Saturday, August 29, 2015

லூக்கா – 12

லூக்கா – 12
1. அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் எப்படி கூடிவந்திருந்தார்கள்? ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருந்தார்கள். இயேசு முதலா வது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் யாரைக்குறித்து எச்சரிக்கையாயி ருங்கள் என்றார்? மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து.
2. வெளியாக்கப்படாத எதுவுமில்லை? மறைபொருளுமில்லை. அறியப்படாத எதுவுமில்லை? இரகசியமுமில்லை. 
3. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது எதிலே கேட்கப்படும்? வெளிச்சத்திலே. நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது எதின் மேல் கூறப்படும்? வீடுகளின்மேல்.
4. யாராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்? என்சிநேகிதராகிய உங்களுக்கு. யாருக்குப் பயப்படாதிருங்கள்? சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிக மாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
5. நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கி றேன்: யாருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? கொலை செய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள்.
6. இரண்டு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்? ஐந்து. அவைகளில் ஒன்றாகிலும் யாரால் மறக்கப்படுகிறதில்லை? தேவனால் மறக்கப்படுவதில்லை.
7. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் என்ன செய்யப்பட்டிருக்கிறது? எண் ணப்பட்டிருக்கிறது. ஆகையால் என்ன செய்யாதிருங்கள்? பயப்படாதிருங்கள், எவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்? அநேகம் அடைக்கலான் குருவிக ளைப்பார்க்கிலும்.
8. அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: யாரை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்? மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை.
9. யார் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்? மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன்.
10. யாருக்கு அது அவனுக்கு மன்னிக்கப்படும்? எவனாகிலும் மனுஷகுமார னுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது. யாருக்கு விரோதமாகத் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை? பரிசுத்தஆவிக்கு விரோதமாய்.
11. அன்றியும், யாருக்கு முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசு வோம் என்றும் கவலைப்படாதிருங்கள்? ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக.
12. நீங்கள் பேசவேண்டியவைகiளா யார் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப் பார் என்றார்? பரிசுத்த ஆவியானவர்.
13. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என்ன வென்று என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண் டான்? ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி.
14. அதற்கு அவர்: மனுஷனே, என்னை யாராக வைத்தவன் யார் என்றார்? உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன்.
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: எதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? பொருளாசையைக்குறித்து. ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திர ளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு எது அல்ல என்றார்? ஜீவன் அல்ல.
16. அல்லாமலும், எதை அவர்களுக்குச் சொன்னார்? ஒரு உவமையை. யாரு டைய நிலம் நன்றாய் விளைந்தது? ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம்.
17. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? எதைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே? என் தானியங்களை.
18. நான் ஒன்று செய்வேன், எவைகளை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைப்பேன்? என் களஞ்சியங்களை.
19. பின்பு: யாருக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது? ஆத்துமாவுக்காக. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து,  பூரிப்பாயிரு என்று யாரோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்? என் ஆத்துமாவோடே.
20. தேவனோ அவனை நோக்கி: எப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதா கும் என்றார்? மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரி யிலே எடுத்துக் கொள்ளப்படும்பொழுது.
21. யார் இப்படியே இருக்கிறான் என்றார்? தேவனிடத்தில் ஐசுவரியவானாயிரா மல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன்.
22. பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், எதற்காகக் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? என் னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.
23. ஆகாரத்தைப்பார்க்கிலும் எது விசேஷித்தவையாயிருக்கிறது? ஜீவன்.  உடையைப்பார்க்கிலும் எது விசேஷித்தவையாயிருக்கிறது? சரீரம்.
24. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் என்ன செய்கிறதில்லை? விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை. அவைகளுக்குப் பண்டசாலையு மில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் யார் பிழைப்பூட்டுகிறார்? தேவன். எவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்? பறவைகளைப்பார்க்கிலும்.
25. எதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழுத்தைக்  கூட்டு வான்? கவலைப்படுகிறதினால்.
26. எதுமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? மிகவும் அற்பமான காரியமுதலாய்.
27. காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவை கள் என்ன செய்கிறதில்லை? உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. என் றாலும் யார் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? சாலொமோன்.
28. இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, எதுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்து வித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு.
29. ஆகையால், என்ன என்று, நீங்கள்கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங் கள்? என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று. 
30. இவைகளையெல்லாம் யார் நாடித் தேடுகிறார்கள்? உலகத்தார். இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று யார் அறிந்திருக்கிறார்? உங்கள் பிதாவா னவர்.
31. எதையே தேடுங்கள்? தேவனுடைய ராஜ்யத்தையே. அப்பொழுது இவைக ளெல்லாம் உங்களுக்கு என்ன செய்யப்படும்? கூடக் கொடுக்கப்படும்.
32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு எதைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்? ராஜ்யத்தை.
33. உங்களுக்கு உள்ளவைகளை என்ன செய்யுங்கள்? விற்றுப்பிச்சை கொடுங் கள். எதைப் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள்? பழமை யாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும். அங்கே யார் அணுகுகிறதுமில்லை? திருடன். எது கெடுக்கிறதுமில்லை? பூச்சி. 
34. எங்கே உங்கள் இருதயமும் இருக்கும்? உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கி றதோ அங்கே.
35. உங்கள் அரைகள் எப்படி இருக்க வேண்டும்? கட்டப்பட்டதாக இருக்க   வேண் டும். உங்கள் விளக்குகள் எப்படி இருக்க வேண்டும்? எரிகிறதாக இருக்க வேண் டும்.
36. யாருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷ ருக்கு ஒப்பாகவும் இருங்கள்? தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குக் காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக இருங்கள்.
37. எப்படிப்பட்ட ஊழியக்காரரே பாக்கியவான்கள்? எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் எப்படி அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன்? அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச் செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்.
38. எப்படி இருக்கிற ஊழியக்காரர் பாக்கியவான்கள்? அவர் இரண்டாம் ஜாமத்தி லாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே விழித்திருக்கக் கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
39. திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று யாருக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக் கிறீர்கள்? வீட்டெஜமானுக்கு.
40. அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் யார் வருவார்? மனுஷகுமாரன். ஆகையால் நீங்களும் எப்படியிருங்கள் என்றார்? ஆயத்தமாயிருங்கள்என்றார்.
41. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி என்னவென்று கேட்டான்?ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
42. அதற்குக் கர்த்தர்: யாருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமு முள்ள விசாரணைக்காரன் யாவன்? பணிவிடைக்காரருக்கு.
43. யார் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்கா ரன் பாக்கியவான்? எஜமான்.
44. எதின்மேல் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும்.
45. அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்றுதனக்குள்ளே சொல்லிக்கொண்டு, என்ன செய்யத் தலைப்பட்டால்? வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப் பட்டால்.
46. அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனு டைய எஜமான் வந்து, அவனுக்கு என்ன செய்வான்? அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
47. எப்படி இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்? தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன்.
48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, என்ன செய்யப்படுவான்? சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்? எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். மனுஷர் எவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்? மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
49. பூமியின்மேல் எதைப்போட வந்தேன்? அக்கினியைப் போடவந்தேன். அது  இப்பொழுதே என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்? பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50. ஆகிலும் என்ன உண்டு? நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு. அது முடியுமளவும் என்ன செய்யப்படுகிறேன்? எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
51. நான் பூமியிலே எதை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ?  சமா தானத்தை. சமாதானத்தையல்ல, எதை உண்டாக்கவந்தேன் என்று உங்களுக் குச் சொல்லுகிறேன்? பிரிவினையையே.
52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? ஐந்துபேர். இரண்டுபேருக்கு விரோதமாய் எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? மூன்றுபேர். மூன்றுபேருக்கு விரோதமாய் எத்தனைபேர் பிரிந்திருப்பார்கள்? இரண்டுபேர்.
53. தகப்பன் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பான்? மகன். மகன் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பான்? தகப்பன். தாய் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மகள். மகள் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? தாய். மாமி யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மருமகள். மருமகள் யாருக்கு விரோதமாய்ப் பிரிந்திருப்பாள்? மாமி. 
54. பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே எதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்? மேகம் எழும்பு கிறதை.
55. எதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாக்குமென்று சொல்லுகிறீர் கள், அந்தப்படியுமாகும்? தென்றல் அடிக்கிறதை.
56. மாயக்காரரே, எதை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே?  பூமியின்  தோற் றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க. எதை நிதானியாமற் போகிறதென்ன? இந்தக் காலத்தையோ.
57. எது இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? நியாயம்.
58. உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோ கிறபோது, என்ன செய்? வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையா கும்படி பிரயாசப்படு. இல்லாவிட்டால், அவன் உன்னை என்ன செய்வான்? நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான். நியாயாதிபதி உன்னை யாரி டத்தில் ஒப்புக்கொடுப்பான்? சேவகனிடத்தில். சேவகன் உன்னை என்ன செய் வான்? சிறைச்சாலையில் போடுவான்.
59. நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், என்ன செய்ய மாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? அவ்விடத்திலிருந்து புறப்பட மாட்டாய்.

