Sunday, May 10, 2015

மத்தேயு – 27

மத்தேயு – 27
1. பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் யாருக்கு விரோதமாக ஆலோ சனை பண்ணினார்கள்? இயேசுவுக்கு விரோதமாக. இயேசுவுக்கு விரோதமாக என்னவென்று ஆலோசனை பண்ணினார்கள்? கொலை செய்யும்படி. எப்போது ஆலோசனை பண்ணினார்கள்? விடியற்காலமானபோது.
2. இயேசுவை எப்படிக் கொண்டுபோனார்கள்? இயேசுவைக் கட்டி கொண்டு போனார்கள். அப்போதைய தேசாதிபதி யார்? பொந்தியுபிலாத்து. இயேசுவைக் கட்டி, கொண்டுபோய் யாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்? தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
3. இயேசு மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு மனஸ்தாபப் பட்டது யார்? யூதாஸ். யூதாஸ் அந்த முப்பது வெள்ளிக்காசை யாரிடத்திற்குத் திரும்பக் கொண்டுவந்தான்? ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும் பக் கொண்டுவந்தான்.
4. யூதாஸ் எதனால் பாவஞ்செய்தேன் என்றான்? குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு ஆசாரிய ரும் மூப்பரும் என்ன சொன்னார்கள்? எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார் கள்.
5. அப்பொழுது யூதாஸ் என்ன செய்தான்? யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய் நான்றுகொண்டு செத்தான்.
6. அந்த வெள்ளிக்காசை எடுத்தது யார்? பிரதான ஆசாரியர். பிரதான ஆசாரி யர் அந்த வெள்ளிக்காசை எடுத்து என்ன சொன்னார்கள்? இது இரத்தக் கிரயமா னதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொன்னார்கள்.
7. பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை என்ன செய்தார்கள்? ஆலோச னைபண்ணிய பின்பு, அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
8. எந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது? இயேசு வைக் காட்டிக் கொடுப்பதற்காக யூதாஸ் வாங்கிய முப்பது வெள்ளிக்காசால் கொண்ட நிலம்.
9. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவர் யார்? இயேசு. இஸ்ரவேல் புத்திர ரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய வெள்ளிக்காசு எத்தனை? முப்பது வெள்ளிக்காசு.
10. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள் ளிக்காசை அவர்கள் எடுத்து எதற்காக கொடுத்தார்கள்? கர்த்தர் எனக்குக் கற் பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள். நிறைவேறிய இந்த வார்த்தை எந்த தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது? ஏசாயா.
11. இயேசு யாருக்கு முன்பாக நின்றார்? தேசாதிபதிக்கு முன்பாக நின்றார். நீ யூதருடைய ராஜாவா என்று இயேசுவிடம் கேட்டது யார்? தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்து. அதற்கு இயேசு சொன்னது என்ன? நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
12. இயேசு யாருக்கு, எப்போது மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை? பிரதான ஆசாரியரும் மூப்பரும் இயேசுவின்மேல் குற்றஞ்சாட்டுகையில்.
13. அப்பொழுது பிலாத்து இயேசுவை நோக்கி சொன்னது என்ன? இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
14. தேசாதிபதி எதனால்; மிகவும் ஆச்சரியப்பட்டான்? இயேசு ஒரு வார்த்தை யும் மாறுத்தரமாக ஒன்றும் சொல்லாததால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப் பட்டான்.
15. யாரை ஜனங்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதி பதிக்கு வழக்கமாயிருந்தது? காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுத லையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக் கமாயிருந்தது.
16. அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பேர்போன ஒருவனாயிருந்த வன் யார்? பரபாஸ்.
17. எதினாலே அவரைக் காட்டிக்கொடுத்தார்கள்என்று பிலாத்து அறிந்தான்? பொறாமையினாலே.
18. அவர்கள் கூடியிருக்கையில் தேசாதிபதி அவர்களை நோக்கி கேட்டது என்ன? எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர் கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட் டான்.
19. தேசாதிபதி நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனிடத்தில் ஆளனுப்பியது யார்? தேசாதிபதியினுடைய மனைவி. தேசாதிபதியினுடைய மனைவி யாரை ஒன்றும் செய்யவேண்டாம் என்று சொல்லச் சொன்னாள்? அந்த நீதிமானை (இயேசுவை). யார் நிமித்தம் இன்றைக்கு சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்? இயேசுவினிமித்தம்.
20. பிரதான ஆசாரியரும் மூப்பரும் யாரை விட்டுவிடக் கேட்டுக்கொள்ள ஜனங்களை ஏவிவிட்டார்கள்? பரபாசை. பிரதான ஆசாரியரும் மூப்பரும் யாரை கொலைசெய்விக்க ஜனங்களை ஏவிவிட்டார்கள்? இயேசுவை.
21. தேசாதிபதி ஜனங்களை நோக்கி: எவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான்? பரபாஸ், இயேசு. அதற்கு அவர் கள் யாரை விடுதலையாக்கு வேண்டுமென்றார்கள்? பரபாஸ்.
22. பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், யாரை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்? கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை. ஜனங்கள் இயேசுவை என்ன செய்ய வேண்டும் என்றார்கள்? இயேசுவைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.
23. ஏன் என்ன பொல்லாப்புச் செய்தான் என்று தேசாதிபதி யாரைக்குறித்துச் சொன்னான்? இயேசுவைக்குறித்து. ஜனங்கள் என்னவென்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்? இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
24. எதினாலே தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டான்? கலகம் அதிகமாகிறதினால். கலகம் அதிகமாகிறதேயல் லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு என்ன செய்தான்? தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைக ளைக் கழுவினான். பிலாத்து கைகளைக் கழுவி என்ன சொன்னான்? இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள் ளுங்கள் என்றான்.
25. அதற்கு ஜனங்கள் சொன்னது என்ன? இயேசுவினுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
26. அப்பொழுது பிலாத்து யாரை ஜனங்களுக்கு விடுதலையாக்கினான்? பரபாசை. பிலாத்து இயேசுவை எதற்கு ஒப்புக்கொடுத்தான்? இயேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
27. அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவை எங்கே கொண்டு போனார்கள்? தேசாதிபதியின் அரமனை. தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவிடத்தில் யாரை கூடிவரச் செய்தார்கள்? போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் இயேசுவிடத்தில் யாரை கூடிவரச் செய்தார்கள்.
28. இயேசுவின் வஸ்திரங்களை என்ன செய்தார்கள்? கழற்றினார்கள். இயேசு வுக்கு எதை உடுத்தினார்கள்? சிவப்பான மேலங்கி.
29. இயேசுவின் சிரசின்மேல் என்ன வைத்தார்கள்? முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்தார்கள். இயேசுவுக்கு முன்பாக என்ன செய்தார்கள்? முழங்காற்படியிட்டார்கள். இயேசுவை என்னவென்று சொல்லி அவரைப் பரியாசம் பண்ணினார்கள்? யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
30. இயேசுவின்மேல் என்ன செய்தார்கள்? துப்பினார்கள். அந்தக் கோலை எடுத்து என்ன செய்தார்கள்? இயேசுவை சிரசில் அடித்தார்கள்.
31. அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, எதை உடுத்தின மேலங்கியை என்ன செய்தார்கள்? கழற்றினார்கள். அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றிய பிறகு என்ன செய்தார்கள்? அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி னார்கள். இயேசுவை எங்கு கொண்டுபோனார்கள்? இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
32. போகையில் எந்த ஊரானாகிய ஒரு மனுஷனை அவர்கள் கண்டார்கள்? சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷன். அவர்கள் சிரேனே ஊரானாகிய சீமோனை என்ன செய்தார்கள்? இயேசுவுடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.
33. கபாலஸ்தலம் என்னும் அர்த்தங்கொள்ளும் இடம் எது? கொல்கொதா. அவர்கள் எந்த இடத்துக்கு வந்தார்கள்? கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள் ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தார்கள்.
34. அவர்கள் இயேசுவுக்கு எதைக் குடிக்கக் கொடுத்தார்கள்? கசப்புக்கலந்த காடி. இயேசு கசப்புக்கலந்த காடியை என்ன செய்தார்? ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
35. இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு எதின்பேரில் சீட்டுப்போட்டார் கள்? உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள். வஸ்திரத்திற்காகச் சீட்டுப் போட்டு என்ன செய்தார்கள்? இயேசுவுடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என்ன என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இப்படி நடந்தது? என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள்.
36. அவர்கள் அங்கே உட்கார்ந்து என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் இயேசுவை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.
37. என்ன என்று எழுதி அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்? இவன் யூதரு டைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். ஏன் அப்படி எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்? அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
38. அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டது யார்? கள்ளர். அவரோ டேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டது எத்தனை பேர்? இரண்டு பேர். எப்படி சிலுவைகளில் அறையப்பட்டார்கள்? அவருடைய வலது பக்கத்தில் ஒருவ னும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
39. தங்கள் தலைகளைத் துலுக்கியவர்கள் யார்? அந்த வழியாய் நடந்துபோகி றவர்கள்.
40. தேவாலயத்தை இடித்து எத்தனை நாளைக்குள்ளே கட்டுகிறவனே என்றார் கள்? மூன்று நாளைக்குள்ளே. உன்னை நீயே என்ன செய்துகொள் என்றார்கள்? இரட்சித்துக்கொள் என்றார்கள். நீ தேவனுடைய குமாரனானால் என்ன செய் என்றார்கள்? சிலுவையிலிருந்து இறங்கிவா என்றார்கள். அந்த வழியாய் நடந் துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி என்னவென்று இயேசுவைத் தூஷித்தார்கள்? தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்கு ள்ளே கட்டுகிற வனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமார னானால் சிலு வையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
41. அப்படியே பரியாசம் பண்ணியவர்கள் யாவர்? வேதபாரகர், பரிசேயர், மூப்பர்.
42. யாரை ரட்சித்தான் என்றார்கள்? மற்றவனை. எதற்குத் திராணியில்லை என்றார்கள்? தன்னைத் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை என்றார் கள். இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் என்ன செய்யட்டும் என்றார்கள்? இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும் என்றார்கள். எப்போது இயே சுவை விசவாசிப்போம் என்றார்கள்? இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம் என்றார்கள்.
43. தன்னை யார் என்று சொன்னான் என்றார்கள்? தேவனுடைய குமாரன். யார்மேல் நம்பிக்கையாயிருந்தானே என்றார்கள்? தேவன்மேல். யார் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்? தேவன்.
44. அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டது யார்? கள்ளர். அவரோ டேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளர் என்ன செய்தார்கள்? அந்தப் படியே இயேசுவை நிந்தித்தார்கள்.
45. எப்போது பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று? ஆறாம்மணி நேர முதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும்.
46. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு என்னவென்று கூப்பிட்டார்? ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். ஏலி!ஏலி!  லாமா சபக்தானி என்றால் என்ன அர்த்தமாம்? என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது, இவன் யாரைக் கூப்பிடுகிறான் என்றார்கள்? எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
48. உடனே அவர்களில் ஒருவன் ஓடி, எதை எடுத்தான்? கடற்காளானை எடுத் தான். கடற்காளானை எடுத்து, எதில் தோய்த்தான்? காடியில் தோய்த்தான். காடியில் தோய்த்து எதை எதில் மாட்டினான்? ஒரு கோலில் மாட்டினான். கடற் காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி என்ன செய்தான்? இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49. யார் இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்?  மற்ற வர்கள்.  என்ன சொன்னார்கள்? பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
50. இயேசு, மறுபடியும் எப்படிக் கூப்பிட்டார்? மகா சத்தமாய்க் கூப்பிட்டார். இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, எதை விட்டார்? ஆவியை விட்டார்.
51. தேவாலயத்தின் திரைச்சீலை என்ன ஆனது? இரண்டாகக் கிழிந்தது. தேவா லயத்தின் திரைச்சீலை எது தொடங்கி எது வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது? மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும். பூமி என்ன ஆனது? பூமியும் அதிர்ந்தது. கன் மலைகள் என்ன ஆனது? கன்மலைகளும் பிளந்தது.
52. கல்லறைகள் என்ன ஆனது? கல்லறைகளும் திறந்தது. யாருடைய சரீரங் களும் எழுந்திருந்தது? நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53. இயேசு உயிர்த்தெழுந்தபின்பு பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக் குக் காணப்பட்டவர்கள் யாவர்? நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான் களுடைய சரீரங்களும் எழுந்திருந்து, கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
54. நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்த வர்களும், எதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்? பூமியதிர்ச்சியையும் சம்ப வித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்தார்கள். அவர்கள் மிகவும் பயந்து என்ன சொன்னார்கள்? மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
55. அங்கே தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யாவர்? இயேசு வுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரிகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
56. அவர்களுக்குள்ளே யாரெல்லாரும் இருந்தார்கள்? மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரரு டைய தாயும் இருந்தார்கள்.
57. அரிமத்தியா ஊரானாகிய மனுஷனுடைய பேர் என்ன? யோசேப்பு. அரிமத் தியா ஊரானாகிய யோசேப்பு எப்படிப்பட்டவனாயிருந்தான்? இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்தான்.
58. சாயங்காலமானபோது, யோசேப்பு யாரிடம் போனான்? பிலாத்துவிடம் போனான். யோசேப்பு பிலாத்துவிடம் போய் என்ன கேட்டான்? இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது பிலாத்து என்ன கட்டளையிட்டான்? இயேசுவின் சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
59. யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்து, எதில் சுற்றினான்? துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றினான்.
60. யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எங்கே வைத்தான்? தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்தான். யோசேப்பு கல்லறையின் வாசலை என்ன செய்தான்? கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான்.
61. அங்கே கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தவர்கள் யாவர்? மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும்.
62. ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிலாத்துவினிடத்தில் கூடி வந்தது யாவர்? பிரதான ஆசாரியரும் பரிசேயரும்.
63. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவை எப்படி அழைத்தார்கள்? ஆண்டவனே. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவை என்னவென்று சொன்னார்கள்? அந்த எத்தன் என்றார்கள். பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவிடம் எது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது என்றார்கள்? ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது என்றார்கள்.
64. இயேசுவினுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து என்ன செய்வார்கள் என்றார்கள்? இயேசுவைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லுவார்கள் என்றார்கள். எந்த எத்தைப் பார்க்கிலும் எந்த எத்து கொடியதாகாதபடி செய்ய வேண்டும் என்றார்கள்? முந்தின எத்தைப் பார்க்கிலும் பிந்தின எத்து கொடியதாகாதபடி செய்ய வேண் டும் என்றார்கள். முந்தின எத்தைப் பார்க்கிலும் பிந்தின எத்து கொடியதாகாத படிக்கும் நீர் என்ன கட்டளையிட வேண்டும் என்றார்கள்? நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள்.
