Sunday, January 31, 2016

லூக்கா – 24

லூக்கா – 24
1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே என்ன செய்தார்கள்? தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
2. கல்லறையை அடைத்திருந்த என்ன கண்டார்கள்? கல்புரட்டித் தள்ளப்பட்டி ருக்கிறதைக்கண்டார்கள்.
3. உள்ளே பிரவேசித்து, எதைக் காணவில்லை? கர்த்தராகிய இயேசுவின் சரீரத் தைக் காணவில்லை.
4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், அவர்கள் அருகே நின்ற வர்கள் யார்? பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர்.
5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி சொன்னது என்ன? உயிரோடிருக்கிற வரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
7. எதை நினைவுகூருங்கள் என்று சொன்னார்கள்? மனுஷகுமாரன் பாவிக ளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்பட வும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயா விலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார் கள்.
8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, என்ன செய்தார்கள்?
9. கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் யார்? மகதலேனா மரி யாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனே கூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
11. அவர்கள் இவர்களை ஏன் நம்பவில்லை? இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்ப வில்லை.
12. பேதுருரு என்ன செய்தான்? பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத் திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத் திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக் கொண் டுபோனான்.
13. அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எங்கே போனார்கள்? எருசலே முக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
14. போகையில் எவைகளைக் குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்? இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து.
15. இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், யார் தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்? இயேசு தாமே சேர்ந்து அவர்களு டனேகூட நடந்துபோனார்கள்.
16. ஆனாலும் அவரை அறியாதபடிக்கு எது மறைக்கப்பட்டிருந்தது? அவர்களு டைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
17. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி எது என்னவென்று கேட்டார்? நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள் ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
18. அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக சொன் னது என்ன? இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
19. இயேசு என்ன சொன்னார்? அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள் சொன்னது என்ன? நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவ னுக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசி யாயிருந்தார்.
20. நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கி னைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
21. அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.
22. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்ல றையினிடத்திற்குப்போய்,
23. அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக் கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களை பிரமிக்கப்பண்ணினார்கள்.
24. அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
25. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி சொன்னது என்ன? தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ள வர்களே,
26. கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
27. மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல் லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித் துக் காண்பித்தார்.
28. அத்தருணத்தில் அவர்கள் எதுக்குச் சமீபமானார்கள்? தாங்கள் போகிற கிரா மத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் எதைப் போலக் காண்பித்தார்? அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
29. அவர்கள் அவரை நோக்கி சொன்னது என்ன? நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரைவருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் என்ன செய்தார்? அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
30. அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் என்ன செய்தார்? அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
31. அப்பொழுது நடந்தது என்ன? அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை  அறிந்தார்கள். உடனே அவர் என்ன செய்தார்? அவர்களுக்கு மறைந்து போனார்.
32. அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி என்ன என்று சொல்லிக் கொண்டார்கள்? வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள்.
33. அந்நேரமே எழுந்திருந்து, என்ன செய்தார்கள்? எருசலேமுக்குத் திரும்பிப் போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
34. கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,
35. வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
36. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு என்ன செய்தார்? இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
37. அவர்கள் கலங்கி, பயந்து, எதைக் காண்கிறதாக நினைத்தார்கள்? ஒரு ஆவி யைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
38. அவர் அவர்களை நோக்கி கேட்டது என்ன? நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என்ன செய்யுங்கள் என்றார்? என்கைகளை யும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள். நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல எதுக்கு இராதே என்றார்? ஒரு ஆவிக்கு இராதே என்று சொன்னார்.
40. எவைகளை அவர்களுக்குக் காண்பித்தார்? தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரி யப்படுகையில்: எது உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்? புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
42. அப்பொழுது எவைகளை அவருக்குக் கொடுத்தார்கள்? பொரித்த மீன்கண் டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
43. அவைகளை அவர் வாங்கி என்ன செய்தார்? அவர்களுக்கு முன்பாகப் புசித்தார்.
44. அவர்களை நோக்கி என்ன சொன்னார்? மோசேயின் நியாயப்பிரமாணத்தி லும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்க ளோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
45. அப்பொழுது எவைகளை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்? வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி. அவர்களை நோக்கி:
46. எழுதியிருக்கிறபடி, யார் பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந் தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது? கிறிஸ்து.
47. அன்றியும் எவைகள் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவரு டைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது? மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்.
48. நீங்கள் இவைகளுக்கு என்னவாக இருப்பீகள்? சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
49. எதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்? என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை. நீங்களோ எது வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்? உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும்.
50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய், என்ன செய்தார்? தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வ தித்தார்.
51. அவர்களை ஆசீர்வதிக்கையில், என்ன ஆனார்? அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52. அவர்கள் அவரைப் பணிந்து கொண்டு, என்ன செய்துகொண்டிருந்தார்கள்? மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
53. நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந் தார்கள். ஆமென்.

