Wednesday, January 28, 2015

மத்தேயு – 7

மத்தேயு – 7
1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு என்ன செய்யுங்கள்? மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
2. எதன்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்? நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். எதன்படியே உங்களுக்கும் அளக் கப்படும்? நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
3. நீ உன் கண்ணிலிருக்கிற எதை உணராமல் இருக்கிறாய்? உத்திரத்தை. நீ உன் சகோதரன் கண்ணிலிருக்கிற எதை பார்க்கிறாய்? துரும்பை. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற எதைப் பார்க்கிறாய்? துரும்பை. உன் கண்ணில் என்ன இருக்கிறது? உத்திரம். உன் சகோதரன் கண்ணில் என்ன இருக்கிறது? துரும்பு. 
4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் யாரை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? உன் சகோதரனை நோக்கி.
5. தன் கண்ணில் உத்திரம் இருக்கையில் தன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று சொல்லுகிறவன் யார்? மாயக்காரன். முன்பு என்ன செய்ய வேண்டும்? முன்பு உன் கண்ணிலிருக் கிற உத்திரத்தை எடுத்துப்போடவேண்டும். பின்பு என்ன செய்ய வேண்டும்? பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்க்க வேண்டும்.
6. பரிசுத்தமானதை எதுக்குக் கொடுக்கக்கூடாது? நாய்களுக்குக் கொடுக்கக் கூடாது. உங்கள் முத்துகளை எதுக்குமுன் போடக்கூடாது? பன்றிகள்முன் போடக்கூடாது. உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போட்டால் என்ன ஆகும்? தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்க ளைப் பீறிப்போடும்.
7. கேட்டால் அப்பொழுது என்ன ஆகும்? உங்களுக்குக் கொடுக்கப்படும். எப் பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்? கேட்கும்போது. தேடுங்கள் அப்பொ ழுது என்ன ஆகும்? கண்டடைவீர்கள். எப்பொழுது கண்டடைவீர்கள்? தேடும் போது. தட்டுங்கள் அப்பொழுது என்ன ஆகும்? திறக்கப்படும். எப்பொழுது உங்க ளுக்குக் திறக்கப்படும்? தட்டும்போது. 
8. யார் பெற்றுக்கொள்ளுகிறான்? கேட்கிறவன். யார் கண்டடைகிறான்? தேடு கிறவன். யாருக்குத் திறக்கப்படும்? தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? கொடுக்க மாட்டான்.
10. மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? கொடுக்க மாட் டான்.
11. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள்? நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு எப்படிப்பட்டவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்? நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம். பொல்லாதவர் களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்தி ருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு எவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்.
12. மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவை களை  நீங்களும் யாருக்குச் செய்ய வேண்டும்? மனுஷர் உங்களுக்கு எவைக ளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். எது நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்? மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்: இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
13. எப்படிப்பட்ட வாசல் வழியாய் உட்பிரவேசிக்க வேண்டும்? இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க வேண்டும். கேட்டுக்குப் போகிற வாசல் எப்படியிருக்கிறது? கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயி ருக்கிறது. எந்த வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்? கேட்டுக்குப் போகிற வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
14. ஜீவனுக்குப் போகிற வாசல் எப்படியிருக்கிறது? ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. எந்த வாசலைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்? ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
15. கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எப்படியிருக்க வேண்டும்? எச்சரிக்கையாயி ருக்க வேண்டும். யாருக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்? கள்ளத் தீர்க்க தரிசிகளுக்கு. யார் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்? கள்ளத் தீர்க்கதரிசிகள். யார் உள்ளத்தில் பட்சிக்கிற ஓநாய்கள்? கள்ளத் தீர்க்கதரிசிகள்.
16. தீர்க்க தரிசிகளை எதினாலே அவர்களை அறிவீர்கள்? அவர்களது கனிகளி னாலே. முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? இல்லை.
17. நல்ல மரமெல்லாம் என்ன கனிகளைக் கொடுக்கும்?  நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரமோ என்ன கனிகளைக் கொடுக்கும்?  கெட்ட கனிக ளைக் கொடுக்கும்.
18. நல்ல மரம் என்ன கனிகளைக் கொடுக்கமாட்டாது? கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது. கெட்ட மரம் என்ன கனிகளைக் கொடுக்கமாட்டாது? நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
19. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, எங்கே போடப்படும்? நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
20. எதினாலே ஒருவரை அறிவீர்கள்?  அவர்களுடைய கனிகளினாலே அறிவீர்கள்.
21. பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பவன் யார்? பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை? என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை.
22. கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? என்று சொல்லுவது யார்? அநேகர். உமது நாமத்தினாலே பிசாசு களைத் துரத்தினோம் அல்லவா? என்று சொல்லுவது யார்? அநேகர். உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்று சொல்லு வது யார்? அநேகர். அந்நாளில் அநேகர் கர்த்தரை நோக்கி சொல்லுவது என்ன? அந்நாளில் அநேகர் கர்த்தரை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத் தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசு களைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்க ளைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அவர்களை நோக்கி கர்த்தர் அவர்களுக்குச் சொல்லுவேன் சொல்லுவது என்ன? நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக் காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் என்கிறார். யார் கர்த்தரை விட்டு அகன்று போகவேண்டும்? அக்கிரமச் செய் கைக்காரர்.
24. யாரைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷ னுக்கு ஒப்பிடுவேன் என்கிறார்? நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன் என்கிறார்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், எது விழவில்லை? கன்மலையின்மேல் கட்டியவீடு. ஏன் அந்த வீடு விழவில்லை? ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்தி பாரம் போடப்பட்டிருந்தது.
26. யார் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான் என்கிறார்?  நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான் என்கிறார்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதினபோது எது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்? மணலின்மேல் கட்டின வீடு.
28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் யாரைப் போல் போதிக்கவில்லை? வேதபாரகரைப்போல் போதிக்கவில்லை. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் யாரைப் போல் போதித் தார்? அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்.
29. ஜனங்கள் எதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள் இயேசுவினு டைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tuesday, January 27, 2015