65. அதற்கு பிலாத்து பிரதான ஆசாரியரிடமும் பரிசேயரிடமும் சொன்னது என்ன? உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே, போய் உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்றான்.
66. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் என்ன செய்தார்கள்? கல்லுக்கு முத்தி ரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.

Monday, April 27, 2015

மத்தேயு – 26

மத்தேயு – 26
1. இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடிந்தபின்பு, யாரை நோக்கி பேசினார்? தம்முடைய சீஷரை நோக்கி பேசினார்.
2. இரண்டுநாளைக்குப்பின்பு எது வருமென்று அறிவீர்கள்? என்றார். பஸ்கா பண்டிகை. அப்பொழுது, யார் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக் கப்படுவார் என்றார்? மனுஷகுமாரன்.
3. அப்பொழுது, பிரதான ஆசாரியனாயிருந்தது யார்? காய்பா. பிரதான ஆசாரி யரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் எங்கே கூடிவந்தார்கள்? காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்தார்கள்.
4. யாரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணி னார்கள்? இயேசுவை. இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும் படி ஆலோசனைபண்ணியவர்கள் யார்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும்.
5. எதனால் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்? ஜனங்க ளுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்கு.
6. பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்தவன் யார்? சீமோன். இயேசு பெத்தானியாவில் யார் வீட்டில் இருந்தார்? குஷ்டரோகியாயிருந்து சீமோன் வீட்டில் இருந்தார்.
7. விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றியது யார்? ஒரு ஸ்திரீ.
8. அவருடைய சீஷர்கள் ஸ்திரீயின் செயலைக்கண்டு என்ன அடைந்தார் கள்? விசனமடைந்தார்கள். சீஷர்கள் விசனமடைந்து கேட்ட கேள்வி என்ன? இந்த வீண் செலவு என்னத்திற்கு?
9. அந்தத் தைலத்தை என்ன விலைக்கு விற்றிருக்கலாம் என்றார்கள்? உயர்ந்த விலைக்கு. விற்று யாருக்குக் கொடுத்திருக்கலாமே என்றார்கள்? தரித்திரருக்கு. 
10. நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள் என்றது யார்? இயேசு. இயேசு என்னிடத்தில் நற்கிரியையைச் செய்தது யார் என்றார்? இந்த ஸ்திரீ.
11. யார் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்? தரித்திரர்.  நானோ எப்போது உங்களிடத்தில் இரேன் என்றார்? எப்போதும்.
12. இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது எதற்கு எத்தன மான செய்கையாயிருக்கிறது என்றார்? என்னை அடக்கம் பண்ணுவதற்கு.
13. எங்கு இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே சொல்லப்படும்.
14. அப்பொழுது, பிரதான ஆசாரியரிடத்திற்குப் போனது யார்? பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன்.
15. யூதாஸ்காரியோத்து யாரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன் என்றார்? இயேசுவை. இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு என்ன கேட்டான்? நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு என்ன கொடுக்க உடன்பட்டார்கள்? முப்பது வெள்ளிக்காசு.
16. அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்காக என்ன செய்தான்? சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.
17. எந்த நாளிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்தார்கள்? புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளில். சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்;து என்ன கேட்டார்கள்? பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத் தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
18. யார் வேளை சமீபமாயிருக்கிறது? இயேசுவின் வேளை. யார் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்றார்? நகரத்தில் ஒருவன் வீட் டில். இயேசு சீஷர்களிடம் சொன்னது என்ன? நீங்கள் நகரத்திலே இன்னானிடத் திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோ டேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
19. சீஷர்கள் எப்படி பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்? இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
20. சாயங்காலமானபோது இயேசு என்ன செய்தார்? சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட இயேசு பந்தியிருந்தார்.
21. அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு என்ன சொன்னார்? உங்களி லொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
22. அப்பொழுது மிகவும் துக்கமடைந்தது யார்? இயேசுவின் சீஷர்கள். அப்பொ ழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, இயேசுவை நோக்கி கேட்டது என்ன? ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கி னார்கள்.
23. இயேசு யார் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்றார்? என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான் என்றார்.
24. மனுஷகுமாரன் எப்படி போகிறார்? மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். எந்த மனுஷனுக்கு ஐயோ; எந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்? எந்த மனுஷ னால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
25. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி கேட்டது என்ன? ரபீ, நானோ? என்றான். யூதாஸ{க்கு இயேசு சொன்னது என்ன? நீ சொன்னபடி தான் என்றார். இயேசு எதை எடுத்து ஆசீர்வதித்தார்? அப்பத்தை எடுத்து ஆசீர் வதித்தார்.
26. இயேசு அப்பத்தை பிட்டு யாருக்குக் கொடுத்தார்? சீஷர்களுக்குக் கொடுத் தார். இயேசு அப்பத்தைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து என்ன சொன்னார்? நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 
27. பின்பு பாத்திரத்தையும் எடுத்து என்ன செய்தார்? ஸ்தோத்திரம் பண்ணி னார். பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி யாருக்குக் கொடுத்தார்? சீஷர்களுக்குக் கொடுத்தார். நீங்கள் எல்லாரும் எதிலே பானம்பண்ணுங்கள் என்றார்? திராட்சரசத்திலே பானம் பண்ணுங்கள் என்றார்.
28. எது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன் படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது? திராட்சரசம்.
29. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட எங்கே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில் லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? என் பிதாவின் ராஜ்யத் தில். 
30. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டை பாடினபின்பு எங்கே புறப்பட்டுப்போனார் கள்? ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
31. எதை வெட்டுவேன், எவைகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறது? மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதி யிருக்கிறது. எப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்றார்? இந்த இராத்திரியில். மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல் லாரும் என்ன ஆவீர்கள் என்றார்? என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்றார்.
32. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே எங்கே போவேன் என்றார்? கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
33. பேதுரு இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றார்.
34. இயேசு பேதுருவை நோக்கி இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை எத்தனை தரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? மூன்று தரம்.
35. நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை என்ன செய்ய மாட்டேன் என்றான்? மறுதலிக்க மாட்டேன் என்றான். சீஷர்கள் எல்லாரும் என்ன சொன்னார்கள்? சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
36. இயேசு அவர்களோடே எந்த இடத்திற்கு வந்தார்கள்? கெத்சமனே என்னப் பட்ட இடத்திற்கு வந்தார். இயேசு சீஷர்களை நோக்கி எதுவரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொன்னார்? நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமள வும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொன்னார்.
37. இயேசு யாரைக் கூட்டிக்கொண்டுபோய் துக்கமடையவும் வியாகுலப்பட வும் தொடங்கினார்? பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
38. இயேசு, என் ஆத்துமா எதற்க்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது என் றார்? மரணத்துக்கேதுவான துக்கம். நீங்கள் இங்கே தங்கி, என்ன செய்யுங்கள் என்றார்? என்னோடேகூட விழித்திருங்கள் என்றார். யாரிடம் என்னோடேகூட விழித்திருங்கள் என்றார்? பேதுருவிடமும் செபதேயுவின் குமாரர் இருவரிட மும்.
