Saturday, September 26, 2015

லூக்கா – 17

லூக்கா – 17
1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: எது வராமல்போவது கூடாத காரியம்? இடறல்கள். ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு என்ன? ஐயோ!
2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கி லும், எது அவனுக்கு நலமாயிருக்கும்? அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது.
3. யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்? உங்களைக்குறித்து. உன் சகோத ரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனை என்ன செய்? கடிந்து கொள்.  அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு என்ன செய்வாயாக? மன்னிப் பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதர மும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு என்ன செய்வாயாக என்றார்? மன்னிப்பாயாக என்றார்.
5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எதை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்? எங்கள் விசுவாசத்தை.
6. அதற்குக் கர்த்தர்: எந்த அளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்? கடுகுவிதையளவு.
7. உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: என்ன என்று அவனுக் குச் சொல்வானோ? நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று.
8. எதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல் லவா? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின்.
9. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவ னுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
10. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் யார் எதை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்? அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்.
11. பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் வழியாக நடந்துபோனார்? சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்.
12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, யார் எத்தனை பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்றார்கள்? குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப் பேர்.
13. அவர்கள் என்ன என்று சத்தமிட்டார்கள்? இயேசு ஐயரே, எங்களுக்கு இரங் கும் என்று சத்தமிட்டார்கள்.
14. அவர்களை அவர் பார்த்து என்ன சொன்னார்? நீங்கள் போய், ஆசாரியர்க ளுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் என்ன ஆனார்கள்? சுத்தமானார்கள்.
15. அவர்களில் எத்தனை பேர் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தினான்? ஒருவன்.
16. அவன் என்ன செய்தான்? அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான். அவன் யாராயிருந்தான்? சமாரியனா யிருந்தான்.
17. அப்பொழுது இயேசு: யார் பத்துப்பேர் அல்லவா? சுத்தமானவர்கள். யார் எங்கே? மற்ற ஒன்பதுபேர்.
18. யாரை மகிமைப்படுத்துவதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொன்னார்? தேவனை மகிமைப்படுத்துகிற தற்கு.
19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, எது உன்னை இரட்சித்தது என்றார்? உன் விசுவாசம்.
20. எது எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டார்கள்? தேவனு டைய ராஜ்யம். அப்பொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
21. என்ன என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். இதோ, தேவனுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறதே என்றார்? உங்களுக்குள்.
22. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: எதைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை. ஆனாலும் அதை என்ன செய்யமாட்டீர்கள்? காணமாட்டீர்கள்.
23. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், யார் உங்களிடத்தில் சொல் லுவார்கள்? சிலர். நீங்களோ என்ன செய்யுங்கள்? போகாமலும் பின்தொடராம லும் இருங்கள்.
24. எதைப்போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்? மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக் கிறதுபோல.
25. அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, என்ன செய்யப்பட வேண்டியதாயி ருக்கிறது? இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்பட வேண்டியதாயி ருக்கிறது.
26. யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்? நோவாவின் நாட்களில்.
27. நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் என்ன செய்தார் கள்? புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள். எது வந்து எல்லா ரையும் அழித்துப்போட்டது? ஜலப்பிரளயம்.
28. யாருடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்? லோத்தினுடைய நாட் களில். ஜனங்கள் என்ன செய்தார்கள்? புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார் கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே என்ன நடந்தது? வானத்தி லிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப் போட் டது.
30. யார் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்? மனுஷகுமாரன்.
31. அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் என்ன செய்யாமல் இருக்கக்கடவன்? வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக் கடவன். அப்படியே வயலிலிருக்கிறவன் என்ன செய்யாமல் இருக்கக்கடவன்? பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32. யாரை நினைத்துக்கொள்ளுங்கள்? லோத்தின் மனைவியை.
33. எதை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்? தன் ஜீவனை. தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை என்ன செய்வான்? உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
34. அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் என்ன செய்யப்படுவான்? ஏற்றுக்கொள்ளப்படுவான். மற்றவன் என்ன செய்யப்படுவான்? கைவிடப்படுவான்.
35. திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி என்ன செய்யப்படுவாள்? ஏற்றுக்கொள்ளப்படுவாள். மற்றவள் என்ன செய்யப்படுவாள்? கைவிடப்படு வாள்.
36. வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் என்ன செய்யப்படுவான்? ஏற்றுக் கொள்ளப்படுவான். மற்றவன் என்ன செய்யப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கைவிடப்படுவான்.
37. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக என்ன சொன்னார்கள்? எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: எங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்? பிணம் எங்கேயோ அங்கே.