Friday, August 28, 2015

லூக்கா – 11

லூக்கா – 11
1. இயேசு ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி என்ன சொன்னான்? ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றான்.
2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது யாரை நோக்கி ஜெபம்பண்ண வேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவை நோக்கி. யாருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக? பிதாவுடைய நாமம். யாருடைய ராஜ்யம் வருவ தாக? பிதாவுடைய ராஜ்யம். பிதாவுடைய சித்தம் எங்கே செய்யப்படுகிறது போல எங்கேயும் செய்யப்படுவதாக? பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
3. எதை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்? எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்.
4. எவைகளை எங்களுக்கு மன்னியும்? எங்கள் பாவங்களை. நாங்களும் யாருக்கு மன்னிக்கிறோமே? எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும். எங்களை எதற்குட்படப்பண்ணாமல், எதினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்? சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். 
5. பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகித னாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய் என்ன என்று கேட்டுக் கொண்டான்? சிநேகிதனே, 
6. என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங் களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
7. வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடே கூடப் படுத்திருக்கிறார்கள்,  நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். 
8. பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், எதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையா னதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது.
9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு என்ன செய்யப்படும்? கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது என்ன செய்வீர்கள்? கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு என்ன செய்யப்படும்? திறக்கப்படும்.
10. ஏனென்றால், யார் பெற்றுக்கொள்ளுகிறான்? கேட்கிறவன் எவனும். யார் கண்டடைகிறான்? தேடுகிறவன். யாருக்குத் திறக்கப்படும்? தட்டுகிறவனுக்கு.
11. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்கு எதைக் கொடுப்பானா? கல்லை. மீனைக் கேட்டால் மீனுக்குப்பதி லாய் எதைக் கொடுப்பானா? பாம்பை.
12. அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்கு எதைக் கொடுப்பானா?  தேளை.
13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் எதைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்? பரிசுத்த ஆவியை.
14. பின்பு அவர் எதைத் துரத்தினார்? ஊமையாயிருந்த ஒரு பிசாசை. பிசாசு புறப்பட்டுப்போனபின்பு பேசியது யார்? ஊமையன். யார் ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள்.
15. அவர்களில் சிலர்: இவன் யாரைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்? பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு.
16. வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி எதைக் காட்டவேண்டுமென்று அவரி டத்தில் கேட்டார்கள்? வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை.
17. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: எந்த ராஜ்யம் பாழாய்ப்போம் என்றார்? தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக் கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம் என்றார். எந்த வீடு விழுந்துபோம் என்றார்? தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்து போம் என்றார்.
18. சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் எது எப்படி நிலைநிற்கும்? சாத்தானின் ராஜ்யம். இப்படியிருக்க, யாரைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே? பெயெல்செபூலைக்கொண்டு.
19. நான் யாராலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? பெயெல்செபூலினாலே. ஆகையால், அவர்களே உங்களை என்ன செய்கிறவர்களாயிருப்பார்கள்? நியாயந்தீர்க்கிறவர்களாயி ருப்பார்கள்.
20. நான் எதினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே? தேவனுடைய விரலினாலே.
21. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, எது பத்திரப் பட்டிருக்கும்? அவனுடைய பொருள்.
22. அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், என்ன செய்வான்? அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக் கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
23. என்னோடே இராதவன் எனக்கு யாராயிருக்கிறான்? விரோதியாயிருக்கி றான். என்னோடே சேர்க்காதவன் என்ன செய்கிறான்? சிதறடிக்கிறான்.
24. அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்க ளில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல் எங்கு திரும்பிப் போவேன் என்று சொல்லும்? நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப் போவேன் என்று சொல்லும்.
25. அதில் வரும்போது, அது என்ன செய்யப்பட்டிருக்கக் காணும்? பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் காணும். 
26. திரும்பிப்போய், என்ன செய்யும்? தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவி களைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும். அப்பொ ழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை எப்படியிருக்கும் என்றார்? அதிக கேடுள்ளதாயிருக்கும்.
27. அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி என்னவென்று சத்தமிட்டுச் சொன்னாள்? உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட் டுச் சொன்னாள்.
28. அதற்கு அவர்: அப்படியானாலும், யார் அதிக பாக்கியவான்கள் என்றார்? தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
29. ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர், இந்தச் சந்ததியார் யாராயிருக்கிறார்கள் என்றார்? பொல்லாதவர்களாயிருக்கிறார்கள். எதைத் தேடுகிறார்கள்? அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யாரின் அடை யாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவ தில்லை? யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்க ளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
30. யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷ குமாரனும் யாருக்கு அடையாளமாய் இருப்பார்? இந்தச் சந்ததிக்கு அடையாள மாயிருப்பார்.
31. தென்தேசத்து ராஜஸ்திரீ எதைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து  வந்தாள்? சாலொமோனுடைய ஞானத்தை கேட்க. இதோ, சாலொமோனிலும் பெரியவர் எங்கே இருக்கிறார்? இங்கே. ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, என்ன செய்வாள்? இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள்.
32. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு யார் மனந்திரும்பினார்கள்? நினிவே பட்டணத்தார். இதோ, யோனாவிலும் பெரியவர் எங்கே இருக்கிறார்? இங்கே. ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோ டெழுந்து நின்று, என்ன செய்வார்கள்? இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
33. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழே யாவது வைக்காமல், என்ன செய்வான்? உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
34. கண்ணானது என்னவாயிருக்கிறது? சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் எப்படியிருக்கும்? வெளிச்சமா யிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் எப்படியிருக் கும்? இருளாயிருக்கும்.
35. ஆகையால் எதுக்கு எச்சரிக்கையாயிரு? உன்னிலுள்ள வெளிச்சம் இருளா காதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 
36. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயி ருந்தால், எதைப்போல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்? ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல.
37. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் இயேசுவை என்னவென்று வேண்டிக்கொண்டான்? தன்னுடனே கூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். அவர் போய் என்ன செய்தார்? பந்தியிருந்தார்.
38. அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் எதைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப் பட்டான்? கைகழுவாமலிருந்ததை.
39. கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் எதைச் சுத்தமாக்குகிறீர் கள்? போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள். உங்கள் உள்ளமோ எவைகளினால் நிறைந்திருக்கிறது? கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும்.
40. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் எதையும் உண்டாக்கவில் லையோ? உட்புறத்தையும்.
41. உங்களுக்கு உண்டானவைகளில் என்ன கொடுங்கள்? பிச்சை கொடுங்கள். அப்பொழுது எது உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்? சகலமும்.
42. பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும்  ன்ன கொடுக்கிறீர்கள்?   தசமபாகம்.  எவைகளையும் விட்டுவிடுகிறீர்கள்? நியாயத்தையும் தேவ அன்பையும். இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் என்ன செய்ய வேண்டும்? விடாதிருக்க வேண்டும்.
43. பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. ஜெபஆலயங்களில், சந்தைகளில் எவை களை விரும்புகிறீர்கள்? ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களை யும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.
44. மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு? ஐயோ. எதைப் போல் இருக்கிறீர்கள்? மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப் போலிருக்கிறீர் கள். அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் எப்படியிருக்கிறது? தெரியாதிருக்கிறது. 
45. அப்பொழுது யார் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதி னால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்? நியாயசாஸ்திரிகளில் ஒருவன்.
46. அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு? ஐயோ. சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ என்ன செய்கிறீர்கள்? உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.
47. உங்களுக்கு? ஐயோ. யாருக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்? உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்கு.
48. ஆகையால் நீங்கள் எதுக்கு சாட்சியிடுகிறீர்கள்? உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள். எப்படி யென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்கு என்ன செய்கிறீர்கள்? கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
49. ஆதலால் தேவஞானமானது சொல்லுவது என்ன? நான் தீர்க்கதரிசிகளை யும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
50. ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்ற முதற் கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததி யினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகி றது.
51. நிச்சயமாகவே யாரிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல் லுகிறேன்? இந்தச் சந்ததியினிடத்தில்.
52. நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு? ஐயோ. எதை எடுத்துக் கொண்டீர்கள்? அறிவாகிய திறவுகோலை. நீங்களும் என்ன செய்கிறதில்லை? உட்பிரவேசிக் கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் என்ன செய்கிறீர்கள் என்றார்? தடைபண்ணுகிறீர்கள் என்றார். 
53. இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேய ரும் எதற்காக
54. அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார் கள்? அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக் கவும் அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கி னார்கள்.

