Tuesday, February 24, 2015

மத்தேயு – 12

மத்தேயு – 12
1. அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் எதன்வழியே போனார்? பயிர்வ ழியே போனார். யார் பசியாயிருந்தார்கள்? அவருடைய சீஷர்கள். அவரு டைய சீஷர்கள் என்ன செய்தார்கள்? கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார் கள். அவருடைய சீஷர்கள் ஏன் கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார் கள்? பசியாயிருந்ததினால் கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
2. பரிசேயர் எதைக்கண்டு, இயேசுவை நோக்கினார்கள்? பரிசேயர், இயேசு வின் சீஷர்கள் கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கியதைக் கண்டு இயே சுவை நோக்கினார்கள். பரிசேயர் இயேசுவிடம் சொன்னது என்ன? இதோ, ஓய் வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார் கள்.
3. இயேசு நீங்கள் எதை செய்யவில்லையா என்கிறார்? தாவீதும் அவனோடி ருந்தவர்களும் பசியாயிருந்த போது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா என்கிறார்.
4. தாவீது யாருடைய வீட்டில் பிரவேசித்தான்? தேவனுடைய வீட்டில் பிரவே சித்தான். யார் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்க ளைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்கள்? ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோ டிருந்தவர்களும் புசித்தார்கள்.
5. அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை என்னவாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள்? தேவாலயத் தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதி ருக்கிறார்கள்.
6. தேவாலயத்திலும் பெரியவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
7. பலியையல்ல எதையே விரும்புகிறேன் என்கிறார்? பலியையல்ல இரக்கத் தையே விரும்புகிறேன் என்கிறார். எப்பொழுது குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்? பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8. ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறவர் யார்? மனுஷகுமாரன்.
9. அவர் அவ்விடம் விட்டுப்போய், எங்கே பிரவேசித்தார்? அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.
10. சூம்பின கையையுடைய மனுஷன் எங்கே இருந்தான்? ஜெப ஆலயத்தில். அப்பொழுது இயேசுவின்மேல் குற்றஞ்சாட்டும் படிக்கு என்ன கேட்டார்கள்? ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
11. உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது எந்தநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? என்றார்? ஓய்வுநாளில்.
12. எதைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவு விசேஷித்திருக்கிறான்? ஆட்டைப்பார்க்கிலும். ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயமா? நியாயந்தான்.
13. பின்பு இயேசு அந்த மனுஷனை நோக்கி சொன்னது என்ன? உன் கையை நீட்டு என்றார். சூம்பின கையையுடைய மனுஷன் என்ன செய்தான்? அவன் கையை நீட்டினான். அவனுடைய கை என்ன ஆனது? அவன் கை மறுகை யைப்போல் சொஸ்தமாயிற்று.
14. அப்பொழுது பரிசேயர் என்ன செய்தார்கள்? அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள்.
15. இயேசு எதை அறிந்தார்? பரிசேயர் அவரைக் கொலைசெய்யும்படி அவ ருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணியதை அறிந்தார். இயேசு அதை அறிந்து என்ன செய்தார்? அவ்விடம்விட்டு விலகிப்போனார். இயேசுவுக்குப் பின்சென்றது யார்? திரளான ஜனங்கள். யாரையெல்லாம் இயேசு சொஸ்த மாக்கினார்? அவர்களையெல்லாம் அவர் சொஸ்தமாக்கினார்.
16. யாரைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்? தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
17. எந்த தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது? ஏசாயா.
18. யார் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன்? நான் (பிதா). யார் ஆத்துமா வுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்? என் (பிதா) ஆத்துமாவுக்கு. யார் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன்? என் (பிதாவின்) ஆவியை. அவர் யாருக்கு நியாயத்தை அறிவிப்பார்? புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
19. என்ன செய்ய மாட்டார்? வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரல் இடவுமாட்டார். எதை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை? அவருடைய சத்தத்தை.
20. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும் என்ன செய்வார்? நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக் காமலும் இருப்பார்.
21. அவருடைய நாமத்தின்மேல் யார் நம்பிக்கையாயிருப்பார்கள்? புறஜாதி யார்.
22. அப்பொழுது அவரிடத்தில் கொண்டுவரப்பட்டது யார்? பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன். இயேசு அவனை என்ன செய்தார்? ஊமையு மானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.
23. ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு சொன்னதென்ன? தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
24. பரிசேயர் அதைக்கேட்டு சொன்னதென்ன? இவன் பிசாசுகளின் தலைவ னாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
25. இயேசு யாருடைய சிந்தனைகளை அறிந்தார்? பரிசேயருடைய சிந்தனை களை அறிந்தார். தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்ய மும் என்னவாகும்? பாழாய்ப்போம். தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக் கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் என்னவாகும்? நிலைநிற்கமாட்டாது.
26. யாரை யார் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்கும்? சாத்தானைச் சாத்தான் துரத்தினால். எப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்.
27. நான் யாராலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவை களை யாராலே துரத்துகிறார்கள்? பெயெல்செபூலினாலே. ஆகையால், யார் உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்? உங்கள் பிள்ளைகளே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
28. நான் யாருடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறார்? நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறார். எதனால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறது? நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம்  உங்களிடத்தில் வந்திருக்கிறது.