மத்தேயு – 6

மத்தேயு – 6
1. இயேசு எதற்கு எச்சரிக்கையாயிருங்கள் என்கிறார்?  மனுஷர் காணவேண் டுமென்று அவர்களுக்கு முன்பாக தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள் என்கிறார்.  இயேசு எப்பொழுது பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை என்கிறார்? மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்தால், பரலோ கத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை என்கிறார்.
2. நீ தர்மஞ்செய்யும்போது, எதற்கு உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே என்கிறார்?  மனுஷரால் புகழப்படுவதற்கு, உனக்கு முன்பாக தாரை ஊதுவி யாதே என்கிறார். நீ தர்மஞ்செய்யும்போது, யாரைப்போல உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே என்கிறார்?   மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே என்கிறார். யார் தர்மம் செய்யும்போது தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவித்தால் அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
3. நீ செய்யும் தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்கிறார்? உன் தர்மம் அந்த ரங்கமாயிருக்க வேண்டும் என்கிறார். நீ தர்மஞ்செய்யும்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்கிறார்? நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் வலதுகை செய்கி றதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது என்கிறார்.
4. உன் தர்மத்தை உன் பிதா எப்படி பார்க்கிறார்? அந்தரங்கத்தில் பார்க்கிறார். உன் பிதா உனக்கு எப்படி பலனளிப்பார்? உன் பிதா தாமே உனக்கு வெளியரங் கமாய்ப் பலனளிப்பார்.
5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது யாரைப்போலிருக்க வேண்டாம் என்கிறார்?  மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம் என்கிறார். மாயக்காரர் எங்கே நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்?  மாயக்காரர் மனுஷர் காணும் படியாக ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். யார் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்?  மனுஷர் காணும்படியாக ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிற மாயக்காரர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
6. நீ ஜெபம்பண்ணும்போது எங்கு ஜெபம் பண்ண வேண்டும்? உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி ஜெபம் பண்ண வேண்டும். நீ ஜெபம்பண்ணும்போது யாரை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும்? அந்தரங் கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும். எப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்? நீ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணும்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். 
7. நீங்கள் ஜெபம் பண்ணும்போது யாரைப்போல வீண்வார்த்தைகளை அலப்ப வேண்டாம் என்கிறார்? அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்ப வேண்டாம் என்கிறார். அஞ்ஞானிகள் எதனால் தங்கள் ஜெபம் கேட்கப்படு மென்று நினைக்கிறார்கள்? அஞ்ஞானிகள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
8. யாரைப்போல நீங்கள் ஜெபம் செய்யாதிருங்கள் என்கிறார்? அஞ்ஞானிக ளைப் போல நீங்கள் ஜெபம் செய்யாதிருங்கள் என்கிறார். உங்கள் பிதா, உங்க ளுக்கு இன்னது தேவை என்று எப்பொழுது அறிந்திருக்கிறார்?  உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
9. யாரை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும். யாருடைய நாமம் பரிசுத்தப்பட வேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற பிதாவின் நாமம் பரிசுத்தப்பட வேண்டும்.
10. யாருடைய ராஜ்யம் வரவேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற பிதாவின் ராஜ்யம் வரவேண்டும். பிதாவின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல எங்கேயும் செய்யப்பட வேண்டும்? பூமியிலேயும் செய்யப்பட வேண் டும். 
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை என்று எங்களுக்குத் தரவேண்டும்? எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தரவேண்டும்.
12. எதைப்போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னிக்க வேண்டும்? எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னிக்க வேண்டும்.
13. எங்களை எதற்குட்படப்பண்ண வேண்டாம்? எங்களைச் சோதனைக்குட் படப் பண்ண வேண்டாம். எதினின்று எங்களை இரட்சிக்க வேண்டும்? தீமையி னின்று எங்களை இரட்சிக்க வேண்டும். என்றென்றைக்கும் உம்முடையவை கள் எவைகள்? ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகள்.
14. யாருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னிப்பார்? மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னிப்பார்.
15. யாருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்? மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
16. நீங்கள் உபவாசிக்கும்போது, யாரரைப்போல முகவாடலாய் இருக்க வேண்டாம்? மாயக்காரரைப்போல முகவாடலாய் இருக்க வேண்டாம். யார் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்? மாயக்காரர்.   யார் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? மாயக்;காரர். 
17. நீங்கள் உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் யாருக்குக் காணப்படக் கூடாது?  நீங்கள் உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படக் கூடாது. நீங்கள் உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் யார் காணப் படும்படியாக இருக்க வேண்டும்? அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக இருக்க வேண்டும். நீ உபவாசிக்கும்போது, அந்த உபவா சம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதா வுக்கே காணப்படும்படியாக, என்ன செய்ய வேண்டும்?  உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் மகத்தைக் கழுவவேண்டும்.
18. நீ எப்படி உபவாசிக்கும் போது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்? நீ உபவாசிக்கும்போது, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவும்போது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.
19. எங்கே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்? பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம். எங்கே பூச்சியும் துருவும் உங்கள் பொக்கிஷங்களைக் கெடுக்கும்? பூமியிலே பூச்சியும் துருவும் உங்கள் பொக்கிஷங்களைக் கெடுக்கும். எங்கே உங்கள் பொக்கிஷங்களைத் திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்?  பூமியிலே உங்கள் பொக்கிஷங்களைத் திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
20. எங்கே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டும்? பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். எங்கே பூச்சியாவது துருவாவது உங்கள் பொக்கிஷங்களைக் கெடுக்கிறதும் இல்லை? பரலோகத்திலே பூச்சியாவது துருவாவது உங்கள் பொக்கிஷங் களைக் கெடுக்கிறதும் இல்லை. எங்கே உங்கள் பொக்கிஷங்களைத் திருடரும் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை? பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங் களைத் திருடரும் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
21. உங்கள் இருதயம் எங்கே இருக்கிறது? உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக் கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கிறது.
22. சரீரத்தின் விளக்காயிருக்கிறது எது? கண். எப்பொழுது உன் சரீரம் முழுவ தும் வெளிச்சமாயிருக்கும்? உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவ தும் வெளிச்சமாயிருக்கும்.
23. எப்பொழுது உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்? உன் கண் கெட்டதா யிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். எப்பொழுது அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்? உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்.
24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய யாரால் கூடாது? இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. இரண்டு எஜமான் களுக்கு ஊழியஞ் செய்யகிறவன் என்ன செய்வான்? ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்ற வனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய யாரால் கூடாது? தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
25. என்னவென்று உங்கள் ஜீவனுக்காக கவலைப்படாதிருங்கள்? என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காக கவலைப் படாதிருங்கள். என்னவென்று உங்கள் சரீரத்துக்காக கவலைப்படாதிருங்கள்? என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காக கவலைப்படாதிருங்கள். ஆகாயத்தைப்பார்க்கிலும் எது விசேஷித்தவை? ஜீவன். உடையைப்பார்க்கி லும் எது விசேஷித்தவை? சரீரம்.
26. எவைகளைக் கவனித்துப்பாருங்கள்? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள். ஆகாயத்துப் பட்சிகள் என்ன செய்கிறதில்லை? ஆகாயத்துப் பட்சி கள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதும் இல்லை. எவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்? ஆகாயத்துப் பட்சிகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். எவைக ளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்? ஆகாயத்துப் பட்சிகளைப் பார்க் கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்.
27. எதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டு வான்? கவலைப்படுகிறதினாலே.
28. எதுக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன. எவைகள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங் கள். காட்டுப் புஷ்பங்கள் என்ன செய்கிறதில்லை? காட்டுப் புஷ்பங்கள் உழைக்கைகிறதுமில்லை, நூற்கிறதுமில்லை.
29. என்றாலும், யார் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையி லும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
30. எதுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தார்? இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தார். இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், யாருக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா என்கிறார்? அற்ப விசுவாசிகளுக்கு.
31. என்ன என்று, கவலைப்படாதிருங்கள் என்கிறார்? என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங் கள் என்கிறார்.
32. இவைகளையெல்லாம் யார் நாடித்தேடுகிறார்கள்? இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள். இவைகளெல்லாம் யாருக்கு வேண்டிய வைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்? உங்களுக்கு வேண்டியவைகள்.
33. முதலாவது எவைகளைத் தேடுங்கள்? முதலாவது தேவனுடைய ராஜ்யத் தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். எப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்? முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை யும் அவருடைய நீதியையும் தேடும் பொழுது இவைகளெல்லாம் உங்களுக் குக்கூடக் கொடுக்கப்படும்.
34. ஆகையால், எதுக்காகக் கவலைப்படாதிருங்கள்? நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள். நாளையத்தினம் எவைகளுக்காகக் கவலைப்படும்? நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். எதுக்கு அதினதின் பாடு போதும்? அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