Friday, August 14, 2015

லூக்கா – 10

லூக்கா – 10
1. இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எத்தனை பேரை நியமித்தார்? எழுபது பேரை நியமித்தார். தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே எத்தனை எத்தனை பேராக அனுப்பினார்? இரண் டிரண்டு பேராக அனுப்பினார்.
2. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: எது மிகுதி என்றார்? அறுப்பு மிகுதி. யார் கொஞ்சம் என்றார்? வேலையாட்களோ கொஞ்சம். ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு யாரை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங் கள்? வேலையாட்களை.
3. புறப்பட்டுப்போங்கள்; எவைகளை எவைகளுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்? ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக் குள்ளே.
4. எவைகளையெல்லாம் கொண்டுபோக வேண்டாம்? பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம். வழியிலே ஒருவரையும் என்ன செய்ய வேண்டாம்? வினவவும் வேண்டாம்.
5. ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: என்னவென்று முதலாவது சொல்லுங் கள்? இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல் லுங்கள்.
6. சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், என்ன ஆகும்? நீங்கள் கூறின சமாதா னம் அவனிடத்தில் தங்கும். சமாதான பாத்திரன் அங்கே இல்லாதிருந்தால் என்ன ஆகும்? சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, என்ன செய்யுங்கள்? அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள். வேலையாள் எதற்குப் பாத்திரனா யிருக்கிறான்? தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு என்ன செய்யாதிருங்கள்? போகாதிருங்கள்.
8. ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நீங்கள் எவைகளை புசியுங்கள்? அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசியுங்கள். 
9. யாரை சொஸ்தமாக்குங்கள்? அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்த மாக்குங்கள். எது உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்? தேவனுடைய ராஜ்யம்.
10. யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நீங்கள் என்ன செய்யுங்கள்? அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11. எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோத மாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக் குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல் லுங்கள்.
12. அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே எந்த நாட் டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? சோதோம் நாட்டிற்கு.
13. கோராசீன் பட்டணமே, உனக்கு என்ன? உனக்கு ஐயோ. பெத்சாயிதா பட்டணமே, உனக்கு என்ன? உனக்கு ஐயோ. உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொ ழுதே என்ன செய்திருப்பார்கள்? இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந் திரும்பியிருப்பார்கள்.
14. நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், எவைகளுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும? தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகு வாயிருக்கும்.
15. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ என்ன செய்யப்படுவாய்? நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். 
16. இயேசு சீஷரை நோக்கி: உங்களுக்குச்  செவிகொடுக்கிறவன் யாருக்குச் செவிகொடுக்கிறான் என்றார்? எனக்குச் செவிகொடுக்கிறான். உங்களை அசட்டைபண்ணுகிறவன் யாரை அசட்டை பண்ணுகிறான் என்றார்? என்னை அசட்டை பண்ணுகிறான். என்னை அசட்டைபண்ணுகிறவன் யாரை அசட்டை பண்ணுகிறான் என்றார்? என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து என்ன சொன் னார்கள்? ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
18. அவர்களை இயேசு நோக்கி: யார் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்? சாத்தான்.
19. இயேசு உங்களுக்கு என்ன அதிகாரங்கொடுக்கிறேன் என்றார்? இதோ, சர்ப் பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமை யையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன். ஒன்றும் உங்களை என்ன செய்ய மாட்டாது? சேதப்படுத்தமாட்டாது.
20. ஆகிலும் நீங்கள் எதற்கு சந்தோஷப்படாமல் எதற்கு சந்தோஷப்படுங்கள் என்றார்? ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படா மல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்ப டுங்கள் என்றார்.
21. அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து சொன்னது என்ன? பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக் கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
22. சகலமும் யாரால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது? என் பிதாவி னால். பிதா தவிர வேறொருவனும் யார் இன்னாரென்று அறியான்? குமாரன். குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கி றாரோ அவனுந்தவிர, வேறொருவனும் யார் இன்னாரென்று அறியான் என்றார்? பிதா.
23. பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி எவைகள் பாக்கியமுள்ளவைகள் என்றார்? நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
24. அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காண வும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், எப்படிப் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? காணாமலும் கேளாமலும் போனார்கள்.
25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும் படி: போதகரே, எதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்? நித்திய ஜீவனை.
26. அதற்கு இயேசு சொன்னது என்ன? நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியி ருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27. நியாயசாஸ்திரி பிரதியுத்தரமாக சொன்னது என்ன? உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக் கிறது என்றான்.
28. இயேசு அவனை நோக்கி எப்படி உத்தரவு சொன்னாய் என்றார்? நிதானமாய் உத்தரவு சொன்னாய் என்றார். எப்பொழுது பிழைப்பாய் என்றார்? உன் தேவனா கிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத் தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூரும் பொழுது பிழைப்பாய் என்றார்.
29. அவன் தன்னை யார் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்? நீதிமான்.
30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எங்கே போகை யில் கள்ளர் கையில் அகப்பட்டான்? எரிகோவுக்கு. அவர்கள் அவன் வஸ்திரங் களை உரிந்துகொண்டு, அவனை என்ன செய்தார்கள்? அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, என்ன செய்தான்? பக்கமாய் விலகிப்போனான். 
32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, என்ன செய்தான்? பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, என்ன செய்தான்? மனதுருகி, 
34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35. மறுநாளிலே தான் புறப்படும்போது என்ன செய்தான்? இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிக மாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்?
37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி சொன்னது என்ன? நீயும் போய் அந்தப்படியே செய் என்றான்.
38. பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் எங்கே பிரவேசித்தார்? ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே யார் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டாள்? மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ.
39. அவளுக்கு யார் இருந்தாள்? மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் என்ன செய்தாள்? இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
40. மார்த்தாள் எதினால் வருத்தமடைந்தாள்? பற்பல வேலைகளைச் செய்வ தில் மிகவும் வருத்தமடைந்தாள். மார்த்தாள் இயேசுவிடத்தில் வந்து சொன் னது என்ன? ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ எவைகளைக்குறித்து கவலைப்பட்டுக் கலங்குகிறாய் என்றார்? அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய் என்றார்.
42. தேவையானது ஒன்றே, மரியாள் எதைத் தெரிந்துகொண்டாள் என்றார்? தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.