29. அன்றியும், யாரை முந்திக் கட்டினாலொழியப் அவனுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும். ஒருவன் எப்பொழுது பலவானுடைய வீட்டைக் கொள்ளையிடலாம்? பலவானை கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
30. எனக்கு விரோதமாயிருக்கிறவன் யார்? என்னோடே இராதவன். என்னோடே சேர்க்காதவன் என்னவாகிறான்? சிதறடிக்கிறான்.
31. மனுஷருக்கு மன்னிக்கப்படுவது எவைகள்? எந்தப் பாவமும் எந்தச் தூஷ ணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும். மனுஷருக்கு எது மன்னிக்கப்படுவ தில்லை? ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படுமா? மன்னிக்கப்படும். எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது அவனுக்கு மன்னிக்கப்படுமா? மன்னிக் கப்படுவதில்லை. ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது எப்பொ ழுது மன்னிக்கப்படுவதில்லை? அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
33. மரம் நல்லதென்றால், அதின் கனி என்னதென்று சொல்லவேண்டும்? அதின் கனியும் நல்லதென்று சொல்லவேண்டும். மரம் கெட்டதென்றால், அதின் கனி என்னதென்று சொல்லவேண்டும்? அதின் கனியும் கெட்டதென்று சொல்லவேண்டும். மரமானது எதினால் அறியப்படும்? மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
34. விரியன்பாம்புக் குட்டிகளே நீங்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறீர்கள்? பொல்லாதவர்களாயிருக்கிறீர்கள். பொல்லாதவர்கள் எதைப் பேசுவது எப்படி? பொல்லாதவர்கள் நலமானவைகளைப் பேசுவது எப்படி. இருதயத்தின் நிறைவினால் பேசுவது எது? வாய்.
35. நல்ல மனுஷன் எதிலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான்? நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத் துக் காட்டுகிறான். பொல்லாத மனுஷன் எதிலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்? பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலி ருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து எந்த நாளில் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? நியாயத் தீர்ப்பு நாளில்.
37. எதினாலே நீ நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்? உன் வார்த்தைகளினால். எதினாலே நீ குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்? உன் வார்த்தைகளினால்.
38. அப்பொழுது, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகி றோம் என்றது யார்? வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர்.
39. இயேசு யார் அடையாளத்தைத் தேடுகிறார்கள் என்கிறார்? இந்தப் பொல் லாத விபசாரச் சந்ததியார். யாருடைய அடையாளமேயன்றி வேறே அடையா ளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று இயேசு சொல்லுகிறார்? யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்.
40. யோனா எத்தனை நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தான்? இரவும் பகலும் மூன்று நாள். யார் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்? மனுஷகுமாரன்.
41. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பியவர்கள் யார்? நினிவே பட்டணத்தார். இதோ, இங்கே இருக்கிறது யார்? யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே யார் இந்தச் சந்ததியா ரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்? நினிவே பட்ட ணத்தார்.
42. தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து யாருடைய ஞானத் தைக் கேட்க வந்தாள்? சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, இங்கே இருக்கிறது யார்? சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கி றார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே யார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்?  தென்தேசத்து ராஜஸ்திரீ.
43. அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்பட்டு எங்கே செய்கிறது? வறண்ட இடங்களில் அலைந்து இளைப்பாறுதல் தேடுகிறது.
44. அசுத்த ஆவி வறண்ட இடங்களில் அலைந்து இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல் எங்கே போகிறது? நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும் பிப்போவேன் என்று சொல்லுகிறது. அங்கே வந்து, அந்த வீடு எப்படி இருக்கக் காண்கிறது? வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக் காண்கிறது.
45. அந்த வீடு வெறுமையாகவும் பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாயும் இருக்கக் கண்டு என்ன செய்கிறது? திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியி ருக்கும். அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை எப்படியிருக்கும்? அதிக கேடுள்ளதாயிருக்கும். அப்படியே யாருக்கு சம்பவிக்கும்? இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும்.
46. இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில அவரிடத்தில் பேசவேண்டு மென்று வெளியே நின்றவர்கள் யார்? இயேசுவுடைய தாயாரும் சகோதரரும்.
47. அப்பொழுது ஒருவன் இயேசுவை நோக்கி சொன்னது என்ன? உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
48. தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு இயேசு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொன்னார்.
49. இயேசு தம்முடைய கையை யாருக்கு நேராக நீட்டினார்? தமது சீஷர்க ளுக்கு நேராக நீட்டினார். தமது சீஷர்களுக்கு நேராக நீட்டி என்ன சொன்னார்? இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே என்றார்.
50. யாருடைய சித்தத்தின்படி செய்கிறவனே எனக்குச் சகோதரனும் சகோதரி யும் தாயுமாய் இருக்கிறான் என்றார்? பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரி யும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

Wednesday, February 11, 2015

மத்தேயு – 11

மத்தேயு – 11
1. இயேசு யாருக்குக் கட்டளைகொடுத்தார்? இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷாகளுக்கும் கட்டளைகொடுத்தார். யாருடைய பட்டணங்களில் உபதேசிக்க வும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்? சீஷர்களுடைய பட்டணங்க ளில்.
