Tuesday, April 14, 2015

மத்தேயு – 22

மத்தேயு – 22

1. இயேசு மறுபடியும் அவர்களோடே எப்படிப் பேசினார்? உவமைகளாகப் பேசினார்.
2. பரலோகராஜ்யம் யாருக்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
3. ராஜா கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் யாரை அனுப்பினான்? தன் ஊழியக்காரனை அனுப்பினான். ராஜா கலியாணத்திற்கு யாரை வரச் சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரனை அனுப்பினான்? அழைக்கப்பட்ட வர்களை வரச்சொல்லும்படி. கலியாணத்திற்கு வர மனதில்லாதிருந்தவர்கள் யார்? அழைக்கப்பட்டவர்கள்.
4. அப்பொழுது ராஜா யாரை அழைத்தான்? வேறு ஊழியக்காரரை அழைத் தான். ராஜா எதை ஆயத்தம்பண்ணினேன் என்றான்? என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன் என்றான். எவைகள் அடிக்கப்பட்டது என்றான்? என் எருதுகளும் கொளுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது என்றான். எது ஆயத்தமாயிருக்கி றது? எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள் என்று யாருக்குச்  சொல்லுங்களென்று அனுப்பினான்? அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
5. அழைக்கப்பட்டவர்களோ எதை அசட்டைபண்ணினார்கள்? கலியா ணத்தை. ஒருவன் எங்கே போனான்? வயலுக்கு. மற்றொருவன் எங்கே போனான்? வியாபாரத்துக்கு.
6. மற்றவர்கள் என்ன செய்தார்கள்? மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
7. ராஜா அதைக் கேள்விப்பட்டு என்ன செய்தான்? கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத் தையும் சுட்டெரித்தான்.
8. ஆயத்தமாயிருக்கிறது எது? கலியாண விருந்து. அழைக்கப்பட்டவர்கள் எதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்? கலியாண விருந்துக்கு அபாத்திரராய் போனார்கள்.
9. ஆகையால், நீங்கள் எங்கே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத் திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான்? வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங் கள் என்றான்.
10. அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், யாரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்? தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள். கலியாணசாலை யாரால் நிறைந்தது? விருந்தாளிகளால் நிறைந்தது.
11. யாரைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தான்? விருந்தாளிகளைப் பார்க்கும்படி. ராஜா யாரை அங்கே கண்டான்? கலியாண வஸ்திரம் தரித்திராத ஒருமனுஷனை அங்கே கண்டான்.
12. ராஜா கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு என்ன கேட்டான்? சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான். அதற்கு அவன் என்ன சொன்னான்? அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
13. அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய் என்ன செய்யுங்கள் என்றான்? அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
14. அந்தப்படியே அடைக்கப்பட்டவர்கள் யார்? அநேகர். தெரிந்துகொள்ளப்பட்ட வர்கள் யார்? சிலர்.
15. அப்பொழுது, பரிசேயர் போய், எதிலே இயேசுவை அகப்படுத்தும்படி யோசனை பண்ணினார்கள்? பேச்சிலே.
16. பரிசேயர் யாரை இயேசுவிடத்தில் அனுப்பினார்கள்? சீஷரையும் ஏரோதிய ரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். பரிசேயருடைய சீஷரும் ஏரோதியரும் இயேசுவை நீர் யாரென்று அறிந்திருக்கிறோம் என்றார்கள்? போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக் கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித் தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
17. யாருக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்? இராயனுக்கு.
18. இயேசு யாருடைய துர்க்குணத்தை அறிந்தார்? பரிசேயருடைய சீஷரும் ஏரோதியருடைய துர்க்குணத்தை அறிந்தார். இயேசு மாயக்காரரே என்று யாரைச் சொல்லுகிறார்? பரிசேயருடைய சீஷரையும் ஏரோதியரையும் மாயக்காரரே என்கிறார். நீங்கள் என்னை என்ன செய்கிறீர்கள் என்றார்? ஏன் சோதிக்கிறீர்கள்? என்றார்.
19. எதை எனக்குக் காண்பியுங்கள் என்றார்? வரிக்காசை. அவர்கள் எதை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்? ஒரு பணத்தை.