Thursday, September 17, 2015

லூக்கா – 16

லூக்கா – 16
1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: யாருக்கு ஒரு உக்கிராணக் காரன் இருந்தான்? ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு. என்ன என்று எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது? அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக.
2. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ யாராயிருக்கக் கூடாது என்றான்? உக்கிராணக்காரனாயிருக்கக் கூடாது என்றான்.
3. அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் எதிலி ருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே? உக்கிராண விசாரிப்பிலிருந்து. எதுக்கு எனக்குப் பெலனில்லை? கொத்துகிறதற்கு. எதுக்கு வெட்கப்படுகிறேன்? இரக்க வும் வெட்கப்படுகிறேன்.
4. உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்ன என்று எனக் குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்? என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று.
5. தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி கேட்டது என்ன? நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6. அவன் சொன்னது என்ன? நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, என்ன என்று சீக்கிரமாய் எழுது என்றான்? ஐம்பது.
7. பின்பு அவன் வேறொருவனை நோக்கி கேட்டது என்ன? நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன் சொன்னது என்ன? நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, என்ன என்று எழுது என்றான்? எண்பது.
8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் எப்படிச் செய்தான் என்று எஜமான் கண்டான்? புத்தியாய்ச் செய்தான். அவனை என்ன செய்தான்? மெச்சிக்கொண்டான். இவ் விதமாய் யாரைப் பார்க்கிலும் யார் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயி ருக்கிறார்கள்? ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்.
9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, எதினாலே உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்? அநீதியான உலகப்பொருளால்.
10. யார் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்? கொஞ்சத்திலே உண்மையுள்ளவன். யார் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்? கொஞ்சத்திலே அநீதியுள்ளவன்.
11. எதைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்க ளிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? அநீதியான உலகப்பொரு ளைப்பற்றி.
12. யாருடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? வேறொருவனு டைய காரியத்தில்.
13. யார் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது? எந்த ஊழியக்கார னும். ஒருவனைப் பகைத்து மற்றவனை என்ன செய்வான்? சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை என்ன செய்வான்?அசட் டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய யாராலே கூடாது என்றார்? உங்களாலே கூடாது என்றார்.
14. இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய யாரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்? பரிசேயரும்.
15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை யாராகக் காட்டுகிறீர்கள்? நீதிமான்களாக. தேவனோ எதை அறிந்திருக்கிறார்? உங்கள் இருதயங்களை. மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக எப்படிப்பட்டதாயிருக்கிறது? அருவருப்பாயிருக்கிறது.
16. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யார் வரைக்கும் வழங்கிவந்தது? யோவான்வரைக்கும். அதுமுதல் எது சுவிசேஷமாய் அறிவிக் கப்பட்டு வருகிறது? தேவனுடைய ராஜ்யம். யாவரும் எப்படி அதில் பிரவேசிக் கிறார்கள்? பலவந்தமாய்.
17. வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், எது ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்? வானமும் பூமியும்.
18. தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிற வன் என்ன செய்கிறான்? விபசாரஞ்செய்கிறான். புருஷனாலே தள்ளப்பட்ட வளை விவாகம்பண்ணுகிறவனும் என்ன செய்கிறான்? விபசாரஞ்செய்கிறான்.
19. எப்படிப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன். அவன் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தான்? இரத்தாம்பரமும் விலையேறப் பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந் தான்.
20. லாசரு என்னும் பேர்கொண்ட யாரும் இருந்தான்? ஒரு தரித்திரனும் இருந் தான். அவன் எது நிறைந்தவனாய், எங்கே கிடந்தான்? பருக்கள் நிறைந்தவ னாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்தான்.
21. லாசரு எதினாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்? அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே. எவைகள் வந்து அவன் பருக் களை நக்கிற்று? நாய்கள்.
22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, எங்கே கொண்டுபோய் விடப்பட்டான்? தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே. ஐசுவரியவானும் மரித்து என்ன ஆனான்? அடக்கம்பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே யாரைக் கண்டான்? ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவை யும் கண்டான்.
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, யார் தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்? லாசரு. எதில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்? இந்த அக்கினிஜுவாலையில்.
25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் எதை அனுபவித்தாய்? உன் நன்மைகளை. லாசருவும் அப்படியே எதை அநுப வித்தான்? தீமைகளை. அதை என்ன செய்? நினைத்துக்கொள். இப்பொழுது அவன் என்ன செய்யப்படுகிறான்? தேற்றப்படுகிறான். நீயோ என்ன செய்கி றாய்? வேதனைப்படுகிறாய்.
26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து  உங்களிடத்திற்குக் கடந்துபோக வும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்க ளுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே என்ன உண்டாக்கப் பட்டிருக்கிறது என்றான்? பெரும்பிளப்பு.
27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு எத்தனை சகோதர ருண்டு? ஐந்துபேர். அவர்களும் எங்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு,
28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள் ளுகிறேன் என்றான்? வேதனையுள்ள இந்த இடத்துக்கு.
29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு யார் உண்டு? மோசேயும் தீர்க்க தரிசிகளும்.  அவர்களுக்கு அவர்கள் என்ன செய்யட்டும் என்றான்? செவி கொடுக்கட்டும் என்றான்.
30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, எங்கிருந்து ஒரு வன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்? மரித்தோ ரிலிருந்து.
31. அதற்கு அவன்: அவர்கள் யாருக்கு செவிகொடாவிட்டால், மரித்தோரிலி ருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்? மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும்.