Monday, January 26, 2015

மத்தேயு – 5

மத்தேயு – 5
1. இயேசு யாரைக் கண்டு மலையின்மேல் ஏறினார்? இயேசு திரளான ஜனங் களைக் கண்டு மலையின்மேல் ஏறினார். இயேசு உட்கார்ந்தபொழுது அவரிடத் தில் வந்தவர்கள் யார்? அவருடைய சீஷர்கள்.
2. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அப்பொழுது இயேசு தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னார்.
3. பரலோகராஜ்யம் யாருடையது?  ஆவியில் எளிமையுள்ளவர்களுடையது.
4. யார் ஆறுதலடைவார்கள்?  துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்.
5. பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுபவர்கள் யார்? சாந்தகுணமுள்ளவர்கள்.
6. திருப்தியடைபவர்கள் யார்?  நீதியின்மேல்  பசிதாகமுள்ளவர்கள் திருப்தி யடைவார்கள்.
7. இரக்கம் பெறுபவர்கள் யார்?  இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8. தேவனைத் தரிசிப்பவர்கள் யார்?  இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவ னைத் தரிசிப்பார்கள்.
9. தேவனுடைய புத்திரர் என்னப்படுபவர்கள் யார்? சமாதானம் பண்ணுகிற வர்கள்.
10. பரலோகராஜ்யம் யாருடையது?  பரலோகராஜ்யம் நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுடையது.
பாக்கியவான்கள் யார்? ஆவியில் எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர் கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள், நீதியினி மித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். என்னிமித்தம் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
11. யார் நிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கிய வான்களாயிருப்பீர்கள்? என்னிமித்தம் (இயேசு)
12. எப்படி களிகூறவேண்டும்? சந்தோஷப்பட்டு களிகூறவேண்டும். எங்கே உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்? பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயி ருக்கும். யாரை அப்படியே துன்பப்படுத்தினார்கள்? உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்கள்.
13. நீங்கள் எதுக்கு உப்பாயிருக்கிறீர்கள்? நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? சாரமாக்கமுடி யாது. சாரமற்ற உப்பு எதற்கு உதவாது? எதற்குமே உதவாது. சாரமற்ற உப்பு என்ன செய்யப்படும்? வெளியே கொட்டப்படும், மனுஷரால் மிதிக்கப்படும்.
14. நீங்கள் எதுக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்? உலகத்துக்கு. எதின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது? மலையின்மேல்.
15. விளக்கைக் கொளுத்தில் எதனால் மூடிவைக்கமாட்டார்கள்? மரக்காலால் மூடிவைக்கமாட்டார்கள். விளக்கைக் கொளுத்தி எதின்மேல் வைப்பார்கள்? விளக்குத் தண்டின்மேல். விளக்கு எப்பொழுது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்? விளக்கைக் கொளுத்தி விளக்குத் தண்டின்மேல் வைக்கும்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
16. உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக ஏன் பிரகாசிக்க வேண்டும்? பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக பிரகாசிக்க வேண்டும். மனுஷர் எதைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்க வேண்டும்? மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு.
17. இயேசு எதை அழிக்க வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் என்கிறார்? நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் என்கிறார். இயேசு எதை நிறைவேற்ற வந்தேன் என்கிறார்? நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற வந்தேன் என்கிறார்.
18. எவையெல்லாம் ஒழிந்து போகும் என்கிறார்? வானமும் பூமியும் ஒழிந்து போகும் என்கிறார். எது ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறு மளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந் துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
19. பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுபவன் யார்? இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரி லும் சிறியவன் என்னப்படுவான். பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படு பவன் யார்?  இந்தக் கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
20. யாருடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ் யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்கிறார்? வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்கிறார்.
21. எது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார்?  கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்ட தென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார்.
22. யார் நியாத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு சொல்லுகிறார்? தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு சொல்லுகிறார். யார் ஆலோசனைச் சங்கத் தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு சொல்லுகிறார்? தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப் பான் என்று சொல்லுகிறார். யார் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு சொல்லுகிறார்? மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏது வாயிருப்பான் என்று சொல்லுகிறார்.
23. எங்கே உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதர னுக்கு குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்? பலிபீடத்தினி டத்தில். 
24. பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்து வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், உன் காணிக்கையை எப்படிச் செலுத்த வேண்டும் என்று இயேசு கூருகிறார்? அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து என்று இயேசு கூருகிறார்.
25. நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து என்று ஏன் இயேசு சொல்லுகிறார்?  எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படா மலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து என்று இயேசு சொல்லுகிறார்.
26. நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து, பொருந்தாவிட்டால் என்ன ஆகும் என்று இயேசு சொல்லு கிறார்? பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்கு மட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு செல்லுகிறார்.