20. அப்பொழுது அவர், அந்தப் பணத்தில் எது யாருடையது என்று கேட்டார்? இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
21. அவர்கள் யாருடையது என்றார்கள்? இராயனுடையது என்றார்கள். அப்படி யானால் யாருடையதை யாருக்குச் செலுத்துங்கள் என்றார்? இராயனுடை யதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
22. அவர்கள் அதைக்கேட்டு என்ன செய்தார்கள்? அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
23. சதுசேயர் யார்? உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் சதுசே யர். அன்றையதினம் இயேசுவிடத்தில் வந்தது யார்? உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கின்ற சதுசேயர்.
24. ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், யார் அவன் மனை வியை விவாகம் பண்ணி, அவனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னார்? அவன் சகோதரன்.
25. எங்களுக்குள்ளே சகோதரர் எத்தனை பேர் இருந்தார்கள்? ஏழு பேர். யார் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்? மூத்தவன்.
26. அப்படியே எந்தச் சகோதரன்முதல் எந்த சகோதரன் வரைக்கும் செய்தார் கள்? இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.
27. எல்லாருக்கும் பின்பு அந்த யாரும் இறந்துபோனாள்? எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
28. சதுசேயர் இயேசுவிடம் என்ன கேட்டார்கள்? உயிர்த்தெழுதலில் அவ்வேழு பேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் எப்படிப்பட்ட எண்ணங்கொள்ளு கிறீர்கள் என்றார்? தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்.
30. உயிர்த்தெழுதலில் என்ன இல்லை? கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் யாரைப்போல் இருப்பார்கள்? தேவதூதரைப் போல்.
31. மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி எதை நீங்கள் வாசிக்கவில் லையா என்றார்? நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோ பின் தேவனுமாய் இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டி ருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? என்றார்.
32. தேவன் யாருக்குத் தேவனாயிராமல், யாருக்குத் தேவனாயிருக்கிறார்? தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயி ருக்கிறார்.
33. ஜனங்கள் இதைக்கேட்டு, எதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்? அவரு டைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
34. இயேசு யாரை வாயடைத்தார் என்று யார் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்? இயேசு சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப் பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
35. இயேசுவை சோதிக்கும்படி வந்தது யார்? நியாயசாஸ்திரி ஒருவன்.
36. நியாயசாஸ்திரி ஒருவன் இயேசுவிடம் என்ன கேட்டான்? போதகரே, நியாயப் பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
37. முதலாம் கற்பனை எது? உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக.
38. இது எத்தனையாவது கற்பனை? முதலாம் கற்பனை.
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை எது? உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.
40. இவ்விரண்டு கற்பனைகளிலும் அடங்கியிருக்கிறது என்ன? இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.
41. பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி என்ன கேட்டார்? கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார்.
42. பரிசேயர் என்ன சொன்னார்கள்? இயேசு தாவீதின் குமாரன் என்றார்கள்.
43. அப்படியானால் தாவீது எதினாலே இயேசுவை ஆண்டவர் என்று சொல்லி யிருக்கிறது எப்படி? பரிசுத்த ஆவியினால்.
44. நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறான்? உம்முடைய சத்துருக்களை.
45. தாவீது அவரை யார் என்று சொல்லியிருக்கிறான்? ஆண்டவர் என்று. அவனுக்கு அவர் யாராயிருப்பது எப்படி என்றார்? குமாரனாயிருப்பது.
46. இயேசு சொன்னதற்கு மாறுத்தரமாக என்ன பதில் சொன்னார்கள்? ஒருவ னும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் என்ன நடந்தது? அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

No comments:

Post a Comment