Friday, June 26, 2015

மாற்கு – 13

மாற்கு – 13
1. அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி சொன்னது என்ன? போதகரே, இதோ, இந்தக் கல்லு கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
2. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கி றாயே, அது என்ன ஆகும் என்றார்? ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
3. பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல்  உட்கார்ந்தி ருக்கையில், அவரிடத்தில் தனித்து வந்தது யார்? பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்தார்கள்.
4. அவர்கள் எதை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்? இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடை யாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக எதற்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
6. ஏன் அப்படிச் சொன்னார்? ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக் கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
7. எப்போது கலங்காதேயுங்கள் என்றார்? யுத்தங்களையும் யுத்தங்களின் செய் திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள். எவைகள் சம்பவிக்க வேண்டியதே? யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் சம்பவிக்கவேண்டி யதே. ஆனாலும் எது உடனே வராது? முடிவு.
8. எவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்? ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங் களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேத னைகளுக்கு ஆரம்பம்.
9. நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏன்? ஏனெனில் உங்களை ஆலோச னைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக் கப்படுவீர்கள்;  என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
10. சகல ஜாதிகளுக்கும் எது முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்? சுவிசேஷம்.
11. அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்ப டாமலும் சிந்தியாமலுமிருக்க வேண்டும். அந்த நாழிகையிலே எதைப் பேச வேண்டும்? உங்களுக்கு எது அருள்செய்யப்படுமோ அதையே பேசவேண்டும். ஏன்? ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.
12. அன்றியும் யார் யாரை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்? சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார் கள். பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களை என்ன செய்வார்கள்? கொலைசெய்வார்கள்.
13. எதினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்? என் நாமத்தினிமித்தம். யார் இரட்சிக்கப்படுவான்? முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படு வான்.
14. மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து எந்தத் தீர்க்கதரிசி  சொல்லியி ருக்கிறான்? தானியேல் தீர்க்கதரிசி. வாசிக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? சிந்திக்க வேண்டும். அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை  நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் எங்கே ஓடிப்போகக்கடவர்கள்? மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
15. வீட்டின்மேல் இருக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? தன்வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளேபோகாம லும் இருக்க வேண்டும். 
16. வயலில் இருக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? தன் வஸ்திரத்தை எடுப்ப தற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்க வேண்டும். 
17. அந்நாட்களிலே யாருக்கு ஐயோ? கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்க ளுக்கும் ஐயோ!
18. நீங்கள் ஓடிப்போவது எந்தக் காலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்? மாரிகாலத்திலே.
19. ஏன்? (அந்நாட்களில் என்ன உண்டாயிருக்கும்?) தேவன் உலகத்தைச் சிருஷ் டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாதது மான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.
20. கர்த்தர் என்ன செய்யாவிட்டால் ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை? அந்நாட்களைக் குறைத்திராவிட்டால் ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை. யார் நிமித்தம் அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்? தாம் தெரிந்து கொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
21. அப்பொழுது: கிறிஸ்து எங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்? இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கி றார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.
22. ஏன்? கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமா னால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங் களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
23. நீங்கன் எப்படியிருக்க வேண்டும்? எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இதோ, எதை முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்? எல்லாவற்றையும்.
24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் என்னவாகும்? அந்தகாரப்படும். சந்திரன் என்ன செய்யும்? ஒளியைக் கொடாதிருக்கும்.
25. வானத்தின் நட்சத்திரங்கள் என்னவாகும்? விழும். வானங்களிலுள்ள சத்து வங்களும் என்ன செய்யப்படும்? அசைக்கப்படும்.
26. அப்பொழுது யார் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின் மேல் வருகிறதைக் காண்பார்கள்? மனுஷகுமாரன்.
27. அப்பொழுது அவர் யாரை அனுப்பி: தாம் தெரிந்துகொண்டவர்களைப்  பூமி யின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்? தம்முடைய தூதரை அனுப்பி.
28. எதினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்? அத்திமரத்தினால். அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, எது சமீபமாயிற்று என்று அறிவீர்கள்? வசந்தகாலம்.
29. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் எங்கே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்? சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
30. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே எது ஒழிந்துபோகாதென்று, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததி.
31. வானமும் பூமியும் என்னவாகும்? ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ?   ஒழிந்துபோவதில்லை.
32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் யார் ஒருவர்தவிர மற்றொருவ னும் அறியான்? பிதா. வேறு யாரெல்லாம் அறியார்கள்? பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். வேறு யாரும் அறியார்? குமாரனும் அறியார்.
33. அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் என்ன செய்யுங்கள்? எச்சரிக்கை யாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
34. ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, யாருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான்? தன் ஊழியக்காரருக்கு.
35. அப்படியே நீங்களும் என்ன செய்யுங்கள்? விழித்திருங்கள். ஏன்? ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத் திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
36. நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களை என்னவென்று  கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்? தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாத படிக்கு விழித்திருங்ள்.
37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை யாருக்கெல்லாம் சொல்லுகிறேன்? எல்லாருக்கும் சொல்லுகிறேன். என்னவென்று சொல்லுகிறேன்? விழித்திருங் கள்.