Wednesday, January 6, 2016

லூக்கா – 23

லூக்கா – 23
1. அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரை யாரிடத்திற் குக் கொண்டுபோனார்கள்? பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
2. என்ன என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்? இவன் தன்னை கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில் லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண் டோம் என்று அவர் மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.
3. பிலாத்து அவரை நோக்கி என்ன கேட்டான்? நீ யூதருடைய ராஜாவா என்று  கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீர் சொல்லு கிறபடிதான் என்றார்.
4. அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி சொன்னது என்ன? இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காண வில்லை என்றான்.
5. அதற்கு அவர்கள் என்ன என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்? இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும்  யூதேயாதேசமெங்கும்  உப தேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத் தோடே  சொன்னார்கள்.
6. கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, என்ன செய்தான்? இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
7. அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருச லேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8. ஏரோது ஏன் இயேசுவைக் காணும்படி வெகுநாய் ஆசைகொண்டிருந்தான்? ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினா லும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும் பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந் தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, என்ன செய்தான்? மிகவும் சந்தோஷப் பட்டு,
9. அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொ ழியாக என்ன சொன்னார்? அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
10. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் என்ன செய்தார்கள்? அவர்மேல் பிடி வாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
11. அப்பொழுது ஏரோது என்ன செய்தான்? ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
12. முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் என்ன ஆனார்கள்? சிநேகிதரானார்கள்.
13. பிலாத்து யாரைக் கூடிவரச் செய்தான்? பிரதான ஆசாரியர்களையும் அதிகா ரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்தான்.
14. பிலாத்து அவர்களை நோக்கி சொன்னது என்ன? ஜனங்களைக் கலகத்துக் குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர் கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டு கிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற் றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
17. பிலாத்து ஏன் அப்படிச் சொன்னான்? பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18. ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு என்ன என்று சத்தமிட்டுக் கேட்டார் கள்? இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்த மிட்டுக் கேட்டார்கள்.
19. அந்தப் பரபாசென்பவன் யார்? நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20. பிலாத்து எதற்காக மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்? இயேசுவை விடுதலையாக்கமனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21. அவர்களோ என்ன என்று கூக்குரலிட்டார்கள்? அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
22. அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி சொன்னது என்ன? ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவானகுற்றம் ஒன்றும் இவ னிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23. அப்படியிருந்தும் என்ன என்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்? அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று. எது மேற்கொண்டது? அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற் கொண்டது.
24. அப்பொழுது பிலாத்து என்ன என்று தீர்ப்பு செய்தான்? அவர்கள் கேட்டுக் கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்தான்.
25. பிலாத்துவின் தீர்ப்பு என்ன? கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித் தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத் தான்.
26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, யாரைப் பிடித்து, சிலு வையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத் தார்கள்? நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனை.
27. யாரெல்லாம் அவருக்குப் பின்சென்றார்கள்? திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி யாருக்காக அழுங்கள் என்றார்? எருச லேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங் கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார்.
29. இதோ, யார் பாக்கியவதிகளென்றும், எவைகள் பாக்கியமுள்ளவைகளென் றும் சொல்லப்படும் நாட்கள் வரும்? இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவை களென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30. அப்பொழுது மலைகளை நோக்கி என்ன என்று சொல்லத்தொடங்குவார் கள்? எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத் துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், எதுக்கு என்ன செய்யமாட்டார் கள் என்றார்? பட்டமரத்துக்கு.
32. வேறே யார் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோ கப்பட்டார்கள்? குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேர்.
33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே என்ன செய்தார்கள்? அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியை யும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34. அப்பொழுது இயேசு என்ன சொன்னார்? பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவரு டைய வஸ்திரங்களை அவர்கள் என்ன செய்தார்கள்? பங்கிட்டுச் சீட்டுப்போட் டார்கள்.
35. யார் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்? ஜனங்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து, என்ன சொன்னார்கள்? இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, என்ன செய்தான்? அவருக்குக் காடியைக் கொடுத்தான். காடியைக் கொடுத்து என்ன செய்தான்?
37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப்  பரி யாசம்பண்ணினார்கள்.
38. என்ன என்று எழுதி அவருக்கு மேலாக வைக்கப்பட்டது? இவன் யூதருடைய  ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
39. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன் என்ன சொல்லி அவரை இகழ்ந்தான்? நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்க ளையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
40. மற்றவன் அவனை நோக்கி என்ன என்ன கடிந்துகொண்டான்? நீ இந்த ஆக்கி னைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில் லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி என்ன என்று விண்ணப்பம் செய்தான்? ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி என்ன என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகி றேன் என்றார்? இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44. அப்பொழுது என்ன ஆயிற்று? ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
45. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டா கக்கிழிந்தது.
46. இயேசு பிதாவை நோக்கி என்ன என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன் னார்? பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, என்ன செய்தார்? ஜீவனை விட்டார்.
47. நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு என்ன சொல்லி தேவனை மகிமைப்படுத்தினான்? மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48. இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்ப வித்தவைகளைப் பார்த்தபொழுது, என்ன செய்தார்கள்? தங்கள் மார்பில் அடித் துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49. யாரெல்லாம் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் கள்? அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவ ருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த் துக்கொண்டிருந்தார்கள்.
50. யோசேப்பு எப்படிப்பட்டவனாய் இருந்தான்? யோசேப்பு என்னும் பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானு மாயிருந்தான்.
51. அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும்,  யூதர்களு டைய  ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.
52. அவன் பிலாத்துவினிடத்தில் போய், என்ன கேட்டான்? இயேசுவின் சரீரத் தைக் கேட்டான்.
53. இயேசுவின் சரீரத்தை என்ன செய்தான்? அதை இறக்கி, மெல்லிய துப்பட்டி யிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
54. அந்த நாள் எது? ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
55. கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின் சென்று,  என்ன செய்தார்கள்? கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப் பட்ட விதத்தையும் பார்த்து,
56. திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

