Friday, July 31, 2015

லூக்கா - 5

லூக்கா - 5
1. பின்பு இயேசு கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, யார் தேவவசனத் தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்? திரளான ஜனங்கள்.
2. அப்பொழுது இயேசு கடற்கரையிலே எதைக் கண்டார்? கடற்கறையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? படவுகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண் டிருந்தார்கள்.
3. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார். அது யாருடையதாய் இருந்தது? சீமோனுடையதாயிருந்தது. அதைக் கரையி லிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, என்ன செய்தார்? ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
4. அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி என்ன சொன்னார்? ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5. அதற்குச் சீமோன் என்ன சொன்னான்? ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தை யின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
6. அந்தப்படியே அவர்கள் என்ன செய்தார்கள்? லைகளைப் போட்டு, தங்கள்  வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். 
7. அப்பொழுது என்னவென்று சைகைகாட்டினார்கள்? மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார் கள். அவர்கள் வந்து, என்ன செய்தார்கள்? இரண்டு படவுகளும் அமிழத்தக்க தாக நிரப்பினார்கள்.
8. சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து சொன்னது என்ன? ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போக வேண்டும் என்றான்.
9. அவன் அப்படிச் சொல்லக் காரணம் என்ன? அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப் புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். 
10. சீமோனுக்குக் கூட்டாளிகள் யார்? செபெதேயுவின் குமாரராகிய யாக்கோ பும் யோவானும். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி சொன்னது என்ன? பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
11. அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, என்ன செய்தார் கள்? எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
12. பின்பு இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், இயேசுவைக் கண்டது யார்? குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன். அவன் இயேசுவைக் கண்டு, முகங்குப் புற விழுந்து என்னவென்று வேண்டிக் கொண்டான்? ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண் டிக்கொண்டான்.
13. அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு என்ன சொன்னார்? எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் என்ன ஆயிற்று? அவனை விட்டு நீங்கிற்று.
14. அவர் அவனை நோக்கி கட்டளையிட்டது என்ன? நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குச் காண்பித்து, நீ சுத்தமானதினி மித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச்  சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.
15. அப்படியிருந்தும் எது பரம்பிற்று? அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம் பிற்று. திரளான ஜனங்கள் எதற்காகக் கூடிவந்தார்கள்? அவருடைய உபதேசத் தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற் கும் கூடிவந்தார்கள்.
16. அவரோ எங்கே போய் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்? வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்.
17. பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக் கொண்டிருக்கிறபோது அங்கே உட் கார்ந்திருந்தவர்கள் யார்? கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்க ளிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாக விளங்கியது எது? கர்த்தருடைய வல்லமை.
18. அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனை எப்படி கொண்டு வந்தார்கள்?  படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்தார்கள். திமிர்வாதக்கா ரனை படுக்கையோடே எடுத்துக்கொண்டு வந்து என்னவென்று வகை தேடி னார்கள்? அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகை தேடினார்கள்.
19. ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிற தற்கு வகைகாணாமல் என்ன செய்தார்கள்? வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கை யோடே இறக்கினார்கள். 
20. அவர்களுடைய விசுவாசத்தை இயேசு கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி என்ன சொன்னார்? மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21. அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, சொன்னது என்ன? தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
22. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி சொன்னது என்ன? உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன? 
23. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட வென்று சொல்வதோ, எது எளிது? 
24. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொன்னார். இயேசு திமிர்வா தக்காரனை நோக்கி சொன்னது என்ன? நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 
25. உடனே திமிர்வாதக்காரன் என்ன செய்தான்? அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். 
26. அதினாலே எல்லாரும் என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள். அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, சொன்னது என்ன? அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
27. இவைகளுக்குப் பின்பு, இயேசு புறப்பட்டு, யாரைக் கண்டு எனக்குப் பின் சென்று வா என்றார்? ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேரு டைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். 
28. ஆயக்காரனாகிய லேவி என்ன செய்தான்? அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். 
29. அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே என்ன செய்தான்? தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அந்த விருந்தில் பந்தியிருந்தவர்கள் யார்? அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந் தார்கள். 
30. வேதபாரகரும் பரிசேயரும் என்ன செய்தார்கள்? அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். முறுமுறுத்து என்ன கேட்டார்கள்? நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 
31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? பிணியாளிக ளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டிய தில்லை.
32. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந் தேன் என்றார். 
33. பின்பு அவர்கள் அவரை நோக்கி யார் உபவாசிக்கிறார்கள் என்றார்கள்? யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள். யார் போஜ னபானம் பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்? உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்: யார் தங்களோடிருக்கையில் யாரை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா என்றார்? மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனு டைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? 
35. எப்பொழுது உபவாசிப்பார்கள் என்றார்? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். 
36. அவர்களுக்கு எதையும் சொன்னார்? ஒரு உவமையையும் சொன்னார். ஒருவனும் எதை எதன்மேல் போட்டு இணைக்கமாட்டான்? புதிய வஸ்திரத் துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான். இணைத் தால் என்ன ஆகும்? புதியது பழையதைக் கிழிக்கும். எதுக்கு எது ஒவ்வாது? புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37. ஒருவனும் எதைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்? புது திராட்சரசத்தை. வார்த்துவைத்தால் என்ன ஆகும்? புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38. புது ரசத்தை எதில் வார்த்துவைக்க வேண்டும்? புது துருத்திகளில் வார்த்து வைக்கவேண்டும். அப்பொழுது என்ன ஆகும்? இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். 
39. அன்றியும் ஒருவனும் எதைக் குடித்தவுடனே எதை விரும்ப மாட்டான்? பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான். எதுவே நல் லது என்று சொல்லுவான் என்றார்? பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