Thursday, August 13, 2015

லூக்கா – 9

லூக்கா – 9
1. அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, அவர்களுக்கு எதற்காக வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்? சகல பிசாசுகளையும் துரத் தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்.
2. எதைக்குறித்து பிரசங்கிக்க அவர்களை அனுப்பினார்? தேவனுடைய ராஜ்யத் தைக்குறித்துப் பிரசங்கிக்க அனுப்பினார். யாரைச் சொஸ்தமாக்க அவர்களை அனுப்பினார்? பிணியாளிகளை.
3. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி எதை எடுத்துக்கொண்டு போகவேண் டாம் என்றார்? வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.
4. எங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள் என்றார்? எந்த வீட்டிலே பிரவேசிக்கி றீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
5. உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரை விட்டு நீங்கள் புறப்படும்போது, என்ன செய்யுங்கள் என்றார்? அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
6. அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, என்ன செய்தார்கள்? எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
7. அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது எதனால் கலக்கமடைந்தான்? அவரால் செய்யப்பட்டயாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
8. சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர்  பூர்வகாலத்துத்  தீர்க்கதரி சிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்தான். 
9. யாரை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்? யோவானை.
10. அப்போஸ்தலர் திரும்பிவந்து, எவைகளை அவருக்கு விவரித்துச் சொன் னார்கள்? தாங்கள் செய்த யாவையும். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக் கொண்டு, எங்கே ஏன் போனார்? தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
11. யார் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்? ஜனங்கள். அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, எதைக்குறித்து அவர்களுடனே பேசினார்? தேவனு டைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசினார். யாரைச் சொஸ்தப்படுத் தினார்?  சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தி னார்.
12. சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி யாரை அனுப்பிவிட வேண்டும் என்றார்கள்? ஜனங்களை. ஏன்? நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும் படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13. அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு எதைக் கொடுங்கள் என்றார்? போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள் சொன்னது என்ன? எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள். 
14. ஏறக்குறைய எவ்வளவு புருஷர் இருந்தார்கள்? ஐயாயிரம் புருஷர் இருந்தார் கள். அவர்களைப் பந்திக்கு எப்படி உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்மு டைய சீஷர்களுக்குச் சொன்னார்? ஐம்பது ஐம்பதுபேராக.
15. அவர்கள் என்ன செய்தார்கள்? அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
16. அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களை யும் எடுத்து, என்ன செய்தார்? வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத் தார்.
17. எல்லாரும் என்ன செய்தார்கள்? சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதி யான துணிக்கைகள் எத்தனை கூடைநிறைய எடுக்கப்பட்டது? பன்னிரண்டு.
18. பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக் கையில், அவர்களை நோக்கி என்ன கேட்டார்? ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
19. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில்  ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
20. அப்பொழுது இயேசு என்ன கேட்டார்? நீங்கள் என்னை யார் என்று சொல்லு கிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீர் தேவ னுடைய கிறிஸ்து என்றான்.
21. அப்பொழுது இயேசு அவர்களுக்கு என்ன கட்டளையிட்டார்? அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
22. மேலும் மனுஷகுமாரன் என்ன செய்யப்பட வேண்டும் என்று சொன்னார்? பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த் தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
23. பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பி னால் அவன் என்ன செய்ய வேண்டும் என்றார்? அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை என்ன செய்வான்? அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை என்ன செய்வான்? இரட்சித்துக்கொள்ளுவான்.
25. மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், எதை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
26. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகி றானோ, அவனைக்குறித்து யார் எப்போது வெட்கப்படுவார்? மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27. இங்கே நிற்கிறவர்களில் சிலர் எதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப் பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? தேவனுடைய ராஜ்யத்தை.
28. இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் யாரைக் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்? பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும்.
29. அவர் ஜெபம்பண்ணுகையில், என்ன ஆயிற்று? அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. 
30. அன்றியும் யார் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணை பண்ணினார்கள்? மோசே எலியா என்னும் இரண்டுபேரும். 
31. அவர்கள்; எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தாகள்? எருசலேமிலே நிறை வேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார் கள்.
32. பேதுருவும் அவனோடிருந்தவர்களும் எப்படியிருந்தார்கள்? நித்திரைமயக்க மாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து எதைக் கண்டார்கள்? அவரு டைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.
33. அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி என்ன சொன்னான்? ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமு மாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்ன தென்று அறியாமல் சொன்னான்.
34. இப்படி அவன் பேசுகையில், எது வந்து அவர்கள்மேல் நிழலிட்டது? ஒரு மேகம். அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் என்ன ஆனார்கள்? பயந்தார்கள்.
35. அப்பொழுது: என்ன என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று? இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்.
36. அந்தச் சத்தம் உண்டாகையில் யார் ஒருவரே காணப்பட்டார்? இயேசு ஒருவரே காணப்பட்டார். அவர்கள் எதை அடக்கிவைத்திருந்தார்கள்? தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல் லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
37. மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் என்ன செய்தார்கள்? அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38. அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, யாரைக் கடாட்சித்தருளவேண் டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்? என் மகனை. அவன் எனக்கு யாராயிருக்கிறான்? ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39. எது அவனைப் பிடிக்கிறது? ஒரு ஆவி. அப்பொழுது என்ன செய்கிறான்? அலறுகிறான். அது அவனை என்ன செய்கிறது? நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்குகிறது. பின்பு எது அரிதாயிருக்கிறது? அது அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
40. அதைத் துரத்திவிடும்படி யாரை வேண்டிக்கொண்டேன்? உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன். அவர்களால் என்னவாயிற்று என்றான்? கூடாமற்போயிற்று என்றான்.
41. இயேசு பிரதியுத்தரமாக கேட்டது என்ன? விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமை யாயிருப்பேன்? யாரை இங்கே கொண்டுவா என்றார்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42. அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனை என்ன செய்தது? கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை என்ன செய்தார்? அதட்டி, இளைஞனைக் குணமாக்கினார். அவனை என்ன செய்தார்? அவன் தகப்பனிடத் தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
43. அப்பொழுது எல்லாரும் எதைக்குறித்துப் பிரமித்தார்கள்? தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டார்கள். அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி சொன்னது என்ன? 
44. நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள். மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45. அவர்கள் எதை அறிந்துகொள்ளவில்லை? அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு என்னவாயிருந்தது? தோன்றா மல் மறைபொருளாயிருந்தது. எதைக்குறித்து அவர்கள் பயந்தார்கள்? அந்த வார்த்தையைக் குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.
46. பின்பு என்ன வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று? தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம்.
47. இயேசு எதை அறிந்தார்? அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்தார். யாரை எடுத்து, தமதருகே நிறுத்தினார்? ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தினார்.
48. அவர்களை நோக்கி: யாரை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்? இந்தச் சிறுபிள்ளையை. என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் யாரை ஏற்றுக்கொள்ளுகிறான்? என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். யார் பெரியவனாயிருப்பான் என்றார்? உங்களெல்லா ருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப் பான் என்றார்.
49. அப்பொழுது யோவான் அவரை நோக்கி யாரைத் தடுத்தோம் என்றான்? ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடி யால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50. அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் எங்கு இருக்கிறான் என்றார்? நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
51. பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எங்கே போகத் தமது முகத்தைத் திருப்பினார்? எருசலேமுக்குப் போகத் தமது முகத் தைத் திருப்பினார். 
52. தமக்கு முன்னாக யாரை அனுப்பினார்? தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், என்ன செய்தார்கள்? அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரி யருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53. ஏன் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை? அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால்.
54. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது எதைச் செய்ய உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்? ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55. அவர் திரும்பிப்பார்த்து என்ன சொல்லி அதட்டினார்? நீங்கள் இன்ன ஆவி யுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டினார்.
56. மனுஷகுமாரன் எதற்கு அல்ல, எதற்கே வந்தார் என்றார்? மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன் பின்பு அவர்கள் எங்கே போனார்கள்? வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
57. அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றது யார்? அவர்கள் வழியிலே போகையில் ஒருவன்.
58. அதற்கு இயேசு: நரிகளுக்கு என்ன உண்டு? குழிகள். ஆகாயத்துப் பறவைக ளுக்கு என்ன உண்டு? கூடுகள். யாருக்கு தலைசாய்க்க இடமில்லை? மனுஷ குமாரனுக்கு. 
59. வேறொருவனை அவர் நோக்கி சொன்னது என்ன? என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன் சொன்னது என்ன? ஆண்டவரே,முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என் றான்.
60. அதற்கு இயேசு யார் யாரை அடக்கம்பண்ணட்டும் என்றார்? மரித்தோர் தங்கள் மரித்தோரை. நீ போய், எதைக்குறித்துப் பிரசங்கி என்றார்? தேவனு டைய  ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
61. பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்று வேன், ஆனாலும் எதற்கு எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான்? முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக் கொண்டு வரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
62. அதற்கு இயேசு: யார் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்? கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