Saturday, September 12, 2015

லூக்கா – 15

லூக்கா – 15
1. யார் இயேசுவுடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந் தார்கள்? சகல ஆயக்காரரும் பாவிகளும்.
2. அப்பொழுது முறுமுறுத்தது யார்? பரிசேயரும் வேதபாரகரும். பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து சொன்னது என்ன? இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் எப்படிச் சொன்னார்? உவமையாக.
4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைக ளில் எத்தனை காணாமல் போனால், மற்றவைகளை வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ என்றார்? ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும்.
5. கண்டுபிடித்தபின்பு, அவன் அதை என்ன செய்வான்? சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,
6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப் படுங்கள் என்பான். 
7. அதுபோல, யாரைக்குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் யாரைக்குறித்து பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற் றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம்.
8. அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், என்ன செய்யாமலிருப்பாளோ? விளக் கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக் கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
9. கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து என்ன செய்வாள்? காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டு பிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?
10. அதுபோல யாரிநிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷ முண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? மனந் திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்.
11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு எத்தனை இருந்தார்கள்? இரண்டு குமாரர்.
12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி என்ன கேட்டான்? தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்கு என்ன செய்தான்? தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத் தான்.
13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும்சேர்த்துக்கொண்டு, என்ன செய்தான்? தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, என்ன ஆயிற்று? அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, என்ன செய்தான்?
15. அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனை என்ன செய்தான்? தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16. அப்பொழுது அவன் எதற்கு ஆசையாயிருந்தான்? பன்றிகள் தின்கிற தவிட்டி னாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஆனால் என்ன ஆனது? ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17. அவனுக்கு எது தெளிந்தது? புத்தி. அவன் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு என்ன இருக்கிறது?  பூர்த்தி யான சாப்பாடு இருக்கிறது. நானோ எதினால் சாகிறேன்? புசியினால்.
18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோத மாகவும் உமக்கு முன்பாகவும் என்ன செய்தேன்? பாவஞ்செய்தேன்.
19. இனிமேல் நான் யார் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல? உம் முடைய குமாரன். யாரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்? உம்முடைய கூலிக்கார ரில் ஒருவன். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு என்ன செய்தான்? மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
21. குமாரன் தகப்பனை நோக்கி சொன்னது என்ன? தகப்பனே, பரத்துக்கு விரோ தமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்றுசொன்னான்.
22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி சொன்னது என்ன? நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமா யிருப்போம்.
24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் என்ன செய்தார்கள்? சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
25. அவனுடைய மூத்தகுமாரன் எங்கு இருந்தான்? வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, என்ன கேட்டான்? கீதவாத்தியத் தையும் நடனக்களிப்பையும் கேட்டான்.
26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து என்ன கேட்டான்? இதென்ன என்று விசாரித்தான்.
27. அதற்கு அவன் சொன்னது என்ன? உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியி னாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
28. அப்பொழுது அவன் என்ன செய்தான்? கோபமடைந்து, உள்ளே போக மன தில்லாதிருந்தான். தகப்பனோ என்ன செய்தான்? வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
29. அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதி ருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு எதை கொடுக்கவில்லை? ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்க வில்லை.
30. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே என்ன செய்தீரே என்றான்? கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31. அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ள தெல்லாம் யாருடையதாயிருக்கிறது? உன்னுடையதாயிருக்கிறது.
32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணா மற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் என்ன செய்ய வேண்டும் என்றார்? நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண் டுமே என்று சொன்னான் என்றார்.