Wednesday, July 29, 2015

லூக்கா - 4

லூக்கா - 4
1. இயேசு எதினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பினார்? பரிசுத்த ஆவியினாலே. யாராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்? ஆவியானவராலே.
2. எத்தனைநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்? நாற்பதுநாள். அந்த நாட்களில் அவர் என்ன புசியாதிருந்தார்? ஒன்றும் புசியாதிருந்தார். அந்த நாட்கள் முடிந்த பின்பு அவருக்கு என்ன உண்டாயிற்று? பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் யாரேயானால் இந்தக் கல் அப்பமா கும்படி சொல்லும் என்றான்? தேவனுடைய குமாரனேயானால்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, வேறு எதி னாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்? தேவனுடைய ஒவ் வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.
5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், எவைகளை ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்தான்? உலகத்தின் சகல ராஜ்யங்க ளையும்.
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள எவைகளை உமக்குத் தருவேன்? அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும். இவைகள் யாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது? எனக்கு (பிசாசுக்கு). யாருக்கு இவைகளைக் கொடுக் கிறேன்? எனக்கு இஷ்டமானவனுக்கு.
7. நீர் என்ன செய்தால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்? என்னைப் பணிந்துகொண்டால்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, யாரு ஒருவருக்கே ஆராதனை செய் என்று எழுதியிருக்கிறதே என்றார்? உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.
9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், எதின்மேல் அவரை நிறுத்தினான்? தேவாலயத்து உப்பரிகையின்மேல். நீர் தேவனுடைய குமாரனேயானால், என்ன செய்யும் என்றான்? இங்கேயிருந்து தாழக்குதியும்.
10. ஏன் அப்படிச் சொன்னான்? ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்மு டைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், 
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். 
12. அதற்கு இயேசு: யாரை பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கி றதே என்றார்? உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக.
13. பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்தபின்பு, என்ன செய்தான்? சில காலம் அவரை விட்டு விலகிப்போனான்.
14. பின்பு இயேசு யாருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்? ஆவியானவருடைய பலத்தினாலே. அவருடைய கீர்த்தி எங்கே பரம்பிற்று? சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. 
15. அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் என்ன செய்தார்? உபதேசித்தார். யாரால் புகழப்பட்டார்? எல்லாராலும் புகழப்பட்டார்.
16. தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத் தின்படியே என்ன செய்தார்? ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். 
17. அப்பொழுது என்ன புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது? ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம். அவர் புஸ்தகத்தை என்ன செய்தார்? விரித்தார். 
18. அவர் புஸ்தகத்தை விரித்து எதைக்கண்டு வாசித்தார்? கர்த்தருடைய ஆவி யானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குண மாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வை யையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு வாசித்தார். 
20. வாசித்து, என்ன செய்தார்? புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத் தில் கொடுத்து, உட்கார்ந்தார். யாருடைய கண்கள் அவர்மேல் நோக்கமாயிருந் தது? ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும்.
21. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி சொன்னது என்ன? உங் கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். 
22. எல்லாரும் அவருக்கு என்ன கொடுத்தார்கள்? நற்சாட்சி கொடுத்தார்கள். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டார்கள். ஆச்சரியப்பட்டு என்ன சொன்னார் கள்? இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள். 
23. அவர் அவர்களை நோக்கி சொன்ன பழமொழி என்ன? வைத்தியனே, உன் னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொன்னார். எதை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம் என்றார்? நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன் னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ் விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். 
24. ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் எங்கே அங்கீகரிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? தன் ஊரிலே அங்கீகரிக் கப்படமாட்டான். 
25. அன்றியும் எலியாவின் நாட்களிலே எத்தனை வருஷம் எத்தனை மாதம் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தது? மூன்று வருஷமும் ஆறுமாதமும். அப்போது, இஸ்ரவேலருக்குள் யார் இருந்தார்கள்? அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
26. ஆயினும் எலியா யாரிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத் தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை? சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரி லிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொ ருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. 
27. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே யார் இருந்தார்கள்? அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள். ஆயினும் யாரே யல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத் தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? சீரியா தேசத்தானா கிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்பட வில்லை.
28. ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, என்ன ஆனார்கள்? கோபமூண்டார்கள். 
29. எழுந்திருந்து, அவரை என்ன செய்தார்கள்? ஊருக்குப் புறம்பே தள்ளி, தங் கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.
30. அவரோ என்ன செய்தார்? அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார். 
31. பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, என்ன செய்தார்? ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். 
32. அவர்கள் எதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்? அவருடைய வசனம் அதி காரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33. ஜெபஆலயத்திலே யார் ஒருவன் இருந்தான்? அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். 
34. அவன் என்ன சொல்லி உரத்தசத்தமிட்டான்? ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்.
35. அதற்கு இயேசு என்ன சொன்னார்? நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார். அப்பொழுது பிசாசு அவனை என்ன செய்தது? ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்க ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
36. எல்லாரும் ஆச்சரியப்பட்டு என்னவென்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்? இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமை யோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 
37. அவருடைய கீர்த்தி எங்கெல்லாம் பிரசித்தமாயிற்று? சுற்றிலுமிருந்த நாடுக ளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று. 
38. பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யார் வீட்டில் பிரவேசித் தார்? சீமோன் வீட்டில். சீமோனுடைய மாமி எப்படி இருந்தாள்? கடும் ஜூர மாய்க் கிடந்தாள். அவளுக்காக யாரை வேண்டிக்கொண்டார்கள்? இயேசுவை.
39. அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, என்னவென்று கட்டளையிட்டார்? ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார். ஜூரம் என்ன ஆனது? அது அவளை விட்டு நீங்கிற்று. உடனே அவள் என்ன செய்தாள்? எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
40. சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் யாரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்? தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்ட வர்களை. அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் என்ன செய்தார்? ஒவ்வொரு வர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக் கினார். 
41. பிசாசுகளும் என்னவென்று சத்தமிட்டு, என்ன செய்தது? நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரை யார் என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேச வொட்டாமல் அதட்டினார்? கிறிஸ்து.
42. உதயமானபோது, அவர் புறப்பட்டு, எங்கே போனார்? வனாந்தரமான ஓரிடத் திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, அவரை என்ன செய்தார்கள்? தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத் திக்கொண்டார்கள்.
43. அவரோ அவர்களை நோக்கி நான் எதற்காக அனுப்பப்பட்டேன் என்றார்? நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். 
44. அந்தப்படியே எங்கே பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்? கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில்.