Sunday, December 20, 2015

லூக்கா – 22

லூக்கா – 22
1. எது சமீபமாயிற்று? பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை.
2. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் என்ன செய்தார்கள்? இயே சுவைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.
3. அப்பொழுது யாருக்குள் சாத்தான் புகுந்தான்? பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள்.
4. அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், என்ன செய்தான்? இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் வகையைக்குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
5. அவர்கள் என்ன செய்தார்கள்? சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6. அதற்கு அவன் சம்மதித்து, எப்பொழுது அவரை அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும்படி சமயந்தேடினான்? ஜனக்கூட்டமில்லாத வேளையில்.
7. என்ன நாள் வந்தது? பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது.
8. அப்பொழுது இயேசு யாரை அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்? பேதுருவையும் யோவானையும்.
9. அதற்கு அவர்கள் என்ன கேட்டார்கள்? நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண் ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, யார் உங்களுக்கு எதிர் படுவான்? தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்ப டுவான். நீங்கள் அவனுக்குப் பின்சென்று, என்ன செய்யுங்கள்? அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போங்கள்.
11. அந்த வீட்டெஜமானை நோக்கி என்ன என்று சொல்லுங்கள் என்றார்? நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
12. அவன் எதைக் காண்பிப்பான்? கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான். அங்கே என்ன செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்? ஆயத்தம்பண்ணுங்கள்.
13. அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, எதை ஆயத் தம்பண்ணினார்கள்? பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
14. வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூட யாரெல்லாம் பந்தியிருந்தார் கள்? பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
15. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் எப்போது உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்? பாடுபடுகிறதற்கு முன்னே.
16. எதிலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்? தேவனுடைய ராஜ்யத்திலே.
17. அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி சொன்னது என்ன? நீங்கள் இதைவாங்கி உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
18. தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண் ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்க ளுக்குக் கொடுத்து சொன்னது என்ன? இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங் கள் என்றார்.
20. போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து சொன்னது என்ன? இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
21. பின்பு: இதோ, யாருடை கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது?என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை.
22. எப்படி மனுஷகுமாரன் போகிறார்? தீர்மானிக்கப்பட்டபடியே. ஆனாலும் யாருக்கு ஐயோ என்றார்? அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு.
23. அப்பொழுது அவர்கள் என்ன என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கி னார்கள்? நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று.
24. அன்றியும் என்ன என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று? தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று.
25. அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை என்ன செய்கிறார்கள்? ஆளுகிறார்கள். அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்க ளும் யார் என்னப்படுகிறார்கள்? உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
26. யாருக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது? உங்களுக்குள்ளே. உங்களில் பெரி யவன் யாரைப்போல இருக்கக்கடவன்? சிறியவனைப்போல. தலைவன் யாரைப்போல இருக்கக்கடவன்? பணிவிடைக்காரனைப்போல.
27. பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன். அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே யாரைப்போல் இருக்கிறேன்? பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
28. மேலும் எதில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே? எனக்கு நேரிட்ட சோதனைகளில்.
29. ஆகையால், என் பிதா எனக்கு எதை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்க ளுக்கு ஏற்படுத்துகிறேன்? ஒரு ராஜ்யத்தை.
30. நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, எப்படி இருப்பீர்கள் என்றார்? இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியா யந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.
31. பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, எதைப்போல சாத்தான் உங்க ளைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்? கோதுமையைச் சுளகி னால் புடைக்கிறதுபோல.
32. நானோ எது ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்? உன் விசுவாசம். நீ குணப்பட்டபின்பு யாரை ஸ்திரப்படுத்து என்றார்? உன் சகோத ரரை.
33. அதற்கு அவன்: ஆண்டவரே, எதிலே உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயி ருக்கிறேன் என்றான்? காவலிலும் சாவிலும்.
34. அவர் அவனை நோக்கி: பேதுருவே, எதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக் கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே.
35. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களை எவைகள் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார்? பணப் பையும் சாமான்பையும் பாதரட்சைகளும். அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