Tuesday, August 11, 2015

லூக்கா – 8

லூக்கா – 8
1. பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, என்ன பிரசங்கித்துவந்தார்? தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். யார் அவரோடேகூட இருந்தார்கள்? பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள். 
2. யாரெல்லாம் அவருடனே இருந்தார்கள்? அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங் கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3. ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டு வந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள். 
4. எங்கிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினார்கள்? சகல பட்டணங்களிலுமிருந்து. அப்போது, அவர் எப்படிச் சொன்னார்? உவமையாகச் சொன்னார்.
5. யார் விதையை விதைக்கப் புறப்பட்டான்? விதைக்கிறவன் ஒருவன். அவன் விதைக்கையில் சில விதை எங்கே விழுந்து மதியுண்டது? வழியருகே விழுந்து மிதியுண்டது. எவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது? ஆகாயத் துப் பறவைகள்.
6. சில விதை எதின்மேல் விழுந்தது? கற்பாறையின்மேல் விழுந்தது. அது முளைத்தபின் எதனால் உலர்ந்துபோயிற்று? அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை எதில் விழுந்தது? முள்ளுள்ள இடங்களில் விழுந்தது. முள் கூட வளர்ந்து, அதை என்ன செய்தது? நெருக்கிப்போட்டது.
8. சில விதை எதில் விழுந்தது? நல்ல நிலத்தில் விழுந்தது. அது முளைத்து, எப்படி பலந் கொடுத்தது என்றார்? ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் என்ன செய்யக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்? கேட்கக்கடவன்.
9. அப்பொழுது அவருடைய சீஷர்கள், அவரிடத்தில் என்ன கேட்டார்கள்? இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: எவைகளை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது? தேவ னுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை. மற்றவர்களுக்கோ, எதற்காக அவை கள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது? அவர்கள் கண்டும் காணாதவர்களா கவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக.
11. அந்த உவமையின் கருத்தாவது: விதை என்ன? தேவனுடைய வசனம்.
12. வழியருகே விதைக்கப்பட்டவர்கள் யாராய் இருக்கிறார்கள்? வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாத படிக்கு யார் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான்? பிசாசானவன்.
13. கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது எப்படி வச னத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்? சந்தோஷத்துடனே. ஆயினும் எதனால் எப்பொழுது பின்வாங்கிப் போகிறார்கள்? தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடி யினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின் வாங்கிப் போகிறார்கள்.
14. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்? வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் எதனால் பலன் கொடாதிருக்கிறார்கள்? கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற் குரிய  கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன் கொடாதிருக்கிறார்கள்.
15. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள்? வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமை யுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். 
16. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை என்ன செய்யமாட்டான்? அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான். யார் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்? உள்ளே பிரவேசிக்கிறவர்கள்.
17. வெளியரங்கமாகாத இரகசியம் இருக்கிறதா? இல்லை. அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருள் இருக்கிறதா? இல்லை. 
18. ஆதலால் நீங்கள் எதைக்குறித்துக் கவனியுங்கள்? கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள். யாருக்கக் கொடுக்கப்படும்? உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும். யார் நினைக்கிறதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்? இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
19. அப்பொழுது யார் அவரிடத்தில் வந்தார்கள்? அவருடைய தாயாரும் சகோ தரரும் அவரிடத்தில் வந்தார்கள். எதினாலே அவரண்டையில் அவர்கள் சேரக் கூடாதிருந்தது? ஜனக்கூட்டத்தினாலே.
20. அப்பொழுது: என்ன என்று அவருக்கு அறிவித்தார்கள்? உம்முடைய தாயா ரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள்.
21. அதற்கு அவர்: யார் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்? தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே.
22. பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: எங்கே போவோம் வாருங்கள் என்றார்? கடலின் அக்கரைக்கு. அப்படியே என்ன செய்தார்கள்? புறப்பட்டுப் போனார்கள்.
23. படவு ஓடுகையில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? நித்திரையாயிருந் தார். அப்பொழுது கடலிலே என்ன உண்டானர்? சுழல்காற்று. அவர்கள் மோசம டையத்தக்கதாய்ப் படவு எதினால் நிறைந்தது? ஜலத்தினால் நிறைந்தது.
24. அவர்கள் அவரிடத்தில் வந்து, என்ன என்று அவரை எழுப்பினார்கள்? ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள். அவர் எழுந்து, என்ன செய்தார்? காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார். உடனே என்ன ஆயிற்று? அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று.
25. அவர் அவர்களை நோக்கி: எது எங்கே என்றார்? உங்கள் விசுவாசம். அவர் கள் பயந்து ஆச்சரியப்பட்டு, என்னவென்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்? இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல் லிக் கொண்டார்கள்.
26. பின்பு எங்கே போய்ச் சேர்ந்தார்கள்? கலிலேயாவுக்கு எதிரான கதரேனரு டைய நாட்டில் சேர்ந்தார்கள். 
27. அவர் கரையிலிறங்கினபோது, யார் அவருக்கு எதிராக வந்தான்? நெடுநா ளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனு ஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28. அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து, சொன்னது என்ன? இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். 