Saturday, July 25, 2015

லூக்கா - 3

லூக்கா - 3
1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, யூதே யாவுக்கு தேசாதிபதி யார்? பொந்தியு பிலாத்து. காற்பங்கு தேசமாகிய கலிலே யாவுக்கு அதிபதி யார்? ஏரோது. காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதி யார்? பொந்தியு பிலாத்துவின் சகோதர னாகிய பிலிப்பு. காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதி யார்? லிசானியா.  
2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்த ரத்திலே யாருக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று? சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு.
3. யாருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்? கர்த்தருக்கு. யாருக்கு பாதைக ளைச் செவ்வைபண்ணுங்கள்? கர்த்தருக்கு.  
4. எவைகளெல்லாம் நிரப்பப்படும்? பள்ளங்களெல்லாம். எவைகள் தாழ்த்தப்ப டும்? சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும். எவைகள் செவ்வையா கும்? கோணலானவைகள் செவ்வையாகும். எவைகள் சமமாகும்? கரடானவை கள் சமமாகும். 
5. யாரெல்லாம் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்? மாம்சமான யாவ ரும். வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று எந்த தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறது? ஏசாயா. 
6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், எதற்கென்று மனந் திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்? பாவமன் னிப்புக்கென்று.
7. அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திர ளான ஜனங்களை நோக்கி: யார் என்று வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார் என்றான்? விரியன்பாம்புக் குட்டிகளே! என்றான்.
8. எதற்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற. யார் எங்க ளுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்? ஆபி ரகாம். யார் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? தேவன்.
9. இப்பொழுதே எது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது? கோடரி. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு எதிலே போடப்ப டும் என்றான்? அக்கினியிலே.
10. அப்பொழுது யார் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்? ஜனங்கள்.
11. அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: யார் இல்லாதவனுக்குக் கொடுக்கக் கடவன்? இரண்டு அங்கிகளையுடையவன். யாரும் அப்படியே செய்யக்கடவன் என்றான்? ஆகாரத்தை உடையவனும்.
12. ஆயக்காரரும் எதற்காக வந்தார்கள்? ஞானஸ்நானம் பெறவந்தார்கள். ஆயக்காரர் அவனை நோக்கி என்ன கேட்டார்கள்? போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
13. அதற்கு யோவான் சொன்னது என்ன? உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற தற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். 
14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி என்ன கேட்டார்கள்? நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு யோவான் சொன்னது என்ன? நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டா மலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
15. யோவானைக்குறித்து: இவன் யார் என்று ஜனங்களெல்லாரும் எண்ணங் கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருந்தார்கள்? கிறிஸ்துவோ என்று. 
16. யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நான் ஜலத் தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்க ளுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
17. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவி யாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
18. வேறு எவைகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்? அநேக புத்திமதிகளையும்.
19. காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது யோவானாலே ஏன் கடிந்து கொள்ளப் பட்டான்? தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாக வும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும் கடிந்துகொள்ளப் பட்டான். 
20. தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, வேறு என்ன செய் தான்? யோவானையும் காவலில் அடைத்துவைத்தான். 
21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, யாரும் ஞானஸ்நானம் பெற்றார்? இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றார்.  ஜெபம்பண்ணுகையில், எது திறக்கப்பட்டது? வானம் திறக்கப்பட்டது.
22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு எதைப்போல அவர்மேல் இறங்கி னார்? புறாவைப்போல. வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி, என்ன வென்று உரைத்தது? நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக் கிறேன் என்று உரைத்தது. 
23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய எத்தனை வயதுள்ளவரானார்? முப்பது வயதுள்ளவரானார். அவர் யாரென்று எண்ணப்பட்டார்? யோசேப்பின் குமார னென்று. அந்த யோசேப்பு யார்? ஏலியின் குமாரன்.
24. ஏலி யார்? ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் யார்? மாத்தாத் லேவியின் குமாரன். லேவி யார்? லேவி மெல்கியின் குமாரன். மெல்கி யார்? மெல்கி யன்னாவின் குமாரன். யன்னா யார்? யன்னா யோசேப்பின் குமாரன்.
25. யோசேப்பு யார்? யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன். மத்தத்தியா யார்? மத்தத்தியா ஆமோசின் குமாரன். ஆமோஸ் யார்? ஆமோஸ் நாகூமின் குமாரன். நாகூம் யார்? நாகூம் எஸ்லியின் குமாரன். எஸ்லி யார்? எஸ்லி நங்காயின் குமாரன்.
26. நங்காய் யார்? நங்காய் மாகாத்தின் குமாரன். மாகாத் யார்? மாகாத் மத்தத் தியாவின் குமாரன். மத்தத்தியா யார்? மத்தத்தியா சேமேயின் குமாரன். சேமேய் யார்? சேமேய் யோசேப்பின் குமாரன். யோசேப்பு யார்? யோசேப்பு  யூதாவின் குமாரன். யூதா யார்? யூதா யோவன்னாவின் குமாரன்.
27. யோவன்னா யார்? யோவன்னா ரேசாவின் குமாரன். ரேசா யார்? ரேசா சொரொபாபேலின் குமாரன். சொரொபாபேல் யார்? சொரொபாபேல் சலாத்தி யேலின் குமாரன். சலாத்தியேல் யார்? சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28. நேரி யார்? நேரி மெல்கியின் குமாரன். மெல்கி யார்? மெல்கி அத்தியின் குமாரன். அத்தி யார்? அத்தி கோசாமின் குமாரன். கோசாம் யார்? கோசாம் எல்மோதாமின் குமாரன். எல்மோதாம் யார்? எல்மோதாம் ஏரின் குமாரன். ஏர் யார்? ஏர் யோசேயின் குமாரன்.
29. யோசே யார்? யோசே எலியேசரின் குமாரன். எலியேசர் யார்? எலியேசர் யோரீமின் குமாரன். யோரீம் யார்? யோரீம் மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் யார்? மாத்தாத் லேவியின் குமாரன்.
30. லேவி யார்? லேவி சிமியோனின் குமாரன். சிமியோன் யார்? சிமியோன்  யூதாவின் குமாரன். யூதா யார்? யூதா யோசேப்பின் குமாரன். யோசேப்பு  யார்?  யோசேப்பு யோனானின் குமாரன். யோனான் யார்? யோனான் எலியாக் கீமின் குமாரன்.
31. எலியாக்கீம் யார்? எலியாக்கீம் மெலெயாவின் குமாரன். மெலெயா யார்? மெலெயா மயினானின் குமாரன். மயினான் யார்? மயினான் மாத்தாத்தாவின் குமாரன். மாத்தாத்தா யார்? மாத்தாத்தா நாத்தானின் குமாரன். நாத்தான் யார்? நாத்தான் தாவீதின் குமாரன்.
32. தாவீது யார்? தாவீது ஈசாயின் குமாரன். ஈசாய் யார்? ஈசாய் ஓபேதின் குமாரன். ஓபேத் யார்? ஓபேத் போவாசின் குமாரன். போவாஸ் யார்? போவாஸ் சல்மோனின் குமாரன். சல்மோன் யார்? சல்மோன் நகசோனின் குமாரன்.
33. நகசோன் யார்? நகசோன் அம்மினதாபின் குமாரன். அம்மினதாப் யார்? அம்மினதாப் ஆராமின் குமாரன். ஆராம யார்? ஆராம் எஸ்ரோமின் குமாரன். எஸ்ரோம் யார்? எஸ்ரோம் பாரேசின் குமாரன். பாரேஸ் யார்? பாரேஸ்  யூதா வின் குமாரன். யூதா யார்? யூதா யாக்கோபின் குமாரன்.
34. யாக்கோபு யார்? யாக்கோபு ஈசாக்கின் குமாரன். ஈசாக்கு யார்? ஈசாக்கு ஆபிர காமின் குமாரன். ஆபிரகாம் யார்? ஆபிரகாம் தேராவின் குமாரன். தேரா யார்? தேரா நாகோரின் குமாரன்.
35. நாகோர் யார்? நாகோர் சேரூக்கின் குமாரன். சேரூக் யார்? சேரூக் ரெகூவின் குமாரன். ரெகூ யார்? ரெகூ பேலேக்கின் குமாரன். பேலேக் யார்? பேலேக் ஏபே ரின் குமாரன். ஏபேர் யார்? ஏபேர் சாலாவின் குமாரன்.
36. சாலா யார்? சாலா காயினானின் குமாரன். காயினான் யார்? காயினான் அர்ப் பகசாத்தின் குமாரன். அர்ப்பகசாத் யார்? அர்ப்பகசாத் சேமின் குமாரன். சேம் யார்? சேம் நோவாவின் குமாரன். நோவா யார்? நோவா லாமேக்கின் குமாரன்.
37. லாமேக்கு யார்? லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன். மெத்தூசலா யார்? மெத்தூசலா ஏனோக்கின் குமாரன். ஏனோக்கு யார்? ஏனோக்கு யாரேதின் குமா ரன். யாரேத் யார்? யாரேத் மகலாலெயேலின் குமாரன். மகலாலெயேல் யார்? மகலாலெயேல் கேனானின் குமாரன். கேனான் யார்? கேனான் ஏனோசின் குமாரன்.
38. ஏனோஸ் யார்? ஏனோஸ் சேத்தின குமாரன். சேத் யார்? சேத் ஆதாமின் குமாரன். ஆதாம் யார்? ஆதாம் தேவனால் உண்டானவன்.