39. இயேசு சற்று அப்புறம்போய், என்ன செய்தார்? முகங்குப்புற விழுந்து ஜெபம்பண்ணினார். இயேசு முகங்குப்புற விழுந்து என்னவென்று ஜெபம்பண் ணினார்? என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத் தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
40. பின்பு அவர் சீஷர்களிடத்தில் வந்து என்ன கண்டார்? சீஷர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டார். சீஷர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேது ருவை நோக்கி கேட்டது என்ன? நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா என்று கேட்டார்.
41. நீங்கள் சோதனைக்குட்படாதபடி என்ன செய்ய வேண்டும்? விழித்திருந்து ஜெபம் பண்ணவேண்டும். நீங்கள் எதற்காக விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும்? சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும். ஆவி எப்படிப்பட்டது? ஆவி உற்சாகமுள்ளது. மாம்சம் எப்படிப்பட்டது? மாம்சம் பலவீனமுள்ளது.
42. இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், யாருடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்? பிதாவினுடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். இயேசு மறுபடியும் இரண்டாந்தரம் போய் என்ன செய்தார்? என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
43. இயேசு திரும்ப வந்தபோது, என்ன கண்டார்? அவருடைய சீஷர்கள் மறுபடி யும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார். சீஷர்களுடைய கண்கள் எப்படி இருந் தது? மிகவும் நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
44. இயேசு மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் என்ன செய்தார்? அந்த வார்த்தைகளையே சொல்லி, ஜெபம் பண்ணினார்.
45. பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து என்ன செய்யுங்கள் என் றார்?  இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள் என்றார். யார் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கபடுகிற வேளை வந்தது? மனுஷகுமாரன்.
46. யார் வந்துவிட்டான் என்றார்? என்னைக் (இயேசுவை) காட்டிக்கொடுக்கிற வன். இயேசு யாரை எழுந்திருங்கள், போவோம் என்றார்? பேதுருவையும் செபதேயுவின் குமாரர் இருவரையும்.
47. இயேசு இப்படிப் பேசுகையில், வந்தது யார்? பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ். யூதாஸோடு கூட வந்தது யார்? பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள். வந்தவர்கள் எவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்? பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
48. இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறவன் அவர்களுக்கு என்ன அடையாளம் சொல்லியிருந்தான்? நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று  அவர்களுக்கு அடையாளம் சொல்லி யிருந்தான்.
49. உடனே இயேசுவினிடத்தில் வந்தது யார்? யூதாஸ். யூதாஸ் இயேசுவி னிடத்தில் வந்து என்ன செய்தான்? ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
50. இயேசு யூதாஸை நோக்கி என்ன கேட்டார்? சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்டவந்து என்ன செய்தார் கள்? இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
51. அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் என்ன செய்தான்? கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்கார னைக் காதற வெட்டினான். 
52. இயேசு அவனை நோக்கி உன் பட்டயத்தை என்ன செய் என்றார்? உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு என்றார். பட்டயத்தை எடுக்கிற யாவரும் என்ன ஆவார்கள் என்றார்? பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத் தால் மடிந்து போவார்கள் என்றார்.
53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் எத்தனைக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா என்றார்? பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்.
54. எப்படிச் செய்வேனானால், எது எப்படி நிறைவேறும் என்றார்? இவ்வித மாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். 
55. யாரைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளை யும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள் என்றார்? கள்ளனைப் பிடிக் கப் புறப்படுகிறதுபோல். நான் தினந்தோறும் எங்கு உபதேசம்பண்ணிக் கொண் டிருந்தேன் என்றார்? உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன் என்றார். எப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்க வில்லையே என்றார்? நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில்  உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தபோது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே என்றார்.
56. ஆகிலும் எது நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார்? தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல் லாம் சம்பவிக்கிறது என்றார். சீஷர்களெல்லாம் அப்பொழுது என்ன செய்தார் கள்? இயேசுவை விட்டு ஓடிப்போனார்கள். 
57. இயேசுவைப் பிடித்தவர்கள் இயேசுவை யாரிடம் கொண்டுபோனார்கள்? பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள். பிரதான ஆசாரியனாகிய காய்பாவிடம் கூடிவந்திருந்தவர்கள் யார்? வேதபார கரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.
58. பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று எதுவரை வந்தான்? பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்தான். பேதுரு எது உள்ளே பிரவே சித்தான்? பிரதான ஆசாரியனுடைய அரமனை உள்ளே பிரவேசித்தான். பேதுரு எதற்காக சேவகரோடே உட்கார்ந்தான்? முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.
59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் எதைத் தேடினார் கள்? பொய்ச்சாட்சி தேடினார்கள். யாருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்? இயேசுவுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள். எதற் காக இயேசுவுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்? இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.
60. யார் ஒருவரும் அகப்படவில்லை? பொய்ச்சாட்சி ஒருவரும் அகப்பட வில்லை. யாருடைய சாட்சி ஒவ்வவில்லை? அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஓவ்வவில்லை. கடைசியில் எத்தனை பொய்ச் சாட்சிகள் வந்தது? இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்தது.
61. கடைசியில் வந்த இரண்டு பொய்ச்சாட்சிகள் என்னென்ன? தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்றுநாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
62. அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, இயேசுவை நோக்கி சொன் னது என்ன? இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறி;த்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
63. இயேசு என்ன சொன்னார்? இயேசுவோ பேசாமலிருந்தார். நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று கேட்டது யார்? பிரதான ஆசாரியன். யாரி டம் கேட்டான்? இயேசுவிடம் கேட்டான். பிரதான ஆசாரியன், நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று எங்களுக்குச் சொல்லும்படி யார் பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்? ஜீவனுள்ள தேவன்பேரில்.
64. அதற்கு இயேசு சொன்னது என்ன? நீர் சொன்னபடிதான் என்றார். அன்றியும் மனுஷகுமாரன் எங்கு வீற்றிருப்பதை இதுமுதல் காண்பீர்கள் என்றார்? சர்வ வல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதை இதுமுதல் காண்பீர்கள் என்றார். மனுஷகுமாரன் எதன்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் என்றார்? வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் என்றார்.
65. அப்பொழுது பிரதான ஆசாரியன் என்ன செய்தான்? தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டான். பிரதான ஆசாரியன் இயேசு என்ன சொன்னான் என்றான்? தேவதூஷனம் சொன்னான் என்றான். இனி எது நமக்கு வேண்டிய தென்ன என்றான்? சாட்சிகள். இவன் தூஷணத்தை இப்பொழுது என்ன செய்தீர் கள் என்றான்? கேட்டீர்களே என்றான்.
66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டது யார்? பிரதான ஆசாரியன். உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று பிரதான ஆசாரி யன் கேட்டதற்கு அவர்கள் சொன்னது என்ன? மரணத்துக்குப் பாத்திரனாயிருக் கிறான் என்றார்கள்.
67. அப்பொழுது அவர்கள் இயேசுவை என்ன செய்தார்கள்? இயேசுவுடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள், சிலர் அவரைக் கன்னத்தில் அறைந் தார்கள்.
68. எதை ஞானதிருஷ்டியினால் சொல்லும் என்றார்கள்? உம்மை அடித்தவன் யார் என்று ஞானதிருஷ்டியினால் சொல்லும் என்றார்கள்.