2. அத்தருணத்தில் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டது யார்? யோவான். யோவான் எங்கிருந்து கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டன்? காவலிலிருந்து. யோவான் தன் சீஷரில் எத்தனை பேரை அழைத்தார்? இரண்டு பேர்.
3. யோவான் தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து யாரிடத்தில் அனுப்பி னான்? கிறிஸ்துவினிடத்தில். என்னவென்று கேட்டும்படி அனுப்பினான்? வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எதை யோவானிடத்தில் போய் அறிவியுங்கள் என்றார்? நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானி டத்தில் போய் அறிவியுங்கள் என்றார்.
5. யார் பார்வையடைகிறார்கள்? குருடர். யார் நடக்கிறார்கள்? சப்பாணிகள். யார் சுத்தமாகிறார்கள்? குஷ்டரோகிகள். யார் கேட்கிறார்கள்? செவிடர். யார் எழுந்திருக்கிறார்கள்? மரித்தோர். யாருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகி றது? தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
6. யாரிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்? என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கிய வான் என்றார்.
7. இயேசு யோவானைக் குறித்து சொன்னது என்ன? எதைப் பார்க்க வனாந்த ரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?  
8. எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அரசர் மாளிகையில் இருக்கிறார்கள்.
9. எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? யாரைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
10. இதோ, நான் யாரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்? என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்ட வன் யார்? இந்த யோவான்ஸ்நானன்.
11. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யாரைப்பார்க்கிலும் பெரியவன் ஒரு வனும் எழும்பினதில்லை? யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை. ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயி ருக்கிறவன் யாரிலும் பெரியவனாய் இருக்கிறானென்று உங்களுக்கு மெய்யா கவே சொல்லுகிறேன் என்கிறார்? யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய வனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன் என்கி றார்.
12. யார் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படு கிறது? யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பல வந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம்பண்ணுகிறவர்கள் எதைப் பிடித்துக்கொள் ளுகிறார்கள்? பரலோகராஜ்யத்தைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
13. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யார் வரைக்கும் தீர்க்கதரி சனம் உரைத்ததுண்டு? யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
14. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், இவன் யார் என்கிறார்? வருகிற வனாகிய எலியா இவன் (யோவான் ஸ்நானன்) தான்.
15. யார் கேட்கக்கடவன்? கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
16. சந்தைவெளிகளில் உட்கார்ந்து யாரைப் பார்த்துச் சொல்லுகிறார்? தோழரைப் பார்த்து சொல்லுகிறார்.
17. யாருக்காகக் குழல் ஊதினோம்? உங்களுக்காக. நீங்கள் என்ன செய்ய வில்லை? கூத்தாடவில்லை. யாருக்காக புலம்பினோம்? உங்களுக்காக. நீங்கள் என்ன செய்யவில்லை? மாரடிக்கவில்லை. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன் என்கிறார்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை. உங்க ளுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
18. போஜனபானம் பண்ணாதவனாய் வந்தது யார்? யோவான். அதற்கு அவர் கள் அவனை என்ன சொன்னார்கள்? யோவான் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.
19. போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தது யார்? மனுஷகுமாரன். அதற்கு அவர்கள் அவரை என்ன சொன்னார்கள்? இதோ போஜனப்பிரியனும் மதுபானப் பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்றார் கள். நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுவது எது? ஞானம். ஞானம் யாரால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்? அதின் பிள்ளைகளால்.
20. இயேசு எவைகளை கடிந்துகொள்ளத் தொடங்கினார்? தமது பலத்த செய் கைகளில், அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்களை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார். ஏன் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்? அந்த பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவர் அவைகளைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.
21. எதுக்கு ஐயோ என்கிறார்? கோரோசின், பெத்சாயிதா. பலத்த செய்கைகள் செய்யப்பட்டது எதுக்கு? கோரோசினுக்கும் பெத்சாயிதாவுக்கும் பலத்த செய் கைகள் செய்யப்பட்டது. தீருவிலும் சீதோனிலும் பலத்தசெய்கைகள் செய்யப் பட்டிருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
22. நியாயத்தீர்ப்பு நாளிலே எதுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், எதுக்கு நேரிடு வது இலகுவாயிருக்கும்? நியாயத்தீர்ப்புநாளிலே கோரோசினுக்கும் பெத்சாயி தாவுக்கும் நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.
23. வானபரியந்தம் உயர்த்தப்பட்டது எது? கப்பர்நகூம். பாதாளபரியந்தம் தாழ்த்தப்படப்போவது எது? கப்பர்நகூம். எதில் செய்யப்பட்ட பலத்த செய்கை கள் எதிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்தி ருக்கும்? கப்பர்நகூமில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.
24. நியாயத்தீர்ப்புநாளிலே எதுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், எந்த நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்? நியாயத்தீர்ப்புநாளிலே கப்பர்நகூமுக்கு நேரி டுவதைப் பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்.