29. எதனால் அவன் அப்படிச் சொன்னான்? அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி அவனை என்ன செய்திருந்தது? வெகுகாலமாய் அவனைப்பிடித்தி ருந்தது. அவன் எதினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்? அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந் தும் கட்டுகளை முறித்துப் போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப் பட்டிருந்தான்.
30. இயேசு அவனை நோக்கி என்ன கேட்டார்? உன் பேர் என்னவென்று கேட் டார். அதற்கு அவன் என்ன என்று சொன்னான்? லேகியோன் என்றான். அவன் ஏன் அந்தப் பேரைச் சொன்னான்? அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந் தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
31. என்னவென்று அவைகள் அவரை வேண்டிக்கொண்டன? தங்களைப் பாதா ளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண் டன.
32. அவ்விடத்தில் எவைகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந் தது? அநேகம் பன்றிகள். அவைகள் என்ன என்று அவரை வேண்டிக்கொண் டன? அந்தப் பன்றிகளுக்குள்போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண் டும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு என்ன செய்தார்? அவைக ளுக்கு உத்தரவுகொடுத்தார்.
33. அப்படியே பிசாசுகள் என்ன செய்தன? அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றி களுக்குள் புகுந்தன. அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் என்ன ஆனது? உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
34. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, என்ன செய்தார்கள்? ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35. அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவி னிடத்தில் வந்து, எதைக் கண்டு பயந்தார்கள்? பிசாசுகள் விட்டுப்போன மனு ஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக் கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36. எதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்? பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்க ளுக்கு அறிவித்தார்கள்.
37. அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, என்ன என்று அவரை வேண்டிக் கொண்டார்கள்? தங்களை விட்டுப்போகும்படி. அந்தப்படி அவர் என்ன செய் தார்?  படவில் ஏறி, திரும்பிப் போனார்.
38. பிசாசுகள் நீங்கின மனுஷன் என்ன உத்தரவு கேட்டான்? அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். 
39. இயேசு அவனை நோக்கி என்ன சொல்லி, அவனை அனுப்பிவிட்டார்? நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், என்ன செய்தான்? இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.
40. இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் என்ன செய்தார்கள்? அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண் டார்கள்.
41. அப்பொழுது யார் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்தான்? ஜெபஆலயத் தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன். பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி என்ன அவஸ்தையாயிருந்தாள்? மரண அவஸ் தையாயிருந்தாள்.  
42. என்னவென்று அவரை வேண்டிக்கொண்டான்? தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை என்ன செய்தார்கள்? நெருக்கினார்கள்.
43. அப்பொழுது எத்தனை வருஷமாய் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, இருந்தாள்? பன்னிரண்டு வருஷமாய்.
44. அவள் இயேசுவுக்குப் பின்னாக வந்து, என்ன செய்தாள்? அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனே என்ன ஆயிற்று? அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
45. அப்பொழுது இயேசு: என்ன என்று கேட்டார்? என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எல்லாரும் என்ன சொன்னார்கள்? எங்களுக்குத் தெரியா தென்று. பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும் என்ன சொன்னார்கள்? ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார் களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46. அதற்கு இயேசு: எதை அறிந்திருக்கிறேன் என்றார்? என்னிலிருந்து வல் லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன். ஆதலால் யார் என்னைத் தொட்ட துண்டு என்றார்? ஒருவர்.
47. அப்பொழுது அந்த ஸ்திரீ என்ன செய்தாள்? தான் மறைந்திருக்கவில்லை யென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்க ளுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48. இயேசு அவளைப் பார்த்து என்ன சொன்னார்? மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
49. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி என்ன சொன்னான்? உம்மு டைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
50. இயேசு அதைக் கேட்டு என்ன சொன்னார்? பயப்படாதே; விசுவாசமுள்ளவ னாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51. அவர் வீட்டில் வந்தபோது, யாரைத் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டவில்லை? பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர.
52. எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு என்ன சொன்னார்? அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரை யாயிருக்கிறாள் என்றார்.
53. எதனால் அவரைப் பார்த்து நகைத்தார்கள்? அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54. எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, என்ன செய்தார்? அவளு டைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55. அப்பொழுது அவள் உயிர் என்ன ஆனது? திரும்ப வந்தது. உடனே அவள் என்ன ஆனாள்? எழுந்திருந்தாள். இயேசு என்ன கட்டளையிட்டார்? அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
56. யார் ஆச்சரியப்பட்டார்கள்? அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு என்ன கட்டளையிட்டார்? நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Sunday, August 9, 2015