69. அத்தருணத்தில் வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்த வன் யார்? பேதுரு. அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி யாரிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்? பேதுருவிடத் தில்.
70. அதற்கு பேதுரு சொன்னது என்ன? நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று, எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.
71. பேதுரு எங்கே போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக் குச் சொன்னாள்? பேதுரு வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது.
72. அதற்கு பேதுரு சொன்னது என்ன? அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.
73. சற்றுநேரத்துக்குப்பின்பு யார் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார் கள்? அங்கே நின்றவர்கள்.
74. அதற்கு பேதுரு சொன்னது என்ன? அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். பேதுரு மூன்றாம் தரம் அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் பண்ண வும் தொடங்கிய உடனே என்ன நடந்தது? உடனே சேவல் கூவிற்று.
75. அப்பொழுது பேதுரு எதை நினைத்துக்கொண்டான்? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டான். பேதுரு இயேசு சொன்னதை நினைத்துக்கொண்டு என்ன செய்தான்? வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

Wednesday, April 22, 2015

மத்தேயு – 25

மத்தேயு – 25
1. பரலோகராஜ்யம் யாருக்கு ஒப்பாயிருக்கிறது? தங்கள் தீவட்டிகளைப் பிடித் துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னி கைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
2. அவர்களில் புத்தியுள்ளவர்கள் எத்தனை பேர்? ஐந்துபேர். அவர்களில் புத்தி யில்லாதவர்கள் எத்தனை பேர்? ஐந்துபேர்.
3. புத்தியில்லாதவர்கள் எவைகளை எடுத்துக்கொண்டுபோனார்கள்? தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள். புத்தியில்லாதவர்கள் எதை கூட எடுத்துக்கொண்டு போகவில்லை? எண்ணெயையோ கூடக் கொண்டுபோக வில்லை.
4. புத்தியுள்ளவர்கள் எவைகளை எடுத்துக்கொண்டு போனார்கள்? தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள். புத்தியுள்ளவர்கள் எதை கூட எடுத்துக்கொண்டு போனார்கள்? தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கூட எடுத்துக்கொண்டு போனார்கள்.
5. யார் வரத் தாமதமானது? மணவாளன். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் என்னசெய்தார்கள்? நித்திரை மயக்கமடைந்து தூங்கி விட்டார்கள்.
6. நடுராத்திரியிலே என்ன சத்தம் உண்டாயிற்று? இதோ, மணவாளன் வருகி றார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டா யிற்று.
7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் என்ன செய்தார்கள்? அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தி னார்கள்.
8. உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள் என்று யார் யாரிடம் சொன்னார்கள்? புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி சொன்னார்கள். உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள் என்று ஏன் சொன்னார்கள்? அவர்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதால்.
9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக யாரிடத்தில் போய் உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்? விற்கிறவர்களிடத்திற் போய் உங்களுக் காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள்? எங்க ளுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, அப்படிச் சொன்னார்கள்.
10. புத்தியில்லாதவர்கள் எண்ணெய் வாங்கிப்போனபோது வந்தது யார்? மணவாளன். மணவாளனோடுகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தது யார்? ஆயத்தமாயிருந்தவர்கள் (புத்தியுள்ளவர்கள்). கதவு எப்போது அடைக்கப் பட்டது? ஆயத்தமானவர்கள் மணவாளனோடுகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்த பின் கதவு அடைக்கப்பட்டது.
11. ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றது யார்? மற்றக் கன்னிகைகள் (புத்தியில்லாத கன்னிகைகள்)
12. அதற்கு மணவாளன் சொன்னது என்ன? உங்களை அறியேன் என்று, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13. எதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்? மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். எதனால் விழித்திருங்கள் என்கிறார்? மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் என்கிறார்.
14. புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஆஸ்தி களை யாரை அழைத்து ஒப்புக்கொடுக்கிறான்? தன் ஊழியக்காரரை அழைத்து ஒப்புக்கொடுக்கிறான். பரலோகராஜ்யம் யார் யாருக்கு எதை ஒப்புக்கொடுத்தது போல் இருக்கிறது? பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
15. எதற்குத் தக்கதாக ஒவ்வொருவனிடத்தில் தாலந்துகளைக் கொடுத்துப் பிரயாணப்பட்டுப் போனான்? அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக. அவர்க ளுடைய திறமைக்குத் தக்கதாக அவர்களுக்கு எத்தனை தாலந்துகளைக் கொடுத்தான்? ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், ஒருவனுக்கு இரண்டு தாலந்தும், ஒருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுத்தான்.
16. ஐந்து தாலந்தை வாங்கினவன் என்ன செய்தான்? ஐந்து தாலந்தை வாங்கி னவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந் தைச் சம்பாதித்தான்.
17. இரண்டு தாலந்தை வாங்கினவன் என்ன செய்தான்? இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.
18. ஒரு தாலந்தை வாங்கினவன் என்ன செய்தான்? ஒரு தாலந்தை வாங்கின வனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.
19. அந்த ஊழியக்காரருடைய எஜமான் எப்போது திரும்பிவந்தான்? வெகுகால மானபின்பு. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பி வந்து, அவர்களிடத்தில் என்ன கேட்டான்? கணக்குக் கேட்டான்.
20. ஐந்து தாலந்தை வாங்கினவன் என்ன சொன்னான்? வேறு ஐந்து தாலந் தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித் தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
21. கொஞ்சத்தில் உண்மையாயிருந்தவன் யார்? உத்தமமும் உண்மையு முள்ள ஊழியக்காரன். கொஞ்சத்தில் உண்மையாயிருந்ததினால் அவனை அவன் எஜமான் என்ன செய்தான்? அநேகத்தின்மேல் அதிகாரியாக வைத்தான். ஐந்து தாலந்து வாங்கி வேறு ஐந்து தாலந்து சம்பாதித்தவனை நோக்கி எஜமான் சொன்னது என்ன? உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரி யாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
22. இரண்டு தாலந்தை வாங்கினவன் என்ன சொன்னான்? ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
23. இரண்டு தாலந்து வாங்கி வேறு இரண்டு தாலந்து சம்பாதித்தவனை நோக்கி எஜமான் சொன்னது என்ன? உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக் காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
24. ஒரு தாலந்து வாங்கினவன் ஆண்டவனை நீர் யார் என்று அறிவேன் என்றான்? ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக் காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன் என்றான்.
25. ஒரு தாலந்து வாங்கினவன் எதனால் பயந்து போனேன் என்றான்? ஆண்ட வனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க் கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன், அதனால் பயந்து போனேன் என்றான். எதனால்; உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத் தேன் என்றான்? பயந்து போய் நிலத்தில் புதைத்து வைத்தேன் என்கிறான். எதை வாங்கிக்கொள்ளும் என்கிறான்? உம்முடையதை (ஒரு தாலந்து). 
26. பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரன் யார்? ஒரு தாலந்து வாங்கி அதை நிலத்தில் புதைத்து அதை அப்படியே திரும்ப எடுத்து எஜமானி டம் கொடுத்தவன்.
27. ஒரு தாலந்து வாங்கி அதையே திருப்பி கொடுத்தவனை நோக்கி எஜமான் எதை அறிந்திருக்கிறாயே என்றான்? நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவ னென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே என்றான். அப்படியானால், நீ அதை யார் வசத்தில் போட்டுவைத்திருக்க வேண் டும் என்றான்? காசுக்காரர் வசத்தில்.  அப்பொழுது, நான் வந்து என்ன செய்தி ருப்பேன் என்றான்? என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே என்றான்.
28. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து யாரிடம் கொடுங்கள் என்றான்? பத்து தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள் என்றார்.
29. யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப் படும். யார் பரிபூரணமும் அடைவான்? உள்ளவன். யாரிடத்திலிருந்து உள்ள தும் எடுத்துக்கொள்ளப்படும்? இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்.
30. யாரைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள் என்றான்? பிரயோஜன மற்ற ஊழியக்காரனை. புறம்பான இருளிலே என்ன உண்டாயிருக்கும்? அழுகையும் பற்கடிப்பும்.
31. மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோ டுங்கூட வரும்போது, எதின்மேல் வீற்றிருப்பார்? தமது மகிமையுள்ள சிங்காச னத்தின் மேல் வீற்றிருப்பார்.
32. எப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்? மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங் கூட வந்து, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும்போது. மனுஷகுமாரன் சகல ஜனங்களையும் எப்படிப் பிரிப்பார்? மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரிப்பார்.
33. செம்மறியாடுகளை எந்தப் பக்கத்தில் நிறுத்துவார்? தமது வலதுபக்கத்தில் நிறுத்துவார். வெள்ளாடுகளை எந்தப் பக்கத்தில் நிறுத்துவார்? தமது இடதுபக் கத்தில் நிறுத்துவார்.
34. யாரைப் பார்த்து என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்பார்? ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து. எப்படிப்பட்ட ராஜ்யத் தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்பார்? உலகம் உண்டானது முதல் உங்க ளுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள் ளுங்கள் என்பார்.
35. பசியாயிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள்? எனக்குப் போஜனங்கொடுத் தீர்கள். தாகமாயிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள்? என் தாகத்தைத் தீர்த் தீர்கள். அந்நியனாயிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள்? என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்.
36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள்? எனக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள். வியாதியாயிருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள் என்பார்? என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலில் இருந்தேன், எனக்கு என்ன செய்தீர்கள் என்பார்? என்னைப் பார்க்க வந்தீர்கள்.
37. அப்பொழுது அவனுக்கு பிரதியுத்தரமாக சொன்னது யார்? நீதிமான்கள். நீதிமான்கள் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? ஆண்டவரே, நாங்கள் எப்பொ ழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த் தோம்?
38. பின்னும் நீதிமான்கள் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? 
39. பின்னும் நீதிமான்கள் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத் தில் வந்தோம் என்பார்கள். 
40. நீங்கள் எதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்? மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
41. ராஜா யாரைப் பார்த்து சபிக்கப்பட்டவர்களே என்பார்? அப்பொழுது, இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து. சபிக்கப்பட்டவர்களை எங்கே போங்கள் என்பார்? என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 
42. பசியாயிருந்தேன், நீங்கள் என்ன செய்யவில்லை என்பார்? எனக்குப் போஜ னங் கொடுக்கவில்லை என்பார். தாகமாயிருந்தேன், நீங்கள் என்ன செய்ய வில்லை என்பார்? என் தாகத்தைத் தீர்க்கவில்லை என்பார்.
43. அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்ன செய்யவில்லை என்பார்? என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்பார். வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் என்ன செய்யவில்லை என்பார்? எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை என்பார். வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்ன செய்யவில்லை என்பார்? என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.
44. அப்பொழுது இடதுபக்கத்தில் நின்றவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக என்னவென்று சொல்லுவார்கள்? ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப் பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.
45. மனுஷகுமாரன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொலலுவது என்ன? மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதி ருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46. யார் நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்றார்? இடதுபக்கத்தில் நிற்பவர்கள். யார் நித்திய ஜீவனை அடைவார்கள் என்றார்? வலதுபக்கத்தில் நிற்பவர்கள் (நீதிமான்கள்).

Tuesday, April 21, 2015

மத்தேயு – 24

மத்தேயு – 24
1. இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் எதற்கு அவரிடத்தில் வந்தார்கள்? தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
2. இயேசு அவர்களை நோக்கி: எவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே என்றார்? தேவாலயத்தின் கட்டடங்களையெல்லாம் பார்க்கிறீர்களே என்றார். எவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப் பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? தேவாலயத்தில்.
3. பின்பு, அவர் எதின்மேல் உட்கார்ந்திருந்தார்? ஒலிவமலையின்மேல். சீஷர் கள் இயேசுவிடத்தில் தனித்துவந்து என்ன கேட்டார்கள்? இவைகள் எப்பொ ழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடை யாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
4. யார் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? ஒருவனும்.
5. அநேகர் வந்து எப்படி வஞ்சிப்பார்கள் என்றார்? அநேகர் வந்து, என் நாமத் தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப் பார்கள் என்றார்.
6. எவைகளையும் அவைகளின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்? யுத் தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். எப்போது கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? யுத்தங்களையும் யுத்தங்க ளின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாயி ருங்கள் என்றார். எவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே? யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும். ஆனாலும் எது உடனே வராது? முடிவு.
7. எதுக்கு விரோதமாய் எது எழும்பும்? ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். எவைகள் பல இடங்களில் உண்டாகும்? பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. எவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்? ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்,  இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. இவைகளெல்லாம் நடக்கும்போது உங்களை எதற்கு ஒப்புக்கொடுப்பார் கள்? உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் என்ன செய்யப்படுவீர்கள்? பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர் என்ன செய்வார்கள்? அநேகர் இடறலடைந்து, ஒருவ ரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
11. யார் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்? அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள்.
12. எதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்? அக்கிரமம் மிகுதியாவதி னால்.
13. யார் இரட்சிக்கப்படுவான்? முடிவுபரியந்தம் நிலைநிற்பவன்.
14. எப்போது முடிவு வரும்? ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்  பூலோக மெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்போது முடிவு வரும்.
15. எதைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறான்? பாழாக்கு கிற அருவருப்பைக் குறித்து. யார் சிந்திக்கக்கடவன்? வாசிக்கிறவன் சிந்திக் கக்கடவன்.
16. யார் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்? யூதாவில் இருக்கிறவர்கள். எப்போது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர் கள்? நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில்  நிற்கக் காணும்போது.
17. வீட்டின்மேல் இருக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? தன் வீட்டிலே எதை யாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்க வேண்டும்.
18. வயலில் இருக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்க வேண்டும்.
19. அந்நாட்களில் யாருக்கெல்லாம் ஐயோ? கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கி றவர்களுக்கும் ஐயோ.
20. நீங்கள் ஓடிப்போவது எந்த காலத்திலாவது, எந்த நாளிலாவது, சம்பவியாத படிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்? நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
21. எப்படிப்பட்ட உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்? உலகமுண்டா னதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாதது மான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
22. அந்நாட்கள் என்ன செய்யப் படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவ தில்லை? குறைக்கப்படாதிருந்தால். யார் நிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப் படும்? தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நிமித்தம்.
23. அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கி றார் என்று எவனாகிலும் சொன்னால் என்ன செய்யாதேயுங்கள் என்கிறார்? நம்பாதேயுங்கள் என்கிறார்.
24. ஏனெனில் யார் எழும்புவார்கள்? கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரி சிகளும் எழும்புவார்கள். கூடுமானால் யாரை வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்? தெரிந்துகொள்ளப் பட்டவர்களை.