36. அதற்கு அவர்: இப்பொழுதோ எவைகளை உடையவன் அவைகளை எடுத் துக்கொள்ளக்கடவன்? பணப்பையும் சாமான்பையும். எது இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்? பட்டயம் இல்லாதவன்.
37. என்ன என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டி யதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? அக்கிரமக்காரரில் ஒருவனாக எண் ணப்பட்டார். என்ன காலம் வந்திருக்கிறது என்றார்? என்னைப்பற்றிய காரியங் கள் முடிவுபெறுங்காலம்.
38. அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே எத்தனை பட்டயம் இருக்கி றது என்றார்கள்? இரண்டு பட்டயம். அவர் என்ன என்றார்? போதும் என்றார்.
39. பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே என்ன செய்தார்? ஒலிவமலைக் குப் போனார். அவருடைய சீஷர் என்ன செய்தார்கள்? அவரோடேகூடப் போனார்கள்.
40. அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் எதற்கு உட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொன்னார்? சோதனைக்குட்படாத படிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
41. அவர்களை விட்டு எங்கேபோய் முழங்கால்படியிட்டு ஜெபித்தார்? கல்லெறி தூரம் அப்புறம்போய்.
42. என்ன என்று ஜெபம் செய்தார்? பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத் திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்ப டியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று  ஜெபம்பண்ணி னார்.
43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, என்ன செய்தான்? அவரைப் பலப்படுத்தினான்.
44. அவர் மிகவும் வியாகுலப்பட்டு, என்ன செய்தார்? அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். எது இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந் தது? அவருடைய வேர்வை.
45. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, என்ன கண்டார்? அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்.
46. நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? எதற்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்? சோதனைக்குட்படாதபடிக்கு,.
47. அவர் அப்படிப் பேசுகையில் என்ன நடந்தது? ஜனங்கள் கூட்டமாய் வந்தார் கள். அவர்களுக்கு முன்னே யாரும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்? பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும்
48. இயேசு அவனை நோக்கி: யூதாசே எதினாலே மனுஷகுமாரனைக்  காட்டிக் கொடுக்கிறாய் என்றார்? முத்தத்தினாலேயா.
49. அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு சொன்னது என்ன? ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
50. அந்தப்படியே அவர்களில் ஒருவன் என்ன செய்தான்? பிரதான ஆசாரியனு டைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.
51. அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, என்ன செய் தார்? அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
52. பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி சொன் னது என்ன? ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்ட யங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.
53. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங் கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடையவேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.
54. அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, என்ன செய்தார்கள்? பிரதான ஆசாரியனு டைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். யாரும் தூரத்திலே பின்சென் றான்? பேதுருவும்.
55. அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்த போது, யாரும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்? பேதுருவும்.
56. அப்பொழுது யார் அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்? ஒரு வேலைக்காரி.
57. அதற்கு அவன் சொன்னது என்ன? ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
58. சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு என்ன சொன் னான்?  நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு சொன்னது என்ன? மனுஷனே, நான் அல்ல என்றான்.
59. ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப்பார்த்து என்ன என்று சொன்னான்? மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தான்.
60. அதற்குப் பேதுரு சொன்னது என்ன? மனுஷனே, நீ சொல்லுகிறதை அறி யேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே என்ன ஆயிற்று? சேவல் கூவிற்று.
61. அப்பொழுது கர்த்தர் என்ன செய்தார்? திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த் தார். உடனே பேதுரு எதை நினைவுகூர்ந்தான்? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைவுகூர்ந்தான்.
62. பேதுரு நினைவுகூர்ந்து என்ன செய்தான்? வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
63. இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் என்ன செய்தார்? அவரைப் பரியா சம்பண்ணி, அடித்து,
64. அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்ட துமன்றி,
65. மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன் னார்கள்.
66. விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் கூடிவந்து, என்ன செய்தார்கள்? தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
67. அவர்கள் என்ன கேட்டார்கள்? நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர் என்ன சொன்னார்கள்? நான் உங்களுக்குச் சொன்னா லும் நம்பமாட்டீர்கள்.
68. நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர் கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
69. இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரி சத்தில் வீற்றிருப்பார் என்றார்.
70. அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ யார் என்று கேட்டார்கள்? நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்ன சொன்னார்? நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
71. அப்பொழுது அவர்கள் சொன்னது என்ன? இனி வேறு சாட்சி நமக்கு வேண்டு வதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