லூக்கா - 7

லூக்கா - 7
1. அவர் எதையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்? தம்முடைய வார்த்தைகளை யெல்லாம்.
2. அங்கே யார் வியாதிப்பட்டு  மரண அவஸ்தையாயிருந்தான்? நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன்.
3. அவன் யாரைக்குறித்து கேள்விப்பட்டான்? இயேசுவைக்குறித்து. அப்போது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யாரை அவரிடத்தில் அனுப்பினான்? யூதருடைய மூப்பரை.
4. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு சொன்னது என்ன? நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கி றான்.
5. அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தை யும் கட்டினான் என்றார்கள். 
6. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அவர்களுடனேகூடப்போனார். வீட்டுக் குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரி டத்தில் போய், சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி அனுப்பினான்? ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவே சிக்க நான் பாத்திரன் அல்ல;
7. நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமா வான்.
8. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொரு வனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென் றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
9. இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி சொன்னது என்ன? இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, என்ன கண்டார்கள்? வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள். 
11. மறுநாளிலே இயேசு எங்கே போனார்? நாயீன் என்னும் ஊருக்குப் போனார். யாரெல்லாம் அவருடனேகூடப் போனார்கள்? அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
12. அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, யாரை எதற்காகக் கொண்டு வந் தார்கள்? மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டு வந்தார் கள். அவன் தன் தாய்க்கு யாராய் இருந்தான்? ஒரே மகனாயிருந்தான். அவளோ யாராய் இருந்தாள்? கைம்பெண்ணாயிருந்தாள். யார் அவளுடனேகூட வந்தார் கள்? ஊராரில் வெகு ஜனங்கள்.
13. கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி சொன்னது என்ன? அழாதே.  
14. கிட்டவந்து, என்ன செய்தார்? பாடையைத் தொட்டார். அதைச் சுமந்தவர்கள் என்ன ஆனார்கள்? நின்றார்கள். அப்பொழுது இயேசு என்ன சொன்னார்? வாலி பனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15. மரித்தவன் என்ன செய்தான்? எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். இயேசு அவனை என்ன செய்தார்? அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
16. எல்லாரும் பயமடைந்து என்ன செய்தார்கள்? மகாதீர்க்கதரிசியானவர் நமக் குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 
17. இந்தச் செய்தி எங்கெல்லாம் பிரசித்தமாயிற்று? யூதேயா தேசமுழுவதி லும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று. 
18. இவைகளையெல்லாம் யார் யாருக்கு அறிவித்தார்கள்? யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் யாரை அழைத் தான்? தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்தான்.
19. யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து என்ன சொல்லி அனுப்பி னான்? நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
20. யோவானின் சீஷர்கள் என்ன செய்தார்கள்? அந்தப்படி அவர்கள் அவரிடத் தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு  அனுப்பினார் என்றார்கள். 
21. அந்தச் சமயத்திலே இயேசு செய்தது என்ன? நோய்களையும் கொடிய வியா திகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குண மாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.
22. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
23. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 
24. யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்க ளுக்குச் சொன்னது என்ன? எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற் றினால் அசையும் நாணலையோ? 
25. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். 
26. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 
27. இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கி யத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.
28. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29. யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங் களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, என்ன என்று அறிக்கையிட்டார்கள்? தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். 
30. பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ யோவானாலே எதைப் பெற வில்லை?  ஞானஸ்நானம். தங்களுக்குக் கேடுண்டாக எதைத் தள்ளிவிட்டார் கள்? தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். 
31. பின்னும் கர்த்தர் சொன்னது என்ன? இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடு வேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? 
32. இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
33. யோவான்ஸ்நானன் எப்படி வந்தான்? யோவான்ஸ்நானன் அப்பம் புசியாத வனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான். அதற்கு நீங்கள் சொன்னது என்ன? அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34. மனுஷகுமாரன் எப்படி வந்தார்? போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார். அதற்கு நீங்கள் சொன்னது என்ன? இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரிய னுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
35. ஆனாலும் ஞானமானது யாரால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்? அதன் பிள்ளைகளெல்லாராலும்.
36. பரிசேயரில் ஒருவன் என்னவென்று அவரை வேண்டிக்கொண்டான்? தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று. அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் என்ன செய்தார்? பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
37. அப்பொழுது இயேசு பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்தது யார்? அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ. அவள் எதைக் கொண்டு வந்தாள்? ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்தாள். 
38. அவள் பரிமளதைலத்தைக் கொண்டுவந்து என்ன செய்தாள்? அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய  பாதங்க ளைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவரு டைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39. அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, தனக்குத்தானே சொல் லிக் கொண்டது என்ன? இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
40. இயேசு சீமோனிடம் சொன்னது என்ன? சீமோனே, உனக்கு நான் ஒரு காரி யம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன் என்ன சொன்னான்? போதகரே, சொல்லும் என்றான். 
41. அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் எத்தனைபேர் கடன்பட்டிருந்தார்கள்? இரண்டுபேர். ஒருவன் எத்தனை வெள்ளிக்காசும் மற்றவன் எத்தனை வெள் ளிக் காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது? ஒருவன் ஐந்நூறு வெள்ளிக் காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது.
42. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் என்ன செய்தான்? கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றபோது சீமோன் சொன்னது என்ன? 
43. சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான். அதற்கு இயேசு என்ன சொன்னார்? சரியாய் நிதானித்தாய் என்று சொன்னார்.
44. ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி சொன்னது என்ன? இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன்,  நீ என் கால்க ளுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என்கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45. நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். 
46. நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில்  பரிமளதைலம் பூசினாள். 
47. ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன் சொன்னது என்ன? இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூரு வான் என்ற சொன்னார்.
48. அவளை நோக்கி இயேசு சொன்னது என்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட் டது என்றார்.
49. அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள் தங்களுக்குள்ளே என்னவென்று சொல்லிக் கொண்டார்கள்? பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள். 
50. அவர் ஸ்திரீயை நோக்கி சொன்னது என்ன? உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