25. இதோ, முன்னதாக உங்களுக்கு என்ன செய்திருக்கிறேன்? அறிவித்திருக் கிறேன்.
26. அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், என்ன செய்யாதிருங்கள்? புறப்படாதிருங்கள். இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் என்ன செய்யாதிருங்கள்? நம்பாதிருங்கள்.
27. எதைப்போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்? மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல.
28. எங்கே கழுகுகள் வந்து கூடும்? பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே சூரியன் என்னவாகும்? அந்தகா ரப்படும். அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே சந்திரன் என்னவாகும்? ஒளியைக் கொடாதிருக்கும். அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே நட்சத் திரங்கள் என்னவாகும்? வானத்திலிருந்து விழும். அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே வானத்தின் சத்துவங்கள் என்னவாகும்? அசைக்கப்படும்.
30. அப்பொழுது வானத்தில் என்ன காணப்படும்? மனுஷகுமாரனுடைய அடையாளம். மனுஷகுமாரன் எப்படி வானத்தின் மேகங்கள்மேல் வருவார்? வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும். மனுஷகுமாரன் வல்லமையோ டும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப்  பூமியி லுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு என்ன செய்வார்கள்? புலம்புவார்கள்.
31. எப்படிப்பட்ட சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்? வலு வாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே. அவருடைய தூதர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை என்ன செய்வார்கள்? வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப் பார்கள். 
32. எதினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்? அத்திமரத் தினால். வசந்தகாலம் எப்பொழுது சமீபமாயிற்று என்று அறிவீர்கள்? அத்தி மரத்திலே இளங்கிளை தோன்pற துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமா யிற்று என்று அறிவீர்கள்.
33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, யார் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்? (மனுஷகுமாரன்) அவர். 
34. இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே எது ஒழிந்துபோகாதென்று, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததி.
35. எவைகள் ஒளிந்துபோம்? வானமும் பூமியும். எவைகள் ஒழிந்துபோவ தில்லை? என் வார்த்தைகள்.
36. அந்த நாளையும் அந்த நாழிகையையும் யார் ஒருவர்தவிர மற்றொருவ னும் அறியான்? என் பிதாதவிர மற்றொருவனும் அறியான். வேறு யாரும் அறியார்கள்? பரலோகத்திலிருக்கிற தூதர்களும் அறியார்கள்.
37. மனுஷகுமாரன் வரும் காலத்திலும் எப்படி நடக்கும்? நோவாவின் காலத் தில் நடந்ததைப்போல நடக்கும்.
38. ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவே சிக்கும் நாள் வரைக்கும் என்ன நடந்தது? ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்.
39. எதுவரை உணராதிருந்தார்கள்? ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள். மனுஷகுமாரன் வரும் காலத்திலும் எப்படி நடக்கும்? நோவாவின் காலத்தில் நடந்தது போல நடக்கும். 
40. அப்பொழுது வயலில் எத்தனை பேர் இருப்பார்கள்? இரண்டுபேர். இரண்டு பேரும் என்ன ஆவார்கள்? ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான். மற்றொருவன் கைவிடப்படுவான்.
41. எத்தனை ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்? இரண்டுபேர். இரண்டு பேரும் என்ன ஆவார்கள்? ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள். மற்றொ ருத்தி கைவிடப்படுவாள்.
42. எதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்? உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகை யிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். எதற்காக உங்களை விழித்திருங்கள் என்கிறார்? உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவா ரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
43. திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந் தால், அவன் என்ன செய்வான்? அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிட வொட்டான்.
44. எந்த நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்? நீங்கள் நினையாத நாழி கையிலே. எதனால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்கிறார்? நீங்கள் நினை யாத நாழிகையிலே மனுஷகுமாரன் வரவிருப்பதால் ஆயத்தமாயிருங்கள்.
45. யாரை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யாவன்? ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜ னங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?  
46. எப்படிப்பட்ட ஊழியக்காரன் பாக்கியவான் என்கிறார்? தன் எஜமான் வரும் போது ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் பாக்கியவான் என்கிறார்.
47. அப்படிப்பட்ட ஊழியக்காரனை எஜமான் என்ன செய்வான்? தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான்.
48. அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்தால் தன் உள்ளத்திலே என்ன சொல்லுவான்? என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத் திலே சொல்லுவான்.
49. தன் உடன் வேலைக்காரரை என்ன செய்வான்? அடிக்கத் தொடங்குவான். வெறியரோடே என்ன செய்வான்? புசிக்கவும் குடிக்கவும் தலைப்படுவான்.
50. அவனுடைய எஜமான் எப்பொழுது வருவான்? அந்த ஊழியக்காரன் நினை யாத நாளிலும், அறியாத நாழிகையிலும் வருவான்.
51. அவனுடைய எஜமான் வந்து, என்ன செய்வான்? அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். அங்கே என்ன உண்டாயிருக்கும்? அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

Wednesday, April 15, 2015

மத்தேயு – 23

மத்தேயு – 23
1. பின்பு இயேசு யாரை நோக்கினார்? ஜனங்களையும் தம்முடைய சீஷர்க ளையும்.
2. மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள் யார்? வேதபாரக ரும் பரிசேயரும்.
3. நீங்கள் எதைக் கைக்கொண்டு செய்யுங்கள் என்கிறார்? நீங்கள் கைக்கொள் ளும்படி வேதபாரகரும் பரிசேயரும் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள் என்கிறார். எதன்படி செய்யாதிருங்கள் என்கிறார்? வேதபாரகர் மற்றும் பரிசேயருடைய செய்கையின்படி செய்யாதிருங்கள் என்கிறார். நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள் என்று ஏன் சொன்னார்? ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார் கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள், அதனால் அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்;: அவர்கள் செய்கையின் படியோ செய்யாதிருங்கள் என்று சொன்னார்.
4. சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி யார் தோள்களின்மேல் சுமத்து கிறார்கள்? மனுஷர் தோள்களின்மேல். தாங்களோ அவைகளை என்ன செய்ய மாட்டார்கள்? ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
5. அவர்கள் எவைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கி றார்கள்? தங்கள் கிரியைகளையெல்லாம். அவர்கள் எவைகளை அகலமாக்கி னார்கள்? தங்கள் காப்புநாடாக்களை. அவர்கள் எவைகளை பெரிதாக்கினார் கள்? தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களை.
6. எங்கே முதன்மையான இடங்களை விரும்புகிறார்கள்? விருந்துகளில். எங்கே முதன்மையான ஆசனங்களை விரும்புகிறார்கள்? ஜெபஆலயங்களில்.
7. எங்கே வந்தனங்களை விரும்புகிறார்கள்? சந்தைவெளிகளில். மனுஷரால் என்னவென்று அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள்? ரபீ, ரபீ என்று.
8. நீங்கள் என்னவென்று அழைக்கப்படாதிருங்கள்? ரபீ என்று. யார் ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்? கிறிஸ்து. நீங்கள் எல்லாரும் யாராயி ருக்கிறீர்கள்? சகோதரராயிருக்கிறீர்கள்.
9. பூமியிலே ஒருவனையும் யார் என்று சொல்லாதிருங்கள்? உங்கள் பிதா என்று. யார் ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்? பரலோகத்திலிருக் கிற ஒருவரே.