Thursday, July 23, 2015

லூக்கா - 2

லூக்கா - 2
1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று யாரால் கட்டளை பிறந்தது? அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2. சீரியாநாட்டிலே யார் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று? சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்த போது.
3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் எங்கள் போனார்கள்? தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். 
4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயி ருந்த படியினாலே, குடிமதிப்பெழுதப்படும்படி, போனான்? தனக்கு மனைவி யாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே.
5. யோசேப்பு மரியாளுடன் எந்த ஊருக்குப் போனான்? கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின்  ஊருக்குப் போனான். 
6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்கு என்ன நேரிட்டது? பிரச வகாலம் நேரிட்டது. 
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, எங்கே அவர்களுக்கு இடமில் லாதிருந்த படியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்? சத்திரத்திலே.
8. அப்பொழுது அந்த நாட்டிலே யார் வயல்வெளியில் தங்கினார்கள்? மேய்ப்பர் கள். இராத்திரியிலே என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9. அவ்வேளையில் யார் அவர்களிடத்தில் வந்து நின்றான்? கர்த்தருடைய தூதன். அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது எது? கர்த்தருடைய மகிமை. அவர்கள் என்ன செய்தார்கள்? மிகவும் பயந்தார்கள்.
10. தேவதூதன் அவர்களை நோக்கி என்ன சொன்னான்? பயப்படாதிருங்கள். எதை அறிவிக்கிறேன் என்றான்? இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோ ஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று யார் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்? கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, எங்கே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்? முன்னணையிலே. இதுவே உங்களுக்கு என்ன என்றான்? அடையாளம்.
13. அந்தசஷணமே எது அந்தத் தூதனுடனே தோன்றியது? பரமசேனையின் திரள்.
14. என்ன சொல்லி தேவனைத் துதித்தார்கள்? உன்னதத்திலிருக்கிற தேவ னுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும்  உண் டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். 
15. தேவதூதர்கள் அவர்களை விட்டு எங்கே போனார்கள்? பரலோகத்துக்கு. மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி என்ன சொல்லிக்கொண்டார்கள்? நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப் பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள்.
16. தீவிரமாய் வந்து, என்ன கண்டார்கள்? மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17. கண்டு, எதைக் குறித்து பிரசித்தம் பண்ணினார்கள்? அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைக ளைக்குறித்து என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
19. மரியாளோ என்ன செய்தாள்? அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத் திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20. மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல் லாவற்றிற்காகவும் என்ன செய்து திரும்பிப் போனார்கள்? தேவனை மகிமைப் படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள். 
21. பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டியது எந்த நாள்? எட்டாம் நாள். அந்த நாளில் பிள்ளைக்கு என்ன என்று பேரிட்டார்கள்? அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். 
22. எதன்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது? மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படியே. 
23. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி என்ன செய்தார்கள்? முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்த ருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக் கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத் தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
25. அப்பொழுது யார் எருசலேமில் இருந்தான்? சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன். அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தான்? அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக் கிறவனாயும் இருந்தான். அவன் மேல் யார் இருந்தார்? பரிசுத்தஆவி இருந்தார்.
26. என்ன என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது? கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று.
27. அவன் ஆவியின் ஏவுதலினால் எங்கே வந்திருந்தான்? தேவாலயத்திற்கு. இயேசு என்னும் பிள்ளைக்காக எதன்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருந்தார்கள்? நியாயப்பிரமாண முறைமையின்படி.
28. அப்பொழுது சிமியோன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, என்ன செய்தான்? தேவனை ஸ்தோத்திரித்தான்.
29. சிமியோன் தேவனை ஸ்தோத்திரித்து ஆண்டவரே, உமது வார்த்தையின் படி உமது அடியேனை இப்பொழுது எப்படி போகவிடுகிறீர்? சமாதானத்தோடே.
30. எதை என் கண்கள் கண்டது என்றான்? புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், 
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின 
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். 
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யார் ஆச்சரியப்பட்டார் கள்? யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரி யாளை நோக்கி: சொன்னது என்ன? இதோ, அநேகருடைய இருதய சிந்தனை கள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக் கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக் கப்பட்டிருக்கிறார். 
35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். 
36. அன்னாள் என்பவள் யார்? ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்பவள் ஒரு தீர்க்கதரிசி. அவள் எப்படிப்பட்டவ ளாய் இருந்தாள்? கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, யாரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்? கர்த்த ரைப் புகழ்ந்து.
39. எதை அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊரா கிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்? கர்த்தருடைய நியாயப்பிரமாணத் தின்படி சகலத்தையும்.
40. பிள்ளை வளர்ந்து, எதிலே பெலன் கொண்டது? ஆவியிலே பெலன்கொண் டது. எதினால் நிறைந்தது? ஞானத்தினால் நிறைந்தது. எதுவும் அவர்மேல் இருந்தது? தேவனுடைய கிருபையும்.
41. அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எங்குப் போவார்கள்? எருசலேமுக்குப் போவார்கள். 
42. அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் எதின்படி எருசலேமுக் குப் போனார்கள்? அந்தப் பண்டிகை முறைமையின்படி.
43. பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எங்கே இருந்துவிட்டார்? எருசலேமிலே இருந்துவிட்டார். இது யாருக்குத் தெரி யாதிருந்தது? அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, யாரிடத்தில் அவரைத் தேடினார்கள்? உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45. காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எங்கே போனார்கள்? எருசலே முக்குத் திரும்பிப் போனார்கள்.
46. மூன்றுநாளைக்குப் பின்பு, அவரை எங்கே எப்படிக் கண்டார்கள்? அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிற தைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். 
47. அவர் பேசக்கேட்ட யாவரும் எதைக்குறித்துப் பிரமித்தார்கள்? அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். 
48. தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு என்ன ஆனார்கள்? ஆச்சரியப்பட்டார் கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி என்ன சொன்னார்? மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49. அதற்கு அவர் சொன்ன மறுஉத்தரவு என்ன? நீங்கள் ஏன் என்னைத் தேடினீர் கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர் களா என்றார். 
50. எதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை? தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை.
51. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், என்ன செய்தார்? நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்க திகளையெல்லாம் என்ன செய்து கொண்டாள்? தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள். 
52. இயேசுவானவர் எவைகளிளெல்லாம் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்? ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிக மதிகமாய் விருததியடைந்தார்.

