்களை எப்படி அவர்களுக்குச் சொன்னார்? உவமைக ளாக அவர்களுக்குச் சொன்னார். யார் ஒருவன் புறப்பட்டான்? விதைக்கிறவன் ஒருவன் புறப்பட்டான். விதைக்கிறவன் ஒருவன் எதற்குப் புறப்பட்டான்? விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில் சில விதை எங்கே விழுந்தது? வழியருகே விழுந் தது. வழியருகே விழுந்த விதைகள் என்ன ஆயின? பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சிலவிதை எங்கே விழுந்தது? அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது. அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்த விதைகள் என்ன ஆயின? மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. 
6. வெயில் ஏறினபோது அந்த விதை என்ன ஆனது? தீய்ந்து போய், வேரில்லா மையால் உலர்ந்து போயிற்று.
7. சில விதைகள் எங்கே விழுந்தது? முள்ளுள்ள இடங்களில் விழுந்தது. முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகள் என்ன ஆயின? முள் வளர்ந்து அதை நொறுக்கிப் போட்டது.
8. சில விதைகள் எங்கே விழுந்தது? நல்ல நிலத்தில் விழுந்தது. நல்ல நிலத் தில் விழுந்த விதைகள் என்ன ஆயின? சிலது நூறாகவும், சிலது அறுபதாக வும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
9. யார் கேட்கக்கடவன் என்றார்? கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கட வன் என்றார்.
10. அப்பொழுது சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து கேட்டது என்ன? ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11. பரலோகத்தின் ரகசியங்களை அறியும்படி யாருக்கு அருளப்பட்டது? உங்க ளுக்கு (சீஷர்களுக்கு). பரலோகத்தின் ரகசியங்களை அறியும்படி யாருக்கு அருளப்படவில்லை? அவர்களுக்கு (ஜனங்களுக்கு).
12. யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப் படும். பரிபூரணம் அடைபவன் யார்? உள்ளவன். எவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்? இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13. எதனால் அவர்களோடே நான் உவமைகளாக பேசுகிறேன் என்று இயேசு சொல்லுகிறார்? அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர் களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் அவர்க ளோடே உவமைகளாக பேசுகிறேன் என்று இயேசு சொல்லுகிறார்.
14. இவர்கள் காதாரக்கேட்டும் எப்படியிருப்பார்கள்? உணராதிருப்பீர்கள். இவர் கள் கண்ணாறக்கண்டும் எப்படியிருப்பார்கள்? அறியாதிருப்பீர்கள். 
15. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் என்ன? காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாறக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணா மலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும் பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர் கள் இருதயம் கொழுத்திருக்கிறது, காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண் களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
16. எவைகள் பாக்கியமுள்ளவைகள்? உங்கள் கண்களும், உங்கள் காதுகளும் பாக்கியமுள்ளவைகள். உங்கள் கண்களும் உங்கள் காதுகளும் எதனால் பாக்கி யமுள்ளவைகள்? உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கி றதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
17. யார் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவை களைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
18. யாரைப்பற்றிய உவமையைக் கேளுங்கள் என்கிறார்? விதைக்கிறவனைப் பற்றிய உவமையைக் கேளுங்கள் என்கிறார்.
19. ஒருவன் எதைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வருகி றான்? ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வருகிறான். ராஜ்யத்தின் வசனம் எதில் விதைக்கப்படுகிறது? ஒருவனுடைய இருதயத்தில். ஒருவனுடைய இருதயத்தில் விதைக்கப்பட்ட ராஜ்யத்தின் வசனத்தைப் பறித்துக்கொள்ளுகிறவன் யார்? பொல்லாங்கன். வழியருகே விதைக்கப்பட்டவன் யார்? ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கிறவன் வழியருகே விதைக்கப்பட்டவன்.
20. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் யார்? வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்.