Friday, November 20, 2015

லூக்கா 21

லூக்கா - 21
1. அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, யார் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்? ஐசுவரியவான்கள்.
2. ஒரு ஏழை விதவை அதிலே எத்தனை காசைப் போடுகிறதையும் கண்டார்? இரண்டு.
3. யார் மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்த ஏழை விதவை.
4. அவர்களெல்லாரும் எதிலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்? தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து. இவளோ எதையெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்? தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டா யிருந்ததெல்லாம்.
5. பின்பு, எதைக்குறித்துச் சிலர் சொன்னார்கள்? சிறந்த கற்களினாலும் காணிக் கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து. 
6. அப்பொழுது அவர் சொன்னது என்ன? நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
7. அவர்கள் அவரை நோக்கி என்ன கேட்டார்கள்? போதகரே, இவைகள் எப்பொ ழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
8. அதற்கு அவர்: நீங்கள் எதற்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? வஞ்சிக்கப் படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் அநேகர் வந்து என் நாமத் தைத் தரித்துக்கொண்டு என்னவென்று சொல்லுவார்கள்? நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள். அவர்களை என்ன செய் யாதிருங்கள்? பின்பற்றாதிருங்கள்.
9. எதைக் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்? யுத்தங்க ளையும் கலகங்களையுங் குறித்து. இவைகள் எப்பொழுது சம்பவிக்க வேண்டி யதே? முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும் எது உடனே வராது என்றார்? முடிவு.
10. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் எழும்பு வது எது? ஜனம். ராஜ்யத்துக்கு விரோதமாய் எழும்புவது எது? ராஜ்யம்.
11. பல இடங்களில் எவைகள் உண்டாகும்? மகா பூமியதிர்ச்சிகளும்,  பஞ்சங்க ளும், கொள்ளைநோய்களும் உண்டாகும். வானத்திலிருந்து எவைகள் உண்டா கும்? பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களை என்ன செய்வார்கள்? பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலை களுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்கு எதற்கு ஏதுவாயிருக்கும்? சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும் படி உங்கள் மனதிலே என்ன செய்யுங்கள்? நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. யார் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத் தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்? உங்களை விரோதிக்கிறவர்கள்.
16. யாரால் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்? பெற்றாராலும், சகோதரராலும், பந்து ஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள். உங்களில்   சிலரை என்ன செய்வார்கள்? கொலைசெய்வார்கள்.
17. எதினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்? என் நாமத்தினிமித்தம்.
18. ஆனாலும் எதில் ஒன்றாகிலும் அழியாது? உங்கள் தலைமயிரில்.
19. எதினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்? உங்கள் பொறுமையினால்.
20. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, எது சமீபமாயிற்றென்று அறியுங்கள்? அதின் அழிவு.
21. அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் என்ன செய்யக்கடவர்கள்?  மலை களுக்கு ஓடிப்போகக்கடவர்கள். எருசலேமிலிருக்கிறவர்கள் என்ன செய்யக் கடவர்கள்? வெளியே புறப்படக்கடவர்கள். நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் என்ன செய்யக்கடவர்கள்? நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
22. எது நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே? எழுதியி ருக்கிற யாவும்.
23. அந்நாட்களில் யாருக்கு ஐயோ? கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்க ளுக்கும் ஐயோ. பூமியின்மேல் என்ன உண்டாகும்? மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
24. எதினாலே விழுவார்கள்? பட்டயக்கருக்கினாலே விழுவார்கள். சகல புற ஜாதிகளுக்குள்ளும் என்ன செய்யப்படுவார்கள்? சிறைப்பட்டுப்போவார்கள். புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் யாரால் மிதிக்கப் படும்? புற ஜாதியாரால் மிதிக்கப்படும்.
25. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் என்ன தோன்றும்? அடையா ளங்கள்.  பூமியின்மேலுள்ள ஜனங்களுக்கு என்ன உண்டாகும்? தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும். சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்? முழக் கமாயிருக்கும்.
26. எவைகள் அசைக்கப்படும்? வானத்தின் சத்துவங்கள். ஆதலால்  பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷரு டைய இருதயம் என்னவாகும்? சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் எப்படி வருகிறதை மேகத்தின்மேல் வருகிற தைக் காண்பார்கள்? மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்ப தால், நீங்கள் என்ன செய்யுங்கள் என்றார்? நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29. அன்றியும் அவர்களுக்கு எதைச் சொன்னார்? ஒரு உவமையைச்சொன்னார். எதைப் பாருங்கள்? அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30. அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது எது சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்? வசந்தகாலம்.
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, எது சமீபமா யிற்றென்று அறியுங்கள்? தேவனுடைய ராஜ்யம்.
32. இவையெல்லாம் சம்பவிக்குமுன் எது ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததி.
33. வானமும் பூமியும் என்னவாகும்? ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ என்ன ஆவதில்லை? ஒழிந்து போவதில்லை.
34. எதற்கு எச்சரிக்கையாயிருங்கள்? உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினா லும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங் கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கை யாயிருங்கள்.
35. பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது எதைப்போல வரும்?  ஒரு கண்ணியைப்போல வரும்.
36. ஆகையால் எதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்? இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமார னுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
37. அவர் பகற்காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்? தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். இராக்காலங்களில் என்ன செய்தார்? வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38. ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி என்ன செய் தார்கள்? அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.