Tuesday, July 21, 2015

லூக்கா - 1

லூக்கா - 1
1. பரிசுத்த லூக்கா இந்த நற்செய்தியை யாருக்கு எழுதுகிறார்? மகா கனம் பொருந்திய தேயோப்பிலுவுக்கு. நாங்கள் எப்படி நம்புகிற சங்கதிகள் என்கி றார்? முழுநிச்சயமாய்.
2. எப்படி வசனத்தைப் போதித்தார்கள்? ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத் தைப் போதித்தார்கள். எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்து எது எழுத அநேகம்பேர் ஏற்பட்டனர்? சரித்திரம். 
3. எப்படி விசாரித்தறிந்தார்? ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித் தறிந்தார். எதை நீர் அறிய வேண்டுமென்கிறார்? நானும் உமக்கு உபதேசிக்கப் பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்கிறார். 
4. அவைகளை எப்படி உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று? ஒழுங்காய் உமக்கு எழுதுவது.
5. யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், யார் இருந்தான்? அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரி யன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி யார்? ஆரோனுடைய குமாரத்திக ளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. 
6. அவர்கள் இருவரும் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்கள்? கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். 
7. எதனால் அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது? எலிசபெத்து மலடியாயி ருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது. இருவரும் எப்படி இருந்தார்கள்? வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.
8. அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி என்ன செய்து வந்தான்? தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவந்தான்.  
9. அந்தக் காலத்தில் ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத் துக்குள் பிரவேசித்து என்ன செய்தான்? தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற் றான். 
10. தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் என்ன செய்து கொண் டிருந்தார்கள்? கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11. அப்பொழுது யார் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிச னமானான்? கர்த்தருடைய தூதன் ஒருவன்.
12. சகரியா அவனைக்கண்டு என்ன ஆனான்? கலங்கி, பயமடைந்தான். 
13. தூதன் அவனை நோக்கி என்ன சொன்னான்? சகரியாவே, பயப்படாதே. உன் வேண்டுதல் என்ன செய்யப்பட்டது? கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலி சபெத்து என்ன செய்வாள்? உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு என்ன என்று பேரிடுவாயாக? யோவான்.
14. உனக்கு என்ன உண்டாகும்? சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் என்ன ஆவார்கள்? சந்தோஷப்படுவார்கள்.
15. அவன் கர்த்தருக்கு முன்பாக எப்படியிருப்பான்? பெரியவனாயிருப்பான். எதைக் குடியான்? திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலி ருக்கும்போதே எதினால் நிரப்பப்பட்டிருப்பான்? பரிசுத்த ஆவியினால்.
16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை யாரிடத்திற்குத் திருப்புவான்? அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17. பிதாக்களுடைய இருதயங்களை யாரிடத்திற்குத் திருப்புவான்? பிள்ளைக ளிடத்திற்கு. கீழ்ப்படியாதவர்களை எதற்குத் திருப்புவான்? நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்புவான். உத்தமமான ஜனத்தை யாருக்கு ஆயத்தப்படுத் தும்படியாக அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்? கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக. 
18. அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி என்ன சொன்னான்? இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19. தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நான் தேவசந்நி தானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்.
20. இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசு வாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ எப்படி இருப்பாய் என்றான்? நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். 
21. ஜனங்கள் எதனால் ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள் சகரியாவுக்குக் காத்தி ருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். 
22. அவன் வெளியே வந்தபோது அவன் என்ன ஆனான்? அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான். அதினாலே அவர்கள் என்னவென்று அறிந்தார்கள்? தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்கு எப்படி இருந்தான்? சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
23. சகரியா எப்போது வீட்டுக்குப் போனான்? அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப் போனான். 
24. அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து என்னஆனாள்? கர்ப்பவதியானாள். எதற்காக கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்தார் என்றாள்? ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாக. 
25. எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, எத்தனை மாதம் வெளிப்ப டாதிருந்தாள்? ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
26. ஆறாம் மாதத்திலே யார் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27. தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு   நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட் டான்? காபிரியேல் என்னும் தூதன். அந்தக் கன்னிகையின் பேர் என்ன? மரியாள்.
28. அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து என்ன சொன்னான்? கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக் குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். 
29. அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, என்ன செய் துகொண்டிருந்தாள்? இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
30. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் என்ன பெற்றாய் என்றான்? கிருபைபெற்றாய்.
31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு என்ன என்று பேரிடுவாயாக? இயேசு.
32. அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்றான்? பெரியவராயிருப்பார், உன்ன தமானவருடைய குமாரன் என்னப்படுவார். கர்த்தராகிய தேவன் எதை அவருக் குக் கொடுப்பார்? அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை.
33. அவர் யாரை என்றென்றைக்கும் அரசாளுவார்? யாக்கோபின் குடும்பத் தாரை. அவருடைய ராஜ்யத்துக்கு என்ன இராது என்றான்? முடிவிராது.
34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி சொன்னது என்ன? இது எப்படியா கும்? புருஷனை அறியேனே என்றாள். 
35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: எது உன்மேல் வரும்?பரிசுத்த ஆவி. எது உன்மேல் நிழலிடும்? உன்னதமானவருடைய பலம். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது யார் என்னப்படும்? தேவனுடைய குமாரன்.
36. இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற யார் தன் முதிர்வயதிலே ஒரு புத்திர னைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்? எலிசபெத். மலடியென்னப்பட்ட அவளுக்கு இது எத்தனையாவது மாதம்? ஆறாம் மாதம்.
37. யாராலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்? தேவனாலே.
38. அதற்கு மரியாள் என்ன சொன்னாள்? இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் என்ன செய்தான்? அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
39. அந்நாட்களில் மரியாள் எழுந்து, எங்கே போனாள்? மலைநாட்டிலே  யூதாவி லுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போனாள். 
40. யார் வீட்டுக்குள் பிரவேசித்து யாரை வாழ்த்தினாள்? சகரியாவின் வீட்டுக் குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41. எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, எது துள்ளிற்று? அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து எதினால் நிரப்பப்பட்டாள்? பரிசுத்த ஆவியினால்.
42. எலிசபெத்து உரத்த சத்தமாய் சொன்னது என்ன? ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 
43. யார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது? என் ஆண்டவரு டைய தாயார்.
44. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என்ன ஆயிற்று? என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. 
45. யார் பாக்கியவதி? விசுவாசித்தவளே பாக்கியவதி. யாராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்? கர்த்தராலே
46. அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா யாரை மகிமைப்படுத்துகிறது என்றாள்? கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47. என் ஆவி யாரில் களிகூருகிறது என்றாள்? என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 
48. அவர் எதை நோக்கிப் பார்த்தார்? தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார். இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னை யார் என்பார்கள்? பாக்கியவதி என்பார்கள்.
49. யார் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்? வல்லமையுடையவர். அவருடைய நாமம் எப்படிப்பட்டது? பரிசுத்தமுள்ளது.
50. அவருடைய இரக்கம் யாருக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது? அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு.
51. கர்த்தர் எதினாலே பராக்கிரமஞ்செய்தார்? தம்முடைய புயத்தினாலே. இருத யசிந்தையில் அகந்தையுள்ளவர்களை என்ன செய்தார்? சிதறடித்தார்.
52. பலவான்களை என்ன செய்தார்? ஆசனங்களிலிருந்து தள்ளினார். தாழ்மை யானவர்களை என்ன செய்தார்? உயர்த்தினார். 
53. பசியுள்ளவர்களை என்ன செய்தார்? நன்மைகளினால் நிரப்பினார். ஐசுவரிய முள்ளவர்களை என்ன செய்தார்? வெறுமையாய் அனுப்பிவிட்டார். 
54. நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்ன செய்தார்? என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்தார். 
55. தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை என்ன செய்தார் என்றாள்? ஆதரித் தார். 
56. மரியாள் ஏறக்குறைய எத்தனை மாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக் குத் திரும்பிப்போனாள்? மூன்றுமாதம். 
57. எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் யாரைப் பெற் றாள்? ஒரு புத்திரனைப் பெற்றாள். 
58. கர்த்தர் அவளிடத்தில் எதை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோ ஷப்பட்டார்கள்? தம்முடைய இரக்கத்தை.
59. எட்டாம்நாளிலே பிள்ளைக்கு என்ன பண்ணும்படிக்கு அவர்கள் வந்தார்கள்? விருத்தசேதனம். அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்கு என்ன என்று பேரிடப்போனார்கள்? சகரியா.
60. அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு என்ன என்று பேரிட வேண் டும் என்றாள்? யோவான். 
61. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொன்னார்கள். 
62. அதின் தகப்பனை நோக்கி என்ன என்று சைகையினால் கேட்டார்கள்? இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்.
63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் என்ன என்று எழுதினான்? யோவான். எல்லாரும் என்ன ஆனார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
64. உடனே அவனுடைய வாய் என்ன செய்தது? திறக்கப்பட்டது. அவனுடைய நாவு என்ன செய்தது? கட்டவிழ்க்கப்பட்டது. அவன் என்ன பேசினான்? தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
65. அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் என்ன உண்டா யிற்று? பயமுண்டாயிற்று. மேலும் எங்கெல்லாம் இந்த வர்த்தமானங்களெல் லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது? யூதேயாவின் மலைநாடெங்கும்.
66. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே என்ன என்றார்கள்? அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதா யிருக்குமோ என்றார்கள். எது அந்தப் பிள்ளையோடே இருந்தது? கர்த்தரு டைய கரம்.
67. அவனுடைய தகப்பனாகிய சகரியா என்ன ஆனான்? பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனம் சொன்னான்.  
68. சகரியா இயேசுவைக்குறித்து சொன்ன தீர்க்கதரிசனம் என்ன? இஸ்ரவே லின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 
69. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70. தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: 
71. உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத் தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறை வேற்றுவதற்கும்;
73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கி னால் தாம் சொன்னபடியே, 
74. தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின் றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு, 
75. தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார். 
76. தனது பாலகனைக்குறித்து சொன்ன தீர்க்கதரிசனம் என்ன? நீயோ பால கனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக் குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன் னாக நடந்துபோவாய். 
78. அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச் சம் தரவும், 
79. நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக் கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித் திருக்கிறது என்றான். 
80. அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் எங்கே இருந்தான்? வனாந்தரங்க ளிலே இருந்தான்.