Wednesday, September 9, 2015

லூக்கா – 14

லூக்கா – 14

1. ஒரு ஓய்வுநாளிலே யார் வீட்டிலே இயேசு போஜனம் பண்ணம்படிக்குப்  போயிருந்தார்? பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே.
2. அப்பொழுது யார் அவருக்கு முன்பாக இருந்தான்? நீர்க்கோவை வியாதி யுள்ள ஒரு மனுஷன். என்ன செய்வாரோவென்று யார் அவர்மேல் நோக்கமா யிருந்தார்கள்? ஜனங்கள்.
3. இயேசு யாரைப் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்? நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து.
4. அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, என்ன செய்தார்? சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டார். 
5. அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை என்ன செய்வான் என்றார்? உடனே தூக்கிவிடானோ என்றார். 
6. எதற்கு அவர்களால் கூடாமற்போயிற்று? அதற்கு உத்தரவுசொல்ல.
7. எதைப் பார்த்து அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்? விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்து கொண்டதை அவர் பார்த்து.
8. ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் எந்த இடத்தில் உட்காராதே? முதன்மையான இடத்தில். யார் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்? உன்னிலும் கனமுள்ளவன்.
9. அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து என்ன என்று சொல்லுவான்? இவருக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ என்ன செய்ய வேண்டியதாயிருக்கும்? வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
10. நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், எந்த இடத்தில் உட்காரு? தாழ்ந்த இடத்தில். அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து என்ன என்று சொல்லும் போது, உன்னுடனே கூடப்பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்? சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும்.
11. தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் என்ன செய்யப்படுவான் என்றார்? தாழ்த்தப்படுவான். தன்னைத்தான் தாழ்த்துகிறவன் என்ன செய்யப்படுவான் என்றார்? உயர்த்தப்படுவான்.
12. அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, யாரை அழைக்கவேண்டாம் என்றார்? உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்க வேண்டாம் என்றார். அழைத்தால் அவர்களும் உன்னை என்ன செய்வார்கள்? அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு என்ன செய்ததாகும்? பதிலுக்குப் பதில் செய்ததாகும்.
13. நீ விருந்துபண்ணும்போது யாரை அழைப்பாயாக? ஏழைகளையும் ஊனரை யும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
14. எப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்? நீ விருந்துபண்ணும்போது ஏழைக ளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைக்கும்போது. அவர்கள் உனக்கு என்ன செய்மாட்டார்கள்? பதில் செய்யமாட்டார்கள். எதில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்? நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்.
15. அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்ட பொழுது, அவரை நோக்கி: யார் பாக்கியவான் என்றான்? தேவனுடைய ராஜ்யத் தில் போஜனம்பண்ணுகிறவன்.
16. அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, யாரை அழைப்பித்தான்? அநேகரை அழைப்பித்தான்.
17. விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி என்ன சொல்லி அனுப் பினான்? நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கி றது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
18. அவர்களெல்லாரும் என்ன சொல்லத் தொடங்கினார்கள்? போக்குச்சொல் லத் தொடங்கினார்கள். ஒருவன் என்ன சொன்னான்? ஒரு வயலைக்கொண் டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக் கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19. வேறொருவன் என்ன சொன்னான்? ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளு கிறேன் என்றான்.
20. வேறொருவன் என்ன சொன்னான்? பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
21. அந்த ஊழியக்காரன் வந்து, என்ன செய்தான்? இவைகளைத் தன் எஜமானுக் குத் அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்கா ரனை நோக்கி யாரை இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்? நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
22. ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய் தாயிற்று, இன்னும் என்ன இருக்கிறது என்றான்? இடம்.
23. அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி நீ எங்கே என் வீடு நிறையும் படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா என் றான்?  பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய்.
24. யார் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றான் என்று சொன்னார்? அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும்.
25. பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து யார் எனக்குச் சீஷனாயிருக்கமாட் டான் என்றார்? 
26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனை வியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவ னையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
27. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் யாராயி ருக்கமாட்டான்? எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
28. உங்களில் ஒருவன் எதைக் கட்ட மனதாயிருந்தான்? ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்தான். 
29. அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கி றவர்களெல்லாரும்:
30. என்ன என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக்     கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ என்றார்? இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற் போனான் என்று சொல்லி.
31. அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிற போது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதி னாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட் கார்ந்து என்ன செய்யாதிருப்பானோ? ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
32. கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, என்ன செய்வானே? ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவை களைக் கேட்டுக்கொள்வானே. 
33. அப்படியே உங்களில் எவனாகிலும் என்ன செய்யாவிட்டால் அவன் எனக் குச் சீஷனாயிருக்கமாட்டான்? தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத் துவிடாவிட்டால்.
34. எது நல்லதுதான்? உப்பு. எது சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்ப டும்? உப்பு.
35. எது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது? உப்பு. எதை வெளியே கொட்டிப் போடுவார்கள்? உப்பை. கேட்கிறதற்குக் காதுள்ளவன் என்ன செய்யக் கடவன் என்றார்? கேட்கக்கடவன் என்றார்.