Monday, June 22, 2015

மாற்கு – 12

மாற்கு – 12
1. பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் எதை உண்டாக்கினான்? ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக் கினான். அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, என்ன செய்தான்? தோட்டக்காரருக்கு அதைக் குத்தகை யாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
2. தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, எப்பொழுது அவர்களிடத்தில் ஒரு ஊழியக்கா ரனை அனுப்பினான்? பருவகாலத்திலே.
3. அவர்கள் அவனைப் பிடித்து, என்ன செய்தார்கள்? அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.
4. பின்பு என்ன செய்தான்? வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப் பினான். அவர்கள் அவனை என்ன செய்தார்கள்? அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
5. மறுபடியும் என்ன செய்தான்? வேறொருவனை அனுப்பினான். அவனை அவர்கள் என்ன செய்தார்கள்? கொலைசெய்தார்கள். மறுபடியும் என்ன செய் தான்? வேறு அநேகரையும் அனுப்பினான். அதற்கு அவர்கள் என்ன செய்தார் கள்? அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
6. கடைசியாக யாரை அனுப்பினான்? அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.
7. தோட்டக்காரரோ இவனைக்குறித்து என்ன சொல்லிக்கொண்டார்கள்? இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்த ரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
8. அவனை என்ன செய்தார்கள்? அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத் தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.
9. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்க ளுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
10. எந்தக்கல் தலைக்கு மூலைக்கல் ஆயிற்று? வீடு கட்டுகிறவர்கள் ஆகா தென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
11. அது யாராலே ஆயிற்று? கர்த்தராலே ஆயிற்று. அது நம்முடைய கண்க ளுக்கு எப்படியிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக் கவில்லையா என்றார்? ஆச்சரியமாயிருக்கிறது.
12. இந்த உவமையை யாரைக்குறிததுச் குறித்துச்சொன்னாரென்று அவர்கள் அறிந்தார்கள்? தங்களைக் குறித்துச் சொன்னாரென்று அறிந்தார்கள். அறிந்து என்ன செய்தார்கள்? அவரைப் பிடிக்க வகைதேடினார்கள். ஆனாலும் யாருக் குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்? ஜனத்துக்கு.
13. அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, யாரை அவரிடத்தில் அனுப்பினார்கள்? பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை.
14. அவர்கள் வந்து: போதகரே, நீர் யாரென்று அறிந்திருக்கிறோம்? சத்தியமுள் ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். நீர் எப்படி தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர்? முகதாட்சணியம் இல்லாதவராய். யாருக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? இராயனுக்கு. நாம் என்ன செய்யலாம் என்று கேட்டார் கள்? கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ?
15. எதை அவர் அறிந்தார்? அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்தார். அவர்க ளுடைய மாயத்தை அறிந்து அவர் என்ன சொன்னார்? நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒருபணத்தை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்.
16. அவர்கள் எதைக் கொண்டுவந்தார்கள்? ஒரு பணத்தை. அப்பொழுது அவர்: எது யாருடையது என்று கேட்டார்? இந்த சுரூபமும் மேலெழுத்தும். அவர்கள் என்ன சொன்னார்கள்? இராயனுடையது என்றார்கள்.
17. அதற்கு இயேசு: என்ன சொன்னார்? இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் எனறார். அவர்கள் அவரைக் குறித்து என்னவானார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
18. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்? சதுசேயர். அவரி டத்தில் வந்தது யார்? உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர். 
19. போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன்மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை என்ன செய்ய வேண்டும்? விவாகம் பண்ண வேண்டும். விவாகம் பண்ணி என்ன செய்ய வேண்டும்? தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும். என்று; யார் எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே என்றார்கள்? மோசே.
20. இப்படியிருக்க, எத்தனை பேர் சகோதரர் இருந்தார்கள்? ஏழுபேர். யார் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்? மூத்த வன்.