Wednesday, July 8, 2015

மாற்கு – 16

மாற்கு – 16
1. ஓய்வுநாளானபின்பு யாரெல்லாம் அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவை களை வாங்கிக்கொண்டு. வந்தார்கள்? மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்.
2. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது எங்கே வந்தார்கள்? கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
3. என்ன என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்? கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான்.
4. அந்தக் கல் எப்படிப்பட்டதாயிருந்தது? மிகவும் பெரிதாயிருந்தது. அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, என்ன கண்டார்கள்? அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார் கள்.
5. அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, யாரைக் கண்டு பயந்தார்கள்? வெள் ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.
6. அவன் அவர்களை நோக்கி, என்ன சொன்னான்? பயப்படாதிருங்கள், சிலுவை யில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த் தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7. நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்; உங்க ளுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னப டியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
8. எதனால் அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடி னார்கள்? நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால். அவர்கள் எதனால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள்? பயந்திருந்தபடியினால்.
9. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, யாருக்கு முதன்முதல் தரிசனமானார்? மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
10. அவளிடத்திலிருந்து அவர் எத்தனை பிசாசுகளைத் துரத்தியிருந்தார்? ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர் கள் என்ன செய்து கொண்டிருக்கையில் அவர்களிடத்தில் போய், அந்தச் செய் தியை அறிவித்தாள்? துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில்.
11. அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது என்ன செய்யவில்லை? நம்பவில்லை.
12. அதன்பின்பு இயேசு யாருக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்? அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூப மாய்த் தரிசனமானார்.
13. அவர்களும் போய், என்ன செய்தார்கள்? அதை மற்றவர்களுக்கு அறிவித் தார்கள். அவர்களையும் அவர்கள் என்ன செய்யவில்லை? நம்பவில்லை.
14. அதன்பின்பு பதினொருவரும் என்ன செய்து கொண்டிருக்கையில் அவர்க ளுக்கு அவர் தரிசனமானார்? போஜனபந்தியிலிருக்கையில். இயேசு எதைக்கு றித்து அவர்களைக் கடிந்து கொண்டார்? உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்ட வர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத் தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்து கொண் டார்.
15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ் டிக்கும் எதைப் பிரசங்கியுங்கள் என்றார்? சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்றார்.
16. யார் இரட்சிக்கப்படுவான்? விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்ற வன் இரட்சிக்கப்படுவான். யார் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்? விசு வாசியாதவன்.
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் எவைகள்? என் நாமத்தி னாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத் துக் கொள்ளப்பட்டு, எங்கே உட்கார்ந்தார்? தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
20. அவர்கள் புறப்பட்டுப்போய், என்ன செய்தார்கள்? எங்கும் பிரசங்கம்பண்ணி னார்கள். கர்த்தர் அவர்களுடனேகூட எதை நடப்பித்தார்? கிரியையை நடப்பித் தார். அவர்களால் நடந்த அடையாளங்களினாலே எதை உறுதிப்படுத்தினார்? வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