21. தனக்குள்ளே வேரில்லாதவன் யார்? கற்பாறை இடங்களில் விதைக்கப்பட் டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் எதனால் கொஞ்சக்காலம் மாத்திரம் நிலைத்திருப்பான்? தனக்குள்ளே வேரில்லாததனால். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் எப்பொழுது இடறலடைகிறான்? வசனத்தினி மித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறான்.
22. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் யார்? வசனத்தைக் கேட்கிற வனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், பலனற்றுப் போகிறவன் முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் ஆவான்.
23. நல்ல நிலத்தில விதைக்கப்பட்டவன் யார்? வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருகிறவன் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் ஆவான்.
24. பரலோகராஜ்யம் யாருக்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் தன் நிலத் தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
25. சத்துரு எப்போது வந்தான்? மனுஷன் நித்திரைபண்ணுகையில் அவனு டைய சத்துரு வந்தான். சத்துரு வந்து என்ன செயதான்? கோதுமைக்குள் களை களை விதைத்துவிட்டுப் போனான்.
26. பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது எதுவும் காணப்பட்டது? களைகளும் காணப்பட்டது.
27. வீட்டெஜமானிடத்தில் வந்தது யார்? வேலைக்காரர். வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து சொன்னது என்ன? ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
28. அதற்கு வீட்டெஜமான் சொன்னது என்ன? சத்துரு அதைச் செய்தான் என் றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் எவைகளைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்? களைகளை.
29. அதற்கு வீட்டெஜமான் என்ன சொன்னார்? வேண்டாம் என்று சொன்னார். ஏன் இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள் என்றார்? களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள் என்றார்.
30. களைகளைப் பிடுங்கி என்ன செய்யுங்கள் என்பேன் என்றார்? களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள் என்பேன் என்றார். கோதுமையை என்ன செய்யுங்கள் என்பேன் என்றார்? கோதுமை யையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்றார்.
31. பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது. எதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்? கடுகு விதை.
32. எது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளி லும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத் தக்க மரமாகும் என்றார்? கடுகு விதை.
33. பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? புளித்தமாவுக்கு ஒப்பாயிருக் கிறது. புளித்தமாவை எடுத்தது யார்? ஒரு ஸ்திரீ. ஒரு ஸ்திரீ புளித்தமாவை எடுத்து என்ன செய்தாள் என்றார்? ஒரு ஸ்திரீ புளித்தமாவை எடுத்து, முழுவ தும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.
34. எவைகளைப்பற்றி இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்? பரலோகராஜ்யத்தைப்பற்றி. எவைகளினாலேயன்றி இயேசு ஜனங்களோடே பேசவில்லை? உவமைகளினாலேயன்றி இயேசு ஜனங்களோடே பேச வில்லை.
35. எதை உவமைகளினால் திறப்பேன்? என் வாயை. உலகத்தோற்றமுதல் எவைகளை வெளிப்படுததுவேன்? மறைபொருளானவைகளை. தீர்க்கதரி சியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது என்ற வார்த்தை என்ன? என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன்.
36. அப்பொழுது இயேசு யாரை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார்? ஜனங் களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். இயேசுவினிடத்தில் வந்தது யார்? அவருடைய சீஷர்கள். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து எதைப் பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்? நிலத்தில் களைகளைப் பற்றிய உவமையை.
37. நல்ல விதையை விதைக்கிறவன் யார்? மனுஷகுமாரன்.
38. நிலம் எது? உலகம். நல்ல விதை யார்? ராஜ்யத்தின் புத்திரர். களைகள் யார்? பொல்லாங்கனுடைய புத்திரர்.
39. களைகளை விதைக்கிற சத்துரு யார்? பிசாசு. அறுப்பு எது? உலகத்தின் முடிவு. அறுக்கிறவர்கள் யார்? தேவதூதர்கள்.
40. களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல எப்போது நடக்கும்? இவ்வுலகத்தின் முடிவில் நடக்கும்.