21. இரண்டாம் சகோதரன் என்ன செய்தான்? அவளை விவாகம்பண்ணி, அவ னும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் என்ன செய்தான்? அப்படியேயானான்.
22. ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, என்ன செய்தார்கள்? சந்தானமில்லா மல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் என்னஆனாள்? இறந்துபோனாள்.
23. ஆகையால், எதில் அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில்  எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? உயிர்த்தெழுதலில். ஏழுபேரும் அவளை என்னவாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்? மனைவியாக.
24. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் எதினாலே தப்பான எண் ணங் கொள்ளுகிறீர்கள்? வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமை யையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்.
25. மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது எவைகள் இல்லை? கொள்வ னையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் யாரைப்போல் இருப்பார்கள்? பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்.
26. மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நீங்கள் எதை வாசிக்கவில்லையா என்றார்? நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா?
27. அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், யாருக்குத் தேவனாயிருக்கிறார்? ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார். ஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்? மிகவும் தப்பான.
28. அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்தான்? வேதபாரகரில் ஒருவன். அவரிடத்தில் வந்து என்ன கேட்டான்? கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
29. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது என்றார்? இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை எது என்றார்? உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவைக ளிலும் எது வேறொன்றுமில்லை என்றார்? பெரிய கற்பனை.
32. அதற்கு வேதபாரகன் என்ன சொன்னான்? சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை.
33. இது எவைகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்? முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப்பலத்தோ டும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
34. அவன் விவேகமாய் உத்தரசொன்னதை இயேசு கண்டு நீ எதுக்குத் தூரமா னவனல்ல என்றார்? தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன் பின்பு ஒருவரும் அவரிடத்தில் எதுக்குத் துணியவில்லை? யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.
35. இயேசு தேவாலயத்திலே உபதேசம் பண்ணுகையில், அவர் யாரென்று எப்படிச் சொல்லுகிறீர்கள் என்றார்? கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேத பாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?
36. நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே? உம்முடைய சத்துருக்களை.
37. தாவீதுதானே அவரை யாரென்று சொல்லியிருக்க அவனுக்கு அவர் குமார னாயிருப்பது எப்படி என்றார்? ஆண்டவரென்று சொல்லியிருக்க. அநேக ஜனங் கள் அவருடைய உபதேசத்தை எப்படிக் கேட்டார்கள்? விருப்பத்தோடே கேட் டார்கள்.
38. பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி யாரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்றார்? நீண்ட அங்கிகளைத் தரித்துக் கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,
39. ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்து களில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
40. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்டஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் எதை அடைவார் கள் என்றார்? அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
41. இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, எதைப் பார்த்துக் கொண்டிருந்தார்? ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அநேகர் எவ்வளவு போட்டார் கள்? அதிகமாய்ப் போட்டார்கள்.
42. ஏழையான ஒரு விதவையும் வந்து, எதைப் போட்டாள்? ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.
43. அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து சொன்னது என்ன? காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
44. அவர்களெல்லாரும் எதிலிருந்து எடுத்துப் போட்டார்கள்? தங்கள் பரிபூரணத் திலிருந்து எடுத்துப்போட்டார்கள். இவளோ எதை எடுத்துப் போட்டுவிட்டாள் என்றார்? தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