Thursday, November 19, 2015

லூக்கா – 20

லூக்கா – 20
1. அந்நாட்களில் ஒன்றில், அவர் எதிலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசே ஷத்தைப் பிரசங்கித்தார்? தேவாலயத்தில். அப்போது, யார் அவரிடத்தில் கூடி வந்தார்கள்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்தார்கள்.
2. அவர்கள் இயேசுவிடம் என்ன கேள்வி கேட்டார்கள்? நீர் எந்த அதிகாரத்தி னால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நானும் உங்களிடத் தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
4. இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வி என்ன? யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
5. அவர்கள் தங்களுக்குள்ளே என்னவென்று யோசனைபண்ணி பண்ணினார் கள்? தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
6. மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறி வார்கள் என்று. 
7. அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி சொன்னது என்ன? அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன் னார்கள்.
8. அப்பொழுது இயேசு: நானும் எதை உங்களுக்குச் சொல்லேன் என்றார்? இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று.
9. பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கினது என்ன? உவமை. ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதை என்ன செய்தான்? தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
10. அந்தத் தோட்டக்காரர் திராட்சத் தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் யாரை அனுப்பி னான்? ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை என்ன செய்தார்கள்? அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
11. பின்பு அவன் என்ன செய்தான்? வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் என்ன செய்தார்கள்? அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
12. அவன் மூன்றாந்தரமும் என்ன செய்தான்? ஒரு ஊழியக்காரனை அனுப்பி னான். அவனையும் அவர்கள் என்ன செய்தார்கள்? காயப்படுத்தி, துரத்திவிட் டார்கள்.
13. அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான் என்ன செய்தான்? நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
14. தோட்டக்காரர் அவனைக் கண்டபோது என்னவென்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்? இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும் படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
15. அவனை என்ன செய்தார்கள்? அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?
16. என்ன செய்வான் என்று சொல்லி அதற்கு இயேசு சொன்ன பதில் என்ன? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, என்ன சொன்னார்கள்? அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
17. அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, என்ன என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத் தென்ன? மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
18. அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் என்ன ஆவான்? அவன் நொறுங்கிப் போவான், அது எவன்மேல் விழுமோ அவனை என்ன செய்யும்? நசுக்கிப் போடும் என்றார்.
19. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் யாரைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்தார்கள்? தங்களைக்குறித்து. அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் யாருக்குப் பயந்திருந்தார்கள்? ஜனங்களுக்கு.
20. அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலா மென்று, யாரை அவரிடத்தில் அனுப்பினார்கள்? தங்களை உண்மையுள்ளவர் களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை.
21. அவர்கள் வந்து: போதகரே, எதை அறிந்திருக்கிறோம் என்றார்கள்? நீர் நிதா னமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனு டைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
22. எது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்? இராயனுக்கு வரிகொடுக்கிறது.
23. எதை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் என்றார்? அவர்க ளுடைய தந்திரத்தை அறிந்து.
24. எதை எனக்குக் காண்பியுங்கள் என்றார்? ஒரு பணத்தை. எது யாருடையது என்று கேட்டார்? இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும். அதற்கு அவர்கள்: யாருடையது என்றார்கள்? இராயனுடையது.
25. அதற்கு அவர்: அப்படியானால், எதை இராயனுக்கும், எதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்? இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடைய தைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
26. அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக் கூடாமல், எதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்? அவர் சொன்ன உத்தரவைக்குறித்து.
27. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்? சதுசேயர். சதுசே யரில் சிலர் அவரிடத்தில் வந்து 
28. போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லா மல் இறந்துபோனால், யார் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே என்றனர்? அவனுடைய சகோதரன்.
29. சகோதரர் எத்தனை பேரிருந்தார்கள்? ஏழுபேரிருந்தார்கள். அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, என்ன ஆனான்? பிள்ளையில் லாமல் இறந்துபோனான்.
30. பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, என்ன ஆனான்? அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
31. மூன்றாஞ்சகோதரனும் அவளை என்ன செய்தான்? விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, என்ன ஆனார்கள்? பிள்ளை யில்லாமல் இறந்துபோனார்கள்.
32. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் என்ன ஆனாள்? இறந்துபோனாள்.
33. இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, எப்போது அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்? உயிர்த்தெழுதலில்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: யார் பெண்கொண்டும் பெண்கொ டுத்தும் வருகிறார்கள்? இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்.
35. யார் பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை? மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படு கிறவர்கள்.
36. அவர்கள் இனி என்ன செய்யமாட்டார்கள்? மரிக்கவுமாட்டார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் யாருக்கு ஒப்பானவர்களுமாய் இருப்பார்கள்? தேவதூதருக்கு. யாருக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்? தேவனுக்கு.
37. அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் எதில் காண் பித்திருக்கிறார்? முட்செடியைப்பற்றிய வாசகத்தில். எப்படியெனில், கர்த்தரை யாருடைய தேவனென்று சொல்லியிருக்கிறார்? ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
38. அவர் மரித்தோரின் தேவனாயிராமல், யாருடைய தேவனாயிருக்கிறார்? ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார். எல்லாரும் யாருக்குப் பிழைத்திருக் கிறார்களே என்றார்? அவருக்கு.
39. அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு சொன்னது என்ன? போத கரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
40. அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் எதற்குத் துணியவில்லை? வேறொன் றுங்கேட்க.
41. அவர் அவர்களை நோக்கி: யார் தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகி றார்கள் என்றார்? கிறிஸ்து.
42. நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
43. கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்த கத்தில் சொல்லுகிறானே? உம்முடைய சத்துருக்களை.
44. தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் யாரா யிருப்பது எப்படி என்றார்? குமாரனாயிருப்பது.
45. பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: யாருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்?
46. நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்த னங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
47. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் எதை அடைவார் கள் என்றார்? அதிக ஆக்கினையை.