Sunday, August 2, 2015

லூக்கா - 6

லூக்கா - 6
1. இயேசு எப்போது பயிர்வழியே நடந்து போனார்? பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர் வழியே நடந்து போனார். அப்போது, அவருடைய சீஷர்கள் என்ன செய்தார்கள்? கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள். 
2. பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி என்ன கேட்டார்கள்? ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
3. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக என்ன சொன்னார்? தாவீதும் அவ னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில் லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி, 
4. தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5. மேலும் யார் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்? மனுஷ குமாரன்.
6. வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து என்ன செய் தார்? உபதேசித்தார். அங்கே இருந்தது யார்? சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். 
7. அப்பொழுது யார் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்த மாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்? வேதபாரகரும் பரிசேயரும்.
8. அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தது யார்? இயேசு. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி என்ன சொன்னார்? நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் என்ன செய்தான்? எழுந்து நின்றான்.
9. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி என்ன கேட்டார்? நான் உங்களிடத் தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய் வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டார்.
10. அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி என்ன சொன்னார்? உன் கையை நீட்டு என்றார். அவன் என்ன செய்தான்? அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை என்ன ஆயிற்று? மறு கையைப்போலச் சொஸ்தமாயிற்று.
11. அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயே சுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள். 
12. அந்நாட்களிலே, அவர் எதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்? ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். மலையின்மேல் ஏறி என்ன செய் தார்? இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
13. பொழுது விடிந்தபோது, அவர் என்ன செய்தார்? அவர் தம்முடைய சீஷர் களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டார். அந்த பன்னிரண்டு பேருக்கு என்ன என்று பேரிட்டார்? அவர்களுக்கு அப்போஸ் தலர் என்று பேரிட்டார்.
14. அவர்கள் யார்? பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
15. மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், 
16. யாக்கோபின் சகோதரனாகிய  யூதா,  துரோகியான  யூதாஸ்காரியோத்து  என்பவர்களே. 
17. பின்பு அவர் அவர்களுடனேகூட என்ன செய்தார்? இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே இருந்தது யார்? அவருடைய சீஷரில் அநேகம் பேரும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம்  நகரத்தி லிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்த வர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். எதற்காக வந்திருந்தார்கள்? அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும் வந்திருந்தார்கள்.
18. வேறு யாரெல்லாம் வந்து ஆரோக்கியமடைந்தார்கள்? அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். 
19. அவரிடத்திலிருந்து எது புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினது? வல்லமை.  அதனாலே, ஜனங்கள் யாவரும் என்ன செய்தார்கள்? அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.
20. அப்பொழுது அவர் யாரை நோக்கிப் பார்த்தார்? தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்தார். தரித்திரராகிய நீங்கள் யார்? தரித்திரராகிய நீங்கள் பாக்கிய வான்கள். தேவனுடைய ராஜ்யம் யாருடையது? தரித்திரராகிய (பாக்கியவான் கள்) உங்களுடையது.
21. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் யார்? பாக்கியவான்கள். பசியாயிருக் கிற நீங்கள் என்ன ஆவீர்கள்? திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங் கள் யார்? பாக்கியவான்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் இனி என்ன செய்வீர் கள்? இனி நகைப்பீர்கள்.
22. மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளி விடும்போது நீங்கள் யாராயிருப்பீர்கள்? பாக்கியவான்களாயிருப்பீர்கள். 
23. அந்நாளிலே நீங்கள் என்ன செய்யுங்கள்? சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் எப்படியிருக்கும்? மிகுதியாயிருக்கும். அவர்களு டைய பிதாக்கள் யாருக்கும் அப்படியே செய்தார்கள்? தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
24. யாருக்கு ஐயோ? ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ. எதை நீங்கள் அடைந்து தீர்ந்தது? உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
25. யாருக்கு ஐயோ? திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ. இனி எப்படி இருப்பீர்கள்? பசியாயிருப்பீர்கள். யாருக்கு ஐயோ? இப்பொழுது நகைக் கிற உங்களுக்கு ஐயோ. இனி என்ன செய்வீர்கள்? இனி துக்கப்பட்டு அழுவீர் கள்.
26. எல்லா மனுஷரும் உங்களைக்குறித்து எப்படிப் பேசும்போது உங்களுக்கு ஐயோ? புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ. அவர்கள் பிதாக்கள் யாருக்கும் அப்படியே செய்தார்கள்? கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
27. யாருக்கு நான் சொல்லுகிறேன்? எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன். யாரைச் சிநேகியுங்கள்? உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். யாருக்கு நன்மை செய்யுங்கள்? உங்களைப் பகைக்கிறவர்க ளுக்கு நன்மைசெய்யுங்கள்.
28. யாரை ஆசீர்வதியுங்கள்? உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். யாருக்காக ஜெபமபண்ணுங்கள்? உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.
29. உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு என்ன செய்? மறு கன்னத்தை யும் கொடு. உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு என்ன செய்? உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
30. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் என்ன செய்? கொடு. உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் என்ன செய்? அதைத் திரும்பக் கேளாதே.
31. ஒருவனுக்கு நீங்கள் எப்படிச் செய்யுங்கள்? மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக் குச் செய்யுங்கள். 
32. யாரையே நீங்கள் சிநேகித்தால் உங்களுக்கு பலன் என்ன? உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் யாரைச் சிநேகிக்கிறார்களே? தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. 
33. யாருக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்குப் பலன் என்ன? உங்க ளுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? யாரும் அப்படிச் செய்கிறார்களே? பாவிகளும் அப்படிச் செய்கி றார்களே. 
34. என்னவென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பக் கொடுப்பார்களென்று. திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படி யாக.   யார் யாருக்குக் கடன் கொடுக்கிறார்களே? பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே. 
35. உங்கள் சத்துருக்களுக்கு என்ன செய்யுங்கள்? உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் பலன் எப்படியிருக்கும்? மிகுதியாயிருக்கும். யாருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்?  உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளா யிருப்பீர்கள். நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிற வர் யார்? உன்னதமானவர்.
36. ஆகையால் யாரைப்போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்? உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல.
37. யாரைக் குற்றவாளிகளென்று  தீர்க்காதிருங்கள்? மற்றவர்களை. எப்பொ ழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்? மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருக்கும் போது. யாரை ஆக்கினைக்குள்ளாகும் படி தீர்க்காதிருங்கள்? மற்றவர்களை. எப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள் ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்? மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கா திருக்கும் போது. யாரை விடுதலைபண்ணுங்கள்? மற்றவர்களை. எப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்? மற்றவர்களை நீங்கள் விடுதலை பண்ணும் போது.
38. எப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்? கொடுங்கள், அப்பொழுது உங்க ளுக்கும் கொடுக்கப்படும். எப்படி உங்கள் மடியிலே போடுவார்கள்? அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள். எந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்? நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
39. பின்னும் அவர் எதை அவர்களுக்குச் சொன்னார்? ஒரு உவமையை அவர் களுக்குச் சொன்னார். யாருக்கு யார் வழிகாட்டக்கூடுமோ? குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் எதில் விழுவார்கள் அல்லவா? பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40. சீஷன் யாருக்கு மேற்பட்டவனல்ல? தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல. தேறினவன் எவனும் யாரைப் போலிருப்பான்? தன் குருவைப்போலிருப்பான்.
41. நீ எதை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிற தென்ன? உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல்.
42. அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோத ரனை நோக்கி எதைச் சொல்லுவதெப்படி? சகோதரனே, நான் உன் கண்ணிலி ருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்கா ரனே! முன்பு எதை எடுத்துப்போடு? உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத் துப்போடு. பின்பு எதை எடுத்துப்போட வகைபார்ப்பாய்? உன் சகோதரன் கண் ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். 
43. நல்ல மரமானது எதைக் கெடாது? கெட்ட கனிகொடாது. கெட்ட மரமானது எதைக் கொடாது? நல்ல கனிகொடாது. 
44. அந்தந்த மரம் எதினால் அறியப்படும்? அதனதன் கனியினால் அறியப்படும். முட்செடிகளில் எதைப் பறிக்கிறதுமில்லை? அத்திப்பழங்களைப் பறிக்கிறது மில்லை. நெருஞ்சிச் செடியில் எதைப் பறிக்கிறதுமில்லை? திராட்சப்பழங்க ளைப் பறிக்கிறதுமில்லை.
45. நல்ல மனுஷன் எதிலிருந்து எதை எடுத்துக் காட்டுகிறான்? தன் இருதயமா கிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான். பொல்லாத மனுஷன் எதிலிருந்து எதை எடுத்துக்காட்டுகிறான்? தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக் காட்டுகிறான். இருதயத்தின் நிறைவினால் எது பேசும்? அவனவன் வாய் பேசும்.
46. என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், எதின்படி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற் போகிறதென்ன? 
47. என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கி றவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன்? 
48. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டு கிற மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறான். பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை என்ன செய்யக் கூடாமற்போயிற்று? அசைக் கக் கூடாமற்போயிற்று. ஏன்? ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபா ரம் போடப்பட்டிருந்தது.
49. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ யாருக்கு ஒப்பாயிருக்கிறான்? அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவ னுக்கு ஒப்பாயிருக்கிறான். நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது என்ன ஆனது? விழுந்தது. விழுந்து என்ன ஆனது என்றார்? முழுவதும் அழிந் தது என்றார்.