Friday, June 5, 2015

மாற்கு – 11

மாற்கு – 11
1. அவர்கள் எதுக்குச் சமீபமாய்ச் சேர்ந்தார்கள்? எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்தார்கள். ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் யாரை நோக்கினார்? தம்முடைய சீஷரில் இரண்டு பேரை நோக்கினார். 
2. எங்கே போங்கள் என்றார்? உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள் என்றார். அதில் பிரவேசித்தவுடனே, எதைக் காண்பீர்கள்? மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண் பீர்கள். அதை என்ன செய்யுங்கள்? அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
3. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால் என்னவென்று சொல்லி அனுப்பினார்? இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4. அவர்கள் போய், என்ன செய்தார்கள்? வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
5. அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர் என்ன கேட்டார்கள்? நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.
6. அதற்கு சீஷர்கள் என்ன சொன்னார்கள்? இயேசு கற்பித்தபடியே அவர்க ளுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களைப் போகவிட்டார்கள்.
7. அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து என்ன செய் தார்கள்? அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள். இயேசு என்ன செய்தார்? அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
8. அநேகர் என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார் கள். வேறு சிலர் என்ன செய்தார்கள்? மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
9. முன்நடப்பாரும் பின்நடப்பாரும் என்னவென்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்? ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
10. கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
11. அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, என்ன செய்தார்? தேவாலயத் தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தார். சாயங்காலமானபோது, இயேசு என்ன செய்தார்? பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.
12. மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்கு என்ன உண்டாயிற்று? பசியுண்டாயிற்று.
13. அப்பொழுது இயேசு எதைக் கண்டார்? இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டார். அதில் என்ன பார்க்க வந்தார்? ஏதாகிலும் அகப்படுமோ எனறு பார்க்கவந்தார். அதில் எதைத் தவிர வேறொன்றும் காணவில்லை? அத்திப்பழக் காலமாயிராதபடியால்,  அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
14. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து என்ன சொன்னார்? இதுமுதல் ஒருக்கா லும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார். அதை யார் கேட்டார்கள்? அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.
15. அவர்கள் எங்கே வந்தார்கள்? எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவால யத்தில் பிரவேசித்து, என்ன செய்தார்? ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்தார்.
16. ஒருவனும் தேவாலயத்தின் வழியாக எதைக் கொண்டுபோக விடவில்லை? யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவில்லை.
17. என்னுடைய வீடு என்ன என்று எழுதியிருக்கவில்லையா? எல்லா ஜனங்க ளுக்கும் ஜெபவீடு என்னப்படும். நீங்களோ அதை என்னவாக்கினீர்கள் என்று உபதேசித்தார்? கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
18. அதைக் கேட்டது யார்? வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டார்கள். அதைக் கேட்டு என்ன செய்தார்கள்? அவரைக் கொலைசெய்ய வகைதேடினார் கள். அவர்கள் எதற்குப் பயந்திருந்தார்கள்? ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்;.
19. சாயங்காலமானபோது இயேசு என்ன செய்தார்? நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்.
20. மறு நாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, எதைக் கண்டார்கள்? அந்த அத்திமரம்  வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக்  கண்டார் கள்.
21. பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி என்ன சொன்னான்? ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
22. இயேசு அவர்களை நோக்கி யாரிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார்? தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
23. எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து என்ன செய்தால், அவன் சொன்னப டியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? நீ பெயர்ந்து,சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்ன படியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன்.
24. ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது என்னவென்று விசுவாசியுங்கள்? எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு என்ன ஆகும்? உண்டாகும். 
25. நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொ ருகுறை உண்டாயிருக்குமானால், அதை என்ன செய்யுங்கள்? பரலோகத்திலி ருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
26. நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், என்ன ஆகும் என்றார்? பரலோகத்திலி ருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.
27. அவர்கள் மறுபடியும் எங்கே வந்தார்கள்? எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், அவரிடத்தில் வந்தது யார்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்தார்கள்.
28. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து என்ன கேட்டார்கள்? நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைக ளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட் டார்கள்.
29. இயேசு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொ ழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
30. எது தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார்? யோவான் கொடுத்த ஸ்நானம்.
31. அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், என்னவென்று கேட்பார்? பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்.
32. மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், என்ன செய்ய வேண் டியதாயிருக்கும்? ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும். எல்லாரும் யோவானை என்னவென்று சொல்லுகிறார்களே? மெய்யாகத் தீர்க்கதரிசி யென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனை பண்ணி னார்கள்.
33. இயேசுவுக்கு பிரதியுத்தரமாக அவர்கள் சொன்னது என்ன? எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு என்ன சொன்னார்? நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல் லேன் என்றார்.