27. எது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார்? விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப் பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார்.
28. யார் ஒருவன் ஒரு ஸ்திரீயோடு விபசாரஞ்செய்தாயிற்று என்று இயேசு சொல்லுகிறார்? ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருத யத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று என்று இயேசு சொல்லுகிறார்.
29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதை என்ன செய் என்கிறார்? அதைப் பிடுங்கி எறிந்து போடு என்கிறார். ஏன் வலது கண்ணைப் பிடுங்கி எறிந்துபோடு என்கிறார்? உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று (வலது கண்) கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும், அதனால் வலது கண்ணைப் பிடுங்கி எறிந்துபோடு என்கிறார்.
30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதை என்ன செய் என்கிறார்? அதைத்தறித்து எறிந்துபோடு என்கிறார். ஏன் வலதுகையைத் தறித்து எறிந்துபோடு என்கிறார்? சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவ தைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று (வலது கை) கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும், அதனால் வலதுகையைத் தறித்து எறிந்துபோடு என்கிறார்.
31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், எதை அவளுக்குக் கொடுக் கக்கடவன் என்று உரைக்கப்பட்டது? தள்ளுதற்சீட்டு.
32. தன் மனைவியை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பவன் யார்? வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன்.
33. எது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று சொல்லுகிறார்? அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று சொல்லு கிறார்.
34. பரிச்சேதம் என்ன பண்ணவேண்டாம் என்று சொல்லுகிறார்? பரிச்சேதம் சத்தியம் பண்ணவேண்டாம் என்று சொல்லுகிறார். ஏன் வானத்தின் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்? வானம் தேவனுடைய சிங்காசனமாயிருப்பதால் அதன் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம் என்கிறார்.
35. ஏன் பூமியின்பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்? பூமி அவரது பாதபடியா யிருப்பதனால். ஏன் எருசலேமின் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்? எருச லேம் மகாராஜாவின் நகரமாயிருப்பதால்.
36. ஏன் சிரசின்பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்? ஏனெனில் அதின் ஒரு மயி ரையாவது வெண்மையாக்கவும் கருப்பாகவும் கூடாததால்.  
எதன்பேரி லெல்லாம் சத்தியம் பண்ணவேண்டாம் என்கிறார்? வானத்தின் பேரி லும், பூமியின்பேரிலும், எருசலேமின்பேரிலும், உன் சிரசின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம் என்கிறார்.
ஏன் அவைகளின் பேரில் சத்தியம் பண்ண வேண்டாம் என்கிறார்? வானம் - தேவனுடைய சிங்காசனம், பூமி - அவருடைய பாதபடி, எருசலேம் - மகாராஜா வினுடைய நகரம், உன் சிரசு - அதின் ஒருமயி ரையாவது வெண்மையாக் கவும் கருப்பாக்கவும் உன்னால் கூடாது, அதனால் அவைகளின் பேரில் சத்தி யம் பண்ணவேண்டாம் என்கிறார்.
37. சத்தியம் பண்ணாமல் என்னசெய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்? உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் என்கிறார். இதற்கு மிஞ்சினது எதனால் உண்டாயிருக்கும் என்கிறார்? இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் என்கிறார்.
38. எது உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்;டிருக்கிறீர்கள் என்கிறார்? கண்ணுக் குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர் கள் என்கிறார்.
39. இயேசு எதோடு எதிர்த்து நிற்கவேண்டாம் என்கிறார்? தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் என்கிறார். யாருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்கிறார்? ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்கிறார்.
40. யாருக்கு உன் அங்கியையும் விட்டுவிடு என்கிறார்? உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு என்கிறார்.
41. யாரோடு இரண்டு மைல் தூரம் போ என்கிறார்? ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்கிறார். 
42. யாருக்குக் கொடு என்கிறார்? உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு என்கிறார். யாருக்கு முகங்கோணாதே என்கிறார்? உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே என்கிறார்.
43. யாரை சிநேகித்து யாhரைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. இயேசு யாரை சிநேகியுங்கள் என்கிறார்? உங்கள் சத்துருக்களைச் சிநேகி யுங்கள் என்கிறார். இயேசு யாரை ஆசீர்வதியுங்கள் என்கிறார்? இயேசு உங்க ளைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் என்கிறார். இயேசு யாருக்கு நன்மை செய்யுங்கள் என்கிறார்? உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங் கள் என்கிறார். இயேசு யாருக்காக ஜெபம் பண்ணுங்கள் என்கிறார்? உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்கிறார்.
45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் யாராயிருப்பீர்கள் என்கிறார்? புத்திரராயிருப்பீர்கள் என்கிறார். யார்மேல் தமது சூரியனை உதிக்கப்பண்ணுகிறார்? தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணுகிறார். யார்மேல் மழையைப் பெய்யப்பண்ணுகி றார்? நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்.
46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்க ளுக்குப் பலன் என்ன? பலன் இல்லை. ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? ஆம்.
47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித் துச்  செய்கிறது என்ன? ஒன்றும் இல்லை. ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார் கள் அல்லவா? ஆம்.
48. பூரண சற்குணராயிருக்கிறது யார்? பரலோகத்திலிருக்கிற நம் பிதா. யாரைப்போல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் என்கிறார்? பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா.