Saturday, September 5, 2015

லூக்கா – 13

லூக்கா – 13
1. யார் சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந் திருந்தான்? பிலாத்து. அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை யாருக்கு அறிவித்தார்கள்? இயேசுவுக்கு.
2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? அந்தக் கலிலேய ருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பா மற்போனால் எல்லாரும் என்ன ஆவார்கள்? அப்படியே கெட்டுப்போவீர்கள்.
4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து எத்தனைபேரைக் கொன்றது? பதினெட்டுப் பேரைக் கொன்றது. எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர் கள் யாராயிருந்தார்கள் என்று நினைக்கிறீர்களோ? குற்றவாளிகளாயிருந்தார் கள் என்று.
5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பா மற்போனால் எல்லாரும் என்ன ஆவீர்கள் என்றார்? அப்படியே கெட்டுப்போவீர் கள் என்றார்.
6. அப்பொழுது அவர் என்ன சொன்னார்? ஒரு உவமையையும் சொன்னார். ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் எதை நட்டிருந்தான்? ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான். அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது என்ன கண்டான்? ஒன்றுங் காணவில்லை. 
7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, எத்தனை வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்? மூன்று வருஷமாய். எதை காணவில்லை? ஒன்றையுங் காணவில்லை. இதை என்ன செய்? வெட்டிப் போடு. இது எதையும் ஏன் கெடுக்கிறது என்றான்? நிலத்தையும்.
8. அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் என்ன செய் வேன் என்றான்? இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்.
9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை என்ன செய்யலாம் என்று சொன்னான் என்றார்? வெட்டிப்போடலாம்.
10. ஒரு ஓய்வுநாளில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
11. அப்பொழுது யார் அங்கேயிருந்தாள்? பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்ப டுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ. அவள் எப்படிப்பட்டவளாய் இருந் தாள்? எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
12. இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து என்ன சொன்னார்? ஸ்தி ரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொன்னார்.
13. அவள்மேல் எதை வைத்தார்? தமது கைகளை. உடனே அவள் என்ன செய் தாள்? நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
14. ஏன் ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்தான்? இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால். ஜெப ஆலயத்தலைவன் ஜனங்களை நோக்கி சொன்னது என்ன? வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்ய லாகாது என்றான்.
15. கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலி ருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், என்ன செய்கிறதில்லையா? அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? 
16. யாரை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில் லையா என்றார்? இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை.
17. அவர் அப்படிச் சொன்னபோது, யார் வெட்கப்பட்டார்கள்? அவரை விரோதித் திருந்த அனைவரும். ஜனங்களெல்லாரும் எதைக்குறித்து சந்தோஷப்பட்டார் கள்? அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.
18. அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன் என்றார்?
19. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து என்னவாயிற்று? பெரிய மரமா யிற்று. எவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்? ஆகாயத்துப் பறவைகள்.
20. மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன் என்றார்?
21. அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவ தும் புளிக்கும்வரைக்கும் எதிலே அடக்கிவைத்தாள் என்றார்? மூன்றுபடிமா விலே.
22. அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள் தோறும் கிராமங்கள்தோறும் என்ன செய்துகொண்டு போனார்? உபதேசம் பண்ணிக்கொண்டு.
23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யார் சிலபேர்தானோ என்று கேட்டான்? இரட்சிக்கப்படுகிறவர்கள். அதற்கு அவர்:
24. எதின்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்? இடுக்கமான வாசல் வழியாய். அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் என்ன ஆகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? அவர்களாலே கூடாமற்போகும்.
25. வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று என்ன செய்வீர்கள்? ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டு மென்று சொல்லிக் கதவைத் தட்டுவீர்கள். அப்போது அவர் பிரதியுத்தரமாக சொல்லுவது என்ன? நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26. அப்பொழுது நீங்கள் என்ன என்று சொல்லுவீர்கள்? உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27. ஆனாலும் அவர் என்ன என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகி றேன்? நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
28. நீங்கள் யாரைக் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்? ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய  ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்க ளையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது.
29. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, எதில் பந்தியிருப்பார்கள்? தேவனுடைய ராஜ்யத்தில்.
30. அப்பொழுது முந்தினோர் யாராவார்கள் என்றார்? பிந்தினோராவார்கள். பிந்தினோர் யாராவார்கள் என்றார்? முந்தினோராவார்கள்.
31. அந்த நாளிலே சில பரிசேயர் இயேசுவிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டு என்ன செய்யும்? போய்விடும். யார் உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்? ஏரோது.
32. அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் என்ன செய்து மூன்றாம் நாளில் நிறைவடைவேன்? பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி.
33. இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? நடமாடவேண்டும். எங்கே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லை? எருசலேமுக்குப் புறம்பே. என்று நான் சொன்னதாக நீங்கள் போய் யாருக்குச் சொல்லுங்கள்? அந்த நரிக்கு.
34. எருசலேமே, எருசலேமே, யாரைக் கொலைசெய்கிறவளே? தீர்க்கதரிசி களை. யாரைக் கல்லெறிகிறவளே? உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களை. எந்தவண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த் துக்கொள்ள மனதாயிருந்தேன்? கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக. உங்களுக்கோ என்ன இல்லா மற்போயிற்று? மனதில்லாமற்போயிற்று.
35. இதோ, எது உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்? உங்கள் வீடு. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் யார் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றார்? ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.