25. பிதாவை எதற்கெல்லாம் ஆண்டவர் என்று இயேசு சொல்லுகிறார்? வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர் என்கிறார். இவைகளை யாருக்கு மறைத்து யாருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் என்கிறார்? இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
26. இப்படிச் செய்வது எதுக்கு பிரியமாயிருந்தது என்று இயேசு சொல்லுகி றார்? ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமா யிருந்தது என்கிறார்.
27. சகலமும் யாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது? பிதாவினால். சகல மும் யாருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது? எனக்கு (இயேசு கிறிஸ்து விற்கு). பிதா தவிர வேறொருவனும் யாரை அறியான்? குமாரனை அறியான். குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கி றாரோ அவனும் தவிர, வேறொருவனும் யாரை அறியான்? பிதாவை அறியான்.
28. நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்று யாரை இயேசு அழைக் கிறார்? வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களை இயேசு அழைக்கிறார். வருத்தப் பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு என்ன தருவேன் என்கிறார்?இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்.
29. நான் எப்படி இருக்கிறேன் என்று இயேசு சொல்லுகிறார்? நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்லுகிறார். எப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்கிறார்? என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்: அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்றார்.
30. எது மெதுவாயிருக்கிறது என்கிறார்? என் நுகம் மெதுவாயிருக்கிறது என்கி றார். எது இலகுவாயிருக்கிறது என்கிறார்? என் சுமை இலகுவாயிருக்கிறது என்கிறார்.

Sunday, February 8, 2015

மத்தேயு – 10

மத்தேயு – 10
1. அப்பொழுது, இயேசு யாரை தம்மிடத்தில வரவழைத்தார்? அவர் தம்மு டைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்தார். தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அவர்களுக்கு என்ன அதிகாரங்கொடுத்தார்? அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளை யும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
2. அந்த பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களில் முதல் நான்கு நாமங்கள் யாவை? முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 
3. அந்த பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களில் அடுத்த ஆறு நாமங்கள் யாவை? பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 
4. கடைசி இரண்டு அப்போஸ்தலருடைய நாமங்கள் யாவை? கானானியனா கிய சீமோன், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5. இயேசு பன்னிருவரையும் அனுப்புகையில் அவர் கட்டளையிட்டு யார் நாடுகளுக்குப் போகவேண்டாம் என்றார்? புறஜாதியார் நாடுகளுக்கு. எந்த பட்டணங்களில் பிரவேசிக்க வேண்டாம் என்றார்? சமாரியர் பட்டணங்களில்.
6. காணாமற்போன ஆடுகள் யார்? இஸ்ரவேல் வீட்டார்.  எங்கே போங்கள் என்றார்? காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என்றார்.
7. போகையில் எது சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் என்றார்? பரலோக ராஜ்யம்.
8. யாரை சொஸ்தமாக்குங்கள் என்றார்? வியாதியுள்ளவர்களை. யாரை சுத்தம்பண்ணுங்கள் என்றார்? குஷ்டரோகிகளை. யாரை எழுப்புங்கள் என்றார்? மரித்தோரை. எவைகளைத் துரத்துங்கள் என்றார்? பிசாசுகளை. எப்படிப் பெற் றீர்கள் எப்படி கொடுங்கள் என்றார்? இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள் என்றார்.
9. உங்கள் கச்சைகளில் எவைகளைத் தேடி வைக்க வேண்டாம்? பொன்னை யாவது வெள்ளியையாவது செம்பையாவது தேடி வைக்க வேண்டாம்.
10. வழிக்காக எவைகளைத் தேடி வைக்க வேண்டாம்? பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்க வேண்டாம். வேலையாள் எதற்குப் பாத்திரனாய் இருக்கிறான்? வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரவானாயிருக்கிறான்.
11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, எங்கே  தங்கியிருங்கள் என்றார்? எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரவான் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள் என்றார்.
12. ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது என்ன செய்யுங்கள் என்றார்? ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள் என்றார்.
13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் என்ன ஆகும்? நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரும். அந்த வீடு அபாத்திரமாயிருந்தால் என்ன ஆகும்? நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பும்.
14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது  விட்டுப் புறப்படும்போது என்ன செய்யுங்கள் என்றார்? உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். 
15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு என்ன நேரிடுவதைப் பார்க் கிலும் எந்த நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரி டுவது இலகுவாயிருக்கும்.
16. நான் உங்களை எப்படி அனுப்புகிறேன் என்கிறார்? ஆடுகளை ஓய்நாய் களுக்குள்ளே அனுப்புகிறதுபோல அனுப்புகிறேன் என்கிறார். எவைகளைப் போல வினாவுள்ளவர்களாய் இருங்கள்? சர்ப்பங்களைப்போல. எவைகளைப் போல கபடற்றவர்களுமாய் இருங்கள்? புறாக்களைப்போல.
17. யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்கிறார்? மனுஷரைக்குறித்து. மனுஷர் உங்களை என்ன செய்வார்கள்? உங்களை ஆலோசளைச் சங்கங்க ளுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
18. யாருக்கு சாட்சியாக கொண்டுபோகப்படுவீர்கள்? மனுஷருக்கும் புறஜாதி யாருக்கும் சாட்சியாக கொண்டுபோகப்படுவீர்கள். யாரினிமித்தம் கொண்டு போகப்படுவீர்கள்? என்னிமித்தம் (இயேசுவினிமித்தம்) கொண்டுபோகப்படு வீர்கள். யாருக்கு முன்பாக கொண்டுபோகப்படுவீர்கள்? அதிபதிகளுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
19. உங்களை எப்பொழுது கவலைப்படாதிருங்கள் என்கிறார்? மனுஷர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது கவலைப்படாதிருங்கள் என்கிறார். உங்களை எதற்குக் கவலைப்படாதிருங்கள் என்கிறார்? அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசு வோம் என்றும் கவலைப்படாதிருங்கள் என்கிறார். நீங்கள் பேசவேண்டுவது எப்பொழுது உங்களுக்கு அருளப்படும்? நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20. பேசுகிறவர்கள் யார் அல்ல? பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்களிலி ருந்து பேசுகிறவர் யார்? உங்கள் பிதாவின் ஆவியானவர்.
21. யார் யாரை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்? சகோதரன் தன் சகோதர னையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். யாருக்கு விரோதமாகப் யார் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்? பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலை செய் வார்கள். 
22. யார் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்? என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். யார் இரட்சிக்கப் படுவான்? முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கபடுவான்.
23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் எங்கே ஓடிப்போங்கள் என்கிறார்? ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத் திற்கு ஓடிப்போங்கள் என்கிறார். எதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ர வேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
24. சீஷன் யாரிலும் மேற்பட்டவனல்ல? சீஷன் தன் போதகனிலும் மேம்பட்ட வனல்ல. வேலைக்காரன் யாரிலும் மேற்பட்டவனல்ல? வேலைக்காரன் தன் எஜமானிலும் மேம்பட்டவனல்ல.
25. சீஷன் யாரைப்போலவும், வேலைக்காரன் யாரைப்போலவும் இருப்பது போதும்? சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப் போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானை யார் என்று சொன்னார்களா னால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? வீட்டெஜ மானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
26. யாருக்குப் பயப்படாதிருங்கள் என்கிறார்? அவர்களுக்கு (மனுஷர்களுக்கு). வெளியாக்கப்படாத மறைபொருள் உண்டா? இல்லை. அறியப்படாத இரகசி யம் உண்டா? இல்லை.
27. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் எதிலே சொல்லுங் கள்? நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள். காதிலே கேட்கிறதை நீங்கள் எதின்மேல் பிரசித்தம்பண்ணுங் கள்? காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
28. நீங்கள் யாருக்கு பயப்பட வேண்டாம்? ஆத்துமாவைக் கொல்ல வல்லவர் களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் யாருக்கு பயப்பட வேண்டும்? ஆத்துமாவையும் சரீரத்தை யும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்பட வேண்டும்.
29. ஒரு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகள் விற்கிறார்கள்? இரண்டு. ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், எவைகளில் ஒன்றாகிலும் தரை யிலே விழாது? இரண்டு அடைக்கலான் குருவிகளில் ஒன்றாகிலும் தரை யிலே விழாது.
30. உங்களில் எவையெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது? உங்கள் தலையி லுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
31. எதனால் பயப்படாதிருங்கள் என்கிறார்? உங்கள் தலையிலுள்ள மயிரெல் லாம் எண்ணப்பட்டிருக்கிறதனால் பயப்படாதிருங்கள் என்கிறார். எவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்? அநேகம் அடைக்க லான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
32. யாரை பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணு வேன் என்கிறார்? மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் என்கிறார்.
33. யாரை பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன் என்கிறார்? மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன் என்கிறார்.
34. பூமியின்மேல் எதை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள் என்கிறார்? சமாதானத்தை. பூமியிலே எதை அனுப்பவந்தேன் என்று எண்ணிக்கொள் ளுங்கள் என்கிறார்? சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள் என்கிறார்.
35. யாருக்கும் யாருக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன் என்கிறார்? மகனுக் கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவி னையுண்டாக்க வந்தேன் என்கிறார்.
36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் யார்? ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
37. யார் எனக்குப் பாத்திரன் அல்ல என்கிறார்? தகப்பனையாவது தாயையா வது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனை யாவது மகளையாவது என்னிலும் அதிகமாகய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்தி ரன் அல்ல என்கிறார்.
38. யார் எனக்குப் பாத்திரன் அல்ல என்கிறார்? தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
39. தன் ஜீவனைக் காக்கிறவன் எதை இழந்துபோவான்? தன் ஜீவனைக் காக்கி றவன் ஜீவனை இழந்துபோவான். ஜீவனைக் காப்பவன் யார்? இயேசவினிமித் தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை காப்பான்.
40. என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் யார்? உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொண்ளு கிறவன் யார்? என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
41. தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைகிறவன் யார்? தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான். நீதிமானுக்கேற்ற பலனை அடைகிறவன் யார்? நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக் கேற்ற பலனை அடைவான்.
42. யார் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன் என்றார்? சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறி யரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல் லுகிறேன் என்றார்.