Sunday, January 25, 2015

மத்தேயு – 4

 மத்தேயு – 4
1. இயேசு யாரால் சோதிக்கப்படுவதற்கு கொண்டுபோகப்பட்டார்? பிசாசி னால். இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு எங்கே கொண்டுபோகப்பட் டார்? வனாந்தரத்திற்கு. இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு யாராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்? ஆவியானவராலே.
2. இயேசு எத்தனைநாள் உபவாசமிருந்தார்? இயேசு இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தார். இயேசுவுக்கு எப்பொழுது பசியுண்டாயிற்று? இயேசு இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது இயேசுவினிடத்தில் வந்தது யார்?  சோதனைக்காரன். சோத னைக்காரன் இயேசுவிடத்தில் வந்து சொன்னது என்ன?  நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 
4. அதற்கு இயேசு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? மனுஷன் அப்பத்தி னாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல,  எதினாலும் பிழை;ப்பான் என்று எழுதியிருக் கிறதே என்றார்? தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த் தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. பிசாசு இயேசுவை எங்கே கொண்டுபோனான்?  பரிசுத்த நகரத்திற்குக் கொண்டு போனான். பிசாசு இயேசுவை எதின்மேல் நிறுத்தினான்? தேவால யத்து உப்பரிகையின்மேல் நிறுத்தினான்.
6. நீர் தேவனுடைய குமாரனேயானால் என்ன செய்யும் என்றான்? தாழக்குதி யும் என்றான். ஏன் அப்படிச் சொன்னான்? ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்து கட்டளையிடுவார்: உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியி ருக்கிறது என்று சொன்னான்.
7. யாரைப் பரீட்சை பாராதிருக்க வேண்டும்?  உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை.  அதற்கு இயேசு சொன்னது என்ன?  உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8. மறுபடியும் பிசாசு அவரை எங்கே கொண்டுபோனான்? மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோனான். மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், எதை அவருக்குக் காண்பித்தான்? உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.
9. உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக் குக் காண்பித்து: இயேசுவுக்குச் சொன்னது என்ன? நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10. இயேசு பிசாசுக்குச் சொன்னது என்ன?  அப்பாலே போ சாத்தானே: உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
11. அப்பொழுது பிசாசு என்ன செய்தான்?    அப்பொழுது பிசாசானவன் இயேசுவை விட்டு விலகிப்போனான்.   உடனே யார் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்?   தேவதூதர்கள்.
12. யார் காவலில் வைக்பப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்?  யோவான்.
13. இயேசு கலிலேயாவுக்குப் போய் எங்கே வந்து வாசம்பண்ணினார்? நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்றும் நாடுகளின் கல்லைகளிலி ருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
14. புறஜாதியாருடைய கலிலேயாவிலே உள்ள நாடுகள் யாவை? செபுலோன் மற்றும் நப்தலி நாடுகள். செபுலோன் நாடும் நப்தலி நாடும் எங்கே உள்ளன? யோர்தானுக்கு அப்புறத்திலுள்ளது.
15. இருளில் இருக்கும் ஜனங்கள் எதைக் கண்டார்கள்? பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். பெரிய வெளிச்சத்தைக் கண்டவர்கள் யார்? இருளில் இருக்கும் ஜனங்கள். மரண இருளின் திசைகளிலிருக்கிறவர்களுக்கு உதித்தது எது? வெளிச்சம். யாருக்கு வெளிச்சம் உதித்தது? மரண இருளின் திசையிலிருக்கிற வர்களுக்கு.
16. எது நிறைவேறும்படி இப்படி நடந்தது?  ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக் கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17. அதுமுதல் இயேசு என்னவென்று பிரசங்கிக்கத் தொடங்கினார்? மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18. இயேசு எந்தக் கடலோரமாய் நடந்துபோனார்? கலிலேயா கடலோரமாய் நடந்து போனார். கலிலேயாக் கடலில் வலைபோட்டுக்கொண்டிருந்தது யார்? பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா. இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில் யாரைக் கண்டார்? பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா.
19. என் பின்னே வாருங்கள் உங்களை யாரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்? உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். இயேசு பேதுரு என்னப்பட்ட சீமோனிடமும் அவன் சகோதரனாகிய அந்திரேயாவிட மும் சொன்னது என்ன? என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20. உடனே அவர்கள் என்ன செய்தார்கள்? உடனே அவர்கள் வலைகளை விட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
21. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில் வேறு யாரைக் கண்டார்? செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவன் சகோதரன் யோவானையும் கண்டார். யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? தங்கள் தகப்பனாகிய செபெதேயுவின் படவிலிருந்து தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தாகள். யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் யாருடனேகூட தங்கள் வலைகளை;ப பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்? தங்கள் தகப்பன் செபெதேயுவிடனேகூட தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு யாரைக் கண்டு அழைத்தார்? யாக்கோபையும் அவன் சகோதரன் யோவானையும் கண்டு அழைத்தார்.
22. யாக்கோபும் யோவானும் எவைகளை விட்டார்கள்? அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டார்கள். யாக்கோபும் யோவானும் யாருக்குப் பின்சென்றார்கள்? இயேசுவுக்குப் பின் சென்றார்கள்.
23. பின்பு இயேசு எங்கே சுற்றி நடந்தார்? பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்தார். இயேசு எங்கு உபதேசித்தார்? அவர்களுடைய ஜெப ஆலயங் களில் உபதேசித்தார். இயேசு எதைப் பிரசங்கித்தார்? இயேசு ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இயேசு யாருக்கு எதை நீக்கிச் சொஸ்தமாக் கினார்? இயேசு ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
24. யாருடைய கீர்த்தி சீர்pயா எங்கும் பிரசித்தமாயிற்று? இயேசுவினுடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது இயேசுவிடம் யாரை யெல்லாம் கொண்டுவந்தார்கள்? அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்த வர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் இயேசுவிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களை என்ன செய்தார்? இயேசு அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
25. எங்கிருந்து திரளான ஜனங்கள் வந்து இயேசுவுக்குப் பின்சென்றார்கள்? கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, இயேசு வுக்குப் பின்சென்றார்கள்.