Saturday, August 29, 2015

லூக்கா – 12

லூக்கா – 12
1. அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் எப்படி கூடிவந்திருந்தார்கள்? ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருந்தார்கள். இயேசு முதலா வது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் யாரைக்குறித்து எச்சரிக்கையாயி ருங்கள் என்றார்? மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து.
2. வெளியாக்கப்படாத எதுவுமில்லை? மறைபொருளுமில்லை. அறியப்படாத எதுவுமில்லை? இரகசியமுமில்லை. 
3. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது எதிலே கேட்கப்படும்? வெளிச்சத்திலே. நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது எதின் மேல் கூறப்படும்? வீடுகளின்மேல்.
4. யாராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்? என்சிநேகிதராகிய உங்களுக்கு. யாருக்குப் பயப்படாதிருங்கள்? சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிக மாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
5. நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கி றேன்: யாருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? கொலை செய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள்.
6. இரண்டு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்? ஐந்து. அவைகளில் ஒன்றாகிலும் யாரால் மறக்கப்படுகிறதில்லை? தேவனால் மறக்கப்படுவதில்லை.
7. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் என்ன செய்யப்பட்டிருக்கிறது? எண் ணப்பட்டிருக்கிறது. ஆகையால் என்ன செய்யாதிருங்கள்? பயப்படாதிருங்கள், எவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்? அநேகம் அடைக்கலான் குருவிக ளைப்பார்க்கிலும்.
8. அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: யாரை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்? மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை.
9. யார் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்? மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன்.
10. யாருக்கு அது அவனுக்கு மன்னிக்கப்படும்? எவனாகிலும் மனுஷகுமார னுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது. யாருக்கு விரோதமாகத் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை? பரிசுத்தஆவிக்கு விரோதமாய்.
11. அன்றியும், யாருக்கு முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசு வோம் என்றும் கவலைப்படாதிருங்கள்? ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக.
12. நீங்கள் பேசவேண்டியவைகiளா யார் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப் பார் என்றார்? பரிசுத்த ஆவியானவர்.
13. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என்ன வென்று என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண் டான்? ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி.
14. அதற்கு அவர்: மனுஷனே, என்னை யாராக வைத்தவன் யார் என்றார்? உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன்.
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: எதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? பொருளாசையைக்குறித்து. ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திர ளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு எது அல்ல என்றார்? ஜீவன் அல்ல.
16. அல்லாமலும், எதை அவர்களுக்குச் சொன்னார்? ஒரு உவமையை. யாரு டைய நிலம் நன்றாய் விளைந்தது? ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம்.
17. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? எதைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே? என் தானியங்களை.
18. நான் ஒன்று செய்வேன், எவைகளை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைப்பேன்? என் களஞ்சியங்களை.
19. பின்பு: யாருக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது? ஆத்துமாவுக்காக. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து,  பூரிப்பாயிரு என்று யாரோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்? என் ஆத்துமாவோடே.
20. தேவனோ அவனை நோக்கி: எப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதா கும் என்றார்? மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரி யிலே எடுத்துக் கொள்ளப்படும்பொழுது.
21. யார் இப்படியே இருக்கிறான் என்றார்? தேவனிடத்தில் ஐசுவரியவானாயிரா மல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன்.
22. பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், எதற்காகக் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? என் னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.
23. ஆகாரத்தைப்பார்க்கிலும் எது விசேஷித்தவையாயிருக்கிறது? ஜீவன்.  உடையைப்பார்க்கிலும் எது விசேஷித்தவையாயிருக்கிறது? சரீரம்.
24. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் என்ன செய்கிறதில்லை? விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை. அவைகளுக்குப் பண்டசாலையு மில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் யார் பிழைப்பூட்டுகிறார்? தேவன். எவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்? பறவைகளைப்பார்க்கிலும்.
25. எதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழுத்தைக்  கூட்டு வான்? கவலைப்படுகிறதினால்.
26. எதுமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? மிகவும் அற்பமான காரியமுதலாய்.
27. காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவை கள் என்ன செய்கிறதில்லை? உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. என் றாலும் யார் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? சாலொமோன்.
28. இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, எதுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்து வித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு.
29. ஆகையால், என்ன என்று, நீங்கள்கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங் கள்? என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று. 
30. இவைகளையெல்லாம் யார் நாடித் தேடுகிறார்கள்? உலகத்தார். இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று யார் அறிந்திருக்கிறார்? உங்கள் பிதாவா னவர்.