Tuesday, February 3, 2015

மத்தேயு – 9

மத்தேயு – 9
1. அப்பொழுது, அவர் படவில் ஏறி, எங்கே வந்தார்? அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
2. அங்கே யாரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்? படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களி டத்தில் என்ன கண்டார்? விசுவாசம். இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி சொன்னது என்ன? மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டது என்றார்.
3. அப்பொழுது வேதபாரகரில் சிலர் என்ன சொல்லிக் கொண்டார்கள்? இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொண்டார்கள்.
4. இயேசு எதை அறிந்தார்? வேதபாரகரின் நினைவுகளை அறிந்தார். நீங்கள் உங்கள் இருதயங்களில் எவைகளைச் சிந்திக்கிறீர்கள்? பொல்லாதவைகள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து சொன்னதென்ன? நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
5. இயேசு அவர்களிடம் எது எளிது என்று கேட்டார்? உன் பாவங்கள் மன்னிக் கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
6. பூமியிலே பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? மனுஷ குமாரனுக்கு. நீங்கள் எதை அறியவேண்டும் என்று இயேசு சொல்லுகிறார்? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென் பதை நீங்கள் அறியவேண்டும் என்று இயேசு சொல்லுகிறார். இயேசு திமிர் வாதக்காரனை நோக்கி சொல்வது என்ன? நீ எழுந்து, உன் படுக்கையை எடுத் துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
7. உடனே திமிர்வாதக்காரன் என்ன செய்தான்? உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
8. இதைக்கண்டு ஜனங்கள் என்ன ஆனார்கள்? ஆச்சரியப்பட்டார்கள். ஜனங் கள் ஆச்சரியப்பட்டு என்ன செய்தார்கள்? மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத் தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
9. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில் யாரைக் கண்டார்? மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டார். எங்கே கண்டார்? அயத்துறை யில் உட்கார்ந்திருக்கக் கண்டார். இயேசு மத்தேயுவைக் கண்டு அவனிடம் சொன்னது என்ன? எனக்குப் பின்சென்றுவா என்றார். மத்தேயு என்ன செய் தான்? மத்தேயு எழுந்து, இயேசுவுக்குப் பின்சென்றான்.
10. பின்பு இயேசு வீட்டிலே எங்கு இருந்தார்? போஜனபந்தியில் இருந்தார். இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தவர்கள் யார்? அநேக ஆயக்காரரும் பாவிகளும்.
11. பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி என்ன கேட்டார் கள்? உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகி றது என்னவென்று கேட்டார்கள்.
12. இயேசு அதைக் கேட்டு என்ன சொன்னார்? பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
13. எதின் கருத்து இன்னதென்பதைப் போய் கற்றுக்கொள்ளுங்கள் என்று இயேசு சொன்னார்? பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக் கொள்ளுங்கள் என்றார். யாரை அல்ல, யாரையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்? நீதிமான்களை யல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
14. அப்பொழுது யோவானுடைய சீஷர் இயேசுவிடத்தில் வந்து அவரிடத்தில் கேட்டது என்ன? நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமல் இருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.
15. அதற்கு இயேசு கேட்ட கேள்வி என்ன? மணவாளன் தங்களோடிருக்கை யில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? இயேசு தம்முடைய சீஷர்கள் எப்பொழுது உபவாசிப்பார்கள் என்றார்? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். மணவாளன் யார்? இயேசுகிறிஸ்து. மணவாளனுடைய தோழர்கள் யார்? சீஷர்கள். 
16. கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைப்பார்களா? இணைக்க மாட்டார்கள். கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைத்தால் என்ன ஆகும்? அதினோடே இணைத்ததுண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.
17. புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறது உண்டா? இல்லை. புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைத்தால் என்ன வாகும்? துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம். புது ரசத்தைப் எந்த துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்? புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள். புது ரசத்தைப் புது துருத்தி களில் வார்த்துவைத்தால் என்னவாகும்? புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைத்தால் இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். 
18. அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில் வந்தது யார்? தலைவன் ஒருவன். அவன் வந்து என்ன செய்தான்? இயேசுவைப் பணிந்தான். இயேசுவைப் பணிந்து அவரிடம் என்ன சொன்னான்? என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
19. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோ டுகூட அவன் பின்னே போனார்.
20. அப்பொழுது அவர் பின்னாலே வந்தது யார்? பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ.
21. பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ எண்ணியது என்ன? நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணினாள். எண்ணியவள் என்ன செய்தாள்? அவர் பின் னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து சொன்னது என்ன? மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்த ஸ்திரீ என்ன ஆனாள்? அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
23. இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து கண்டது என்ன? தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டார்.
24. இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர் களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு சொன்னது என்ன? விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற் காக அவரைப்பார்த்து என்ன செய்தார்கள்? நகைத்தார்கள்.
25. அப்பொழுது ஜனங்கள் என்ன செய்யப்பட்டார்கள்? ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டார்கள். ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு இயேசு என்ன செய்தார்? இயேசு உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார். இயேசு சிறுபெண்ணின் கையைப் பிடித்தவுடன் சிறு பெண் என்ன செய்தாள்? உடனே அவள் எழுந்திருந்தாள்.