Saturday, January 24, 2015

மத்தேயு – 3

மத்தேயு – 3
1. அந்நாட்களில் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்தது யார்? யோவான்ஸ்நானன்.
2. யோவான்ஸ்நானன் என்னவென்று பிரசங்கம் பண்ணினான்? மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது.
3. யாருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும்? கர்த்தருக்கு. யாருக்கு பாதைகளைச் செவ்வைப்பண்ண வேண்டும்?  கர்த்தருக்கு. ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் யார்?  யோவான்ஸ்நானன். ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட வார்த்தை என்ன?  கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டு என்கின்ற வார்த்தை.
4. யோவானின் உடை எது?  ஒட்டகமயிர். யோவான் தன் அரையில் கட்டிக்கொண்டிருந்தது என்ன?  வார்க்கச்சை. யோவானின் ஆகாரம் என்ன? வெட்டுக்கிளி, காட்டுத் தேன்.
5. அப்பொழுது யோவானிடத்திற்கு போனது யார்?  எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் யோவானிடத்திற்குப் போனார்கள்.
6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டது யார்?  எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும். அவர்கள் தங்கள் பாவங்களை யாரிடத்தில் அறிக்கையிட்டார்கள்? யோவானிடத்தில். யோவானால் அவர்கள் பெற்றது என்ன?  ஞானஸ்நானம். எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் யோவானிடத்திற்குப் போய் என்ன செய்தார்கள்?  தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
7. யோவான்ஸ்நான் யார் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை கண்டான்?  பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர். பரிசேயரையும் சதுசேயரையும் யோவான்ஸ்நானன் எப்படி அழைத்தான்?  விரியன் பாம்புக் குட்டிகளே என்று அழைத்தான். யோவான்ஸ்நானன் அவர்களிடம் சொன்னது என்ன?  வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 
8. எதற்கேற்ற கனிகளைக் கொடுங்கள் என்றான்?  மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் என்றான்.
9. யார் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள் என்றான்?  ஆபிரகாம். தேவன் இந்தக் கல்லுகளினாலே யாருக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான்?  ஆபிரகாமுக்கு.
10. மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது என்ன?  கோடரி. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு எங்கே போடப்படும்?  அக்கினியில்.
11. எதற்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன் என்றான்?  மனந்திரும்புதலுக்கென்று. எனக்குப்பின் வருகிறவர் எப்படிப்பட்டவர் என்கிறான்?  எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார் என்கிறான். யோவான்ஸ்நானன் தன்னை எதற்கு பாத்திரன் அல்ல என்கிறான்?  எனக்குப்பின் வருகிறவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல என்கிறான். அவர் எதனால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்?  அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
12. அவர் கையில் இருக்கிறது என்ன?  தூற்றுக்கூடை. அவர் எதை நன்றாய் விளக்குவார்?  களத்தை நன்றாய் விளக்குவார். அவர் எதை களஞ்சியத்தில் சேர்ப்பார்?  கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார். அவர் எதை அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்?  பதரை அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.
13. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தது யார்? இயேசு.
14. யோவான் யாருக்குத் தடை செய்தான்?  இயேசுவுக்குத் தடை செய்தான். யோவான் இயேசுவுக்குத் தடை செய்து அவரிடம் சொன்னது என்ன?  நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
15. இயேசு யோவானுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன?  இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது யோவான் என்ன செய்தான்? அப்பொழுது யோவான் இயேசுவுக்கு இடங்கொடுத்தான். இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யார்?   யோவான்ஸ்நானன்.
16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, அவருக்குத் திறக்கப்பட்டது எது?  வானம். எது இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்?  தேவ ஆவி. தேவ ஆவி எதைப்போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்?  தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
17. அன்றியும் எதிலிருந்து ஒரு சத்தம் உண்டாகியது?  வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானகியது.  வானத்திலிருந்து உண்டான சத்தம் உரைத்தது என்ன? இவர் என்னுடைய நேசகுமாரன், இவரின் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