31. எதையே தேடுங்கள்? தேவனுடைய ராஜ்யத்தையே. அப்பொழுது இவைக ளெல்லாம் உங்களுக்கு என்ன செய்யப்படும்? கூடக் கொடுக்கப்படும்.
32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு எதைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்? ராஜ்யத்தை.
33. உங்களுக்கு உள்ளவைகளை என்ன செய்யுங்கள்? விற்றுப்பிச்சை கொடுங் கள். எதைப் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள்? பழமை யாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும். அங்கே யார் அணுகுகிறதுமில்லை? திருடன். எது கெடுக்கிறதுமில்லை? பூச்சி. 
34. எங்கே உங்கள் இருதயமும் இருக்கும்? உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கி றதோ அங்கே.
35. உங்கள் அரைகள் எப்படி இருக்க வேண்டும்? கட்டப்பட்டதாக இருக்க   வேண் டும். உங்கள் விளக்குகள் எப்படி இருக்க வேண்டும்? எரிகிறதாக இருக்க வேண் டும்.
36. யாருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷ ருக்கு ஒப்பாகவும் இருங்கள்? தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குக் காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக இருங்கள்.
37. எப்படிப்பட்ட ஊழியக்காரரே பாக்கியவான்கள்? எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் எப்படி அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன்? அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச் செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்.
38. எப்படி இருக்கிற ஊழியக்காரர் பாக்கியவான்கள்? அவர் இரண்டாம் ஜாமத்தி லாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே விழித்திருக்கக் கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
39. திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று யாருக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக் கிறீர்கள்? வீட்டெஜமானுக்கு.
40. அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் யார் வருவார்? மனுஷகுமாரன். ஆகையால் நீங்களும் எப்படியிருங்கள் என்றார்? ஆயத்தமாயிருங்கள்என்றார்.
41. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி என்னவென்று கேட்டான்?ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
42. அதற்குக் கர்த்தர்: யாருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமு முள்ள விசாரணைக்காரன் யாவன்? பணிவிடைக்காரருக்கு.
43. யார் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்கா ரன் பாக்கியவான்? எஜமான்.
44. எதின்மேல் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும்.
45. அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்றுதனக்குள்ளே சொல்லிக்கொண்டு, என்ன செய்யத் தலைப்பட்டால்? வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப் பட்டால்.
46. அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனு டைய எஜமான் வந்து, அவனுக்கு என்ன செய்வான்? அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
47. எப்படி இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்? தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன்.
48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, என்ன செய்யப்படுவான்? சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்? எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். மனுஷர் எவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்? மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
49. பூமியின்மேல் எதைப்போட வந்தேன்? அக்கினியைப் போடவந்தேன். அது  இப்பொழுதே என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்? பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50. ஆகிலும் என்ன உண்டு? நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு. அது முடியுமளவும் என்ன செய்யப்படுகிறேன்? எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
51. நான் பூமியிலே எதை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ?  சமா தானத்தை. சமாதானத்தையல்ல, எதை உண்டாக்கவந்தேன் என்று உங்களுக் குச் சொல்லுகிறேன்? பிரிவினையையே.
52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? ஐந்துபேர். இரண்டுபேருக்கு விரோதமாய் எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? மூன்றுபேர். மூன்றுபேருக்கு விரோதமாய் எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? இரண்டுபேர்.
53. தகப்பன் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பான்? மகன். மகன் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பான்? தகப்பன். தாய் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மகள். மகள் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? தாய். மாமி யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மருமகள். மருமகள் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மாமி. 
54. பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே எதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்? மேகம் எழும்பு கிறதை.
55. எதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாக்குமென்று சொல்லுகிறீர் கள், அந்தப்படியுமாகும்? தென்றல் அடிக்கிறதை.
56. மாயக்காரரே, எதை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே?  பூமியின்  தோற் றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க. எதை நிதானியாமற் போகிறதென்ன? இந்தக் காலத்தையோ.
57. எது இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? நியாயம்.
58. உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோ கிறபோது, என்ன செய்? வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையா கும்படி பிரயாசப்படு. இல்லாவிட்டால், அவன் உன்னை என்ன செய்வான்? நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான். நியாயாதிபதி உன்னை யாரி டத்தில் ஒப்புக்கொடுப்பான்? சேவகனிடத்தில். சேவகன் உன்னை என்ன செய் வான்? சிறைச்சாலையில் போடுவான்.
59. நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், என்ன செய்ய மாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? அவ்விடத்திலிருந்து புறப்பட மாட்டாய்.