10. நீங்கள் யார் என்று அழைக்கப்படாதிருங்கள்? குருக்கள் என்று. உங்களுக்கு குருவாயிருக்கிறவர் யார்? கிறிஸ்து ஒருவரே.
11. உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு யாராயிருக்கக்கடவன்? ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
12. தன்னை உயர்த்துகிறவன் என்ன செய்யப்படுவான்? தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் என்ன செய்யப்படுவான்? உயர்த்தப்படுவான்.
13. யாரை மாயக்காரர் என்று சொல்லுகிறார்? வேதபாரகரையும், பரிசேயரை யும். யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேய ருக்கும். பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறவர்கள் யார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேயருக்கும். யார் பிரவேசியாதபடி பூட்டிப்போடுகிறார் கள்? மனுஷர் பிரவேசியாதபடி. யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கிறது மில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேயருக்கும்.
14. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேய ருக்கும். வேதபாரகரும், பரிசேயரும் எதற்காக நீண்ட ஜெபம்பண்ணுகிறார்கள்? பார்வைக்காக. வேதபாரகரும், பரிசேயரும் யாருடைய வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள் என்கிறார்? விதவைகளின் வீடுகளை. வேதபாரகரும் பரிசேய ரும் எதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள் என்கிறார்? பார்வைக் காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறதி னிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள் என்கிறார்.
15. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும், பரிசேய ருக்கும். யாரை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும்  பூமியை யும் சுற்றித்திரிகிறீர்கள்? ஒருவனை. அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை என்ன செய்கிறீர்கள்? உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக் குகிறீர்கள்.
16. யாருக்கு ஐயோ என்கிறார்? குருடரான வழிகாட்டிகளுக்கு. குருடரான வழி காட்டிகள் யார்? வேதபாரகரும், பரிசேயரும். எவனாகிலும் எதின்போல் சத்தி யம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்கிறீர்கள்? தேவாலயத்தின் பேரில். எவனாகிலும் எதின்போல் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி யென்றும் சொல்லுகிறீர்கள்? தேவாலயத்தின் பொன்னின்பேரில்.
17. மதிகேடரே, குருடரே என்று யாரைச் சொல்லுகிறார்? வேதபாரகரையும், பரிசேயரையும். பொன் முக்கியமா? இல்லை. பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயம் முக்கியமா? ஆம்.
18. எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் என்னவென்கிறீர் கள்? அதினால் ஒன்றுமில்லையென்கிறீர்கள். எவனாகிலும் பலிபீடத்தின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால் என்னவென்கிறீர்கள்? அவன் கடனாளியென்று சொல்லுகிறீர்கள்.
19. மதிகேடரே, குருடரே என்று யாரைச் சொல்லுகிறார்? வேதபாரகரையும், பரிசேயரையும். காணிக்கை முக்கியமா அல்லது காணிக்கையைப் பரிசுத்த மாக்குகிற பலிபீடம் முக்கியமா? பலிபீடம்.
20. பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் எதின்பேரில் சத்தியம்பண் ணுகிறான்? பலிபீடத்தின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
21. தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் எதின்பேரில் சத்தியம் பண்ணுகிறான்? தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரி லும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
22. வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் எதின்பேரில் சத்தியம்பண்ணு கிறான்? வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காச னத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
23. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும் பரிசேய ருக்கும். நீங்கள் எதில் தசமபாகம் செலுத்துகிறீர்கள் என்கிறார்? ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்துகிறீர்கள் என்கிறார். நியாயப் பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகள் எவை? நீதி, இரக்கம், விசு வாசம். நீங்கள் எவைகளை விட்டுவிட்டீர்கள் என்கிறார்? நியாயப்பிரமாணத் தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள் என்கிறார். எவைகளையும் செய்யவேண் டும்? தசமபாகமும் செலுத்தவேண்டும். எவைகளையும் விடாதிருக்கவேண் டும்? நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதி யையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விடாதிருக்க வேண்டும்.
24. குருடரான வழிகாட்டிகள் என்று யாரைச் சொல்லுகிறார்? வேதபாரகரை யும் பரிசேயரையும். எது இல்லாதபடி வடிகட்டுகிறார்கள்? கொசு இல்லாதபடி. எதை விழுங்கிகறவர்களாயிருக்கிறார்கள்? ஒட்டகத்தை.
25. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும் பரிசேய ருக்கும். எவைகளின் உட்புறத்தை சுத்தமாக்குகிறீர்கள் என்கிறார்? போஜனபாத் திரங்களின் வெளிப்புறத்தை. உட்புறம் எதினால் நிறைந்திருக்கிறது? கொள் ளையினாலும் அநீதத்தினாலும்.
26. பரிசேயனை என்னவென்று அழைக்கிறார்? குருடான பரிசேயனே என்று அழைக்கிறார். போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளை என்ன செய்ய வேண்டும்? அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்க வேண்டும்.
27. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும் பரிசேய ருக்கும். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறவர்கள் யார்? மாயக்காரராகிய வேதபாரகரும், பரிசேயரும். கல்லறைகள் புறம்பே எப்படி காணப்படும்? அலங்காரமாய்க் காணப்படும். கல்லறைகள் உள்ளே எதினால் நிறைந்திருக்கும்? மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத் தத்தினாலும் நிறைந்திருக்கும்.
28. அப்படியே நீங்களும் மனுஷருக்கு என்னவென்று புறம்பே காணப்படுகிறீர் கள்? நீதிமான்கள் என்று. நீங்கள் உள்ளத்திலோ எதினால் நிறைந்திருக்கிறீர் கள்? மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
29. யாருக்கு ஐயோ என்கிறார்? மாயக்காரராகிய வேதபாரகருக்கும் பரிசேய ருக்கும். நீங்கள் யாருடைய கல்லறைகளைக் கட்டினீர்கள்? தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை. நீங்கள் யாருடை சமாதிகளைச் சிங்காரித்தீர்கள்? நீதிமான்க ளின் சமாதிiளை.
30. எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் யாருடைய இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்? தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு.
31. ஆகையால், யாரைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்? தீர்க்கதரிசிக ளைக் கொலை செய்தவர்களுக்கு.
32. நீங்களும் யாருடைய அக்கிரம அளவை நிரப்புங்கள் என்கிறார்? உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள் என்கிறார்.
33. சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே என்று யாரைச் சொல்லுகிறார்? வேதபாரகரையும், பரிசேயரையும். சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! எதற்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? என்கிறார்? நரகாக்கினைக்கு.
34. யாரை உங்களிடத்தில் அனுப்புகிறேன் என்கிறார்? தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன் என்கிறார். அவர்களில் சிலரை என்ன செய்வீர்கள்? சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள்.
35. சிலரை எங்கு எதினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்?  ஜெப ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள். யாரு டைய இரத்தம்முதல் யாருடைய இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப் பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்ப டிச் செய்வீர்கள்? நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும்.
36. இவைகளெல்லாம் யார்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததியின்மேல்.
37. எருசலேம் எப்படிப்பட்டவள்? தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, தன்னி டத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவள். எப்படியெல்லாம் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்க ளுக்கு மனதில்லாமற்போயிற்று என்கிறார்? கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று என்கிறார்.
38. இதோ, உங்கள் வீடு உங்களுக்கு எப்படி விடப்படும்? பாழாக்கிவிடப்படும்.
39. யாருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்? கர்த்த ருடைய நாமத்தினால். எதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.