Thursday, January 22, 2015

மத்தேயு - 2

மத்தேயு – 2.
1. யாருடைய நாட்களில் இயேசு பிறந்தார்?  ஏரோதுராஜாவின் நாட்களில். இயேசு எங்கே பிறந்தார்?  யூதாவிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். இயேசு பிறந்தபொழுது எருசலேமுக்கு வந்தது யார்?  சாஸ்திரிகள். சாஸ்திரிகள் எங்கிருந்து வந்தார்கள்?  கிழக்கிலிருந்து வந்தார்கள்.
2. இயேசுவை யாருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் என்றார்கள்?  யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் என்றார்கள். யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்டது யார்?  சாஸ்திரிகள். எங்கே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம் என்றார்கள்?  கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம் என்றார்கள். சாஸ்திரிகள் எதற்காக வந்தோம் என்றார்கள்?  இயேசுவைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
3. சாஸ்திரிகள் சொன்னதைக் கேட்டது யார்?  ஏரோதுராஜாவும், அவனோடேகூட எருசலேம் நகரத்தாரும். இதைக் கேட்டபொழுது அவர்கள் என்ன ஆனார்கள்?  கலங்கினார்கள்.
4. ஏரோதுராஜா யாரைக் கூடிவரச் செய்தான்?  ஏரோதுராஜா பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்தான். ஏரோதுராஜா அவர்களிடத்தில் என்ன விசாரித்தான்?  கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
5. அதற்கு அவர்கள்: இயேசு எங்கே பிறப்பார் என்றார்கள்?  யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்றார்கள்.
6. யூதேயாவின் பிரபுக்களில் எது சிறியதல்ல?  பெத்லகேம். இஸ்ரவேலை யார் என்கிறார்?  என் ஜனம் என்கிறார். யார் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார்?  ஏன் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு. தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்ன?  யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது. 
7. அப்பொழுது ஏரோது யாரை இரகசியமாய் அழைத்தான்?  சாஸ்திரிகளை. ஏரோது எதைக்குறித்து சாஸ்திரிகளிடம் திட்டமாய் விசாரித்தான்?  நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து ஏரோது சாஸ்திரிகளிடம் திட்டமாய் விசாரித்தான்.
8. நீங்கள் போய் யாரைக்குறித்து திட்டமாய் விசாரியுங்கள் என்றான்? பிள்ளையைக் (இயேசு) குறித்து. நீங்கள் எதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்?  பிள்ளையைக் (இயேசு) கண்டபின்பு. 
9. யார் சொன்னதை சாஸ்திரிகள் கேட்டுப் போனார்கள்?  ராஜா சொன்னதை சாஸ்திரிகள் கேட்டுப் போனார்கள். எது பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது?  அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம்.
10. சாஸ்திரிகள் எதைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்?   சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது.
11. சாஸ்திரிகள் எதற்குள் பிரவேசித்தார்கள்?  சாஸ்திரிகள் பிள்ளை இருந்த அந்த வீட்டுக்குள்பிரவேசித்தார்கள். சாஸ்திரிகள் யாரைக் கண்டார்கள்? பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டார்கள். எப்படிப் பணிந்துகொண்டார்கள்?  சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்து கொண்டார்கள். அவர்கள் எதைத் திறந்தார்கள்?  தங்கள் பொக்கிஷங்களைத் திறந்தார்கள். அதற்கு எதைக் காணிக்கையாக வைத்தார்கள்?  பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
12. சாஸ்திரிகள் யாரால் எச்சரிக்கப்பட்டார்கள்?  தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள். சாஸ்திரிகள் என்னவென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்ட்டார்கள்?  ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள். சாஸ்திரிகள் எப்படி தங்கள் தேசத்திற்கு திரும்பிப்போனார்கள்?  சாஸ்திரிகள் வேறு வழியாகத் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
13. கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யாருக்குக் காணப்பட்டான்? யோசேப்புக்கு காணப்பட்டான். எப்பொழுது கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டான்?  சாஸ்திரிகள் போனபின்பு. ஏரோது யாரைக் கொலைசெய்யத் தேடுவான்?  பிள்ளையை (இயேசுவை). நீ எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எங்கே ஓடிப்போ என்றான்?  எகிப்து. எது வரைக்கும் அங்கே இரு என்றான்?  நான் உனக்கு சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கு சொன்னது என்ன?  ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்;  ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
14. யோசேப்பு பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டி;க்கொண்டு எங்கே புறப்பட்டுப்போனான்?  எகிப்து. யோசேப்பு எப்பொழுது பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டி;க்கொண்டு எகிப்துக்குப் போனான்?  இரவில்.
15. யோசேப்பு எதுவரை எகிப்திலே இருந்தான்?  ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி நடந்தது என்ன?  எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16. ஏரோது தான் யாரால் வஞ்சிக்ப்பட்டான்?  சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டான். ஏரோது யாரைக் கொலைசெய்தான்?  இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான். ஏரோது எங்குள்ள ஆண்பிள்ளைகளைக் கொலைசெய்தான்?  பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த ஆண்பிள்ளைகளை. ஏரோது மிகுந்த கோபமடைந்து என்ன செய்தான்?  ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
17. ராமாவிலே கேட்கப்பட்டது என்ன?  புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது. 
18. எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டு நிறைவேறின வார்த்தை என்ன? ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட வார்த்தை நிறைவேறிற்று.
19. கர்த்தனுடைய தூதன் எங்கே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டான்?  எகிப்திலே. எப்பொழுது கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டான்? ஏரோது இறந்தபின்பு.
20. கர்த்தருடைய தூதன், நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எங்கே போ என்றான்?  இஸ்ரவேல் தேசத்துக்கு. கர்த்தருடைய தூதன் யார் இறந்து போனார்கள் என்றான்?  பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள். கர்த்தருடைய தூதன் யோசேப்புக்குச் சொப்பனத்தில் சொன்னது என்ன?  நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.
21. யோசேப்பு எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எங்கே போனான்?  இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
22. ஏரோதின் பட்டத்துக்கு வந்து யூதேயாவில் அரசாளுகிறது யார் என்று யோசேப்பு கேள்விப்பட்டான்?  அர்கொலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து யூதேயாவில் அரசாளுகிறான் என்று யோசேப்பு கேள்விப்பட்டான். யோசேப்பு ஏன் பயந்தான்?  அர்கொலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். யோசேப்பு யாரால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டான்?  தேவனால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டான். யோசேப்பு தேவனால் எச்சரிக்கப்பட்டு எங்கே விலகிப்போனான்?  கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போனான்.
23. யோசேப்பு எந்த ஊரிலே வந்து வாசம்பண்ணினான்?  யோசேப்பு நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். என்னவென்று என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது? நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Monday, January 19, 2015

மத்தேயு - அதிகாரம் - 1

மத்தேயு – 1.

