Monday, January 19, 2015

ஆசிரியர் செய்தி

பிரியமான சகோதர சகோதரிகளே,

உங்கள் அனைவருக்கும் இருந்தவரும் இருக்கிறவரும் வரப்போகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனனும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.  துதி கன மகிமை அவர் ஒருவருக்கே உரித்தாகுவதாக!

The Secret of The Holy Bible என்ற தலைப்பிலே பரிசுத்த வேதாகமத்தைப் பற்றி எழுத ஆசைப்படுகின்றேன்.  நாம் எத்தனை முறை வேதாகமத்தைப் படித்தாலும் அதைப் படித்து புரிந்துகொள்ளுவது என்பது சிரமமான காரியமாகவே இருக்கிறது. தேவனாகிய கர்த்தர் தந்தருளின இந்த பரிசுத்த வேதாகமத்தின் ஒவ்வொரு வசனத்தையும் நாம் கேள்வி கேட்டு அதற்குப் பதில் அதிலிருந்தே எடுத்துப் படிக்கும் போது அதின் அர்த்தம் நமக்குப் புரியும்.

முதலாவதாக, புதிய ஏற்பாட்டிலிருந்து வரிசையாக மத்தேயு சுவிசேஷம் முதல் தேவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படியே எழுத ஆரம்பிக்கின்றேன். இதைத் தொடர்ந்து படியுங்கள். தேவனாகிய கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! 

ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்,

D. Ruban Stalin.

No comments:

Post a Comment