26. இந்தச் சங்கதி எங்கே பிரசித்தமாயிற்று? இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
27. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில் அவரை கூப்பிட்டது யார்? இரண்டு குருடர். இரண்டு குருடர் இயேசு பின்னே சென்று என்ன சொல்லி கூப்பிட்டார் கள்? தரீவதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
28. இயேசு வீட்டிற்கு வந்தபின்பு அவரிடத்தில் யார் வந்தார்கள்? அந்த இரண்டு குருடர் இயேசுவிடத்தில் வந்தார்கள். இயேசு அந்தக் குருடர்களை நோக்கி கேட்டது என்ன? இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கி றீர்களா என்று கேட்டார். அதற்கு குருடாகள் என்ன சொன்னார்கள்? ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
29. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அந்த இரண்டு குருடர்களுடைய கண்களைத் தொட்டார். இயேசு குருடர்களிடம் சொன்னது என்ன? உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
30. உடனே குருடர்களுடைய கண்கள் என்ன ஆனது? குருடர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இயேசு குருடர்களுக்கு கண்டிப்பாய் கட்டளையிட்டது என்ன? இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
31. அந்தக் குருடர்கள் என்ன செய்தார்கள்? குருடர்கள் புறப்பட்டு, அத்தேச மெங்கும் இயேசுவினுடைய கீர்த்தியைப் பிரசித்தம் பண்ணினார்கள்.
32. குருடர்கள் புறப்பட்டுப் போகையில், அவரிடத்தில் யாரை கொண்டு வந் தார்கள்? பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.
33. ஊமையன் எப்போது பேசினான்? பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு சொன்னதென்ன? இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
34. பரிசேயர் சொன்னதென்ன? இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுக ளைத் துரத்துகிறான் என்றார்கள்.
35. பின்பு இயேசு எங்கெல்லாம் சுற்றி நடந்தார்? இயேசு சகல பட்டணங்களை யும் கிராமங்களையும் சுற்றி நடந்தார். இயேசு எங்கே உபதேசித்தார்? ஜெப ஆல யங்களில் உபதேசித்தார். இயேசு எதைப் பிரசங்கித்தார்? இயேசு ராஜ்யத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இயேசு எதை நீக்கி அவர்களை சொஸ்தமாக் கினார்? ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்க ளையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
36. இயேசு யாரைக் கண்டார்? இயேசு திரளான ஜனங்களைக் கண்டார். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, எதனால் அவர்கள்மேல் மனதுருகி னார்? அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்க ளும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.
37. இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி சொன்னது என்ன? அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.
38. ஆதலால், எஜமானிடம் என்னவென்று வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்? அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

Sunday, February 1, 2015

மத்தேயு – 8

மத்தேயு – 8
1. இயேசு மலையிலிருந்து இறங்கின போது, அவருக்குப்பின் சென்றவர்கள் யார்? திரளான ஜனங்கள். 
2. அப்பொழுது யார் வந்து இயேசுவைப் பணிந்து கொண்டான்? குஷ்டரோகி ஒருவன். குஷ்டரோகி ஆண்டவரைப் பணிந்து அவரிடம் கேட்டது என்ன? ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
3. இயேசு அவனை என்ன செய்தார்? இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டார். இயேசு தமது கையை நீட்டி குஷ்டரோகியைத் தொட்டு சொன்னது என்ன? எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே என்ன ஆனது?  உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
4. இயேசு குஷ்டரோகியை நோக்கி, நீ எதற்கு எச்சரிக்கையாயிரு என்றார்? இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு என்றார். ஆயினும், எதைச் செய் என்றார்?  அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக்காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
5. இயேசு கப்பர்நகூமிலே பிரவேசித்தபோது, அவரிடத்தில் வந்தது யார்? நூற்றுக்கு அதிபதி.
6. நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன? ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப் படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
7. இயேசு நூற்றுக்கு அதிபதியிடம் சொன்னது என்ன? நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
8. நூற்றுக்கு அதிபதி யாரிடம் நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல என்றான்? இயேசுவிடம். நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் எப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான்? ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான்.
9. நான் எதற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு? நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு. நான் ஒருவனைப் போ என்றால் அவன் என்ன செய்கிறான்? போகிறான். நான் ஒருவனை வா என்றால் அவன் என்ன செய்கிறான்? வருகிறான். என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் அவன் என்ன செய்கிறான்? செய்கிறான்.
10. இயேசு இதைக் கேட்டு என்ன ஆனார்? ஆச்சரியப்பட்டார். இயேசு தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கிச் சொன்னது என்ன? இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் யாரோடே பந்தியிருப்பார்கள்? ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
12. ராஜ்யத்தின் புத்திரர் எங்கே தள்ளப்படுவார்கள்? ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள். புறம்பான இருளிலே என்ன உண்டா யிருக்கும்? அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
13. பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி சொன்னது என்ன? நீ போக லாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகை யிலே நடந்தது என்ன? அவன் வேலைக்காரன் சொஸ்தமானான் என்றார்.