1. இது யாருடைய வம்ச வரலாறு? ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு.
2. ஆபிரகாம் யாரைப் பெற்றான்? ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு யாரைப் பெற்றான்?  ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். யாக்கோபு யாரைப் பெற்றான்?  யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்.
3. யூதா யாரை தாமாரினிடத்தில் பெற்றான்? யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். தாமார் யார்?  யூதாவின் மகனாகிய ஏர் என்பவனின் மனைவி (ஆதியாகமம் 38:6). பாரேஸ் யாரைப் பெற்றான்? பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் யாரைப் பெற்றான்? எஸ்ரோம் ஆராமைப் பெற்றான். 
4. ஆராம் யாரைப் பெற்றான்?  ஆராம் அம்மினதாபைப் பெற்றான். அம்மினதாப் யாரைப் பெற்றான்?  அம்மினதாப் நகசோனைப் பெற்றான். நகசோன் யாரைப் பெற்றான்?  நகசோன் சல்மோனைப் பெற்றான். 
5. சல்மோன் யாரைப் பெற்றான்?  சல்மோன் போவாசை பெற்றான். சல்மோன் போவாசை யாரிடத்தில் பெற்றான்?  சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். ராகாப் யார்?  எரிகோவைச் சேர்ந்த ஒரு வேசி (யோசுவா 2:1). போவாஸ் யாரைப் பெற்றான்?  போவாஸ் ஓபேதை பெற்றான். போவாஸ் ஓபேதை யாரிடத்தில் பெற்றான்?  போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான். ரூத் யார்?  மோவாபிய ஸ்திரீ (ரூத் 1:4). ஓபேத் யாரைப் பெற்றான்?   ஓபேத் ஈசாயை பெற்றான்.
6. ஈசாய் யாரைப் பெற்றான்?  ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா யாரைப் பெற்றான்? தாவீது ராஜா சாலொமோனைப் பெற்றான். தாவீது ராஜா யாரிடத்தில் சாலொமோனைப் பெற்றான்?  தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.
7. சாலொமோன் யாரைப் பெற்றான்?  சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான். ரெகொபெயாம் யாரைப் பெற்றான்?  ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான். அபியா யாரைப் பெற்றான்?  அபியா ஆசாவைப் பெற்றான்.
8. ஆசா யாரைப் பெற்றான்?  ஆசா யோசபாத்தைப் பெற்றான். யோசபாத் யாரைப் பெற்றான்?  யோசபாத் யோராமைப் பெற்றான். யோராம் யாரைப் பெற்றான்?   யோராம் உசியாவைப் பெற்றான்.
9. உசியா யாரைப் பெற்றான்?  உசியா யோதாமைப் பெற்றான். யோதாம் யாரைப் பெற்றான்?  யோதாம் ஆகாசைப் பெற்றான். ஆகாஸ் யாரைப் பெற்றான்?  ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்.
10. எசேக்கியா யாரைப் பெற்றான்?  எசேக்கியா மனாசேயைப் பெற்றான். மனாசே யாரைப் பெற்றான்?  மனாசே ஆமோனைப் பெற்றான். ஆமோன் யாரைப் பெற்றான்?  ஆமோன் யோசியாவைப் பெற்றான்.
11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா யாரைப் பெற்றான்?  யோசியா எகொனியாவையும் அவன் சகோதரனையும் பெற்றான். எந்தக்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்?  பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
12. எகொனியா யாரைப் பெற்றான்?  எகொனியா சலாத்தியேலைப் பெற்றான். எப்போது எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்? பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான். சலாத்தியேல் யாரைப் பெற்றான்? சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்.
13. சொரொபாபேல் யாரைப் பெற்றான்?  சொரொபாபேல் அபியூதைப் பெற்றான். அபியூத் யாரைப் பெற்றான்?  அபியூத் எலியாக்கீமைப் பெற்றான். எலியாக்கீம் யாரைப் பெற்றான்?  எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்.
14. ஆசோர் யாரைப் பெற்றான்?  ஆசோர் சாதோக்கைப் பெற்றான். சாதோக்கு யாரைப் பெற்றான்?  சாதோக்கு ஆகீமைப் பெற்றான். ஆகீம் யாரைப் பெற்றான்? ஆகீம் எலியூதைப் பெற்றான்.
15. எலியூத் யாரைப் பெற்றான்?  எலியூத் எலெயாசாரைப் பெற்றான். எலெயாசார் யாரைப் பெற்றான்?  எலெயாசார் மாத்தானைப் பெற்றான். மாத்தான் யாரைப் பெற்றான்?   மாத்தான் யாக்கோபைப் பெற்றான்.
16. யாக்கோபு யாரைப் பெற்றான்?  யாக்கோபு யோசேப்பை பெற்றான். யோசேப்பு யார்?  யோசேப்பு மரியாளுடைய புருஷன். யாரிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்?  மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் எத்தனை தலைமுறைகள்?  பதினாலு தலைமுறைகள். தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் எத்தனை தலைமுறைகள்?  பதினாலு தலைமுறைகள். பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் எத்தனை  தலைமுறைகள்?    பதினாலு தலைமுறைகள்.
18. இயேசுகிறிஸ்துவினுடைய தாயாகிய மரியாள் யாருக்கு நியமிக்கப்பட்டிருந்தாள்?  யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். மரியாள் எப்பொழுது கர்ப்பவதியானாள்?  அவர்கள் கூடிவருமுன்னே மரியாள் கர்ப்பவதியானாள். மரியாள் எதினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது?  மரியாள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. நீதிமானாயிருந்தது யார்?  மரியாள் புருஷனாகிய யோசேப்பு. யோசேப்பு மரியாளை என்ன செய்ய மனதில்லாமல் இருந்தான்?  அவமானப்படுத்த மனதில்லாமல் இருந்தான். யோசேப்பு என்ன யோசனையாயிருந்தான்? மரியாளை இரகசியமாய்த் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யாருக்கு காணப்பட்டான்? யோசேப்புக்கு காணப்பட்டான். எப்பொழுது கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கு காணப்பட்டான்?  யோசேப்பு மரியாளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாய் சிந்தித்துக்கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கு காணப்பட்டான். கர்த்தருடைய தூதன் யோசேப்பை யார் என்கிறான்?  தாவீதின் குமாரனாகிய யோசேப்பே என்கிறான். கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் யாரைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே என்றான்?  உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே என்றான். மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது எதினால் உண்டானது என்றான்?   பரிசுத்த ஆவியினால் உண்டானது என்றான்.
21. மரியாள் யாரைப் பெறுவாள்? ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு என்ன என்று பேரிடுவாய்?  இயேசு. ஏன் இயேசு என்று பேரிடுவாயாக என்றான்?  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. யார் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது?  தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23. யார் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்?  ஒரு கன்னிகை. அவருக்கு என்ன என்று பேரிடுவார்கள்?  இம்மானுவேல். இம்மானுவேல் என்பதற்கு என்ன என்று அர்த்தமாம்?  தேவன் நம்மோடிருக்கிறார்.
24. நித்திரைதெளிந்து எழுந்தது யார்?  யோசேப்பு. தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டது யார்?  யோசேப்பு.
25. யார் கட்டளையிட்டபடியே யோசேப்பு தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு அவன் தன் முதற்பேரான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்?  கர்த்தருடைய தூதன். யோசேப்பு எதுவரை மரியாளை அறியாதிருந்தான்?  யோசேப்பு தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்தான். யோசேப்பு தன்முதற்பேறான குமாரனுக்கு என்ன என்று பேரிட்டான்? இயேசு என்று பேரிட்டான்.

ஆசிரியர் செய்தி

பிரியமான சகோதர சகோதரிகளே,

உங்கள் அனைவருக்கும் இருந்தவரும் இருக்கிறவரும் வரப்போகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனனும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.  துதி கன மகிமை அவர் ஒருவருக்கே உரித்தாகுவதாக!

The Secret of The Holy Bible என்ற தலைப்பிலே பரிசுத்த வேதாகமத்தைப் பற்றி எழுத ஆசைப்படுகின்றேன்.  நாம் எத்தனை முறை வேதாகமத்தைப் படித்தாலும் அதைப் படித்து புரிந்துகொள்ளுவது என்பது சிரமமான காரியமாகவே இருக்கிறது. தேவனாகிய கர்த்தர் தந்தருளின இந்த பரிசுத்த வேதாகமத்தின் ஒவ்வொரு வசனத்தையும் நாம் கேள்வி கேட்டு அதற்குப் பதில் அதிலிருந்தே எடுத்துப் படிக்கும் போது அதின் அர்த்தம் நமக்குப் புரியும்.

முதலாவதாக, புதிய ஏற்பாட்டிலிருந்து வரிசையாக மத்தேயு சுவிசேஷம் முதல் தேவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படியே எழுத ஆரம்பிக்கின்றேன். இதைத் தொடர்ந்து படியுங்கள். தேவனாகிய கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! 

ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்,

D. Ruban Stalin.