41. இவ்வுலகத்தின் முடிவில் தம்முடைய தூதர்களை அனுப்புவது யார்? மனுஷகுமாரன். மனுஷகுமாரன் அனுப்புகிற தூதர்கள் என்ன செய்வார்கள்? தூதர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிர மஞ் செய்கிறவர்களையும் சேர்ப்பார்கள்.
42. சேர்த்து அவர்களை எதிலே போடுவார்கள்? அக்கினிச் சூளையிலே போடு வார்கள். எங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்? அக்கினிச் சூளை யில்.
43. அப்பொழுது, நீதிமான்கள் எப்படி இருப்பார்கள்? தங்கள் பிதாவின் ராஜ்யத் திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். யார் கேட்கக்கடவன்? கேட்கிறதற் குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 
44. அன்றியும், பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? நிலத்தில் புதைத் திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு மனுஷன் எதைக் கண் டான்? நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைக் கண்டான். ஒரு மனுஷன் எதைக் கண்டு மறைத்தான்? நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைக் கண்டு மறைத்தான். எதைப் பற்றிய சந்தோஷத்தினால் போனான்? நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைப் பற்றிய சந்தோஷத்தினால் போனான். தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, எந்த நிலத்தைக் கொள்ளுகி றான்? பொக்கிஷம் நிறைந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
45. பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
46. யார் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லா வற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்? வியாபாரி.
47. பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
48. எது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுக்கிறான்? வலை. எவைகளைக் கூடைகளில் சேர்க்கிறான்? நல்ல மீன்களை. ஆகாத கெட்ட மீன்களை என்ன செய்கிறான்? எறிந்து போடுகிறான். 
49. இப்படியே நடப்பது எப்போது? உலகத்தின் முடிவில். நீதிமான்களின் நடு வில் இருப்பது யார்? பொல்லாதவர்கள். உலகத்தின் முடிவில் நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரிப்பது யார்? தேவதூதர்கள்.
50. நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அவர்களை எதிலே போடுவார்கள்? அக்கினிச் சூளையில் போடுவார்கள். அக்கினிச் சூளை யில் என்ன உண்டாயிருக்கும்? அழுகையும் பற்கடிப்பும். 
51. இயேசு அவர்களை (சீஷர்களை) நோக்கி சொன்னது என்ன? இவைகளை எல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள் (சீஷர்கள்) சொன்னது என்ன? ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
52. பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபா ரகன் யாருக்கு ஒப்பாயிருக்கிறான்? தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளை யும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷ னுக்கு ஒப்பாயிருக்கிறான்.
53. இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, என்ன செய்தார்? அவ்விடம் விட்டுப் போனார்.
54. இயேசு தாம் வளர்ந்த ஊருக்கு வந்து என்ன செய்தார்? அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். ஜெபஆலயத்திலே அவர்கள் ஆச்சரியப்பட்டு சொன்னது என்ன? இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55. இவன் யாருடைய குமாரன் அல்லவா என்றார்கள்? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா என்றார்கள். இவன் தாய் யார் அல்லவா என்றார்கள்? மரியாள் அல்லவா என்றார்கள். யாரெல்லாம் இவனுக்கு சகோதரர் அல்லவா என்றார்கள்? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்கு சகோதரர் அல்லவா என்றார்கள்.
56. இவன் சகோதரிகளெல்லாம் எங்கு இருக்கிறார்கள் அல்லவா என்றார்கள்? நம்மிடத்தில். இப்படியிருக்க, இதெல்லாம் யாருக்கு எப்படி வந்தது? என்று சொன்னார்கள்? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு (இயேசுவுக்கு) எப்படி வந்தது? என்று சொன்னார்கள்.
57. இயேசுவைக்குறித்து என்ன ஆனார்கள்? இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி சொன்னது என்ன? தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
58. எதினால் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை? அவர்க ளுடைய அவிசுவாசத்தினால்.