Wednesday, November 11, 2015

லூக்கா – 19

லூக்கா – 19
1. இயேசு எதில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோனார்? எரிகோவில்.
2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்தவன் யார்? சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்.
3. யார் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்? ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவனுமாயிருந்த சகோயு என்னப்பட்ட ஒரு மனுஷன். அவன் எப்படி இருந்தபடியால் ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடவில்லை? குள்ளனானபடியால்.
4. இயேசு போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி எதில் ஏறினான்? ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, என்ன செய்தார்? அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டம் என்றார்.
6. சகேயு என்ன செய்தான்? சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
7. அதைக் கண்ட யாவரும் என்ன என்று முறுமுறுத்தார்கள்? இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, என் ஆஸ்தி களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதை யாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு எது வந்தது? இரட்சிப்பு. இவனும் யாருக்குக் குமாரனாயிருக்கிறானே? ஆபிரகாமுக்கு.
10. எதற்கு மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்? இழந்துபோனதைத் தேட வும் இரட்சிக்கவும்.
11. அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக் குச் சமீபித்திருந்தபடியினாலும், எது சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்? தேவனுடைய ராஜ்யம்.
12. பிரபுவாகிய ஒருவன் எதைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத் துக்குப் போகப் புறப்பட்டான்? ஒரு ராஜ்யத்தை.
13. புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் எத்தனை பேரை அழைத்தார்? பத்துபேரை. அவர்களிடத்தில் எத்தனை ராத்தல் திரவியங்கொடுத்தார்? பத்து ராத்தல். நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு என்ன செய்யுங்கள் என்று சொன்னான்? வியாபாரம்பண்ணுங்கள்.
14. அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் என்னவாயி ருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்? ராஜாவாயிருக்கிறது.
15. அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது,யாரை எதற்காக அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்? தன்னிடத்தில் திரவி யம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி.
16. அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் எத்தனை ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்? பத்துராத்தல்.
17. எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே,நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியா யிரு என்றான்? பத்துப் பட்டணங்களுக்கு.
18. அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் எத்தனை ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்? ஐந்துராத்தல்.
19. அவனையும் அவன் நோக்கி: நீயும் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியா யிரு என்றான்? ஐந்து பட்டணங்களுக்கு.
20. பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடையராத்தல், இதை எதிலே வைத்திருந்தேன்? ஒரு சீலையிலே.
21. நீர் யார் என்று அறிந்து உமக்குப்பயந்திருந்தேன் என்றான்?நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷ னென்று அறிந்து.
22. அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, எதைக் கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன்? உன் வாய்ச்சொல்லைக்கொண்டே. நான் யாரென்று அறிந்தாய்? நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவ னுமான கடினமுள்ள மனுஷனென்று.
23. பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் எங்கே வைக்கவில்லை? காசுக்கடை யிலே. வைத்திருந்தால் நான் வரும்போது, அதை எப்படிப் பற்றிகொண்வேனே என்று சொன்னான்?வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்றுசொன்னான்.
24. சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெ டுத்து, யாருக்குக் கொடுங்கள் என்றான்? பத்துராத்தல் உள்ளவனுக்கு
25. அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்கு எத்தனை ராத்தல் இருக்கிறதே என்றார்கள்? பத்துராத்தல்.
26. அதற்கு அவன்: யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவன் எவனுக்கும். இல்லா தவனிடத்தில் உள்ளதும் என்ன செய்யப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகி றேன்? எடுத்துக்கொள்ளப்படும்.
27. அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களா கிய யாரை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்? என்னுடைய சத்துருக்களை.
28. இவைகளை அவர் சொன்னபின்பு எங்கே போனார்? எருசலேமுக்குப் புறப் பட்டு, முந்திநடந்துபோனார்.
29. அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான எந்த ஊர்களுக்குச் சமீபித்தார்? பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு. தம்முடைய சீஷரில் எத்தனை பேரை நோக்கி சொன்னார்? இரண்டுபேரை.
30. எங்கே போங்கள்? உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்கு. அதிலே பிரவேசிக்கும்போது எதைக் காண்பீர்கள்? மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை என்ன செய்யுங்கள்? அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31. அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், என்னவென்று சொல்லுங்கள் என்றார்? அது ஆண்டவருக்கு வேண்டுமென்று. 
32. அனுப்பப்பட்டவர்கள் போய், என்ன கண்டார்கள்? தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டார்கள்.
33. கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள் என்ன கேட்டார்கள்? குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? அது ஆண்டவருக்கு வேண்டு மென்று சொன்னார்கள்.
35. அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36. அவர் போகையில், அவர்கள் என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
37. அவர் எங்கு வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டார்கள்? ஒலிவமலை யின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில்.
38. அவர்கள் சந்தோஷப்பட்டு என்ன செய்தார்கள்? கர்த்தருடைய நாமத்தி னாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதான மும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
39. அப்பொழுது யார் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட் டும் என்றார்கள்? கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர்.
40. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் எது கூப் பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கல்லுகளே கூப்பிடும்.
41. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காக என்ன செய்தார்? கண்ணீர் விட்டழுதார்.
42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் எவைகளை நீ அறிந்திருந்தாயா னால் நலமாயிருக்கும்? உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை. இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு எப்படியிருக்கிறது? மறைவாயிருக்கிறது.
43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், எது உனக்கு வரும் என்றார்? உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
45. பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, என்ன செய்தார்? அதிலே விற்கி றவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத் தொடங்கினார்.
46. என்னுடைய வீடு என்னவென்று எழுதியிருக்கிறது? ஜெபவீடாயிருக்கிற தென்று. நீங்களோ அதை என்னவாக ஆக்கினீர்கள் என்றார்? கள்ளர்குகையாக் கினீர்கள்; என்றார்.
47. அவர் நாடோறும் தேவாலயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்? உபதே சம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரை என்ன செய்ய வகைதேடினார்கள்? கொலைசெய்ய வகை தேடினார்கள்.
48. எதனால் அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்? ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டி ருந்தபடியால்.