Sunday, July 5, 2015

மாற்கு – 15

மாற்கு – 15
1. பொழுது விடிந்தவுடனே, யாரெல்லாம் கூடி ஆலோசனைபண்ணினார்கள்? பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனை வரும் கூடி ஆலோசனைபண்ணினார்கள். இயேசுவைக் கட்டிக்கொண்டுபோய், யாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்? பிலாத்துவினிடத்தில்.
2. பிலாத்து அவரை நோக்கி என்ன கேட்டான்? நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: என்ன சொன்னார்? நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
3. யார் அவர்மேல் அநேகங் குற்றங்களைச் சாட்டினார்கள்? பிரதான ஆசாரியர் கள். அவரோ என்ன சொல்லவில்லை? மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
4. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி என்ன கேட்டான்? இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும்  சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
5. எதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்? இயோசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
6. பண்டிகை தோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது என்ன? காவல் பண் ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட் டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டி கைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.
7. பரபாஸ் என்பவன் யார்? கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவன் பரபாஸ்.
8. ஜனங்கள் என்ன என்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள்? வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள்.
9. பிலாத்து எதை அறிந்தான்? பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்தான்.
10. பிலாத்து என்ன என்று கேட்டான்? அவர்களை நோக்கி: நான்  யூதருடைய  ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.
11. பிரதான ஆசாரியர்கள் ஜனங்களை என்னவென்று ஏவிவிட்டார்கள்? பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக் கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.
12. பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி என்ன கேட்டான்? அப்படியானால்,  யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
13. யூதருடைய ராஜாவை என்ன செய்ய வேண்டும் என்று மறுபடியும் சத்த மிட்டுச் சொன்னார்கள்? அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
14. அதற்குப் பிலாத்து என்ன சொன்னான்? ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ என்ன வென்று கூக்குரலிட்டுச் சொன்னார்கள்?அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட் டுச் சொன்னார்கள்.
15. அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், என்ன செய்தான்? பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரி னால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
16. அப்பொழுது போர்ச்சேவகர் என்ன செய்தார்கள்? (இயேசுவை) அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத் தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,
17. சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்;முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:
18. யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
19. அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
20. அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, என்ன செய்தார்கள்? சிவப்பான அங்கி யைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலு வையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
21. யாரை எங்கே அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பல வந்தம் பண்ணினார்கள்? சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில்.
22. எங்கே அவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்? கபாலஸ்தலம்  என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டு போனார்கள்.
23. எதை அவருக்குக்  குடிக்கக் கொடுத்தார்கள்? வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை. அவர் அதை என்ன செய்தார்? ஏற்றுக்கொள்ளவில்லை.
24. அப்பொழுது அவரை என்ன செய்தார்கள்? சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு என்ன செய்தார்கள்? அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக் கொள்ளும்படி அவைகளைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.
25. அவரைச் சிலுவையில் அறைந்தபோது நேரம் என்ன? மூன்றாம்மணி வேளையாயிருந்தது.
26. அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, என்ன செய்தார்கள்? யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல்  கட்டினார்கள்.
27. அல்லாமலும், அவரோடே கூட யாரைச் சிலுவையில் அறைந்தார்கள்? அவ ருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனு மாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
28. அதினாலே என்ன என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று? அக்கிரமக்கார ரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினாலே நிறை வேறிற்று.
29. அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் என்னவென்று அவரைத் தூஷித்தார் கள்? தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே.
30. உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
31. அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம் பண்ணி, என்னவென்று நிந்தித்தார்கள்? மற்றவர்களை இரட்சித்தான், தன் னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை.
32. நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார் கள்.
33. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும்  பூமியெங்கும்  என்ன உண்டாயிற்று? அந்தகாரம்.
34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு என்னவென்று கூப்பிட்டார்? எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என்னவென்று அர்த்தமாம்? என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கை விட்டீர் என்று அர்த்தமாம்.
35. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, யாரைக் கூப்பிடுகிறான் என்றார்கள்? எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
36. ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து, என்னவென்று சொன்னான்? பொறுங் கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
37. இயேசு எப்படி ஜீவனை விட்டார்? மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
38. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை என்ன ஆனது? மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
39. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டுஜீவனை விட்டதைக் கண்டபோது, என்ன சொன்னான்? மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
40. சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள், அவர்கள் யார்? அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய் துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயா கிய மரியாளும், சலோமே என்பவளும்,
41. அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.
42. ஓய்வுநாளுக்கு முந்தினநாள் என்ன நாள்? ஆயத்தநாள். 
43. யோசேப்பு என்பவன் யார்? கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய வன் யோசேப்பு. யோசேப்பு வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய் என்ன கேட்டான்? இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
44. பிலாத்து என்னவென்று ஆச்சரியப்பட்டான்? அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டான். பிலாத்து ஆச்சரியப் பட்டு நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து என்ன கேட்டான்? அவர் இதற் குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
45. நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, என்ன செய் தான்? சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.
46. யோசேப்பு போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே  சுற்றி, எங்கே வைத்தான்? கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.
47. அவரை வைத்த இடத்தை யாரெல்லாம் பார்த்தார்கள்? மகதலேனா மரியா ளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