14. இயேசு யார் வீட்டிற்கு வந்தார்? பேதுரு வீட்டிற்கு வந்தார். இயேசு பேதுரு வீட்டிலே என்ன கண்டார்? பேதுருவின் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
15. இயேசு யார் கையைத் தொட்டார்? பேதுரு மாமியின் கையைத் தொட்டார். இயேசு பேதுரு மாமியின் கையைத் தொட்டவுடனே என்ன ஆயிற்று? ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று. ஜுரம் நீங்கியவுடன் அவள் என்ன செய்தாள்? அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
16. அஸ்தமனமானபோது, யாரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்? பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு எதைத் துரத்தினார்? அந்த ஆவிகளைத் துரத்தினார். இயேசு எதினாலே அந்த ஆவிகளைத் துரத்தினார்? தமது வார்த்தையினாலே துரத்தினார். இயேசு யாரை சொஸ்தமாக்கினார்? பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.
17. இயேசு யாருடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டார்? நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டார். இயேசு யாருடைய நோய்களைச் சுமந்தார்? நம்முடைய நோய்களைச் சுமந்தார். ஏசாயா தீர்க்கதரிசி உரைத்தது என்ன? அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.
18. பின்பு, இயேசு எதைக் கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்? திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.
19. அப்பொழுது அவரிடத்தில் வந்தது யார்? வேதபாரகன் ஒருவன். வேதபார கன் ஒருவன் வந்து இயேசுவிடம் சொன்னது என்ன? போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
20. நரிகளுக்கு என்ன உண்டு? குழிகள். ஆகாயத்துப் பறவைகளுக்கு என்ன உண்டு? கூடுகள். யாருக்கு தலைசாய்க்க இடமில்லை என்றார்? மனுஷகுமார னுக்கு. வேதபாரகனுக்கு இயேசு சொன்னது என்ன? நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளுமம் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
22. அதற்கு இயேசு சீஷனிடம் சொன்னது என்ன? மரித்தோர் தங்கள் மரித் தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
23. இயேசு படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் என்ன செய்தார்கள்? இயேசு படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
24. அப்பொழுது கடலில் எப்படிப்பட்ட பெருங்காற்று உண்டாயிற்று? அப்பொ ழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அப்பொழுது இயேசு என்ன செய்துகொண்டிருந்தார்? அப்பொ ழுது இயேசு நித்திரையாயிருந்தார்.
25. அப்பொழுது சீஷர்கள் என்ன செய்தார்கள்? இயேசுவை எழுப்பினார்கள். சீஷர்கள் இயேசுவை எழுப்பி சொன்னது என்ன? ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
26. இயேசு சீஷாகளைப் பார்த்து சொன்னது என்ன? அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்றார். இயேசு என்ன செய்தார்? காற்றையும் கடலையும் அதட்டினார். இயேசு காற்றையும் கடலையும் அதட்டிய உடனே என்ன ஆயிற்று? மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
27. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு சொன்னது என்ன? இவர் எப்படிப்பட்ட வரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். 
28. அவர் அக்கரையிலே எந்த நாட்டிற்கு வந்தார்? கெர்கெசேனர் நாடு. அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, யார் அவருக்கு எதிராக வந்தார்கள்? பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர். பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள்? பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தார்கள்? அவர்கள் மிகவும் கொடியராயிநருந்தார்கள். ஏன் அந்த வழியாக ஒருவனும் நடக்கக் கூடாதி ருந்தது? அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவ னும் நடக்கக்கூடாதிருந்தது.
29. பிரேதக்கல்லறையிலிருந்து புறப்பட்டு வந்த பிசாசு பிடித்திருந்த அந்த இரண்டுபேர் இயேசுவை யார் என்று அழைத்தார்கள்? இயேசுவே, தேவனுடைய குமாரனே என்றார்கள். அவர்கள் இயேசுவை என்னவென்று கேட்டார்கள்? எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
30. அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் எவைகள் மேய்ந்து கொண்டிருந்தன? அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன.
31. பிசாசுகள் இயேசுவிடம் என்னவென்று வேண்டிக்கொண்டன? நீர் எங்க ளைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
32. அதற்கு இயேசு என்ன சொன்னார்? போங்கள் என்றார். பிசாசுகள் என்ன செய்தன? பிசாசுகள் புறப்பட்டு, பன்றிக்கூட்த்தில் போயின. அப்பொழுது பன்றிக்கூட்டமெல்லாம் என்ன ஆயின? பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டுபோயின.
33. பன்றிகளை மேய்த்தவர்கள் என்ன செய்தார்கள்? பன்றிகளை மேய்த்தவர் கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்;லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.
34. அப்பொழுது அந்தப் பட்டணத்தார் என்ன செய்தார்கள்? அந்தப் பட்டணத் தார் யாவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டுவந்து, அவரைக் கண்டார்கள். அவர் கள் இயேசுவை என்னவென்று வேண்டிக்கொண்டார்கள்? தங்கள் எல்லைக ளைவிட்டுப் போகும்படி இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.