Tuesday, October 13, 2015

லூக்கா – 18

லூக்கா – 18
1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: எது வராமல்போவது கூடாத காரியம்? இடறல்கள். ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு என்ன? ஐயோ!
2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கி லும், எது அவனுக்கு நலமாயிருக்கும்? அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது.
3. யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்? உங்களைக்குறித்து. உன் சகோத ரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனை என்ன செய்? கடிந்து கொள். அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு என்ன செய்? மன்னிப்பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதர மும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு என்ன செய்வாயாக என்றார்? மன்னிப்பாயாக என்றார்.
5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எதை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்? எங்கள் விசுவாசத்தை.
6. அதற்குக் கர்த்தர்: எந்த அளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்? கடுகுவிதை யளவு.
7. உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: என்ன என்று அவனுக் குச் சொல்வானோ? நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று.
8. எது வரை எனக்கு ஊழியஞ்செய் என்பான்? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும். அதற்குப் பின் என்ன என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? நீ புசித்துக் குடிக்கலாம் என்று.
9. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவ னுக்கு என்ன செய்வானோ? உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்வானா? செய்யமாட்டானே.
10. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு:  நீங்கள் என்ன என்று சொல்லுங்கள் என்றார்? நாங்கள் அப்பிர யோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று.
11. பின்பு அவர் எருசலேமுக்குப்  பிரயாணம்பண்ணுகையில், அவர் எந்த நாடு களின் வழியாக நடந்துபோனார்? சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக.
12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் எத்தனை பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்றார்கள்? பத்துப்பேர்.
13. அவர்கள் என்ன என்று சத்தமிட்டார்கள்? இயேசு ஐயரே, எங்களுக்கு இரங் கும்.
14. அவர்களை அவர் பார்த்து என்ன என்று சொன்னார்? நீங்கள் போய், ஆசாரி யர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகை யில் என்ன ஆனார்கள்? சுத்தமானார்கள்.
15. அவர்களில் எத்தனை பேர் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான்? ஒருவன். அவன் யாராயிருந்தான்? சமாரியனாயிருந்தான்.
17. அப்பொழுது இயேசு என்ன கேட்டார்? சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, யாரை ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொன்னார்? இந்த அந்நியனே ஒழிய.
19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, எது உன்னை இரட்சித்தது என்றார்? உன் விசுவாசம்.
20. எது எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டார்கள்? தேவனு டைய ராஜ்யம். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் எப்படி வராது? பிரத்தியட்சமாய்.
21. என்ன என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். இதோ, தேவனுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறதே என்றார்? உங்களுக்குள்.
22. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: எதைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை. ஆனா லும் எதைக் காணமாட்டீர்கள்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை.
23. என்ன என்றும் சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். நீங்களோ என்ன செய்யாமல் இருங்கள்? போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
24. எதைப்போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்? மின் னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறது போல.
25. அதற்கு முன்பு அவர் எப்படி தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது? அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று.
26. யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்? நோவாவின் நாட்களில்.
27. எதுவரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத் தார்கள்? நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும். ஜலப்பிரளயம் வந்து என்ன செய்தது? எல்லாரையும் அழித்துப்போட்டது.
28. யாருடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்? லோத்தினுடைய நாட் களில். ஜனங்கள் என்ன செய்தார்கள்? புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார் கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே என்ன நடந்தது? வானத்தி லிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட் டது.
30. யார் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்? மனுஷகுமாரன்.
31. அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் என்ன செய்யக்கடவன்? வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன். அப்படியே வயலிலிருக்கிறவன் என்ன செய்யக்கடவன்? பின்னிட்டுத் திரும்பா மலும் இருக்கக்கடவன்.
32. யாரை நினைத்துக்கொள்ளுங்கள்? லோத்தின் மனைவியை.
33. யார் ஜீவனை இழந்துபோவான்? தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிற வன். யார் தன் ஜீவனை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்? தன் ஜீவனை இழந்து போகிறவன்.
34. அந்த இராத்திரியில் என்ன செய்துகொண்டிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்? ஒரே படுக்கையில் படுத்திருக்கிற.
35. என்ன செய்கின்ற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்? திரிகை திரிக்கிற.
36. எங்கிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? வயலிலி ருக்கிற.
37. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? எங்கே, ஆண்ட வரே, என்றார்கள். அதற்கு அவர்: எங்கே கழுகு வந்து கூடும் என்றார்? பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.