Friday, August 28, 2015

லூக்கா – 11

லூக்கா – 11
1. இயேசு ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி என்ன சொன்னான்? ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றான்.
2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது யாரை நோக்கி ஜெபம்பண்ண வேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவை நோக்கி. யாருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக? பிதாவுடைய நாமம். யாருடைய ராஜ்யம் வருவ தாக? பிதாவுடைய ராஜ்யம். பிதாவுடைய சித்தம் எங்கே செய்யப்படுகிறது போல எங்கேயும் செய்யப்படுவதாக? பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
3. எதை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்? எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்.
4. எவைகளை எங்களுக்கு மன்னியும்? எங்கள் பாவங்களை. நாங்களும் யாருக்கு மன்னிக்கிறோமே? எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும். எங்களை எதற்குட்படப்பண்ணாமல், எதினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்? சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். 
5. பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகித னாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய் என்ன என்று கேட்டுக் கொண்டான்? சிநேகிதனே, 
6. என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங் களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
7. வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடே கூடப் படுத்திருக்கிறார்கள்,  நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். 
8. பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், எதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையா னதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது.
9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு என்ன செய்யப்படும்? கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது என்ன செய்வீர்கள்? கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு என்ன செய்யப்படும்? திறக்கப்படும்.
10. ஏனென்றால், யார் பெற்றுக்கொள்ளுகிறான்? கேட்கிறவன் எவனும். யார் கண்டடைகிறான்? தேடுகிறவன். யாருக்குத் திறக்கப்படும்? தட்டுகிறவனுக்கு.
11. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்கு எதைக் கொடுப்பானா? கல்லை. மீனைக் கேட்டால் மீனுக்குப்பதி லாய் எதைக் கொடுப்பானா? பாம்பை.
12. அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்கு எதைக் கொடுப்பானா?  தேளை.
13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் எதைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்? பரிசுத்த ஆவியை.
14. பின்பு அவர் எதைத் துரத்தினார்? ஊமையாயிருந்த ஒரு பிசாசை. பிசாசு புறப்பட்டுப்போனபின்பு பேசியது யார்? ஊமையன். யார் ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள்.
15. அவர்களில் சிலர்: இவன் யாரைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்? பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு.
16. வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி எதைக் காட்டவேண்டுமென்று அவரி டத்தில் கேட்டார்கள்? வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை.
17. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: எந்த ராஜ்யம் பாழாய்ப்போம் என்றார்? தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக் கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம் என்றார். எந்த வீடு விழுந்துபோம் என்றார்? தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்து போம் என்றார்.
18. சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் எது எப்படி நிலைநிற்கும்? சாத்தானின் ராஜ்யம். இப்படியிருக்க, யாரைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே? பெயெல்செபூலைக்கொண்டு.
19. நான் யாராலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? பெயெல்செபூலினாலே. ஆகையால், அவர்களே உங்களை என்ன செய்கிறவர்களாயிருப்பார்கள்? நியாயந்தீர்க்கிறவர்களாயி ருப்பார்கள்.
20. நான் எதினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே? தேவனுடைய விரலினாலே.
21. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, எது பத்திரப் பட்டிருக்கும்? அவனுடைய பொருள்.
22. அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், என்ன செய்வான்? அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக் கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
23. என்னோடே இராதவன் எனக்கு யாராயிருக்கிறான்? விரோதியாயிருக்கி றான். என்னோடே சேர்க்காதவன் என்ன செய்கிறான்? சிதறடிக்கிறான்.
24. அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்க ளில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல் எங்கு திரும்பிப் போவேன் என்று சொல்லும்? நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப் போவேன் என்று சொல்லும்.
25. அதில் வரும்போது, அது என்ன செய்யப்பட்டிருக்கக் காணும்? பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் காணும். 
26. திரும்பிப்போய், என்ன செய்யும்? தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவி களைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும். அப்பொ ழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை எப்படியிருக்கும் என்றார்? அதிக கேடுள்ளதாயிருக்கும்.
27. அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி என்னவென்று சத்தமிட்டுச் சொன்னாள்? உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட் டுச் சொன்னாள்.
28. அதற்கு அவர்: அப்படியானாலும், யார் அதிக பாக்கியவான்கள் என்றார்? தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
29. ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர், இந்தச் சந்ததியார் யாராயிருக்கிறார்கள் என்றார்? பொல்லாதவர்களாயிருக்கிறார்கள். எதைத் தேடுகிறார்கள்? அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யாரின் அடை யாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவ தில்லை? யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்க ளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
30. யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷ குமாரனும் யாருக்கு அடையாளமாய் இருப்பார்? இந்தச் சந்ததிக்கு அடையாள மாயிருப்பார்.
31. தென்தேசத்து ராஜஸ்திரீ எதைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து  வந்தாள்? சாலொமோனுடைய ஞானத்தை கேட்க. இதோ, சாலொமோனிலும் பெரியவர் எங்கே இருக்கிறார்? இங்கே. ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, என்ன செய்வாள்? இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள்.
32. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு யார் மனந்திரும்பினார்கள்? நினிவே பட்டணத்தார். இதோ, யோனாவிலும் பெரியவர் எங்கே இருக்கிறார்? இங்கே. ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோ டெழுந்து நின்று, என்ன செய்வார்கள்? இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
33. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழே யாவது வைக்காமல், என்ன செய்வான்? உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
34. கண்ணானது என்னவாயிருக்கிறது? சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் எப்படியிருக்கும்? வெளிச்சமா யிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் எப்படியிருக் கும்? இருளாயிருக்கும்.
35. ஆகையால் எதுக்கு எச்சரிக்கையாயிரு? உன்னிலுள்ள வெளிச்சம் இருளா காதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 
36. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயி ருந்தால், எதைப்போல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்? ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல.
37. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் இயேசுவை என்னவென்று வேண்டிக்கொண்டான்? தன்னுடனே கூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் போய் என்ன செய்தார்? பந்தியிருந்தார்.
38. அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் எதைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப் பட்டான்? கைகழுவாமலிருந்ததை.
39. கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் எதைச் சுத்தமாக்குகிறீர் கள்? போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள். உங்கள் உள்ளமோ எவைகளினால் நிறைந்திருக்கிறது? கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும்.
40. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் எதையும் உண்டாக்கவில் லையோ? உட்புறத்தையும்.
41. உங்களுக்கு உண்டானவைகளில் என்ன கொடுங்கள்? பிச்சை கொடுங்கள். அப்பொழுது எது உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்? சகலமும்.
42. பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும்  ன்ன கொடுக்கிறீர்கள்?   தசமபாகம்.  எவைகளையும் விட்டுவிடுகிறீர்கள்? நியாயத்தையும் தேவ அன்பையும். இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் என்ன செய்ய வேண்டும்? விடாதிருக்க வேண்டும்.
43. பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. ஜெபஆலயங்களில், சந்தைகளில் எவை களை விரும்புகிறீர்கள்? ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களை யும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.
44. மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. எதைப் போல் இருக்கிறீர்கள்? மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப் போலிருக்கிறீர் கள். அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் எப்படியிருக்கிறது? தெரியாதிருக்கிறது. 
45. அப்பொழுது யார் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதி னால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்? நியாயசாஸ்திரிகளில் ஒருவன்.
46. அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு? ஐயோ. சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ என்ன செய்கிறீர்கள்? உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.
47. உங்களுக்கு? ஐயோ. யாருக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்? உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்கு.
48. ஆகையால் நீங்கள் எதுக்கு சாட்சியிடுகிறீர்கள்? உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள். எப்படி யென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்கு என்ன செய்கிறீர்கள்? கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
49. ஆதலால் தேவஞானமானது சொல்லுவது என்ன? நான் தீர்க்கதரிசிகளை யும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
50. ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்ற முதற் கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததி யினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகி றது.
51. நிச்சயமாகவே யாரிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல் லுகிறேன்? இந்தச் சந்ததியினிடத்தில்.
52. நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு? ஐயோ. எதை எடுத்துக் கொண்டீர்கள்? அறிவாகிய திறவுகோலை. நீங்களும் என்ன செய்கிறதில்லை? உட்பிரவேசிக் கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் என்ன செய்கிறீர்கள் என்றார்? தடைபண்ணுகிறீர்கள் என்றார். 
53. இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேய ரும் எதற்காக
54. அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார் கள்? அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக் கவும் அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கி னார்கள்.