Wednesday, July 1, 2015

மாற்கு – 14

மாற்கு – 14
1. இரண்டு நாளைக்குப்பின்பு என்ன பண்டிகை வந்தது? புளிப்பில்லாத அப்பஞ் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது யாரெல்லாம் அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்.
2. ஆகிலும் எதினாலே பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்? ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
3. அவர் பெத்தானியாவில் யார் வீட்டில் போஜனபந்தி இருந்தார்? குஷ்டரோகி யாயிருந்த சீமோன் வீட்டிலே  போஜனபந்தியிருந்தார். அங்கு ஒரு ஸ்திரீ என்ன செய்தாள்? விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக்கொண்டு வந்து, அதை உடைத்து, அந்தத்     தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள்.
4. அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே என்ன ஆனார்கள்? விசனமடைந்தார்கள். விசனமடைந்து என்னவென்று முறுமுறுத்தார்கள்? இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
5. இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக் குறித்து முறுமுறுத்தார்கள்.
6. இயேசு அவர்களை நோக்கி சொன்னது என்ன? அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? அவள் என்னிடத்தில் என்ன செய்தி ருக்கிறாள்? நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
7. யார் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்? தரித்திரர். உங்களுக்கு மன துண்டாகும்போதெல்லாம் நீங்கள் யாருக்கு நன்மை செய்யலாம்? தரித்திர ருக்கு. நானோ எப்போது உங்களிடத்தில் இரேன்? எப்போதும்.
8. இவள் எதைச் செய்தாள்? தன்னால் இயன்றதைச் செய்தாள். எதற்கு எத்தன மாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்? நான் அடக்கம்பண்ணப் படுவதற்கு எத்தனமாக.
9. எது உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்றார்? இந்தச் சுவிசேஷம்.
10. அப்பொழுது, யார் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும் படி அவர்களிடத்திற்குப் போனான்? பன்னிருவரில் ஒருவனாகிய  யூதாஸ்காரி யோத்து என்பவன்.
11. அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, என்னவென்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்? அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று. அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு என்ன பார்த்துக்கொண்டிருந்தான்? தகுந்த சமயம் பார்த் துக்கொண்டிருந்தான்.
12. பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: என்னவென்று கேட்டார்கள்? நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
13. அவர் தம்முடைய சீஷரில் இரண்டு பேரை நோக்கி நீங்கள் எங்கே போங்கள் என்றார்? நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள். அங்கே  யார் பின்னே போங்கள் என்றார்? தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படு வான். அவன் பின்னே போங்கள்.
14. அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி சொல்லவேண்டியது என்ன என்றார்? நான் என் சீஷரோடுகூடப் பஸ் காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
15. அவன் எந்த வீட்டை உங்களுக்குக் காண்பிப்பான் என்றார்? கம்பளம் முதலா னவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்ட றையை உங்களுக்குக் காண்பிப்பான். அங்கே என்ன செய்யுங்கள் என்றார்? நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
16. அப்படியே, அவருடைய சீஷர் என்ன செய்தார்கள்? புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணி னார்கள்.
17. சாயங்காலமானபோது, அவர் யாரோடுகூட அவ்விடத்திற்கு வந்தார்? பன்னிருவரோடுங்கூட.
18. அவர்கள் பந்தியமர்ந்து போஜனம் பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: யார் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன் என்றார்? என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்.
19. அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து சொல்லிக்கொண்டது என்ன? நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள்.
20. அவர் பிரதியுத்தரமாக என்ன சொன்னார்? என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொன்னார்.
21. மனுஷகுமாரன் எப்படிப் போகிறார்? தம்மைக்குறித்து எழுதியிருக்கிறப டியே போகிறார். ஆகிலும், எந்த மனுஷனுக்கு ஐயோ? எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ!. அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு எப்படியிருக்கும் என்றார்? நலமாயிருக்கும் என்றார்.
22. அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வ தித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து என்ன சொன்னார்? நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
23. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை என்ன செய் தார்? அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே என்ன செய்தார் கள்? பானம்பண்ணினார்கள்.
24. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது என்னவாயிருக்கிறது என்றார்? அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்த மாயிருக்கிறது.
25. எதுவரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை யென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? நான் தேவனு டைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள் வரைக்கும்.
26. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, எங்கே புறப்பட்டுப்போனார் கள்? ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
27. அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: என்ன என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்? மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிற படி.
28. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே எங்கேபோ வேன் என்றார்? கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
29. அதற்குப் பேதுரு என்ன சொன்னான்? உமதுநிமித்தம் எல்லாரும் இடறல டைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.
30. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, எதுக்கு முன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே  உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே.
31. அதற்கு அவன் சொன்னது என்ன? நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயி ருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான். எல்லாரும் என்ன சொன்னார்கள்? அப்படியே சொன்னார்கள்.
32. பின்பு எங்கே வந்தார்கள்? கெத்செமனே எனப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி என்ன சொன்னார்? நான் ஜெபம்பண்ணுமளவும்  இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொன்னார்.
33. பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக் கொண்டுபோய், என்ன செய்தார்? திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
34. அப்பொழுது அவர் அவர்களிடம் என்ன சொன்னார்? என் ஆத்துமா மரணத் துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங் கள் என்று சொன்னார்.
35. சற்று அப்புறம்போய், என்னவென்று வேண்டிக்கொண்டார்? தரையிலே விழுந்து, அந்த வேளை  தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.
36. அப்பா பிதாவே, எல்லாம் யாராலே கூடும்? உம்மாலே கூடும். எதை என்னி டத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்மு டைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்? இந்தப் பாத்திரத்தை.
37. பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, யாரை நோக்கி: நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக் கக்கூடாதா என்றார்? பேதுருவை நோக்கி.
38. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு என்ன செய்யுங்கள்? விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி எப்படிப்பட்டது? உற்சாகமுள்ளது. மாம்சமோ எப்படிப்பட்டது? பலவீனமுள்ளது. 
39. அவர் மறுபடியும் போய் எதைச் சொல்லி ஜெபமபண்ணினார்? அந்த வார்த் தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
40. அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் என்ன செய்கிறதைக் கண்டார்? மறுபடி யும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார். எதனால் தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்? அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால்.
41. அவர் மூன்றாந்தரம் வந்து என்ன சொன்னார்? இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளு டைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
42. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
43. உடனே, அவர் இப்படிப் பேசுகையில், வந்தது யார்? பன்னிருவரில் ஒருவ னாகிய யூதாஸ் வந்தான். அவனோடேகூட யாரெல்லாம் வந்தார்கள்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்ட யங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
44. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: எதை அவர்களுக்குக் குறிப்புச் சொல்லி யிருந்தான்? நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.
45. அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து என்ன செய்தான்? ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
46. அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்மேல் கைபோட்டு, அவரை பிடித்தார்கள்.
47. அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் என்ன செய்தான்? கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
48. இயேசு அவர்களை நோக்கி: எப்படி என்னைப் பிடிக்கவந்தீர்கள் என்றார்? கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளை யும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
49. நான் தினந்தோறும் எங்கே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன் என்றார்? உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்.    அப்பொழுது நீங்கள் என்ன செய்யவில்லை? என்னைப் பிடிக்கவில்லை. ஆனா லும் எவைகள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார்? வேதவாக்கியங் கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார்.
50. அப்பொழுது எல்லாரும் என்ன செய்தார்கள்? அவரை விட்டு ஓடிப்போனார் கள்.
51. ஒரு வாலிபன் என்ன செய்தான்? ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான். அவனை என்ன செய்தார்கள்? பிடித்தார்கள்.
52. அப்போது அவன் என்ன செய்தான்? தன் துப்பட்டியைப் போட்டு விட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.
53. இயேசுவை அவர்கள் யாரிடத்தில் கொண்டுபோனார்கள்? பிரதான ஆசாரிய னிடத்தில் கொண்டுபோனார்கள். அங்கே யாரெல்லாம் கூடிவந்திருந்தார்கள்? ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.
54. பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, என்ன செய்து கொண்டிருந் தான்? பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர் காய்ந்துகொண்டிருந்தான்.
55. அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக என்ன தேடினார் கள்? சாட்சி தேடினார்கள். சாட்சி என்ன ஆனது? அகப்படவில்லை.
56. அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சி கள் என்ன ஆயிற்று? ஒவ்வவில்லை.
57. அப்பொழுது சிலர் எழுந்து, என்ன என்று இவன் சொன்னதை நாங்கள் கேட் டோம் என்றார்கள்? கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப் போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டு வேன்.
58. அவருக்கு விரோதமாய் என்ன சொன்னார்கள்? பொய்ச்சாட்சி சொன்னார் கள்.
59. அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி என்ன ஆயிற்று? ஒவ்வாமற் போயிற்று.
60. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி என்ன கேட்டான்? இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
61. அவரோ என்ன செய்தார்? ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி என்ன கேட்டான்? நீ ஸ்தோத் தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
62. அதற்கு இயேசு எதைக் காண்பீர்கள் என்றார்? நான் அவர் தான்; மனுஷகுமா ரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
63. பிரதான ஆசாரியன்  இதைக் கேட்டவுடனே, என்ன செய்தான்? தன் வஸ்தி ரங்களைக் கிழித்துக் கொண்டான். தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு எது நமக்கு வேண்டியது என்ன என்றான்? இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டிய தென்ன?
64. எதைக் கேட்டீர்களே என்றான்? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே என்றான். உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லா ரும் என்ன சொன்னார்கள்? இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
65. அப்பொழுது சிலர் என்ன செய்தார்கள்? அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக்  குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள். வேலைக்காரரும் என்ன செய் தார்கள்? அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
66. அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில் அவனி டத்தில் வந்தது யார்? பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்தாள்.
67. பேதுரு என்ன செய்துகொண்டிருந்தான்? குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அவள் அவனை உற்றுப் பார்த்து சொன்னது என்ன? நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.
68. அதற்கு அவன் என்ன செய்தான்? நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான். அப்பொழுது எது கூவிற்று? சேவல் கூவிற்று.
69. வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு இவன் யார் என்று யாரிடம் சொன்னாள்? இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
70. அவன் மறுபடியும் என்ன செய்தான்? மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப் பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து சொன்னது என்ன? மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
71. அதற்கு அவன் என்ன செய்தான்? நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறி யேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
72. உடனே சேவல் என்ன செய்தது? இரண்டாந்தரம் கூவிற்று. பேதுரு எதை நினைவு கூர்ந்தான்? சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்தான். பேதுரு நினைவு கூர்ந்து என்ன செய்தான்? மிகவும் அழுதான்.