Thursday, June 4, 2015

மாற்கு – 10

மாற்கு – 10
1. அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் எங்கு வந்தார்? யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுப டியும் என்ன செய்தார்கள்? அவரிடத்தில் கூடிவந்தார்கள். இயேசு என்ன செய் தார்? அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போத கம்பண்ணினார்.
2. அப்பொழுது பரிசேயர், அவரை என்ன செய்ய வேண்டுமென்று வந்தார்கள்? சோதிக்கவேண்டுமென்று வந்தார்கள். பரிசேயர் அவரிடத்தில் வந்து என்ன கேட்டார்கள்? புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
3. இயேசு பிரதியுத்தரமாக என்ன கேட்டார்? மோசே உங்களுக்குக் கட்டளை யிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
4. அதற்கு அவர்கள்: எதை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்? தள்ளுதற்சீட்டை எழுதிக் கொடுத்து.
5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:எதினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான் என்றார்? உங்கள் இருதயகடினத்தினிமித்தம்.
6. ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை எப்படி உண்டாக்கினார்? ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
7. இதினிமித்தம் புருஷனானவன் யாரை விட்டுத் தன் மனைவியோடே இசைந் திருப்பான்? தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்.
8. அவர்கள் இருவரும் எப்படியிருப்பார்கள்? ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ் விதமாய் அவர்கள் இருவராயிராமல் எப்படியிருக்கிறார்கள்? ஒரே மாம்சமாயி ருக்கிறார்கள்.
9. ஆகையால், தேவன் இணைத்ததை யார் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்? மனுஷன்.
10. பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து என்ன செய்தார்கள்? மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
11. அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொ ருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் என்ன செய் கிறவனாயிருப்பான் என்றார்? விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்றார்.
12. மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம் பண்ணினால், அவள் என்ன செய்கிறவளாயிருப்பாள் என்றார்? விபசாரஞ்செய் கிறவளாயிருப்பாள் என்றார்.
13. அப்பொழுது, யாரை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண் டுவந்தார்கள்? சிறு பிள்ளைகளை. கொண்டுவந்தவர்களை யார் அதட்டினார் கள்? சீஷர்கள்.
14. இயேசு அதைக் கண்டு, என்ன அடைந்தார்? விசனமடைந்தார். யார் என்னி டத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் என்றார்? சிறு பிள்ளைகள். யாரைத் தடைபண்ணாதிருங்கள் என்றார்? சிறுபிள்ளைகளை. தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுடையது என்றார்? சிறு பிள்ளைகளுடையது என்றார்.
15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் எதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்? தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை.
16. இயேசு சிறுபிள்ளைகளை என்ன செய்தார்? அவர்களை அணைத்துக் கொண்டு, அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை  ஆசீர்வதித்தார்.
17. பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, என்ன செய்தான்? அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
18. அதற்கு இயேசு: நீ யாரை நல்லவன் என்று சொல்வானேன்? என்னை (இயே சுவை). யார் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே? தேவன் ஒருவர் தவிர.
19. என்னென்ன கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்? விபசாரஞ் செய் யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
20. அதற்கு அவன் என்ன சொன்னான்? போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான்.
21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் என்ன குறைவு உண்டு என்றார்? நீ போய், உனக்கு உண்டானவைகளையெல் லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது எதிலே உனக்குப் பொக்கி ஷம் உண்டாயிருக்கும்? பரலோகத்திலே. பின்பு எதை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்? சிலுவையை.
22. அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, என்ன செய்தான்? மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.
23. அப்பொழுது இயேசு சுற்றிப் பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரிய முள்ளவர்கள் எதில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்? தேவனுடைய ராஜ்யத்தில்.
24. சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து என்ன ஆனார்கள்? ஆச்சரி யப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்? ஐசுவரியத்தின்மேல்.
25. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், எது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்? ஒட்டகம்.
26. அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: என்னவென்று தங்களுக் குள்ளே சொல்லிக்கொண்டார்கள்? அப்படியானால் யார் இரட்சிக்கப்படக் கூடும்.
27. இயேசு அவர்களைப் பார்த்து: யாரால் கூடாதுதான் என்றார்? மனுஷரால் இது கூடாததுதான் என்றார். யாரால் கூடாததல்ல என்றார்? தேவனால் இது கூடாததல்ல என்றார். யாராலே எல்லாம் கூடும் என்றார்? தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
28. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி என்னவென்று சொல்லத்தொடங்கி னான்? இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
29. அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித் தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்ப னையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங் களையாவது விட்டவன் எவனும்,
30. இப்பொழுது இம்மையிலே, எவைகளை அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? துன்பங்களோடேகூட நூறத்தனை யாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31. ஆகிலும் முந்தினோர் அநேகர் யாராய் இருப்பார்கள்? பிந்தினோராய் இருப்பார்கள். பிந்தினோர் அநேகர் யாராய் இருப்பார்கள்? முந்தினோராய் இருப்பார்கள்.
32. பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு யாருக்கு முன்னே நடந்துபோனார்? சீஷர்களுக்கு முன்னே நடந்துபோனார். சீஷர்கள் எப்படிப் போனார்கள்? அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, எவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்? தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை.
33. இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் யாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவார்? பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை எதற்குள்ளாகத் தீர்த்து யாரிடத் தில் ஒப்புக்கொடுப்பார்கள்? மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத் தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
34. அவர்கள் அவரை என்ன செய்வார்கள்? பரியாசம் பண்ணி, அவரை வாரி னால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள். ஆகிலும் எப்போது அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்? மூன்றாம் நாளிலே.
35. அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரி டத்தில் வந்து என்ன சொன்னார்கள்? போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப் போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார் கள்.
36. அவர் அவர்களை நோக்கி என்ன கேட்டார்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
37. அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களுக்கு என்ன அருள் செய்ய வேண்டும் என்றார்கள்? எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒரு வன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய் யவேண்டும் என்றார்கள்.
38. இயேசு அவர்களை நோக்கி: எது உங்களுக்குத் தெரியவில்லை என்றார்? நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றார். எதை உங்களால் பெறக் கூடுமா என்றார்? நான் குடிக்கும் பாத்திரத் தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்க ளால் கூடுமா என்றார்.
39. அதற்கு அவர்கள்: என்ன சொன்னார்கள்? கூடும் என்றார்கள். இயேசு அவர் களை நோக்கி: எதிலே குடிப்பீர்கள் என்றார்? நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங் கள் குடிப்பீர்கள் என்றார். எதைப் பெறுவீர்கள் என்றார்? நான் பெறும் ஸ்நானத் தையும் நீங்கள் பெறுவீர்கள் என்றார்.
40. எதை அருளுவது என் காரியமல்ல என்றார்? ஆனாலும் என் வலதுபாரிசத் திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி  எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
41. மற்றப் பத்துப் பேரும் அதைக்கேட்டு, என்ன ஆனார்கள்? யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
42. அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: எதை நீங்கள் அறிந்தி ருக்கிறீர்கள் என்றார்? புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவன் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந் திருக்கிறீர்கள் என்றார்.
43. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவ னாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு யாராயிருக்கக்கடவன்? பணி விடைக்காரனாயிருக்கக்கடவன்.
44. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் யாராயிருக்கக்கடவன்? ஊழியக்காரனாயிருக்கக் கடவன்.
45. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், எதற்காக வந்தார் என்றார்? ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்மு டைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
46. பின்பு அவர்கள் எங்கே வந்தார்கள்? எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவ ருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகிற போது, யார் வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்? திமே யுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
47. அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு என்ன வென்று கூப்பிடத் தொடங்கினான்? இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
48. என்னவென்று அநேகர் அவனை அதட்டினார்கள்? அவன் பேசாதிருக்கும்படி. அவனோ: என்ன என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்? தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்.
49. இயேசு நின்று, என்ன சொன்னார்? அவனை அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து என்ன என்று சொன்னார்கள்? திடன் கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
50. உடனே அவன் என்ன செய்தான்? தன் மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.
51. இயேசு அவனை நோக்கி என்ன கேட்டார்? நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்த குருடன் என்ன சொன் னான்? ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
52. இயேசு அவனை நோக்கி சொன்னது என்ன? நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் என்ன ஆனான்? பார்வையடைந் தான். அவன் பார்வையடைந்து என்ன செய்தான்? வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.